கர்த்தர் உன்மேல் வைத்த இரக்கத்தினாலே ! | Pastor B. E. Samuel | APA Church

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இந்த சாரோனின் ரோஜா இதழின் மூலமாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் இந்த நாளில் நாம் தியானிக்க போகிற வசனம் என்னவென்றால் ஆதியாகமம் 19:16 (கர்த்தர் அவன் மேல் வைத்த  இரக்கத்தினாலே)

அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது, கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத்தினாலே, அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள். (ஆதியாகமம் 19:16)

கர்த்தர் உங்கள் மேல் வைத்த இரக்கத்தினாலே உங்களை அழிவிலிருந்து காப்பாற்றினார். லோத்து சோதோம் கொமரா பட்டணத்தில் குடியிருக்கின்றார். இவர் யார் என்றால் ஆபிரகாமின் சகோதரருடைய மகன் இவருடைய தந்தை மரித்துப் போகின்றார் இவர் ஆபிரகாம் உடனே வளருகின்றார் ஆபிரகாமும் லோத்தும் ஒரே பூமியில் குடியிருக்கிறார்கள் இவர்கள் இருவருக்கும் ஏராளமான ஆஸ்திகளும் ஆடு மாடுகளும் இருந்தது.  ஆபிரகாமின் வேலைக்காரருக்கும் லோத்தின் வேலைக்காரருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று அதனால், ஆபிரகாம் லோத்தை பார்த்து நாம் சகோதரர்கள் நாம் சண்டை பண்ணிக் கொள்வது நல்லதல்ல ஆகையினால் நீர் வலது பக்கம் சென்றால் நான் இடது பக்கம் செல்கிறேன் நீ கிழக்குக்கு சென்றால் மேற்கே செல்கிறேன் என்றான்.

லோத்து ஏறிட்டு பார்த்து நன்றாக பசுமையாக உள்ளதான இடத்தை தேர்ந்தெடுக்கிறான் அந்த நகரத்தின் பெயர் சோதோம் கொமரா. ஆபிரகாம் தான் தங்கி இருந்த இடத்திலே தரித்திருந்தான். இவர்கள் இருவருக்கும் மிகுந்த ஆஸ்தி இருந்ததினால் ஒருமித்து வாழ பூமி தாங்க கூடாதாக இருந்தது நாட்கள் கடந்து சென்றது.  தேவ தூதர்கள் ஒரு நாள் ஆபிரகாமை தேடி வந்தார்கள் ஆபிரகாம் மரத்தடியில் உட்கார்ந்து இருக்கும்போது அவனை சந்திக்கிறார்கள் ஆபிரகாம் எழுந்து போய் முகம் குப்புற விழுந்து பணிந்து கொண்டான். அவர்களைப் பார்த்து இளைப்பாரி சாப்பிட்டுவிட்டு போகும் படி கேட்டுக்கொள்கிறான் அந்த படி அவர்கள் பாதங்களைக் கழுவி அமர்கிறார்கள் அந்தப்படியே அவர்களுக்கு ஒரு விருந்தை ஏற்படுத்துகிறான் அவர்கள் சாப்பிடும் போது சோதோம் கொமரா பட்டணத்தை கவிழ்த்துப் போடப் போகிறோம் என்று ஆபிரகாமுடன் பகிர்ந்து கொண்டார்கள். 

ஆபிரகாமுக்கு நன்றாக தெரியும் சோதோம் கொமரா பட்டணத்தில் தன்னுடைய சகோதரன் வாழ்ந்து கொண்டிருக்கிறான் அந்த பட்டணத்தை கவிழ்த்து போட்டால் தன் சகோதரன் குடும்பம் கவிழ்த்து போடப்படுமே என்று தூதுகளைப் பார்த்து கேட்கிறான் ஆண்டவரே ஐம்பது நீதிமான்கள் இருந்தால் அந்த பட்டணத்தை அழைப்பீரா? காரணம் இவர்கள் நான்கு பேர் அங்கு சென்றார்கள் பெரிய இரட்சிப்பை செய்து இருப்பார்கள் என்று சொல்லி கேட்கிறான் அருமையாக தேவனுடைய பிள்ளைகளே உங்கள் நிமித்தம் உங்கள் ஊர் பாதுகாக்கப்படும் என்பதில் துளி கூட சந்தேகமே இல்லை தேசம் பாதுகாப்பாக இருப்பதற்கு அல்லது கவிழ்க்கப்படாமல் இருப்பதற்கு முழுக்க முழுக்க இரட்சிக்கப்பட்ட நீங்கள் தான் பொறுப்பு. ஏனென்றால், உங்கள் தேசத்திற்காக, ஊருக்காக உங்கள் வீட்டுக்காக, ஜெபிக்க வேண்டிய கடமை உங்களுடையது. இல்லையென்றால் அந்த தேசம் கவிழ்க்கப்பட்டு போகும் போது நீங்களும் கவிழ்க்கப்பட்டு போவீர்கள் ஆகையால் உங்கள் நிமித்தம் தேவன் உங்கள் தேசத்தை ஆசீர்வதிக்கிறார்.

சோதோம் கொமரா பட்டணத்தை கவிழ்த்துப் போடுவதற்கு சொன்னபோது ஆபிரகாம் அவர்களை நோக்கி 50 நீதிமான்கள் இருந்தால் அந்த பட்டணத்தை அழிப்பீரா? அதற்கு கர்த்தர் இல்லை என்றார். இப்படியாக கேட்டுக் கொண்டிருக்கையில் 10 நீதிமான்கள் இருந்தால் அந்த பட்டணத்தை அழிப்பீரா? இல்லை என்றார்கள் அப்படியானால் அந்த பட்டணத்தில் 10 நீதிமான்கள் கூட இல்லை.  அந்த பட்டணத்தில் லோத்து அவர் மனைவி அவர்கள் இரு மகள்கள் மட்டுமே நீதிமான்களாக இருந்தார்கள் அந்தப் பட்டணத்து மக்கள் இரட்சிக்கப்பட கூடாதபடி மிகவும் துன்மார்க்கமாக வாழ்ந்து கொண்டு வந்தார்கள் அவர்களின் பாவம் வானபரிந்தும் எட்டக்கூடிய அளவுக்கு துன்மார்க்கமாக பாவிகளாக இருக்கிறார்கள். ஆபிரகாம் கேட்டுக் கொண்டிருக்கும் போது என் ஆண்டவருக்கு கோபம் மூலாமல் இருப்பதாக என்று சொல்லி சொல்லி 50, 40, 30, மற்றும் 10  நீதிமான்கள் இருந்தால் அழிப்பீரா? ஆனால், அங்கே பத்து நீதிமான்கள் கூட இல்லை பிறகு அந்த தேவத்தூதர்கள் அந்த பட்டணத்துக்கு செல்கிறார்கள் லோத்தை காப்பாற்றுவதற்காக அவரிடம் செல்கிறார்கள் ஆபிரகாமை போல இவரும் பணிந்து கொண்டு அடியானின் வீட்டில் வந்து சாப்பிட்டு விட்டு போகும்படி கேட்டுக்கொள்கிறான் அதைப் போல அவர்களும் அங்கே தங்கினார்கள். 

அந்த வேளையில் தேசத்து மக்கள் வந்து நீ உன் வீட்டில் தங்கி இருக்கிற அவர்களை வெளியே கொண்டு வா நாங்கள் அவர்களை அறிய வேண்டும் என்று சொன்னார்கள் அதற்கு லோத்து சொல்கிறான் என்னிடம் திருமணம் ஆகாத எனது இரு மகள்கள் இருக்கிறார்கள் அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என் வீட்டில் தங்கி இருக்கிற இவர்களுக்கு எந்த கெடுதியும் செய்யாதீர்கள் என்று கேட்கிறான். ஆனால், அவர்கள் அந்நியனாய் வந்த நீர் எங்களுக்கு நியாயம் சொல்லுகிறீரோ? தள்ளிப்போ என்று சொல்லி அவனை அசட்டை பண்ணினார்கள். அப்படியானால், அந்த தேசம் மிகவும் துன்மார்க்கத்தில் நிறைந்து இருந்தது ஆணோடு ஆண் பெண்ணோடு பெண் என்று பாவம் செய்கிறவர்களாகவும் மற்றும் மிகவும் துன்மார்க்கமாகவும் அந்த பட்டணம் காணப்பட்டது. லோத்து எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் அவர்கள் கேட்கவில்லை அந்த தூதர்கள் வந்திருந்த பட்டணத்து மக்களுக்கு கண் மயக்கத்தை உண்டாக்கி குருட்டாட்டம் உண்டாக்கினார்கள் அவர்கள் வாசலை தேடிக் கொண்டு திரிந்து கொண்டிருக்கிறார்கள். இதற்குப் பிறகு நடந்த சம்பவத்தை தான் நாம் இன்று தியானிக்க போகிறோம். (ஆதியாகமம் 19:16)

அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது, கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத்தினாலே, அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள். (ஆதியாகமம் 19:16)

அருமையான தேவனுடைய பிள்ளைகளே உங்கள் ஊர் எப்படிப்பட்டது என்று உங்களுக்கு நன்றாக தெரியும் ஒருவேளை தெரியாமல் கூட இருக்கலாம் ஏனென்றால், நாம் அதிகமாக வெளியே செல்கிறவர்களாக இல்லாமல் இருக்கலாம் சில விஷயங்கள் தெரியாமல் கூட இருக்கலாம் ஆனால் நீங்கள் அதற்கு பொறுப்பாளி என்பதை மறந்து விடக்கூடாது உன்னை தேவன் இந்த ஊரில் வைத்திருப்பதற்கான நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் இந்த ஊருக்காக ஜெபிக்க வேண்டும் இந்த ஊரை எப்படியாவது இரட்சிக்க வேண்டும் என்று ஜெபிக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.

சிலர் நினைக்கலாம் நமக்கு என்ன வந்தது நான் நல்லாயிருந்தால் போதும் நம் குடும்பம் நல்லாயிருந்தால் போதும் என்று நினைத்தால் தயவு செய்து அந்த எண்ணத்தை இப்பொழுதே மாற்றிக் கொள்ளுங்கள் உங்கள் ஊர் நல்லா இருந்தால் தான் நீங்கள் நல்லா இருக்க முடியும்.  வேத வசனத்தில் கவனித்து பார்த்தால் அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது, கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத்தினாலே அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள். காரணம் அந்தப் பட்டணம் அழிக்கப்பட போகிறது என்று சொல்லி அவர்களை பட்டணத்திற்கு வெளியே கொண்டு போய் விட்டார்கள்.  

(ஆதியாகமம் 19:17) அவர்களை வெளியே கொண்டுபோய்விட்டபின்பு, அவர்: உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார்.

தேவன் உங்கள் மேல் வைத்த இரக்கத்தினாலே உங்களை கைப்பிடித்து நடத்திக் கொண்டு போகிறார், தேவனுடைய கைக்குள் உங்கள் கை இருக்கிறது நீங்கள் உதறிவிட்டால் தான் உங்களுக்கு ஆபத்து வரும் அதுவரையிலும் யாரும் உங்களை ஒன்றும் செய்ய முடியாது.

(ஆதியாகமம் 19:17) அவர்களை வெளியே கொண்டுபோய்விட்டபின்பு, அவர்: உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார்.

கர்த்தர் உங்களுடன் சொன்னால் அதை அப்படியே செய்யுங்கள் பின்னிட்டு பாராதே என்று சொன்னால் பின்னிட்டு பார்க்காதீர்கள் பின்னிட்டு பார்த்த லோத்துவின் மனைவி உப்பு தூணாகப் போனால் நாமும் பின்னிட்டு திரும்பி பார்க்காமல் கர்த்தர் சொன்ன வார்த்தையை கடைபிடிக்க வேண்டும்.

ஆதியாகமம் 19:18 – 25

அதற்கு லோத்து: அப்படியல்ல ஆண்டவரே, உமது கண்களில் உமது அடியேனுக்குக் கிருபைகிடைத்ததே; என் பிராணனைக் காக்கத் தேவரீர் எனக்குச் செய்த கிருபையைப் பெரிதாக விளங்கப்பண்ணினீர்; மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது, தீங்கு என்னைத் தொடரும், அதனால் நான் மரித்துப்போவேன். அதோ, அந்த ஊர் இருக்கிறதே, நான் அங்கே ஓடிப்போகத்தக்கதாக அது அருகில் இருக்கிறது, சின்னதுமாய் இருக்கிறது; என் பிராணன் பிழைக்க நான் அங்கே ஓடிப்போகட்டும், அது சின்ன ஊர்தானே என்றான். அதற்கு அவர்: நீ கேட்டுக்கொண்ட ஊரை நான் கவிழ்த்துப்போடாதபடிக்கு, இந்த விஷயத்திலும் உனக்கு அநுக்கிரகம் பண்ணினேன். தீவிரமாய் அங்கே ஓடித் தப்பித்துக்கொள்கள்; நீ அங்கே போய்ச் சேருமட்டும் நான் ஒன்றும் செய்யக்கூடாது என்றான்.

லோத்து சோவாருக்குள் வரும்போது பூமியின்மேல் சூரியன் உதித்தது. அப்பொழுது கர்த்தர் சோதோமின் மற்றும் கொமோராவின்மேலும், கர்த்தராலே வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணினார், ஆகையால் அவர்களை நெருக்குகிற அவர்கள் சத்துருக்களின் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தீர்; அவர்கள் நெருக்கம் அநுபவிக்கிற காலத்தில் அவர்கள் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறபோதோ, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, உம்முடைய மிகுந்த இரக்கத்தினால் அவர்களை அவர்கள் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கிவிடுகிற இரட்சகர்களை அவர்களுக்குக் கொடுத்தீர். 

(நெகேமியா 9:27) அந்தப் பட்டணங்களையும், அந்தச் சமபூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் எல்லாக் குடிகளையும், பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார்.

நீங்கள் அறியாமல் இருப்பதற்கு காரணம் என்ன? அவர் உங்கள் மேல் வைத்த இரக்கம். உங்களுக்கு அநேக பிரச்சினைகள் இருக்கலாம் எவ்வளவோ தேவைகள் இருக்கலாம் ஆனாலும் நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள் சமாதானமாக இருக்கிறீர்கள் காரணம் என்னவென்றால் கர்த்தர் உங்கள் மேல் வைத்த இரக்கம்.நமக்கு இருக்கிற சோதனைகள் இருக்கிறதே கஷ்டங்கள் இருக்கிறதே நெருக்கங்கள் இருக்கிறதே இதுனாலயே நாம் எப்பொழுதோ மரித்து இருப்போம். நெருக்கத்தில் இருந்தாலும் கஷ்டத்தில் இருந்தாலும் கவலையில் இருந்தாலும் நாம் உயிரோடு இருக்கிறோமே அது நம்மேல் வைத்த  இரக்கம்.

நெகேமியா 9:27 ஆகையால் அவர்களை நெருக்குகிற அவர்கள் சத்துருக்களின் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தீர்; அவர்கள் நெருக்கம் அநுபவிக்கிற காலத்தில் அவர்கள் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறபோதோ, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, உம்முடைய மிகுந்த இரக்கத்தினால் அவர்களை அவர்கள் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கிவிடுகிற இரட்சகர்களை அவர்களுக்குக் கொடுத்தீர்.

அவர்களுக்கு நெருக்கங்கள் இருந்தது கஷ்டங்கள் இருந்தது கடன் பிரச்சினைகள் இருந்தது அவமானங்கள் இருந்தது பாடுகள் இருந்தது எதற்கு இந்த உலகத்தில் வாழ்கின்றோம் எண்ணம் இருந்தது ஆனாலும் அவர்கள் உம்மை நோக்கி கூப்பிடுகிறபோது நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, உம்முடைய மிகுந்த இரக்கத்தினால் அவர்களை அவர்கள் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கிவிடுகிற இரட்சகர்களை அவர்களுக்குக் கொடுத்தீர். நீங்கள் வியாதியா இருக்கிறீர்கள் ஆண்டவர் அங்கே மருத்துவர் மூலமாக உங்களுக்கு உதவி செய்கிறார் நீங்கள் பிரச்சினையில் இருக்கிறீர்கள் அங்கே ஒரு ஆலோசகராக வந்து உங்களுக்கு உதவுகிறார். இதைப் போன்று எல்லா இடங்களிலும் வருகிறவர் “இயேசு ஒருவரே” வசனம் இப்படியாக சொல்கிறது அவர்கள் உம்மை நோக்கி கூப்பிடுகிறபோதோ, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, உம்முடைய மிகுந்த இரக்கத்தினால் அவர்களை அவர்கள் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கிவிடுகிற இரட்சகர்களை அவர்களுக்குக் கொடுத்தீர்.

நீங்கள் ஜெபிக்கின்ற ஜெபம் தான் உங்களை காப்பாற்றுகிறது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நான் என்னமோ ஜெபித்துக் கொண்டிருக்கிறேன் என்று ஆனால், நீங்கள் சுகத்துடனும் பாதுகாப்புடனும் இருக்கிறீர்கள் என்றால், கர்த்தர் நம்மேல் வைத்த  இரக்கம், கர்த்தர் உன் மேல் வைத்த இரக்கம். 

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக,ஆமென்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *