நீ பயப்படாதே – பாஸ்டர் சாமுவேல்

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக, கடந்த மாதம் முழுவதும் கண்மணி போல் காப்பாற்றினார் இந்த செப்டம்பர் மாதத்தில் சாரோனின் ரோஜா இதழின் மூலமாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றைக்கு நாம் தியானிக்க போகிற வேத பகுதி ஏசாயா 42:8-10 வரை. இதில் குறிப்பாக நீ பயப்படாதே என்று பார்க்க போகிறோம். நாம் எதற்கு பயப்படுகிறோம்? எந்த காரியத்தில் பயப்படுகிறோம்? ஏன் பயப்படுகிறோம்? ஏன் இந்த பயம் வருகிறது? என்று உங்களுக்கும் தெரியும் ஆண்டவருக்கும் தெரியும். இந்த பயத்திலிருந்து நாம் எப்படி மீட்கப்படுவது அல்லது எப்படி விடுதலை கிடைக்கும் அல்லது யாரால் நம்மை பயத்திலிருந்து மீட்க முடியும்.

என் தாசனாகிய இஸ்ரவேலே

8. என் தாசனாகிய இஸ்ரவேலே, நான் தெரிந்துகொண்ட யாக்கோபே, என் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததியே,

இந்த வசனத்தை கவனித்து பார்த்தோம் என்றால் தேவன் நம்மோடு பேசுகிறார். நீங்கள் தேவனிடத்தில் தானாக வந்தவர்கள் அல்ல தேவன் தெரிந்து கொண்டு அதன் மூலமாக அவரிடத்தில் வந்திருக்கிறீர்கள். ஒருவேளை நம்முடைய முன்னோர்கள் கிறிஸ்தவர்களாக இருந்திருக்கலாம் அதன் மூலமாக நீங்கள் தேவனை தெரிந்து கொண்டு அவரை பின்பற்றுகிறவர்களாக இருக்கலாம் அப்படி வந்தாலும் தேவன் அழைக்காவிட்டால் நிலைத்து நிற்க முடியாது. நம்முடைய முன்னோர்கள் யாரேனும் கிறிஸ்தவர்கள் இருந்தாலும் அவர்களை தேவன் தெரிந்து கொள்ளாத பட்சத்திலே அவர்களால் கிறிஸ்துவுக்குள் நிலைத்திருக்க முடியாது. அவர்தான் நம்மை தெரிந்து கொண்டார். அவர் தான் நம்மை பெயர் சொல்லி அழைத்து இருக்கிறார். 

வசனத்தின் முதல் பகுதியை கவனியுங்கள் என் தாசனாகிய இஸ்ரவேலே, நான் தெரிந்துகொண்ட யாக்கோபே என்று வேத சொல்லப்பட்டுள்ளது நீங்கள் யார் என்றால் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவன்(ள்) மற்றும் தாசன், தாசன் என்றால் பக்தி உள்ளவன்(ள்). அப்படியே அதே வசனத்தின் தொடர்ச்சியாக என் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததியே, என்று கர்த்தர் சொல்லுகிறார். 

நான் உன்னை வெறுத்துவிடவில்லை

9. நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதின் எல்லைகளிலிருந்து அழைத்துவந்து: நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன்.

பூமியின் கடையாந்தரங்களிலிருந்த உன்னை அவருக்காக அழைத்து வந்தார்.‌

முதலில் நீங்கள் யார் என்று தெரிந்துக்கொள்ளவேண்டும் அடுத்து தேவன் யார் என்று தெரிந்துகொள்ளவேண்டும் அடுத்து தேவன் என்ன செய்வார் என்பதை தெரிந்துகொள்ளவேண்டும் அப்பொழுதுதான் உங்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் முழுமையாக கிடைக்கும். நாம் சில நேரங்களில் நமக்கு உதவி செய்யாதவர்களை அல்லது உதவ சத்தி இல்லாதவர்களை நோக்கி உதவியைக் கேட்டு அலைந்து திரிந்து கொண்டிருக்கிறோம். நீங்கள் கேட்க வேண்டியது தேவனிடத்தில் மாத்திரமே. நீங்கள் யாரிடம் கேட்க வேண்டுமோ அவரிடம் கேட்கவில்லை, யாரிடம் இருக்க வேண்டுமோ அவரிடம் இருக்கவில்லை, யாரிடம் இருக்கக் கூடாதோ? யாரிடம் கேட்கக் கூடாதோ? அவர்களிடத்தில் போய் உதவிகளை கேட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த 9வது வசனத்தை நன்றாக கவனியுங்கள் நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதின் எல்லைகளிலிருந்து அழைத்துவந்து இருக்கிறார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றால் ஆண்டவருக்கு நாம் யார் என்று தெரியும் நாம் படுகிற கஷ்டங்கள் வேதனையில் இதெல்லாம் அவருக்கு தெரியுவா போகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். உன்  நெருங்கிய நண்பருக்கு கூட தெரியாத காரியங்கள்கூட உன் தேவனாகிய கர்த்தருக்குத் தெரியும். எனவே தேவனுடைய பிள்ளைகளே பயப்படாதீர்கள். வசனத்தின் அடுத்த பகுதியாக நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன். என்று 9வது வசனத்தில் பார்க்கிறோம்.

