இஸ்ரவேலை ஆளுகிறவர் | Pastor B. E. Samuel
கிறிஸ்துவுக்குள் பிரியமான தேவனுடைய பிள்ளைகளுக்கு கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் டிசம்பர் மாதம் என்றாலே எப்பொழுதும் கிறிஸ்மஸ் செய்தியை மட்டுமே வாசித்துக் கொண்டிருக்கிறோம் இப்பொழுது இந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாத செய்தியாக இஸ்ரவேலை ஆளப் போகிறவர் உன்னிடத்தில் இருந்து புறப்பட்டு என்னிடத்திற்கு வருவார் என்ற செய்தியை வாசிக்கப் போகிறீர்கள். இஸ்ரவேலை ஆண்ட ராஜாக்களில் சாலமோன் ராஜாவை பற்றி ஒரு சில காரியங்களை நாம் வாசிக்க போகிறோம். என்னவென்றால், சாலமோன் ராஜா ராஜாவாகிற போது சிறு பையனாக இருந்தான்.