விழித்திருங்கள் | Rev. B.E. Samuel

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக இம்மாத இதழின் மூலமாக உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கர்த்தர் தாமே இந்த வார்த்தைகள் மூலம் உங்களை ஆசீர்வதிப்பாராக. 

மத்தேயு 24:44.நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள். 45.ஏற்றவேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் யாவன்? 46.எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரனே பாக்கியவான்.

பிரியமானவர்களே இப்பொழுது வாசித்த வேதவசனத்தில் 42ம் வசனத்தில் நீங்கள் விழித்திருங்கள் என்றும் 44ம் வசனத்தில் நீங்கள் ஆயத்தமாய் இருங்கள் என்றும் 42ம் வசனத்தில் நீங்கள் பாக்கியவான்கள் என்பதையும் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது அதைத்தான் இந்நாளில் நாம் பார்க்கப்போகிறோம். 

முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் விழித்திரு, விழித்திரு என்றால் என்ன என்பதை பார்க்கப்போகிறோம். விழித்திரு என்றால் தூங்கக்கூடாது என்பது அர்த்தமல்ல தூங்கக்கூடாது என்று அர்த்தமானால் மணவாட்டி சொல்கிறாள் நான் நித்திரை பண்ணினேன் என் ஆத்துமாவோ விழித்திருந்தது என்று சொல்வதை பார்க்கிறோம்.

அப்படியானால் மணவாட்டி சொல்கிறாள் நான் தூங்கிக் கொண்டிருந்தேன் ஆத்துமாவோ விழித்திருந்தது என்று அப்படியானால் தூங்கி விட்டார்கள் என்று அர்த்தமாகுமா அல்லது தூங்காமல் இருந்து விழித்து இருந்தார்கள் என்று அர்த்தமாகுமா என்பதைப்பற்றி நாம் தெளிவாக பார்க்கப்போகிறோம்.

இன்றைய நாட்களில் அநேகர் வீட்டில் செல்லமாக பிராணிகளை வளர்ப்பதுண்டு சிலர் பச்சைக்கிளி வளர்ப்பார்கள் சிலர் முயலை வளர்ப்பார்கள் சிலர் நாயை வளர்ப்பார்கள் சிலர் பூனையை வளர்ப்பார்கள். அவரவர்களுக்கு பிடித்த பிராணிகளை அவரவர்கள் வளர்ப்பார்கள்.

அதேபோல ஒரு பெண் மலைபாம்பை வளர்த்தார்களாம் அந்தப் மலைபாம்பை தன் குழந்தை போல அது குட்டியாக இருந்ததிலிருந்து அதற்கு வேண்டிய ஆகாரம் பால் இறைச்சியை எல்லாம் கொடுத்து வளர்த்து வந்தார்கள். அதுவும் நல்ல பெரிதாக நல்ல பலமாக நீளமாக வளர்ந்தது அதற்கென்று ஒரு படுக்கை ரூம் வசதியாகவும் இருந்தது. மிகவும் அருமையாக ஒரு குழந்தையைப் போல வளர்க்கிறார்கள் வளர்த்த அந்த அம்மா கூடவே பாம்பும் படுத்துக்கொள்ளும் அவர்கள் எங்கே போனாலும் அதுவும் கூட போகும் அந்த அளவுக்கு பயிற்சி கொடுத்து இருந்தார்கள்.

சில நாட்கள் கழித்து அந்த பாம்பு எதுவுமே சாப்பிடவில்லை ஒரு நாள் ஆயிற்று இரண்டு நாள் ஆயிற்று எதுவும் சாப்பிடவில்லை அந்த அம்மாவுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. மிகவும் மனது வேதனையாக உள்ளது என்று தனது காரில் பாம்பைத் தூக்கி போட்டுக்கொண்டு மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்கள். மருத்துவர் அதை பார்த்து பரிசோதித்து விசாரித்து அந்த அம்மாவிடம் கேட்டார் அது என்னவெல்லாம் சாப்பிடும் எத்தனை வருடங்களாக வளர்க்கிறீர்கள் என்று விசாரித்தார்.

அதற்கு அவர்கள் பால் இறைச்சி எல்லாம் நன்றாக சாப்பிடும் இத்தனை வருடங்களாக வளர்த்து வருகிறேன் மிகவும் செல்லப்பிராணிகளாக வளர்க்கிறேன் என்றெல்லாம் சொன்னார்கள். இந்த அம்மா சொன்ன பதில்களை கேட்டு மருத்துவர் பதில் என்ன சொன்னார் என்றால் இந்த பாம்பு சில நாட்களாக உங்களை விழுங்குவதற்கு திட்டம் பண்ணிவிட்டது அதனால்தான் இரண்டு நாட்களாக சாப்பிடாமல் வயிற்றை காலியாக வைத்துள்ளது அந்தப் பாம்பு உங்களை விழுங்கப் போகிறதினால் நீங்கள் ஜாக்கிரதையாக இருங்கள் அதாவது விழிப்போடு இருங்கள்.

எப்பொழுது பாம்பு உங்களை விழுங்க போகிறது என்று உங்களுக்கு தெரியாது அதனால் நீங்கள் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள் என்றார். நன்றாக கவனித்து பாருங்கள் நாம் விழிப்பாக இருப்பது எதுவென்றால் தூங்காமல் இருப்பது அல்ல விழிப்பு எதிலும் எல்லாவற்றிலும் நாம் ஜாக்கிரதை உள்ளவர்களாக இருப்பது தான் விழிப்பு. பேச்சிலே கூட நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எதைப் பேச வேண்டும் எதைப் பேசக்கூடாது எங்கே போக வேண்டும் எங்கே போகக்கூடாது எதைக் கேட்க வேண்டும் எதை கேட்க கூடாது எல்லாவற்றிலும் ஒரு விழிப்பு தேவை என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது அந்த விழிப்பு நமக்கு தேவைப்படுகிறது.

அப்பொழுது பாருங்கள் அந்த அம்மா எவ்வளவு பிரியமாக அந்தப் பாம்பை வளர்த்தார்கள் எவ்வளவு பணத்தை செலவழித்து அதற்கு தேவையான இறைச்சி அது என்னவெல்லாம் சாப்பிடுமோ அத்தனையும் வாங்கி கொடுத்தார்கள். கடைசியில் அது வளர்த்தவர்களையே சாப்பிட அது தயாராகிவிட்டது இப்பொழுது அதை தன்கூட வைத்துக் கொள்வார்களாவென்றால் வைத்துக்கொள்ள மாட்டார்கள். அதுபோல அருமையான தேவனுடைய பிள்ளைகளே நாமனைவரும் தேவனுடைய பிள்ளைகள் எப்பொழுது எது யார் நமக்கு விரோதமாக எழும்புவார்கள் என்பது தெரியாது. யார் நமக்கு விரோதமாக பேசுவார்கள் யார் நமக்கு விரோதமாக தன் கையை ஓங்குவார்கள் என்பது நமக்கு தெரியாது. யார் நமக்கு விரோதமாய் மந்திரம் பண்ணுவார்கள் சூனியம் பண்ணுவார்கள் என்பது நமக்கு தெரியாது அப்படி இருக்கிறபடியால் நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.

இந்த வசனத்தில் நான் உங்களுக்குச் சொல்லுகிற காரியம் என்னவென்றால் நம் ஆண்டவர் எந்த நேரத்தில் வருவார் என்பது நமக்கு தெரியாது அப்படி தெரியாதபடியினால் நாம் விழிப்பாக இருக்க வேண்டும். தூங்காமலிருப்பது விழிப்பு அல்ல எதிலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், உங்கள் நண்பர்களிடத்தில் பழகுவதில் கூட ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

எப்பொழுது நண்பன் துரோகியாக மாறுவான் என்பது நமக்கு தெரியாது விரோதியாக மாறினால் கூட பரவாயில்லை  சிலவேளைகளில் துரோகியாக மாறிவிடுவார்கள் விரோதி என்பதற்க்கும் துரோகி என்பதற்கும் அநேக வித்தியாசங்கள் உள்ளது விரோதி கண்முன்னே இருப்பான். அதனால் நாம் அவன் இடத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், துரோகி எதிரில் அல்ல கூடவே இருப்பான் அவன் எப்பொழுது நமக்கு துரோகம் பண்ணுவான் என்பது தெரியாது. அதனால் நீங்கள் விழிப்பாக இருக்க வேண்டும் வேதாகமத்தில் ஒரு வசனம் சொல்லுகிறது பிசாசானவன் எவனை விழுங்கலாமோ என்று கெர்சிக்கிற சிங்கம் போல வகை தேடி சுற்றித் திரிகிறான்.

அதனால் நீங்கள் விழிப்பாய் இருங்கள் பிசாசு எப்பொழுது வேண்டுமானாலும் உங்களுக்கு விரோதமாக எழும்புவான் செயல்படுவான் நம் காலை வாரி விடுவான் பள்ளத்தில் தள்ளுவான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஆகையால் நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான் நீங்கள் விழிப்பாக இருக்க வேண்டும், தெளிவாக சொல்ல வேண்டுமானால் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்.

எனக்கு தெரிந்து 35 வருடங்களாக இயேசு கிறிஸ்து வருகிறார் வருகிறார் என்று சொல்லி கொண்டு தான் இருக்கிறார்கள். நாமும் நம்பி கொண்டுதான் இருக்கிறோம் ஆனால் விழிப்பாக இருந்து காத்துக் கொண்டிருப்பதினால் அந்த நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறோம். நமது கிறிஸ்துவத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பது சுகம் அடைவது ஆசீர்வாதம் பெறுவது ஆண்டவர் வரப்போகிறார் அவருடன் கடந்து போவதும் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்வதும் ஆயிரம் வருட அரசாட்சியில் ஆளுகை செய்வதும் அதன்பின்பு நித்தியஜீவனை பெற்றுக் கொள்வதும்தான் கிறிஸ்தவம்.

கிறிஸ்தவம் என்றால் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பது ஞானஸ்தானம் எடுப்பது பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்வது இயேசுவோடு கூட வாழ்வது அதன் பின்பு அவருடைய வருகைக்கு காத்து இருப்பது ஆயிரம் வருடம் அரசாட்சி செய்வது அதன் பின்பு நாம் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்வது இதுதான் கிறிஸ்துவினுடைய மொத்த தொகுப்பு அப்படி நம்பிக்கொண்டு இருப்பதினால் தான் இதுவரைக்கும் இயேசுவை நீங்கள் பின்பற்றி வருகிறீர்கள். உங்களுக்கு அப்படிப்பட்ட நம்பிக்கை இல்லாதிருந்தால் இன்றைக்கு நீங்கள் தேவனை பின்பற்றுகிறவர்களாய் இருக்கமாட்டீர்கள் ஆலயத்திற்கும் செல்லமாட்டீர்கள்.

நீங்கள் ஆலயத்திற்கும் செல்கிறீர்ளென்றால் நீங்கள் நம்பிக்கையோடு இருந்து காத்திருப்பது உண்மைதான். ஆனால் விழிப்பாக இருக்கிறீர்களா என்பதுதான் என்னுடைய கேள்வி அவருடைய வருகை என்ன நாழிகையில் இருக்கும் என்று தெரியாது அதனால் நீங்கள் விழிப்பாக இருக்க வேண்டும் தூங்காமல் கண்ணை மூடாமல் இரவும் பகலும் உட்கார்ந்து இருப்பது என்று அர்த்தம் அல்ல ஆண்டவருக்காக நம்மை ஆயத்தப் படுத்திக் கொள்வதும் அவரை பார்க்கும்படியாக விழித்திருப்பதும் அவரை அறிந்து கொள்வதும் தெளிவாக இருப்பதும் தான் விழிப்பு.

அநேகர் ஆலயத்திற்கு சுகத்திற்காக வருவார்கள் பிசாசின் கட்டுகளிலிருந்து விடுதலைக்காக வருவார்கள். ஏதாவது அற்புதங்களுக்கு வருவார்கள் ஆனால் ஒரு சிலர் மட்டும்தான் அவர் எப்பொழுது வருவார் என்பது தெரியாது சபையில் ஆராதிக்கும் போது வந்துவிட்டார் என்றால் நான் அவரோடுகூட பறந்து போய் விடுவேன் என்றும் வருவார்கள் எதிலே ஜாக்கிரதையாக இருக்கவேண்டுமானால் எப்பொழுதும் ஜெபத்திலே விழித்திருக்கவேண்டும் ஜெபத்திலே விழித்திருந்தால்தான் இயேசு வருவதை அறிந்துகொள்ள முடியும் ஒரே ஒரு வசனத்தை இதற்கு ஆதாரமாக உங்களுக்கு சொல்கிறேன். 

லூக்கா 21:36.ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.

பிரியமானவர்களே ஒன்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் எப்பொழுதும் எந்த நிமிஷமும் இராத்திரியானாலும் பகலானாலும் ஜெபத்திலே விழித்திருக்க வேண்டும். நம்முடைய சபையில் ஞாயிற்றுக்கிழமை காலைஜெபம், மாலையில் ஜெபம், தினமும் அதிகாலை ஜெபம், உபவாச ஜெபம், சங்கிலி ஜெபம், இரவு ஜெபங்கள் என இத்தனை ஜெபங்கள் நடக்கிறது ஏன் இத்தனை ஜெபங்களை வைக்கிறீர்கள் மாதத்தில் ஒருமுறை அல்லது வாரத்தில் ஒரு முறை ஜெபம் செய்தால் போதாதா? இத்தனை ஜெபம் தேவையா என்று நீங்கள் கேட்கலாம்.

என் ஆண்டவர் எப்பொழுது வருவார் என்று ஒருவருக்கும் தெரியாது பிரியமானவர்களே அதனால்தான் இத்தனை ஜெபங்கள் வைத்திருக்கிறோம் ஜெபித்தால் மட்டும் தான் நீங்கள் விழித்து இருக்கமுடியும். ஜெபிக்கிறவர்களால் மட்டும்தான் விழித்திருக்க முடியும் ஜெபத்திலே மட்டும்தான் விழித்திருக்க முடியும் அவர்கள் மட்டும்தான் விழித்திருப்பார்கள் அதனால்தான் உங்களுக்கு அதிகமாக சொல்லுகிற காரியம் வீட்டிலும் சபையிலும் ஜெபம்பண்ணுங்கள் சபையில் ஜெபம் பன்னினால் மட்டும் போதும் வீட்டிலே ஜெபம் செய்தாலும் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை என்று நான் சொல்ல மாட்டேன்.

ஏனென்றால், வீட்டில் காலையிலாவது மதியத்திலாவது சாயங்காலத்திலாவது ஒரு மணி நேரம் ஒதுக்கி ஜெபம்பண்ணுங்கள் என்று சொல்லிக் கொடுப்பதற்கு காரணம் என்னவென்றால் ஒருவேளை இயேசு எப்பொழுது வருவார் என்பது தெரியாது அவர் வருவதை அறிய வேண்டுமென்றால் ஜெபம்தான் விழித்திருக்கச் செய்யும். ஜெபம்தான் தகுதிப்படுத்தும் ஜெபம்தான் அதைக் காணச் செய்யும் எப்பொழுது வருவார் என்பது யாருக்கும் தெரியாது பிதா ஒருவரை தவிர வேறு ஒருவரும் அறியார்கள் இயேசுவுக்கும் தெரியாது என்று அவரே சொல்லிவிட்டார் அருமையான பக்தர் பாடுகிறார்.

“கேட்டேன் கேட்டேன் தேவா உன் வருகை எப்பொழுது என்று” கடைசியாக “இயேசுவை கேட்டார் அதற்கு அவர் அமைதியாய் இருந்து தெரியாது என்றார்” என்று பாடினார் அப்பொழுது அவருடைய வருகை யாருக்கு தெரியும் என்றால் பிதாவை தவிர வேறு ஒருவருக்கும் தெரியாது அவர் வரப் போகிற விஷயம் யாருக்கும் தெரியாதபடியினால் நீங்கள் விழிப்பாக இருக்க வேண்டும். விழிப்பாக இருப்பது மிகவும் அவசியம் நீங்கள் விழிப்பாக இருக்க வேண்டுமானால் உங்கள் ஜெபம் அதிகரிக்கப்பட வேண்டும்.

ஜெப வாழ்க்கை அதிகரிக்கப்படவேண்டும் எல்லாவற்றிற்கும் நமக்கு நேரம் உண்டு சாப்பிட நேரம் உண்டு, தூங்குவதற்கு நேரம் உண்டு, ஆனால் ஜெபம் செய்வதற்கு மாத்திரம் எனக்கு நேரமே இல்லை ஐயா என்று சொல்லுவார்கள். சரி என்னதான் செய்தீர்கள் என்று கேட்டால் சும்மாதான் இருக்கிறேன் என்பார்கள். சும்மா வீட்டில் இருக்கிற உங்களால் ஜெபிக்கமுடியவில்லை என்றால் எப்படி ஆயத்தபடுவீர்கள்.

எப்படி கர்த்தரை பார்ப்பீர்கள் எப்படி கர்த்தர் வருவார் என்று அறிவீர்கள் அப்படி அறியாமலிருப்பீர்களானால் கைவிடப்பட்டு தான் போவீர்கள் நான் உங்களுக்கு சொல்லுகிறேன் இயேசுவை ஏற்றுக் கொண்டது ஏதோ வந்தோம் போனோம் என்பதற்காக அல்ல அவருடைய வருகையில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் அவரோடு கூட பரலோகத்தில் வாழ்வதற்காக தான் அவரோடு கூட பரலோகத்தில் இருப்பதற்காக தான்.

நாம் திரும்ப பூமிக்கு வருவதற்காகத்தான் விழிப்பாக இருக்க வேண்டும்.  எவற்றிலென்றால் ஜெபத்தில் தான் விழிப்பாய் காணப்பட வேண்டும் மற்ற காரியங்களில் உங்களைப் பார்த்து பாவம் பரிதாபம் அப்பாவி ஓர் பேதை என்று சொல்கிறார்களா கவலைப்படாதீர்கள் ஒரே ஒரு விஷயம் நீங்கள் ஜெபத்திலே விழித்திருந்தால் உங்களுக்கு தெரியாதது ஒன்றுமேயில்லை தேவன் உங்களுக்கு தெரியாமல் எதையும் செய்யமாட்டார் நமக்குத் தேவையானது ஜெபம் தான்.

ஒரு சிலர் மட்டும் தான் ஆலயத்தில் நடைபெறும் உபவாச ஜெபத்தின் ஆராதனையில் ஜெபிக்கிறார்கள் மற்றவர்கள் யாரும் ஜெபத்தில் கலந்து கொள்வதில்லை வீட்டில் ஜெபம் பண்ணுகிறேன் ஐயா என்கிறார்கள் நான் உங்களுக்கு சொல்லுகிறேன் அறையில் ஆடாதவன் அம்பலத்தில் ஆட மாட்டான் என்று சொல்லப்படுகிற பழமொழிக்கு இணங்க ஆலயத்தில் விசுவாசிகள் மத்தியிலே ஜெபிக்க முடியவில்லை என்றால் வீட்டில் எப்படி ஜெபிப்பார்கள். நானும் நம்பமாட்டேன் ஆண்டவரும் நம்ப மாட்டார் நீங்கள் ஜெபம் செய்ய செய்ய ஒவ்வொரு விஷயத்தையும் தேவன் உங்களுக்கு சொல்லாமல் செய்யமாட்டார்.

நீங்கள் அவரோடு ஐக்கியப்பட்டு விட்டீர்கள் என்றால் உங்களை கலந்து ஆலோசிக்காமல் எதையும் செய்ய மாட்டார் ஆண்டவர் சோதோம் கொமாராவை அழிக்கப் போகிறேன் என்று ஆபிரகாமிடம் சொல்லுகிறார் ஆண்டவர் ஆபிரகாமிடம் சொல்லாமல் நேராக போய் அழித்து விடலாம் அல்லவா. ஆனால், ஆபிரகாமிடம் சொல்லுகிறார் ஆபிரகாம் யாரென்றால் ஜெபிக்கிறவர் விசுவாசத்தோடு ஜெபிக்கிறவர் அவர் வீட்டில் இருக்கும் போது மூன்று பேர் தேவதூதர்கள் வருகிறார்கள் அவர்களை ஆபிரகாம் எழுந்துபோய் பணிந்து  அழைத்து நல்ல கொழுத்த கன்றை அடித்து விருந்து பண்ணினான்.

அவர்கள் சாப்பிட்டு முடித்து புறப்படும்போது ஆபிரகாமிடம் நாங்கள் சோதோம் கொமாராவை அழிக்கப் போகிறோம் என்றார்கள் அந்த ஊரில் ஆபிரகாமின் அண்ணன் மகன் லோத்து வாழ்ந்து கொண்டிருந்தார். உடனே ஆபிரகாம் நினைவுகூர்ந்து ஆண்டவரிடம் ஐம்பது நீதிமான்கள் இருந்தால் அந்த பட்டணத்தை அழிப்பீரோ என்று கேட்டான் அதற்கு அவர் இல்லை அழிக்கமாட்டேன் என்கிறார். மறுபடியும் ஆபிரகாம் நாற்பது நீதிமான்கள் இருந்தால் அழிப்பீரோ என்கிறார் இல்லை நான் அழிக்க மாட்டேன் என்கிறார் ஆண்டவரே என்று ஒரு விசை கோபித்துக் கொள்ள வேண்டாம் என்று சொல்லி முப்பது நீதிமான்கள் இருந்தால் அழிப்பீரோ என்று கேட்கிறான் அதற்கு இல்லை என்கிறார். கடைசியாக குறைத்துக்கொண்டே வந்து பத்து நீதிமான்கள் இருந்தால் அழிப்பீரோ என்று கேட்டான் அதற்கு ஆண்டவர் பத்து நீதிமான்கள் இருந்தால் சோதோம் கொமாராவை அழிக்க மாட்டேன் என்கிறார்.

கடைசியில் பார்த்தால் அந்த பட்டணத்தில் பத்து நீதிமான்கள் கூட இருக்கவில்லை அதனால் அதை அழிக்கிறேன் என்றார் லோத்தும் அவன் மனைவியும் இரண்டு மகள்கள் மொத்தம் நான்கு பேர் இருந்தார்கள் பாருங்கள் ஒரு ஜெபிக்கிற மனுஷர் இடத்தில் ஒரு நாட்டிற்கு செய்யப்போகிறதை சொல்ல தேவன் வல்லமை உள்ளவராகவும் உண்மை உள்ளவராகவும் இருக்கிறார். நீங்கள் ஜெபம் செய்வீர்கள் என்றால் உங்களை அறியாமல் உங்கள் வீட்டில் எதுவும் நடக்காது உங்களுக்கு தெரியாமல் உங்கள் ஊரிலும் உங்கள் தேசத்திலும் எதுவும் நடக்காது அப்படியானால் இன்றைய காலகட்டத்தில் ஜெபத்தில் அநேகர் குறைந்திருக்கிறார்கள் அல்லது ஜெபமே இல்லாமல் போய்விட்டது சிலபேர் எப்படி ஜெபிக்கிறார்கள் என்றால் அதாவது படித்து மனப்பாட ஜெபம் பண்ணுவார்கள்.

உதாரணமாக பரமண்டல ஜெபத்தை மனப்பாடமாக சொல்லிவிட்டுப் போவதுபோல அது ஜெபமல்ல ஜெபம் என்றால் நீயும் ஆண்டவரும் பேச வேண்டும் உறவாட வேண்டும் நான் ஜெபிக்கும்போது இயேசு என் அருகில் வந்து உட்காருகிறார் என்று எப்பொழுது உணர்கிறீர்களோ அதுதான் உண்மையான ஜெபம் ஜெபிக்கும்போது ஆண்டவர் உன் பக்கத்தில் வந்து அமர்ந்தால் நீதான் உண்மையான ஜெபவீரர் நீதான் உண்மையான ஜெப வீராங்கனை அப்படி இல்லை என்றால் நீ ஜெபிக்கிற மாதிரி வேஷம் தரிக்கிறாய் என்று வேதவசனம் சொல்லுகிறது வேஷமாகவே மனுஷன் திரிகிறான் விருதாவாகவே சஞ்சலப்படுகிறான் ஆஸ்தியை மலைப்போல சேர்க்கிறான் யார் வாரிக் கொண்டு போவான் என்று அறியாமல் இருக்கிறான்.

அருமையான தேவ பிள்ளைகளே நீங்கள் எப்படிப்பட்ட ஜெபம் செய்ய வேண்டுமானால் உண்மையான தேவனை உணர்கிற ஜெபம் செய்தீர்களானால் உங்களிடம் சொல்லாமல் எதையும் ஆண்டவர் செய்யமாட்டார் ஆக்கபூர்வமான காரியமானாலும் அழிவுக்குரிய காரியமானாலும் உங்களிடம் பகிர்ந்து கொள்வார் நான் இரட்சிக்கப்பட்டு விசுவாசியாக இருந்த போது மிகவும் அதிகமாக நன்கு ஜெபம் செய்வேன் எங்கேயாவது தனியாக இடம் கிடைத்தால் போதும் ஜெபம் செய்து கொண்டே இருப்பேன்.

அப்பொழுது ஜெபம் செய்வதற்கு ரொம்ப ஆசை விருப்பமாய் இருந்தது அப்படியாக நான் ஜெபம் செய்து கொண்டிருக்கும் என்னுடைய வாழ்க்கையில் தேவன் இரண்டு காரியங்களை சொன்னார். இந்திராகாந்தி மரிக்கபோவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே எனக்கு வெளிப்படுத்தினார். அதை எனக்கு எப்படி சொன்னாரோ அதேபோல நடந்தது நான் வெளியே சொல்லி இருந்தால் யாரும் நம்பி இருக்க மாட்டார்கள் அதனால் வெளியே சொல்லவில்லை அதேபோல எம்ஜிஆர் மரிக்க போவதும் இரண்டு நாட்கள் முன்னே தெரிந்தது அதை அப்படியே நான் நம்ப ஆரம்பித்து விட்டேன்.

ஆகையினால் அருமையான தேவனுடைய பிள்ளைகளே ஜெபத்திலே விழித்திருக்க வேண்டும் அப்படி விழித்திருந்தால் தேவன் வருவதை அறிந்து நாம் எதிர்கொண்டு போக முடியும் இரண்டாவது விஷயத்தை நான் உங்களுக்கு கொடுக்கப் போகிறேன் .

2. ஆயத்தமாயிருங்கள்: 

மத்தேயு 24:44 நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.

ஆயத்தமாவது என்றால் என்ன உதாரணமாக சென்னைக்கு போக போகிறோம் என்றால் காலையில் போய் மாலையில் வரப்போவதாக இருந்தால் எதுவும் எடுத்துக் கொண்டே போக வேண்டியது இல்லை அல்லது சென்னையில் தங்கபோவதாக இருந்தால் அதற்கு வேண்டிய ஆயத்தம் செய்யவும் ஆடைகள் தேவையான பொருட்கள் எடுத்து வைப்போம். போய் வருகிற நேரம் பணம் இவைகளை கணக்கிட்டு அதற்கான காரியங்களை தயார்படுத்துவோம். அதுபோல நாம் தேவனை சந்திக்க போவதற்கு அதற்கு தேவையான ஆயத்தத்தோடு இருக்க வேண்டும்.

யோவான் 14:12

மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.

பிரியமானவர்களே முதலில் நீங்கள் தேவனிடத்தில் விசுவாசமாயிருக்க வேண்டும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவினிடத்திலும் விசுவாசமாக இருக்க வேண்டும். விசுவாசம் இல்லை என்றால் நீங்கள் ஆயத்தமாக முடியாது இந்த வசனங்களில் ஆயத்தமாக நமக்கு என்ன தேவை என்றால் விசுவாசம். விசுவாசம் இல்லாமல் நீங்கள் இங்கிருந்து பரலோகம் போக முடியாது அநேகர் இப்படியாக நினைக்கிறார்கள் 2000 வருடங்களாக வருகிறார் வருகிறார் இன்னும் வரவில்லையே நாடே தலைகீழாய் போய்விட்டது என்று அவிசுவாசமாக சொல்லுகிறார்கள்.

2பேதுரு 3:1.பிரியமானவர்களே, இந்த இரண்டாம் நிருபத்தை இப்பொழுது உங்களுக்கு எழுதுகிறேன். 2.பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன் சொல்லப்பட்ட வார்த்தைகளையும், இரட்சகராயிருக்கிற கர்த்தருடைய அப்போஸ்தலராகிய எங்களுடைய கட்டளைகளையும் நீங்கள் நினைவுகூரும்படி இந்த நிருபங்களினால் உங்கள் உண்மையான மனதை நினைப்பூட்டி எழுப்புகிறேன். 3.முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசி நாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து, 4.அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.

கவனியுங்கள் பரியாசக்காரர் வருவார்கள் அவர்கள் வந்து என்ன சொல்லுவார்கள் என்றால் இவர்களுக்கு வேறே வேலையே இல்லை ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் என கத்திக்கொண்டு இருக்கிறார்கள், அவர்கள் சொல்லுகிறார்கள் வருவார் வருவார் என்று, அவரும் வந்தபாடில்லை இவர்களும் போனபாடில்லை இப்படியாக பரியாசக்காரர் சொல்லுவார்கள் என்று பேதுரு இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னே எழுதிவைத்துவிட்டு போயிருக்கிறார். நாம் தெரிந்துகொள்ள வேண்டிய காரியம் என்னவென்றால் நாம் விசுவாசத்தில் எந்த சூழ்நிலையிலும் தளர்ச்சியடைந்து போகவேகூடாது.

1பேதுரு 3:15 கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.

நாம் எப்படி ஆயத்தமாக இருக்கவேண்டுமென்றால் நீங்கள் செய்யவேண்டியது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பரிசுத்தம் பண்ணுங்கள். எப்பொழுது இயேசு உங்கள் உள்ளத்தில் இருப்பார் என்றால் நீங்கள் பரிசுத்தமாக இருந்தால்தான் இயேசு உங்களோடு இருப்பார் இயேசு உங்களோடு இருக்க வேண்டுமானால் முதலில் நீங்கள் பரிசுத்தமாக வேண்டும் அசுத்தமானவைகள் உங்களை நெருங்கி வரும்போது நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக உங்களை காத்துக்கொள்ளும்போது இன்னும் நீங்கள் பரிசுத்தத்தில் பெலப்படுவீர்கள் அப்பொழுது தேவன் உங்களுக்குள்ளே பரிசுத்தமாக்கபடுவார். 

உங்கள் நம்பிக்கையை குறித்து விசுவாசிக்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவு சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாய் இருக்கவேண்டும். முதலில் சொன்னேன் விசுவாசத்தில் ஆயத்தமாய் இருக்கவேண்டும்.

இரண்டாவது கர்த்தரை இருதயத்தில் பரிசுத்தப்படுத்தி கொள்ளவேண்டும்.

மூன்றாவது உங்கள் நம்பிக்கையிலே யார் உங்களை இடரப்பண்ணினாலும் கோபம் மூட்டினாலும் உங்கள் நம்பிக்கையிலே நீங்கள் உறுதியாய் இருக்க வேண்டும்.

வணக்கமாய் சாந்தமாய் பதில் சொல்கிறவர்களாக மாற வேண்டும் ஒரு காரியத்தை மறுபடியும் மறுபடியும் கேட்கும்போது கோபம் தான் வரும் எத்தனை தடவைதான் நான் சொல்வது என்று கோபப்பட்டீர்கள் என்றால் நீங்கள் ஆயத்தமாக இல்லை. ஏனென்றால், ஆண்டவர் வரும்போது உங்கள் கோபம் உங்களை பின்னாக தள்ளும் நம்முடைய கோபம் நம்முடைய நிர்விசாரம் நம்முடைய அறியாமை நம்மை பரலோகத்திற்கு செல்ல ஒட்டாது. இது தேவனுடைய பார்வையில் சரியான ஆயத்தமாக இருக்க முடியாது ஆகவே நாம் ஆயத்தமாக வேண்டும். 

பாக்கியவான்

மத்தேயு 24:46 எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரனே பாக்கியவான்.

பிரியமானவர்களே எஜமான் வரும்போது விழிப்புள்ளவர்களாகவும் ஆயத்தமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறபடி எப்பொழுதும் விழித்திருக்கிறவர்களாகவும் ஆயத்தமுள்ளவர்களாகவும் எல்லாவற்றிலும், எப்பொழுதும் ஆயத்தமாய் இருக்கிறார்களாய் காணப்படும்போது  இயேசுகிறிஸ்து வருவார் அவர் வரும்போது அப்படி காணப்படுகிறவன் பாக்கியவான்.

மத்தேயு 25:31 அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்.

கவனியுங்கள் தேவன் பரலோகத்தில் வீற்றிருக்கிறார் தேவன் பரலோகத்தில் வீற்றிருக்கிறபடியால் எப்பொழுதும் நம்முடைய நோக்கமும் எதிர்பார்ப்பும் பரலோகமாகதான் இருக்க வேண்டும் எப்பொழுது வேண்டுமானாலும் போக தயாராக இருக்க வேண்டும். அதைவிட்டு வந்துவிட்டேன் இதை விட்டு வந்துவிட்டேன் என்று சொல்லக்கூடாது எல்லாம் தானாக நடக்கும் பரலோகம் போவதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.

லூக்கா 10:35 மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்.

மிகவும் நன்றாய் கவனியுங்கள்  இந்த சம்பவம் உங்களுக்கு தெரியும் ஆண்டவர் உவமையாய் சொன்ன கதை ஒருவன் எருசலேமிலிருந்து எரிகோவிற்கு பிரயாணமாய் சென்றான்.

அவன் கள்ளர் கையில் அகப்பட்டதால் அவர்கள் அவன் வஸ்திரங்களை உறிந்து கொண்டு அவனை காயப்படுத்தி குற்றுயிராக விட்டு விட்டு போனார்கள் இப்பொழுது அவன் குற்றுயிராக சாக பிழைக்ககிடக்கிறான் அந்த வழியாக ஒரு ஆசாரியன் வருகிறான். அவனைக் கண்டு பக்கமாய் விலகிப் போகிறான் அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்திற்கு வந்து அவனைக் கண்டு பக்கமாய் விலகிப் போகிறான்.

பின்பு சமாரியன் ஒருவன் வந்தான் அவனோ இவனை கண்டு மனதுருகி கிட்ட வந்து அவனுடைய காயங்களில் என்னையும் திராட்சரசத்தையும் வார்த்து காயங்களைக் கட்டி அவனைத் தன் சுய வாகனத்தின் மேலேற்றி சத்திரத்திற்கு கொண்டு போகிறான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து சத்திரக்காரன் கையில் கொடுத்து நீ இவனை விசாரித்துக் கொள் ஏதாகிலும் அதிகமாக இவனுக்கு செலவழிந்தால் நான் திரும்பி வரும்போது அதை உனக்கு தருவேன் என்றான்.

இதற்கு என்ன சொல்லலாம் என்றால் சுவிசேஷம் என்று சொல்லலாம், கட்டுண்டவர்களை கட்டு அவிப்பது சுவிசேஷம், காயங்களை கட்டுவது சுவிசேஷம், கட்டுண்டவர்களை பராமரிப்பது சுவிசேஷம், கட்டுண்டவர்களை சத்திரத்தில் சேர்ப்பது சுவிசேஷம் கட்டுண்டவர்களை சத்திரத்தின் அதிகாரத்தின் ஊழியரிடத்தில் ஒப்புக் கொடுப்பது சுவிசேஷம் பழைய ஏற்பாட்டில் ஆண்கள் அதிகமாக ஊழியம் செய்தார்கள் புதிய ஏற்பாட்டில் பெண்கள் தங்கள் ஆஸ்திகளை கொண்டு அநேகர் ஊழியம் செய்தார்கள். ஆண்டவர் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த பின்பு கல்லறைக்கு சென்றவர்களும் முதலில் பெண்கள் தான் தேவதூதர் அவர்களைப் பார்த்து பயப்படாதீர்கள் அவர் இங்கே இல்லை அவர் உயிர்த்தெழுந்தார் இதை போய் சீஷர்கள் இடத்தில் அறிவியுங்கள் என்றார்.

இதைப்போய் சீசர் இடத்தில் அறிவித்தவர்களும் சுவிசேஷம் சொன்னவர்களும் பெண்கள் தான் அதன் பின்புதான் சீஷர்கள் கல்லறைக்கு வந்தார்கள் பெண்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் ஆண்டவருக்கு முன்பாக விலையேற பெற்றவர்கள் நீங்கள் எல்லோரும் சுவிசேஷம் அறிவிக்கிறவர்கள் பழைய ஏற்பாட்டு விசுவாசிகள் ஆண்கள் மட்டும் ஆலயத்திற்கு போனார்கள்.

புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் பெண்களும் ஆலயத்திற்கு போனார்கள் ஆனால் இயேசு உயிர்த்தெழுந்தார் என்ற செய்தியை கேட்ட பெண்கள் ஓடிச்சென்று ஆண்களை கூட்டிக் கொண்டு வந்தார்கள், ஆலயத்திற்கு போகிற நீங்கள் உயிர்த்தெழுந்த இயேசுவை தரிசிப்பது உண்மையானால் உங்களைப் போல ஆண்களும் சபைக்கு வந்து சேர வேண்டும் என்று பிரயாசபடுங்கள்.

ஏசாயா 59:19 அப்பொழுது சூரியன் அஸ்தமிக்குந்திசைதொடங்கி கர்த்தரின் நாமத்துக்கும், சூரியன் உதிக்குந்திசை தொடங்கி அவருடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்; வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்.

இறுதியாக பிரியமானவர்களே  இயேசு கிறிஸ்து மட்டும் வரவில்லை சத்துருவும் நம்முடைய வாழ்க்கையில் தினமும் வருகிறான். அவனுடைய ரூபம் வேறுவிதமாக இருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் சண்டை வரலாம் தேவையில்லாத பிரச்சினைகளை கொண்டு வரலாம் நமக்கு பின்பக்கம் நமக்கே குழி தோண்டுவது போல வரலாம் எப்படியோ பிசாசு வருவான் கஷ்டத்தை கொடுப்பவனாக வறுமையை கொடுப்பவனாக இன்னும் நம்முடைய தேவையை அதிகரிக்கிறவனாக அப்படி வரும்போது நம்மால் என்ன செய்ய முடியும் என்று இருந்துவிடாமல் ஆவியானவரை நீங்கள் எழுப்பி விட வேண்டும்.

ஆலயத்திலும் வீட்டிலும் மாத்திரம் நீங்கள் ஆவியில் நிறைந்து விடுதலையோடு ஜெபிக்க வேண்டும் பிசாசு ஒரு வழியாய் வந்தாலும் அவனை ஏழு வழியாக ஆண்டவர் ஓடிப் போகச் செய்வார் தொடர்ந்து ஆயத்தபடுவோம் விழித்திருப்போம் கர்த்தருடைய வருகையில் பிரவேசிப்போம் ஆமென் அல்லேலூயா கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *