ஏன் இன்னும் முறையிடுகிறாய் | Pastor B. E. Samuel

கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமையடைவதாக இந்த மாத இதழின் மூலமாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ஏன் இன்னும் முறையிடுகிறாய் என்ற தலைப்பில் இன்று நாம் தியானிக்கபோகிறோம். 

விசுவாசத்தினாலே அவர்கள் சிவந்த சமுத்திரத்தை உலர்ந்த தரையைக் கடந்துபோவதுபோலக் கடந்துபோனார்கள்; எகிப்தியரும் அப்படிச் செய்யத்துணிந்து அமிழ்ந்துபோனார்கள். – எபிரெயர் 11:29

யாத்திராகமம் 14:5-20 – ல் சொல்லப்பட்ட சம்பவத்தை எபிரெயர் 11:29 ல் ஒரு பகுதியாக பார்க்கிறோம். 

இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தியர் அடிமைகளாக வைத்துக் கொண்டிருந்தார்கள் எகிப்து தேசத்தில் அடிமைகளாக வைத்திருந்த போது கர்த்தர் மோசேயை கொண்டு என்ன செய்தார் என்றால் அவர்களை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டு  கொண்டுவாருகிறார். எகிப்து மக்களை 10 வாதையினால் தண்டித்து இஸ்ரவேல் மக்களை மீட்டு கொண்டு வருகிறார். அந்த 10 வாதைகள் ஏன்? என்பதை வேறு செய்தியில் பார்க்கலாம்.

பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் தேசத்தை விட்டு போய்விட்டார்கள் என்று எகிப்தின் ராஜாவுக்கு அறிவிக்கப்பட்ட போது ஜனங்களுக்கு விரோதமாக பார்வோனும் அவன் ஊழியக்காரரும் மனம் வேறுபட்டு நமக்கு வேலை செய்யாதபடிக்கு நாம் இஸ்ரவேலை போக விட்டது என்ன என்று இரதங்களைப் பூட்டி தன் ஜனங்களை கூட்டிக்கொண்டு பிரதானமான 600 இரதங்களையும் எகிப்தில் உள்ள மற்ற சகோதரர்கள் அவைகள் எல்லாவற்றுக்கும் அதிபதிகளான வீரர்களையும் கூட்டிக்கொண்டு போனான்.

கர்த்தர் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் இருதயத்தை கடினப்படுத்தினார் அதனால் இஸ்ரவேலை பின்தொடர்ந்தான் இஸ்ரவேல் புத்திரர் பலத்த கையுடன் புறப்பட்டு போனார்கள் எகிப்தியர் பார்வோனுடைய சகல குதிரைகளோடு இரதங்களோடும் அவனுடைய குதிரை வீரரோடும் சேனைகளோடும் அவர்களை தொடர்ந்து போய் சமுத்திரித்தண்டையில் பாகால் சேபோனுக்கு எதிரே இருக்கிற ஈராத் பள்ளத்தாக்கின் முன்னாடியே பாலையும் இறங்கியிருக்கிற அவர்களை கிட்டி நெருங்கினான்.

பார்வோன் சமீபித்து வருகிற போது இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கண்களை ஏறெடுத்து பார்த்து எகிப்தியர் தங்களுக்கு பின்னே வருவதை கண்டு மிகவும் பயந்தார்கள் அப்போது இஸ்ரவேல் புத்திரர் மோசேயை நோக்கி கூப்பிட்டார்கள்.

மோசே எங்களுக்கு எகிப்திலே கல்லறை இல்லை என்றா அதாவது பிரேத குழியில்லை என்றா  இந்த வனாந்தர இடத்தில் கொண்டுவந்தீர்? நாங்கள் எகிப்தில் இருக்கும் போது நாங்கள் எகிப்தியருக்கு வேலைசெய்ய எங்களைச் சும்மா விட்டுவிடும் என்று சொன்னோம், நீ ஒரு அற்புதமும் செய்ய வேண்டாம், நீ காப்பாற்றவே வேண்டாம் போ என்று அப்போவே சொன்னோம் அல்லவா நாங்கள் இந்த வனாந்திரத்தில் சாகிறதை பார்க்கிலும் அடிமையாய் இருப்பது நலமாய் இருக்கும் என்றார்கள்.  ஆனால் கர்த்தராகிய இயேசு நமக்கு அவ்வாறு சொல்லவில்லை செத்தாலும் செத்துப் போ வீரனாக  வைராக்கியமாக செத்துப் போ.

யாத்திராகமம் 14:13

“13. அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனிமேல் என்றென்றைக்கும் காணமாட்டீர்கள்.”

நம் வாழ்க்கையில் அநேக பிரச்சினைகள் வரலாம் அந்த பிரச்சனைகள் வரும்போது பிரச்சனை வருகிறது பிரச்சனை வருகிறது என்று ஆண்டவரை விட்டு விலகி செல்கிறோம். ஒரு பக்கம் பிரச்சினை வந்தால் மறுபக்கம் விலகிப் போகிறோம். ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார் இன்றைக்கு நீ காண்கிற இந்த எகிப்தியரை இனிமேல் காணமாட்டாய் . 

உங்களுக்கென்று ஒரு பிரச்சனை வரும் அதை நீங்கள் காண மாட்டீர்கள் அந்தப் பிரச்சினை உங்களுக்கு மீண்டும் வரக்கூடாது என்றால் அந்தப் பிரச்சினையை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் இன்றைக்கு வருகிற பிரச்சனை மீண்டும் மீண்டும் உனக்கு வரவே கூடாது என்றால் அந்தப் பிரச்சினைகளை நீ மேற்கொண்டு தான் ஆக வேண்டும். அதை விட்டுவிட்டு பிரச்சனை வந்ததும் விலகி சென்றால் அந்தப் பிரச்சனை மீண்டும் உங்களை சுற்றி சுற்றி தான் வரும். வசனம் தெளிவாக சொல்லுகிறது இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனிமேல் காண மாட்டீர்கள்.

14. கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.  15. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு. 

13. ஆனால் மோசே, “பயப்படாதீர்கள்! ஓடிப் போகாதீர்கள்! நீங்கள் சும்மா இருந்து, கர்த்தர் இன்றைக்கு உங்களை இரட்சிப்பதை பாருங்கள். இந்த எகிப்தியர்களை இனிமேல் பார்க்கமாட்டீர்கள்! 14. நீங்கள் எதையும் செய்யாமல் அமைதியாக இருந்தால் போதும், கர்த்தர் உங்களுக்காகப் யுத்தம் செய்கிறவராய் இருக்கிறார்” என்றான். 15. கர்த்தர் மோசேயை நோக்கி, ஏன் இன்னும் நீ என்னிடம் அழுகிறாய்? இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் பயணத்தைத் தொடருமாறு சொல்லு. 

கர்த்தர் மோசியை நோக்கி ஏன் இன்னும் நீ என்னிடம் அழுகிறாய்? இன்னும் எவ்வளவுநாள் முறையிடுவாய் நீ என்ன குழந்தையா? நீ இன்னும் வளரவில்லையா? இரட்சிக்கப்பட்டு எத்தனை வருடங்கள் ஆகிறது? இன்னுமா என்னிடம் வந்து அழுவாய்? எழுந்து செயல்பட தொடங்கு என்று கர்த்தர் சொல்லுகிறார். சும்மா எதற்கெடுத்தாலும் ஆண்டவரே ஆண்டவரே என்று முறையிட்டுக் கொண்டிருக்கிறோம். முறையிடு மீண்டும் எழுந்து நில்லு பிரச்சனையை மேற்கொள்வதற்காக முறையிட்டதோடு நிற்பது  அதற்குப் பிறகு ஒன்றும் செய்வதில்லை

நான் சிறுபிள்ளையாய் இருக்கும் போது வழியில் நாயைக் கண்டு பயந்து ஓடுவோன் அதே பெரியவனாகி விட்ட பின்பும் அந்த நாயை கண்டு நாம் ஓடிக்கொண்டிருந்தாள் இன்னும் இயேசுவை நீங்கள் இவ்வளவு நம்பவில்லை என்பது தான் பொருள். சும்மா இருங்கள் ஆண்டவர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார் அப்படி இப்படி என்று பேசிவிட்டு இப்போது பயந்து  ஓடிக் கொண்டிருக்கிறான் என்று சொல்வீர்கள் அல்லவா அதேபோல அந்தப் பையனும் அவன்  தகப்பனும் வழியில் சென்று கொண்டிருக்கும் போது நாய் இருக்கும் இடம் கண்டு வாங்கப்பா நாம் ஓடிவிடலாம் என்று அப்பாவிடம் சொன்னால் அவர் அந்த நாயை அடிக்க மாட்டார் என்னை தான் அடிப்பார் ஏன் என்றால் என்னை விட அந்த நாய் பெரியதா அது போலத்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவம் சொல்லுகிறார் உனக்கு வருகிற பிரச்சனைகள் எல்லாம் அந்த நாய் போன்றது.

உங்களுக்கு எதிராய் நிற்கிற பிரச்சினைகளை விட உங்கள் ஆண்டவர் பெரியவர் அது உங்களுக்கு தெரிந்தது என்றால் மீண்டும் மீண்டும் போய் முறையிட மாட்டாய் ஆண்டவரே நான் எழுந்து போகிறேன் என்னோடு கூட வா என்று சொல்லுவீர்கள்.

உங்க அப்பா ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களோடு இருக்கும் போது எந்த பிரச்சனையும் உங்களை ஒன்றும் செய்யாது. 

சில பேர் ஜெபம் செய்து பாவமன்னிப்பு கேட்பார்கள் அதை நான் தவறாக சொல்லவில்லை ஆண்டவரே ஒரு நாள் மனதிறங்கி வந்து மகனே என்னால முடியல நீ பாவமன்னிப்பு கேட்க வேண்டாம் அதற்கு பதிலாக தயவு செய்து பாவம் செய்யாதிரு நாம் என்ன செய்கிறோம் என்றால் பாவம் செய்வதை விட்டு விலகாமல் பாவ மன்னிப்பை மட்டும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். 

ஆண்டவர் சொல்கிறார் பாவ மன்னிப்பை கேட்பதைவிட அந்தப் பாவத்தை இனி செய்யாதீர்கள் என்று சொல்லுகிறார். உன் வாழ்க்கையில் பாவம் செய்வது நின்று விட்டால் நீ பாவமன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை.

ஒவ்வொரு நாளும் தேவனுடைய சமூகத்தில் நின்று நாம் சிந்தனை  செய்து பாவத்தை எனக்கு மன்னியுங்க நான் தெரிஞ்சு செய்யவில்லை ஒருவேளை தெரிந்து செய்திருந்தால் என்னை மன்னியுங்கள் என்று அர்ப்பணித்து அந்தப் பாவத்தை விட்டு விடுங்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார். 

ஒரு சில விசுவாசிகளுக்கு தேவனைத் தேடுகிற உணர்வு சுத்தமாக இருக்காது, ஒரு சில விசுவாசிகளுக்கு ஆலயத்தில் தங்களை முதன்மையாக காட்ட நினைக்கிறார்கள். ஆலயத்தில் தேவனை விட எதை நீங்கள் முதன்மையாக காட்டுகிறீர்களோ அது விக்கிரக ஆராதனை. 

ஆண்டவருடைய சமூகத்தில் ஆண்டவர் மட்டுமே மகிமைப்பட வேண்டும், ஆண்டவருடைய சமூகத்தில் ஆண்டவர் மட்டுமே தெரிய வேண்டும் ஆண்டவருக்கு நேராகப் போக வேண்டிய கனத்தை உன் பக்கம் திருப்பினாள் அவன் தான் பிசாசானவன். நீங்கள் ஆண்டவருடைய சமூகத்தில் ஆண்டவரைத் தவிர வேறு யாரையும் வேற எதையும் முன்னிலைப்படுத்தக்கூடாது. நீங்கள் தேவனுக்கு கொடுக்க வேண்டிய மகிமையை கொடுத்தால் தான் அவர் உங்களுக்காக யுத்தம் செய்வார்.

நீ உன் கோலை ஓங்கி, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, சமுத்திரத்தைப் பிளந்துவிடு; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோவார்கள். எகிப்தியர் உங்களைப் பின்தொடர்ந்து வரும்படி நான் அவர்கள் இருதயத்தைக் கடினப்படுத்தி, பார்வோனாலும் அவன் இரதங்கள் குதிரைவீரர் முதலாகிய அவனுடைய எல்லா இராணுவத்தாலும் மகிமைப்படுவேன். இப்படி நான் பார்வோனாலும் அவன் இரதங்களாலும் அவன் குதிரைவீரராலும் மகிமைப்படும்போது, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறிவார்கள் என்றார். 

அப்பொழுது இஸ்ரவேலரின் சேனைக்கு முன்னாக நடந்த தேவதூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னாக நடந்தார்; அவர்களுக்கு முன் இருந்த மேகஸ்தம்பமும் விலகி, அவர்கள் பின்னே நின்றது. அது எகிப்தியரின் சேனையும் இஸ்ரவேலரின் சேனையும் இராமுழுதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது; எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது, இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று.

உங்களுக்கு வரும் பிரச்சனைகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றால் எழுந்து ஓட வேண்டும் பிரச்சினையைப் பார்த்து கலங்கக்கூடாது கூடாது ஏனென்றால் அந்தப் பிரச்சினையை அனுப்புவது நீங்கள் செயல்பட வேண்டும் என்பதற்காகவே வேதம் தெளிவாக சொல்லுகிறது யாத்திராகமம் 14:17 “எகிப்தியர் உங்களைப் பின்தொடர்ந்து வரும்படி நான் அவர்கள் இருதயத்தைக் கடினப்படுத்தி” அப்படி என்றால் உங்களுக்கு வரும் பிரச்சனையை நீங்கள் மேற்கொள்வதற்காக தான் கர்த்தராகிய ஆண்டவர்  உங்களுக்கு இடறல்களை வைக்கிறார். 

ஆண்டவர் மோசேக்கு சொல்கிறார் அப்போது  ஜனங்களை நோக்கி பயப்படாதிருங்கள் நீங்கள் நின்று கொண்டு இன்றைக்கு கர்த்தர் உங்களுக்கு செய்யும் இரட்சிப்பை பாருங்கள் இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காண மாட்டீர்கள் பிரியமானவள் தேவனுடைய பிள்ளைகளே உங்கள் வாழ்க்கையில் இன்று காண்கிற உபத்திரவம் துன்பம் போராட்டம் பிரச்சனை கஷ்டம் தொல்லை கடன் பாரம் போன்ற எந்த  எகிப்தியனையும் இனிமேல் நீங்கள் காண மாட்டீர்கள் நீங்கள் ஆராதிக்கிற உங்கள் தேவன் உங்களோடு இருப்பாராக. ஆமென்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *