கர்த்தருடைய பரிசுத்த நாமம் பரிசுத்தப்படுவதாக இந்த மாத இதழின் மூலமாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
தேவன் கேடகமானவர் என்ற தலைப்பில் இன்று நாம் பார்க்க போகிறோம்.
“தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர். – நீதிமொழிகள் 30:5”
- தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்;
- தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர்.
தேவன் கேடகமானவர்:
தேவன் கேடகமானவர் என்பதை தான் இன்று நாம் தியானிக்க போகிறோம் கர்த்தருடைய வசனம் என்று சொன்னால் அது புடமிடப்பட்டவை அது ஒரு முறைக்கு 100 முறை புடமிடப்பட்டு (சோதித்து) சுத்த பொன்னாக்கப்பட்டு உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது அது கர்த்தருடைய வேத வசனம் தான் நாம் வேதத்தில் வாசிக்கிறோம் தேவனுடைய வசனம் எல்லாம் புடமிடப்பட்டவைகள், மேன்மையானவைகள், உண்மையானவைகள்.
இயேசு கிறிஸ்துவானவர் சாத்தானுக்கு மறுமொழி சொல்லும் போது வேத வசனத்தோடு மாத்திரமே பதில் சொன்னார் எனவே வேத வசனம் எவ்வளவு முக்கியம் என்று பாருங்கள். நீங்கள் மற்றவர்களோடு பேசும்போது வேத வசனங்களைக் கொண்டு பேசுங்கள் வசனத்தோடு பேசுவீர்கள் என்றால் தோல்வி என்பது உங்களுக்கு இருக்காது உங்கள் வாழ்க்கையில் ஜெயமே கிடைக்கும்
உங்கள் வாழ்க்கையில் தேவைகள் எப்பொழுதெல்லாம் நேரிடுகிறதோ அப்பொழுது எல்லாம் பிசாசானவன் வந்து விடுவான் ஜாக்கிரதையாயிருங்கள் பிசாசானவன் வந்து ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள் ஏன் இவ்வளவு பாடுகள் படுகிறீர்கள் என்று தேவனுக்கு விரோதமான காரியங்களைதான் போதிப்பான் கர்த்தராகிய இயேசுவிடவும் பிசாசானவன் ஆண்டவரே நீங்க தேவகுமாரன் நீர் போய் பசியா இருக்கலாமா இந்த கல்லுகளை அப்பமாகு என்று சொன்னால் அது அப்பம் ஆகுமே நீங்க சாப்பிட்டு திருப்தியாக இருக்கலாமே எதற்கு இவ்வளவு பசியோடு தாகத்தோடு தவிக்கிறீர்கள் என்று சொன்னான் அது இயேசுவின் பேரில் உள்ள அக்கறை அல்ல சமயம் தேடும் பிசாசு தேவையின் மத்தியில் உங்களைத் தேடி வருவான், இதைப் போன்ற நேரங்களில் தான் நீங்கள் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும் வசனத்தை அதாவது தேவனுடைய வசனத்தை அதிகமாய் பற்றி கொள்ள வேண்டும் இயேசு செய்ததை பாருங்கள் அதற்கு இயேசு மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற வார்த்தை அதாவது வசனம் அவ்வளவு மகிமையானது பாருங்கள் நீங்கள் இந்த உலகத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால் கர்த்தருடைய வசனத்தை உங்களுக்குள் பத்திரமாக காக்கப்பட வேண்டும் ஏற்ற சமயத்திலே அதை நீங்கள் பயன்படுத்த வேண்டும் அப்பொழுது பிசாசை உங்களால் ஜெயிக்க முடியும்,
சுத்தசொற்களாயிருக்கின்றன:
“கர்த்தருடைய சொற்கள் மண் உலையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்தசொற்களாயிருக்கின்றன. – சங்கீதம் 12”
கர்த்தருடைய வசனம் வெள்ளியை எப்படி உருக்குவார்களோ அதைப் போன்று புடமிடப்பட்டு உடைத்து நொறுக்கி சுத்தமாக்கப்பட்ட சொற்கள் கர்த்தருடைய சொற்கள். கர்த்தருடைய (வார்த்தை) வசனம் முக்கியம் எதற்கெடுத்தாலும் வசனங்களை சொல்கிறீர்களா? உங்கள் தேவைகள் வரும்போது வசனங்கள் மறந்து விடுகிறீர்கள், ஜெபம் மறந்து விடுகிறீர்கள், நாம் ஆண்டவரை நோக்கி பார்ப்பதில்லை மனுஷரை நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறோம். தேவை வரும்போது நோக்கி பார்க்க வேண்டிய இடத்தை பார்க்க தவறுகிறோம் நீங்கள் நோக்கிப் பார்த்தவர்கள் கூட இல்லை என்று சொல்லி இருப்பார்கள் ஆண்டவர் உங்களுக்கு ஒரு நாளும் இல்லை என்று சொல்லவே மாட்டார்.
உலகத்தில் இருக்கிற அனைவரும் இல்லை என்று சொல்லி இருப்பார்கள் ஆனால் இயேசு கிறிஸ்துவிடும் கேட்டால் இல்லை என்று ஒருபோதும் சொல்ல மாட்டார். ஆனால் தாமதமாகும் உனக்கு எப்பொழுது தேவை என்று அவர் அறிந்து அப்பொழுது கொடுக்கிற தேவன் அவர். கஷ்டமான நேரங்களில் தேவனுடைய வசனம் உங்களுக்கு மருந்தாகிவிடும் அவர் உங்களுக்கு ஆறுதல் கொடுப்பார் என்பதை மறந்து விடுகிறீர்கள் உலக மனிதரிடம் ஆறுதலை தேடுகிறீர்கள் ஆடு மாடுகளுக்கு கொடுக்கிற மரியாதையை கூட மனிதர்களுக்கு கொடுக்கிறது இல்லை ஆனால் ஆண்டவர் அப்படிப்பட்டவர் இல்லை குஷ்டரோகியை எந்தவிதமான அருவருப்பில்லாமல் அவனைத் தொட்டு சுகமாக்கினார் அந்த நாட்களில் குஷ்டரோகம் என்றால் தீட்டு குஷ்டரோகம் உள்ளவன் ஊருக்குள்ளே வர கூடாது அப்பேர்ப்பட்ட குஷ்டரோகியை கூட தேவன் தொட்டு சுகமாக்கினார்.
கர்த்தருடைய வசனத்துக்கு யார் முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாய் தேவனோடு இருப்பார்கள்.
கர்த்தருடைய வேதம் குறைவற்றதும்:
“கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி முழுமையானதும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. – சங்கீதம் 19:7”
கர்த்தருடைய வசனம் உங்களுடைய வாழ்க்கையில் உணவாக மாற வேண்டும் வாழ்கிற வாழ்க்கைக்கு உணவு எவ்வளவு முக்கியமோ அதைப் போன்று தேவனுடைய வசனம் நம்முடைய வாழ்க்கையில் முக்கியமானது அந்த வசனம் உங்களை உயிர்ப்பிக்கும்.
கர்த்தருடைய சாட்சி முழுமையானதும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.
யார் என்ன சொன்னாலும் நம்புவது இதற்குப் பெயர்தான் பேதை. கர்த்தருடைய வசனம் எனக்குள் வந்த உடனே பேதையை ஞானியாக்கும். உங்களையும் கர்த்தருடைய வசனம் ஞானியாக்கும். இதயத்தில் சந்தோஷம் இல்லை என்றால் வேத வசனத்தை வாசித்தால் சந்தோஷம் கிடைக்கும், வேத வசனத்தை படிக்கும் போது உங்களுடைய வாழ்க்கையில் தெளிவு உண்டாகும்.
முதலாவது கர்த்தருடைய வார்த்தையை நம்ப வேண்டும். எப்படிப்பட்ட சூழ்நிலையா இருந்தாலும் எப்படிப்பட்ட கஷ்டங்கள் இருந்தாலும் முதலாவது கர்த்தருடைய வார்த்தையை நம்ப வேண்டும். நீங்கள் தேவனுடைய வசனத்தை படித்து வைத்திருந்தால் தான் அந்த சூழ்நிலைக்கு ஏற்றபடி அந்த வசனம் உங்களை தேற்றும் அது உங்களுடன் பேசும் கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது, கர்த்தருடைய சாட்சி முழுமையானதும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது கர்த்தருடைய வார்த்தையை எந்தவித சந்தேகமில்லாமல் அப்படியே நம்ப வேண்டும்.
நான் ஊழியத்திற்கு வரும்போது எங்களுக்கு முன் இருந்த ஊழியர்கள் எல்லாம் மிகவும் கஷ்டப்பட்டு ஊழியத்தை செய்தார்கள் பாதங்களில் செருப்பு பாதரட்சை கூட இல்லாமல் ஊழியத்தை செய்தார்கள் இதையெல்லாம் பார்த்த நான் அங்கே சென்றால் நாமும் கூட இவ்வாறு கஷ்டப்பட வேண்டுமேயென்று எனக்கு வேண்டாம் இந்த ஊழியம் என்று ஊழியத்தை விட்டு ஓடினேன்.
ஆண்டவர் என்னை விடவே இல்லை நான் ஒரு கடை வைத்துக் கொண்டிருந்தேன் அதோடு கூட ஊழியமும் செய்து கொண்டு வந்தேன் அப்பொழுது கர்த்தர் முழு நேர ஊழியத்திற்கு என்னை அழைத்தார் ஏற்கனவே ஊழியம் செய்கிறவர்கள் கஷ்டப்படுகிறார்கள் நாமும் போய் கஷ்டப்பட வேண்டியது இருக்கும் என்று ஆண்டவர் அழைக்கும் போதெல்லாம் ஆண்டவருக்கு செவி கொடுக்காமல் வார்த்தையை மதிக்காமல் அசட்டை செய்து கொண்டிருந்தேன்.
மூன்று முறை தேவன் என்னை ஊழியத்திற்கு அழைத்தார் தரிசனம் மூலமாய் அப்பொழுது மூன்றாவது முறை நான் ஆண்டவரை பார்த்து ஆண்டவரே நான் விசுவாசியாக மட்டும் இருக்கிறேன் ஊழியம் வேண்டவே வேண்டாம் என்று சொன்னேன் அவ்வளவுதான் அன்று இரவு தரிசனங்களோ சொப்பனங்களோ எதுவும் எனக்கு வரவில்லை அந்த இரவு நன்றாய் தூங்கினேன் காலையில் எழுந்திருக்கும் போது வாந்தி வருவது போல் இருந்தது வெளியே ஓடி வந்து வாந்தி எடுக்க வந்தபோது வாந்தி எடுத்து மயங்கி விழுந்து விட்டேன் அன்று தொடங்கி மூன்று பகல் மூன்று இரவு போனதே தெரியாது எங்களுக்கு பழக்கமான குடும்ப மருத்துவர் அவரிடத்திலே அழைத்துக் கொண்டு போய் பார்த்தார்கள் அவர் வீட்டுக்கு கொண்டு போய் விடுங்கள் என்று சொல்லிவிட்டார்.
ஏனென்றால் போட்ட ஊசியில் இருந்து மருந்து என் உடம்பில் ஏறவே இல்லை ஆனால் அந்த மூன்றாவது நாள் இரவு பணிரெண்டு மணிக்கு ஆண்டவர் என்னுடைய தரிசனத்தில் தோன்றினார் மூன்றாவது நாள் இரவு அதற்கு முன்பு மூன்று பகல் மூன்று இரவு போனதே தெரியாது சுய நினைவில் இல்லை அந்த நிலையில் அந்த இரவு தேவன் தரிசனத்தின் மூலமாக என்னை ஒரு காட்சியை காண்பித்தார் அதிலே ஒரு வெண்மையான உயர்ந்த உருவம் நிற்கிறது அதன் அருகிலே என் உருவம் சிறிதாக நிற்கிறது என் உருவம் கைகட்டி தலை குனிந்து நிற்கிறதைக் கண்டேன் அப்பொழுது ஆண்டவர் என்னை கேட்டார் இப்பொழுது என்ன சொல்கிறாய் என்று, நான் சொன்னேன் என்னால் என்ன செய்ய முடியும் எல்லாம் உம்மால் ஆகும் எனக்கு முன் ஊழியத்திற்கு வந்தவர்கள் படுகிற கஷ்டங்களை பார்த்து பயந்தேன் பசி தாகம் வருமை கஷ்டம் கண்ணீர் துக்கம் அவமானம் நிந்தை ஐயோ என்னால் இது எல்லாம் தாங்க முடியாது என்று பயந்தேன் என்று சொன்னேன்.
அப்பொழுது ஆண்டவர் நீ போ உன்னோடு கூட நான் இருக்கிறேன் நீயே சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்று இருந்தால் ஒழிய உன்னை ஒரு நாளும் நான் பட்டினியாக விடமாட்டான் என்று என் தலையின் மேல் கையை வைத்து ஆசீர்வதித்து அனுப்பினார் இரவு சரியாக ஒரு மணி என்னுடைய ஆவி என் சரித்துக்குள் வந்ததை உணர்ந்தேன் என்னை சூழ்ந்து உறவினர் படுத்துக் கொண்டிருந்தார்கள் அப்பொழுது எனக்குள்ள பரிசுத்த ஆவியானவர் இறங்கினார் ஒரு மணி நேரம் அபிஷேகத்தில் ஆவியிலே நிரம்பி ஜெபித்தேன் என்மேல் இறங்கின அந்த அபிஷேகம் அங்கே எனக்காக படுத்துக் கொண்டிருந்த எல்லார் மேலும் பரவி நிரப்பினது அன்று முதல் கொண்டு தேவன் அவர் வார்த்தையை தந்த வார்த்தையின் படியே இந்த நாள் வரை நடத்திக் கொண்டு வருகிறார்.
அவருடைய வார்த்தை அவருடைய சொல் அவருடைய பேச்சு அதி முக்கியம் வாய்ந்தது அதை வசனத்தை இறுக்கமாய் பற்றி கொண்டேன். எனக்கு உதவி செய்த ஆண்டவர் உங்களுக்கு உதவி செய்ய வல்லவர். இந்த ஊழியத்தை 35 வருடங்களாக கர்த்தர் இணைந்து நடத்தி கொண்டிருக்கிறார். என்னை நடத்தின ஆண்டவர் என்னை பாதுகாத்த ஆண்டவர் உங்களை நடத்த மாட்டாரா கர்த்தருடைய வார்த்தையை அப்படியே நம்ப வேண்டும்.
அவர் கேடகமானவர்:
போர் சேவகர்கள் ஒரு கையில் கத்தியும் மற்றொரு கையில் கேடகத்தையும் வைத்திருப்பார்கள். கத்தியினால் எதிரிகளை தாக்குவதற்கும், எதிரிகள் தன்னை தாக்கும் போது கேடகத்தினால் தடுப்பதற்கும் அதாவது பாதுகாப்பதற்கு உபயோகிப்பார்கள் அதைப் போலவே ஆண்டவரும் உங்களுக்கு கேடகமாயிருக்கிறார் கேடகம் என்றால் உங்களுக்கு விரோதமாக வரும் நோயானாலும் பிரச்சனையானாலும் இடறல்கள் ஆனாலும் பிசாசின் தொல்லை ஆனாலும் ஆயுதங்கள் ஆனாலும் வேறு எந்த தொல்லைகள் ஆனாலும் சரி தடுத்து நிறுத்த அவர் கேடகமாய் இருக்கிறார் சற்று கவனியுங்கள் வலது கையில் பட்டயம் அதாவது கர்த்தருடைய வசனம் இடது கையில் கேடகம் அதாவது கர்த்தருடைய பாதுகாப்பு இவை இரண்டும் உனக்கு இருக்குமானால் இந்த உலகத்தில் உன்னை ஜெயிக்க ஒருவராலும் முடியாது அவர் உனக்கு கேடகமாய் இருக்கிறார்
அவரை பின்பற்றி வந்த நீங்கள் பின்னிட்டு திரும்பி பார்க்கவே பார்க்காதீர்கள். கிடைத்தாலும் சரி கிடைக்கவிட்டாலும் இயேசப்பா கையை பிடித்துக் கொண்டு நீங்க போயிட்டேயிருங்க உங்களுக்கு வாக்குத்தம் பண்ணப்பட்டதை கர்த்தர் செய்ய வல்லவராய் இருக்கிறார் ஏற்ற காலத்திலேயே அவற்றை செய்து முடிப்பார்.
இயேசுவின் பின்னே
போகத் துணிந்தேன்
பின்னோக்கேன் நான்
பின்னோக்கேன் நான்
உலகம் என் பின்னே
சிலுவை என் முன்னே
கர்த்தரை பின்பற்றின நீங்கள் உலகத்தை பின்பற்றிக் கொண்டிருக்கிறீர்கள் ஆனால் உலக காரியங்களை விட்டு கர்த்தரை பின்பற்றினால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய ஆசிர்வாதம் கிடைக்கும். நீங்கள் கர்த்தரை முழுமையாய் தேடாததினாலே பெற்றுக்கொள்ள வேண்டியதை பெற்றுக் கொள்ளாமல் இருக்கிறீர்கள் உங்களுக்கு எல்லா நன்மையும் கிடைத்திருக்கும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றால் பின்னோக்கி பார்த்து உனக்கு வரவேண்டிய நன்மைகள் காலதாமதம் ஆகிறது. எத்தனை முறை இப்படி ஏமாந்து கொண்டு இருப்பீர்கள் இன்றைக்கு ஒரு முடிவு எடுங்கள் அவர் உங்கள் கேடகமாய் இருக்கிறார். கேடகம் என்றால் எல்லா எதிரான ஆயுதங்களுக்கும் உன்னை பாதுகாக்கும் கருவி கர்த்தராகிய இயேசு உனக்கு வருகிற எல்லா ஆபத்துகளிலும் இருந்து பாதுகாக்கிற கேடகமாய் இருக்கிறார்.
“இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார். – ஆதியாகமம் 15:1”
“நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன்”
நீங்கள் யோசித்து பாருங்கள் ஆண்டவர் நமக்கு எப்படி இருக்கிறார் என்று அவர் ஒவ்வொரு நாளும் நம்மோடு பேச நினைக்கிறார் நீங்க தான் பேச மறுக்கிறீங்க வேற காரியங்களில் செலவிட்டு கொண்டுயிருக்கிறீர்கள். அவர் பேசதா கல்லோ மரமே இல்லை அவர் பேசும் தெய்வம் ஆபிரகாம் வாழ்க்கையை பாருங்கள் ஆபிரகாமுக்கு நூறு வயதில் ஈசாக்கை கொடுத்தார் அவரால் முடியும் அவரால் எல்லாம் ஆகும் நீ பயப்படாதே.
நடக்குமோ நடக்காதோ செய்வாரோ மாட்டாரோ சந்தேகப்படாமல் அவிவிசுவாசத்தை உன்னில் இருந்து எடுத்து போடு அப்படியே நம்பு யாரோ ஒருவர் இதை எழுதியிருந்தால் இவ்வளவு வருஷம் நிலைத்துயிருக்காது இவற்றை தேவனே எழுதியிருக்கிறார். எவ்வளவோ ஆபத்து வந்த போதும் உனக்கு வரமால் பாதுகாத்தார் அவரை நம்பு எவ்வளவு பேர் உனக்கு எதிராக இருந்தபோதும் உனக்கு ஒன்றும் நேரிடாமல் கேடகமாய் இருக்கிறார். எனவே நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன். ஆமென்.