கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இந்த சாரோனின் ரோஜா இதழின் மூலமாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் இந்த இதழ் ஆரம்பித்து 8 வருடங்கள் முடிந்து 9 வது வருடத்தில் காலெடுத்து வைக்க கர்த்தர் கிருபை பாராட்டியிருக்கிறார் அவருக்கே எல்லா மகிமையும் கனமும் உண்டாவதாக.
நாம் இன்று தியானிக்கபோகிற வேதபகுதி மாற்கு எழுதின சுவிசேஷம் 10:45-52.
பர்திமேயு என்கிற ஒரு குருடன், வழியருகே உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான். அவன் நசரேயனாகிய இயேசு வருகிறாரென்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிடத் தொடங்கினான். அவன் பேசாதிருக்கும்படி அநேகர் அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று முன்னிலும் அதிகமாய்க் கூப்பிட்டான். இயேசு நின்று, அவனை அழைத்துவரச் சொன்னார். அவர்கள் அந்தக் குருடனை அழைத்து: திடன்கொள், எழுந்திரு, இயேசு உன்னை அழைக்கிறார் என்றார்கள்.
முதலாவது ஒன்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்னவென்றால் இயேசு உன்னை அழைக்க வேண்டும்:
இயேசு உன்னை அழைக்க வேண்டும் அப்படி அழைத்தால் உனக்கு என்ன பெலவீனம் இருந்தாலும், என்ன பிரச்சினை இருந்தாலும், என்ன கஷ்டம் இருந்தாலும், என்ன வறுமையிருந்தாலும், கலக்கம் மற்றும் பல கஷ்டங்கள் இருந்தாலும் அப்பொழுதே இந்தக் கலக்கம் கஷ்டம் பெலவீனம் எதுவா இருந்தாலும் மாறிவிடும். பர்திமேயு இயேசுவை கூப்பிட்டான் அவர் அவனை அழைத்தார். இயேசு உன்னை அழைக்க வேண்டும் என்று சொன்னால் நீ அவரை கூப்பிட வேண்டும் அவரை கூப்பிட கூடாத அளவுக்கு தடைகள் வருகிறதா இன்னும் அதிகமாய் நோக்கி கூப்பிட வேண்டும்.
கூப்பிடுவது நாம் ஜெபமாக பார்க்கிறோம் நீ ஜெபிப்பதை எந்த காரணத்திற்கும் நிறுத்தவே கூடாது. பர்திமேயுவை பார்த்தீர்களென்றால் அவன் கூப்பிடும்போது அவனை அதட்டினார்கள் ஆனால் அவன் கூப்பிடுவதை நிறுத்தவே இல்லை மாறாக இன்னும் சத்தத்தை உயர்த்தி கூப்பிட்டான். அருமையான தேவனுடைய பிள்ளைகளே நீங்கள் தேவனை நோக்கி கூப்பிடுகிறீர்கள் கூப்பிடும் போது தடை வந்தால் அதை அப்படியே விட்டு விடுகிறீர்கள். பர்திமேயு கூப்பிடும்போது சுற்றி இருந்தவர்கள் தடுத்தார்கள் மட்டுமல்ல அதட்டினார்கள் அதைப்போல நீங்கள் கூப்பிடும் போது உங்களுக்கு தடைகள் வரலாம் மிரட்டல்கள் வரலாம் தடையை கண்டு மிரட்டலை கண்டு நீங்கள் கூப்பிடுவதை நிறுத்த கூடாது. பர்திமேயு கூப்பிட்டதை இன்னும் அதிகமாக்கியதினால் அவனை இயேசு அழைத்தார். நீயும் கூப்பிடுவதை நிறுத்தாமல் கூப்பிட்டால் நீ கூப்பிடுவதை இயேசு அதாவது உன் ஜெபத்தை கேட்பார்.
கடந்து போகிறவர் நிற்கும்படியாக அழைக்க (கூப்பிட) வேண்டும்:
நீங்களும் இயேசுவை நோக்கி கூப்பிடுகிறீர்கள் உங்கள் ஜெபத்திற்க்கு பதில் தருகிறாரா? அதை நாம் கவனிப்பதில்லை ஜெபம் பண்ண சொன்னார்கள் அதனால் ஜெபம் செய்கிறேன் என்று தான் நாம் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம். பிரியமானவர்களே உதாரணத்துக்கு நீ சாலையில் நடந்து செல்கிறீர்கள் எதிரில் உங்கள் நண்பர் உங்களை பார்க்காமல் செல்லுகிறார் என்றால் உங்கள் நண்பரை திரும்பி பார்க்க வைக்க கூப்பிடுவீர்கள். அதைப்போல இயேசுவை திரும்பி பார்க்க வைக்க நீங்களும் கூப்பிட வேண்டும்.
இவ்வாறு நீங்கள் இயேசுவை திரும்பி பார்க்க வைக்க முயற்சி செய்துயிருக்கிறாயா? இல்லை இயேசுவை கூப்பிடுவோம் அவர் பதில் கொடுத்தால் சரி இல்லை என்றாலும் பரவாயில்லை என்றுதான் இருக்கிறோம். அப்படி என்றால் அவர் உன்னை எப்பொழுது திரும்பிப் பார்ப்பார், எப்பொழுது உனக்கு பதில் கிடைக்கும், எப்பொழுது உன் ஜெபம் கேட்கப்படும், இப்படி அநேக காரியங்கள் உன்னை பார்த்து கேட்க வேண்டியது அவசியமாய் இருக்கிறது ஆரம்பத்திலிருந்து உன்னுடைய பதில் என்னவென்றால் ஆரம்பத்தில் எப்படி இருந்தேனோ அப்படியே தான் இருக்கிறேன் என்று சொல்லுகிறோம். தேவன் உன்னை கூப்பிடுவது உண்மையானால் அப்பொழுது நீங்கள் சொல்லலாம் இப்பொழுது நான் நன்றாக இருக்கிறேன் என்று சொல்லலாம்.
அப்படியானால் நீங்கள் பர்திமேயு போல கூப்பிட வேண்டும். பர்திமேயு: (அவனோ: ) தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று முன்னிலும் அதிகமாய்க் கூப்பிட்டான்.
உங்களுக்கு தேவனிடத்திலிருந்து ஒத்தாசை வருவதற்கு உங்கள் கூட இருப்பவர்களே சில நேரத்தில் தடையாக வரலாம் நீங்கள் யாரை நம்பினீர்களோ அவர்களே உங்களுக்கு தடையாக வரலாம் நீங்கள் தடைகளை பார்த்து நீங்கள் பயப்படுகிறவர்களாக இருக்கக் கூடாது தடையை தகர்க்கிறவர்களாக மாற வேண்டும் தடைகளை உடைக்கிறவர்களாக மாற வேண்டும் பர்திமேயு கூப்பிட்டான் அவனை அதட்டினார்கள் ஆகிலும் முன்னிலும் அதிகமாய் கூப்பிட்டான். அதைப் போல உன் தடையை மீறி இயேசுவை முன்பை விட அதிகமாய் நோக்கி கூப்பிட்டால் உனக்கு பதில் தருவார்.
உடனே அவன் தன் மேல்வஸ்திரத்தை எறிந்துவிட்டு, எழுந்து, இயேசுவினிடத்தில் வந்தான். இயேசு அவனை நோக்கி: நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்றார். அதற்கு அந்தக் குருடன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான். இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, வழியிலே இயேசுவுக்குப் பின்சென்றான்.
நீங்கள் ஜெபம் பண்ணும் போது அதிக நேரத்தில் சோர்வு வரும் ஜெபத்தை தொடங்குவதற்கு முன்பு இந்த சோர்வு எந்த பெலவீனமும் உங்களுக்கு இருக்காது ஜெபிக்கத் தொடங்கும் போது தான் இல்லாத பெலவீனங்கள் எல்லாம் வரும் சோர்வு வருகிறது அதுவும் தேவனை நோக்கி கூப்பிடக்கூடாதபடி இருக்கிற தடைதான் உங்கள் நண்பர்கள் மூலமாக, உங்கள் கூட இருப்பவர்களின் மூலமாக, ஏன் உபயோகிக்கும் மொபைல் மூலமாக கூட தடைவருகிறது.
உதாரணத்துக்கு பர்திமேயு பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது வழக்கத்துக்கு மாறாக அதிக சத்தமாக இருக்கிறது அப்பொழுது பர்திமேயு அருகில் இருந்தவரிடம் ஏன் இன்று அதிகமாக சத்தமாக இருக்கிறது என்று அருகில் இருப்பவர்களிடம் கேட்கிறாரன் அதற்கு இயேசு போகிறார் என்று கேள்விப்பட்டதும் அருகில் இருப்பவரிடம் அதிகம் பேசாமல் இயேசு கிறிஸ்துவை நோக்கி கூப்பிட்டான் அதுவரை அருகில் இருந்தவர்களின் ஒத்தாசை தேவைப்பட்டது இப்பொழுது அவருக்கு இயேசுவின் ஒத்தாசை மட்டுமே தேவை நீங்களும் இயேசுவின் ஒத்தாசை மட்டும் போதும் என்று இருந்தால் உங்களுடைய தடைகள் எல்லாம் இன்று நீங்கிவிடும்.
பர்திமேயு கூப்பிடும்போது தடை வந்தது உங்களில் அநேகருக்கு எல்லா காரியத்திலும் தடை தடை தடை அதிகமாக தடை தான் காணப்படுகிறது அதிகமாக ஜெபிக்க விரும்பினால் தடை, வருகிறது திருமண வாழ்க்கையில் தடை, வருகிறது நல்லது செய்ய வேண்டும் என்றாலே தடை வருகிறது காரணம் நீங்கள் இயேசுவை நோக்கி கூப்பிடும்போது ஏற்பட்ட அந்தத் தடை தான் இவ்வளவுக்கும் காரணமாய் இருக்கிறது. உங்கள் தடை மாற வேண்டுமென்றால் பர்திமேயுவைப்போல தடையை மீறி இன்னும் அதிகமாய் இன்னும் அதிகமாய் இயேசு கிறிஸ்து இன்று உன்னை அழைக்கும் வரை கூப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
அருமையான தேவப்பிள்ளைகளே நீங்கள் கூப்பிடும் போது இயேசு நிற்க்க வேண்டும் பர்திமேயு கூப்பிட்டதை இயேசு கவனிக்கவில்லை என்று விட்டுவிடவில்லை முன்னிலும் அதிகமாய் கூப்பிட்டான் இயேசு நின்று கவனிக்கும் படி கூப்பிட்டான். உங்களில் சிலர் நான் எத்தனையோ முறை ஜெபம் செய்துவிட்டேன் ஆனால் என் ஜெபத்திற்கு பதிலேயில்லை என்று சொன்னால் நீங்கள் இயேசுவை கவனிக்கவில்லை அல்லது இயேசுவை திரும்பி பார்க்க வைக்கவில்லை. நீங்கள் உன்மையாக கூப்பிடும்போது உனக்கு பதில் கிடைக்கும்.
உங்கள் ஜெபம் கேட்கப்படும் என்றால் நீங்கள் எதைக் குறித்தும் பயப்படவேண்டியதில்லை ஏன் என்று சொன்னால் உன் ஜெபத்திற்கு அவ்வளவு வலிமையுண்டு நீங்கள் உங்கள் ஜெபத்தை சாதரணமாக நினைக்கிறீர்கள் உங்கள் ஜெபத்தை பார்த்து தான் சாத்தானே நடுங்கிக் கொண்டு இருக்கிறான் அதனாலே தான் உன்னை ஜெபம் செய்ய விடாமல் சாத்தான் தடை செய்கிறான்.
ஜெபிக்கிற நீங்கள் ஒன்று கற்றுக்கொள்ள வேண்டும் தைரியத்தை கற்றுக்கொள்ள வேண்டும். பர்திமேயுவை பார்த்து கூடியிருந்தவர்கள் சொன்னார்கள் திடன்கொள், எழுந்திரு, உன்னை இயேசு அழைக்கிறார் நீங்களும் (ஜெபிக்கிற நீங்களும்) திடன் கொள்ளுங்கள் ஏன் என்றால் ஜெபிக்கும் போது நமக்கு பயத்தை உண்டாக்குவான். தைரியம் கொடுக்குற இயேசு உனக்கு எதிரே இருக்கிறார்
“ஒரு சகோதரி என்னிடம் வந்து ஜெபம் செய்யவில்லை என்றால் எனக்கு நிம்மதியாக இருக்கிறது சொன்னார்கள் நான் சொன்னேன் சாத்தான் உஙகளை தடவிக் கொடுக்கிறான் நீங்கள் ஜாக்கிரதையாயிருங்கள் என்றேன் அதற்கு பிறகு அவர்கள் ஜெபித்தார்கள் தடை வந்தது மீண்டும் ஜெபித்தார்கள் தடை வந்தது தடையை மீறி ஜெபித்தார்கள் கர்த்தர் அவர்களை ஆசீர்வாதமாக வைத்திருக்கிறார்.”
நீங்களும் தடையை மீறி மீறி ஜெபியுங்கள் கர்த்தர் உன் வாழ்க்கையில் உள்ள தடைகளை மாற்றுவார்.
முதலில் நீங்கள் திடன்க்கொள்ள வேண்டும் அடுத்து நீங்கள் எந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறீர்களோ அந்த இடத்தை விட்டு எழுந்திருக்க வேண்டும். அடுத்து இயேசுவின் அழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். இன்று அநேகர் இரட்சிக்கப்பட்டு ஆண்டவரை பின் தொடருகிறார்களா? இல்லை என்ன காரணம் இன்னும் அவர்கள் தேவனுடைய அழைப்புக்குள் வரவில்லை
ஆண்டவர் அழைத்த அழைப்பிலே வந்தால் அவர்கள் பின் வாங்கி போகமாட்டார்கள். மற்றவர்களை பார்த்து இரட்சிக்கபட்டவர்கள் அவர்கள் பின் மாற்றத்தை பார்த்து இவர்களும் பின் மாற்றம் சென்றுவிடுகிறார்கள். ஆனால் இயேசுவால் அழைக்கபடும் போது அவர்களே போக நினைத்தாலும் அவர்களால் போகமுடியாது. இயேசுவின் அழைப்பு வரும்வரையிலும் நீங்கள் காத்திருக்க வேண்டும். அவரின் அழைப்பில்லாமல் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது. அவர் உன்னை உயர்த்தும் வரை பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் இப்படி நீங்கள் காத்திருந்தால் கர்த்தர் உங்களை ஏற்ற நேரத்தில் உயர்துவார்.
“உடனே அவன் தன் மேல்வஸ்திரத்தை எறிந்துவிட்டு, எழுந்து, இயேசுவினிடத்தில் வந்தான்.”
மேல்வஸ்திரம் என்பது அவர்களின் அடையாளத்தை காட்டுகிறது. பர்திமேயு இயேசு அழைக்கும் போது தன் மேல்வஸ்திரத்தை அதாவது தன்னுடைய அடையாளத்தை தூக்கி எரிந்துவிட்டு இயேசுவை நோக்கி ஓட ஆரம்பித்தான். இயேசு உன்னை அழைத்தால் முதலில் உன் மேல் வஸ்திரத்தை அதாவது உன் அடையாளத்தை எரித்துவிட வேண்டும். சிலப்பேர் ஆயாக்காரன் மற்றும் பரிசேயன் போல நான் யார் என்று தெரியுமா? வாரத்தில் 2 முறை உபாவாசிக்கிறேன் தினமும் 3 வேளை ஜெபிக்கிறேன் என்று சிலபேர் ஜெபிக்கிறார்கள். அடுத்து நீங்கள் நான் நான் என்று சொல்லூம் கர்வத்தை தூக்கி எரிய வேண்டும் அப்படி நீ செய்யும் போது தேவன் உனக்கு தேவையான ஆசீர்வாதத்தை தருவதற்கு வல்லவராய் இருக்கிறார்.
இங்கு சொல்லப்படுகிற அந்த மேல்வஸ்திரம் நான் என்கிற கர்வம் அதை தூக்கி எறிந்துவிட வேண்டும். பர்திமேயு அழைப்பு வந்ததும் தன் மேல்வஸ்திரத்தை எறிந்துவிட்டு, எழுந்து, இயேசுவினிடத்தில் வந்தான்.
சில பேர் தேவ சமுகத்தில் வந்துக்கூட நான் எந்த ஜாதி தெரியுமா? என்று பேசுகிறவர் கடைசிவரைக்கும் ஆசீர்வாதத்தை பெறவே முடியாது. உன்னிடம் இருக்கிற ஜாதி என்ற மேல் வஸ்திரத்தை தூக்கி எறிந்துவிட வேண்டும். தேவனுடைய சமூகத்தில் உனக்கு அடையாளம் அவசியமா? தேவ சமூகத்தில் தேவனுடைய பிள்ளை என்ற அடையாளத்தை தவிர வேறு அடையாளம் அவசியமில்லை.
எனவே தேவனுடைய பிள்ளையே இயேசு உன்னை அழைக்க வேண்டும் என்று சொன்னால் நீங்கள் அவரை கூப்பிட வேண்டும். உங்கள் தடையை மீறி முன்னிலும் அதிகமாய் கூப்பிட வேண்டும் அடுத்து உன் மேல் வஸ்திரத்தை எரிந்துவிட வேண்டும் அப்பொழுது பர்த்திமேயு பார்வை பெற்றது போல நீங்களும் இந்த உலகத்தில் ஆசீர்வாதங்களை நன்மைகளை கிருபைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.