நீ பயப்படாதே

10. நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.

நீ எந்த காரணத்துக்காக பயந்து கொண்டு இருக்கிறாய்? நான் ஏன் இந்த காரியத்தை குறித்து உங்களுடன் பேச வேண்டும் என்று எனக்கு தெரியாது கர்த்தராகிய இயேசு உங்கள் உள்ளம் திரியங்களை ஆராய்ந்து அறிந்திருக்கிறார் நீ பயப்படும் காரியம் அவர் அறிந்திருக்கிறார் எனவே தேவ பிள்ளைகளே பயப்படாதே. உங்களுடைய சூழ்நிலைகளையும் அவர் அறிந்திருக்கிறார் அவர் உங்களை அறிந்தவர் ஆனபடியினால் உங்களுடனே அவர் பேசிக் கொண்டிருக்கிறார். 

என் தாசனாகிய இஸ்ரவேலே, நான் தெரிந்துகொண்ட யாக்கோபே, என் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததியே நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதின் எல்லைகளிலிருந்து அழைத்துவந்து: நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை ஆகையால் நீ பயப்படாதே.

நீ யார்? நான் ஒரு அனாதை நான் ஒரு பாவி நான் ஒரு திக்கற்றவன் இப்படி சொல்லிக் கொண்டிருக்கிற என் சகோதரனே என் சகோதரியே முதலில் இவ்வாறு சொல்வதை நிறுத்துங்கள் ஒருவேளை தேவனை அறிவதற்கு முன்பாக இந்த வார்த்தைகளை சொல்லியிருக்கலாம் ஆனால் இப்பொழுது தேவன் உங்களை அழைத்திருக்கிறார் தம்முடைய தாசனாக உங்களுக்கு தெரிந்தெடுத்திருக்கிறார் இன்னும் நீங்கள் நான் ஒரு பாவி நான் திக்கற்றவன் என்று சொல்வது சரியா? தேவன் உங்கள் வாயின் வார்த்தைகளை கணப்படுத்துவார். நீங்கள் எதை சொன்னாலும் தேவனுடைய நாமத்திற்கு மகிமை உண்டாகும் படியாக சொல்லுங்கள் அவர் உங்களை உயர்த்துவார் உங்களுடைய பயங்களை நீக்கிப் போடுவார்.

நான் வியாதியில் இருக்கிறேன் என்னை சுகமாக்குவார் என்று சொல்லுங்கள் உங்கள் வியாதிகளை சுகமாக்குவார். நான் பிரச்சினையில் இருக்கிறேன் என் பிரச்சினைகளை நீக்குவார் என்று சொல்லுங்கள் உங்கள் பிரச்சனைகள் இல்லாமல் போகும் அதை விட்டுவிட்டு யார் என்னுடைய பிரச்சினைகளை தீர்க்க முடியும் யார் என்னுடைய வியாதிகளை நீக்க முடியும் என்று புலம்பி கொண்டு இருந்தாள் நீ அப்படியே இருக்க வேண்டியதுதான் அவர் உன்னை தெரிந்து கொண்ட பிறகும் அவர் தம்முடைய தாசனாக உன்னை தெரிந்து கொண்ட பிறகும் நீ ஏன் பயப்படுகிறாய்.

என் தாசனாகிய இஸ்ரவேலே, நான் தெரிந்துகொண்ட யாக்கோபே, என் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததியே, நீ பயப்படாதே.

முதலில் நீங்கள் யார் என்பதை மறக்கவே கூடாது என்ன சூழ்நிலை வந்தாலும் கஷ்டம் வந்தாலும் பிரச்சனை வந்தாலும் தோல்விகள் வந்தாலும் அவமானங்கள் வந்தாலும் எப்பேர்ப்பட்ட காரியங்கள் ஆனாலும் மரணமே கூட வந்தாலும் நீ யார் என்பதை மறந்து விடக்கூடாது நீங்கள் யார் தெரியுமா என் தாசனாகிய இஸ்ரவேல் நான் தெரிந்துகொண்ட யாக்கோபே, என் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததி அடுத்து என்ன சொல்கிறார் என்று பாருங்கள் நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதின் எல்லைகளிலிருந்து அழைத்துவந்து: நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னார் நீங்கள் யார் என்று மறந்துவிடக்கூடாது ஒருவேளை நீங்கள் பூமியின் கடையாந்தரங்களில் இருந்திருக்கலாம் ஆனால் தேவன் உங்களை அவருடைய கைகளில் வரைந்து உள்ளார்.‌ யாரும் விசாரிப்பாரற்று இருந்த உங்களை தேவன் எடுத்து பூமியின் எல்லையில் இருந்து உன்னை அழைத்து வந்திருக்கிறார்.

உன்னை தெரிந்து கொண்ட தேவன் சொல்லுகிறார் நீ என் தாசன் நான் உன்னை தெரிந்து கொண்டேன் நான் உன்னை வெறுக்க வில்லை என்று தேவன் சொல்லுகிறார். நான் உன்னை வெறுக்கவில்லை நீ ஏன் கலங்குகிறாய் நீ ஏன் பயப்படுகிறாய் நீ நினைத்திருக்கலாம் ஆண்டவர் ஒருவேளை என்னை கைவிட்டு இருப்பார் என்று இவ்வளவு நெருக்கங்களும் கஷ்டங்களும் வருகிறதே இவ்வளவு பெரிதான கஷ்டங்கள் என்னை சூழ்ந்து கொண்டிருக்கிறதே இவ்வளவு நெருக்கங்கள் என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறதே ஒருவேளை என்னுடைய தேவன் என்னை கைவிட்டு இருப்பாரோ என்று நினைத்திருந்தால் அல்லது வந்து இருப்பாய் என்றால் என் சகோதரனே என் சகோதரியே தேவன் உன்னை பார்த்து சொல்லுகிறார் நீ என் தாசன் நான் உன்னை தெரிந்து கொண்டேன் நான் உன்னை வெறுத்து விடவில்லை அதனால் நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்.

நீ ஒரு சின்ன விஷயத்திற்கு பயந்துவிட்டாய், பயப்படாதே இதைவிட பெரிய காரியங்களை செய்வேன். நீ போகும்போது உனக்கு முன்பாகவும் பின்பாகவும் கர்த்தர் ஒருவரே இருக்கிறார்‌ ஒரு நொடி பொழுதில் உயிர் தப்பினேன் என்று சொல்வாய் ஆனால் அங்கே உன் கர்த்தராகிய ஆண்டவர் இருந்தார். 

நான் இருக்கிறேன் என்று சொல்லுகிறவர்கள் எல்லாம் உன் கூட வருவதில்லை உன் கூட இருப்பதும் இல்லை ஆனால் கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார் நீ பயப்படாதே நான் உன்னோடு கூட இருக்கிறேன் என்று சின்ன  காரியங்கள் ஆனாலும் பெரிய பெரிய காரியங்கள் ஆனாலும் கர்த்தர் உன்னுடன் இருந்து பாதுகாப்பார்.

திகையாதே

10. நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.

வசனத்தின் அடுத்த பகுதியாக கர்த்தர் உங்களைப் பார்த்து சொல்லுகிற காரியம் என்னவென்றால் திகையாதே நான் உன் தேவன் என்று சொல்லுகிறார். திகையாதே என்றால் நாம் பீதியடைவது என்று அர்த்தம் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பதை பற்றி தெரியாது ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்படும் இதற்கு பெயர்தான் திகைப்பு. இப்படி திகைப்போடு இருக்கிற உன்னை பார்த்து தேவன் சொல்லுகிறார் நான் தான் உன் தேவன் என்று. எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.  நீ போகின்ற பாதை அவருக்கு தெரியும் அவர் சொல்லுகின்ற வழியில் தான் நாம் நடந்து கொண்டிருக்கிறோம் ஆனால் ஒரு சில ஆண்டவரே நீர் சொல்லும் வழியை நீரே வைத்துக் கொள்ளும் நான் என் இஷ்டப்படி செய்து கொள்கிறேன் என்று அருமையான தேவனுடைய பிள்ளைகளே நீங்கள் அப்படி இருக்காமல் தேவன் உங்களுக்கு என்ன சொல்லப் போகிறார் என்பதை நன்றாக அறிந்து செயல்பட வேண்டும் காலையில் எழுந்ததும் ஆண்டவரை நோக்கி ஆண்டவரே இந்த நாளில் உம்மைக் காண எனக்கு ஜீவனைக் கொடுத்தீர் உமக்கு ஸ்தோத்திரம் இன்று நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்கு வெளிப்படுத்தும் என்று அவரிடம் கேட்க வேண்டும்.

எனவே தேவனுடைய பிள்ளைகளே திகையாதே நான் உன் தேவன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 

வசனத்தின் அடுத்து பகுதியில் சொல்லுகிறார் நான் உன்னை பலப்படுத்தி உனக்கு சகாயம் பண்ணுவேன் என் நீதியின் வழக்கரத்தினால் உன்னை தாங்குவேன் என்று எனவே தேவனுடைய பிள்ளைகளே நீங்கள் பயப்படாதீர்கள் கலங்காதிங்கள் திகைப்பாயிரதிருங்கள் அவர் உங்களோடு இருக்கிறார் உங்களை பலப்படுத்துகிறார் உங்களுக்கு சகாயம் செய்கிறார் மற்றும் உங்களை நீதியின் வலதுகரத்தினால் தாங்குவார்.‌ ஆமென்

கர்த்தர் தானே உங்களோடு இருந்து நடத்துவாராக பயப்படாதீர்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *