விசுவாசம் | Rev. B.E. Samuel

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே சாரோனின் ரோஜா ஊழியத்தின் மூலமாய் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கும் தியானிக்க போகின்ற  வேதப்பகுதி யோவான் 11:36 – 45 வரை 

தேவனுடைய வார்த்தைக்கு நேராக கடந்து போகலாம் இப்பொழுது நாம் தியானிக்கபோகிற  செய்தி என்னவென்றால் விசுவாசத்தை பற்றினதான் வேத வசனத்தை நாம் வாசித்தோம்.

இந்த வேத பகுதியிலே மார்த்தாள் மரியாள் என்கிற சகோதரிகள் இரண்டு பேர் உள்ளார்கள். அவர்களுக்கு லாசரு என்று சொல்லப்படுகிற ஒரு சகோதரன் இருந்தான், இவர்கள் மூன்று பேரும் இயேசுவை ஏற்றுக் கொண்டவர்கள் அந்நாட்களில் லாசரு திடீரென்று வியாதிபட்டு இருந்தான், ஆகையால் இயேசுவை வரும்படி இயேசுவிடம் ஒரு ஆள் அனுப்பி வைத்தார்கள். உங்கள் சினேகிதராகிய லாசரு வியாதியாய் இருக்கிறான் என்று சொன்னார்கள். ஆனால், இயேசுவோ நான்கு நாட்கள் கழித்து லாசருவை காணும்படி வருகிறார். வரும் வழியிலே சகோதரி மார்த்தாள் எதிரில் வந்து இயேசுவைப் பார்த்து அவர் பாதத்தில் விழுந்து அழுதாள்.

ஆண்டவரே நீங்கள் அப்போதே வரக்கூடாதா என் சகோதரன் மரித்து விட்டான் அவனை அடக்கம் பண்ணி விட்டோம் என்று சொல்லிவிட்டு மார்த்தாள் மரியாள் இடம் வந்து போதகர் வந்திருக்கிறார் உன்னைத்தான் அழைக்கிறார் என்று சொன்னாள். அவளும் இயேசுவினிடத்தில் வந்து பாதத்தில் விழுந்து அழுதாள் நீங்கள் இங்கே இருந்திருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான் என்று சொன்னாள் அதற்கு இயேசு கவலைப்படாதே பயப்படாதே அவன் உயிரோடு எழுந்து இருப்பான் என்றார் அதற்கு மார்த்தாள் உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள். அப்பொழுது இயேசு சொன்னார் என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் நீ விசுவாசி தேவனுடைய மகிமையை காண்பாய் என்று சொன்னார்.

இன்றைக்கு அநேகர் இயேசுவை நம்புகிறார்கள். ஆனால், நாம் நம்புவதை பார்க்கிலும் அதிகமாக இயேசுவை ஏற்றுக் கொள்ளாதவர்களே இயேசுவை தெய்வம் என்று நம்புகிறார்கள். நீங்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டதனால் அவரை நம்புகிறீர்கள். அதேபோல இயேசுவும் ஒரு தெய்வம் என்று உலக ஜனங்களும் நம்புகிறார்கள். ஆனால், இயேசு மட்டும் தான் தெய்வம் என்று நாம் அறிந்திருக்கிறோம் அவர்கள் இயேசுவும் தெய்வம் என்று சொல்கிறார்கள். நாம் இயேசு மட்டும் தான் தெய்வம் என்று சொல்கிறோம். நன்றாக கவனியுங்கள் மார்த்தாளிடம் இயேசு சொன்ன வார்த்தை நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்.

இன்றைக்கு அநேகர் இடத்தில் காணப்படாத ஒரு காரியம் என்னவென்றால் விசுவாசம் எல்லோரும் என்ன நினைக்கிறார்கள். நீங்கள் இயேசுவை விசுவாசிக்கிறீர்களா? என்று கேட்டாள் ஆமாம் நான் இயேசுவை விசுவாசிக்கிறேன் என சொல்வார்கள். நீங்கள் இயேசுவை விசுவாசிப்பீர்களானால் ஏன் வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்கவில்லை? ஏன் உங்கள் வீட்டில் தண்ணீர் திராட்சைரசமாகமாக மாறவில்லை? ஏன் மரித்தவன் உயிரோடு எழுந்திருக்கவில்லை? என்று நம்மை பார்த்து மற்றவர்கள் கேட்கிறார்கள் அதாவது இவைகள் அறிவில்லாத வார்த்தைகள். நாம் இயேசு கிறிஸ்து அல்ல அவர்தான் இயேசு கிறிஸ்து நம்மைப் பார்த்து மற்றவர்கள் கேட்கிறார்கள் எங்கே தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றங்கள் பார்க்கலாம் என்று நாம் ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளவேண்டும் அதை செய்கிறவர் இயேசுகிறிஸ்து மட்டும்தான். நாம் அல்ல ஆனால் உங்களுக்காகவும் தேவன் அற்புதம் செய்ய வல்லமை உள்ளவராக இருக்கிறார்.

அற்புதம் அவர் தான் செய்யவேண்டும் நாம் கேட்கும் போது நமக்காக அவர் அற்புதம் செய்ய வல்லமை உள்ளவராய் இருக்கிறார். நம்மைப் பார்த்து அநேகர் கேட்பார்கள் நீங்கள்தான் ஆலயத்துக்குச் செல்கிறீர்களே ஏன் நீங்கள் ஜெபம் பண்ணி இந்த அற்புதங்களை செய்யுங்களேன்? என்பார்கள் ஆனால் இவையெல்லாம் தேவனைத் தூஷிக்கிற காரியம் சிலவேளைகளில் அப்படி செய்கிறோம். இது தேவனை பரீட்சிக்கிற காரியம் நீங்கள் ஜெபம் செய்தால் தேவன் நிச்சயம் அற்புதம் செய்வார். ஆனால் உலகத்தாரை பிசாசு ஏவிவிட்டு உங்களை தேவனை சோதிக்கபண்னுவான் அப்படி நீங்கள் தேவனை சோதிக்கும் போது நிச்சயம் அதற்கு பதில் வராமல் எதிரிடையாக முடியும் அப்பொழுது ஒன்றை நாம்  புரிந்துகொள்ள வேண்டும் தேவனை நாம் பரீட்சை பார்க்க வேண்டுமா அல்லது அவர் நமது ஜெபத்தை கேட்க வேண்டுமா? என்று சொன்னாள் தேவனை பரீட்சித்துப் பார்க்கிற அதிகாரம் வல்லமை உங்களுக்கு கொஞ்சம் கூட இல்லை.

ஏனென்று சொன்னால் பெற்ற பிள்ளை தகப்பனை பார்த்து நீ எப்படி என்னை பெற்றாய் என்று கேட்பது போல் இருக்கும் ஆண்டவர் தான் அவர்தான் பிள்ளைகளைப் பெற்றார் அவர்தான் பிள்ளைகளுக்கு பேர் வைக்க வேண்டும் நான்தான் பிள்ளை நான் பெரியவனாக வளர்ந்து என் தகப்பனுக்கு பெயர் வைப்பேன் என்று சொல்லுவது சரியான உபதேசம் இல்லை சில பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு பெயர் வைக்கும் போது நன்றாக யோசித்து பெயர் வைப்பார்கள் ஒரு சிலர் தான் விரும்புகிற நடிகர்களின் பெயர்களை வைப்பார்கள் ஒரு சிலர் நாள் நட்சத்திரம் பார்த்து பெயர் வைப்பார்கள் பிள்ளைகளுக்கு பெயர் வைப்பது மிகவும் முக்கியமானது அப்பாதான் பிள்ளைக்கு பெயர் வைக்க வேண்டும் தவிர பிள்ளை அப்பாவுக்கு பெயர் வைக்கக்கூடாது அப்பாதான் அற்புதம் செய்ய முடியுமே தவிர என்னால் செய்ய முடியாது எனக்காக என் தேவன் அற்புதம் செய்ய வல்லமை உள்ளவராக இருக்கிறார்.

அப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் ஆண்டவரை விசுவாசிக்க வேண்டும் லாசரு மரித்தவுடனே கல்லறையில் வைத்து மூடிவிட்டார்கள் நான்கு நாட்கள் ஆகிவிட்டது இயேசு அவர்களைப் பார்த்து லாசருவை எங்கே வைத்தீர்கள் என்று கேட்டார் அப்பொழுது இயேசுவை கல்லறைக்கு அழைத்து சென்றார்கள் இயேசு கல்லறையை மூடி வைத்திருக்கிற கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார். அதற்கு சகோதரி மார்த்தாள் ஆண்டவரே இப்பொழுது நாறுமே நான்கு நாட்கள் ஆயிற்றே என்றாள் இயேசு சொன்ன காரியம் என்னவென்றால் கல்லறையை மூடி வைத்திருக்கிற கல்லை எடுத்துப்போடுங்கள் அதை மார்த்தாள் விசுவாசிக்கவில்லை அப்படி விசுவாசித்து இருந்தால் நாறுமே என்று சொல்லி இருக்கமாட்டாள் அதற்கு ஆண்டவர் நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பாய் என்றார்.

நாம் கூட ஜெபிக்கிறீர்கள் ஆண்டவரே என் வயிற்றில் ஒரு பிரச்சனை என் தலையில் ஒரு பிரச்சனை என் கழுத்தில் ஒரு பிரச்சனை என் கையில் ஒரு பிரச்சனை என் குடும்பத்தில் ஒரு பிரச்சனை என்று சொல்கிறோம். அதற்கு ஆண்டவர் ஒரு சில வார்த்தைகளை சொல்லி அறிவுறுத்துகிறார். ஆனால், அதையெல்லாம் செய்ய முடியாது ஆண்டவரே என் பிரச்சினையை மட்டும் நீங்கள் கேளுங்கள் நீங்கள் சொல்வதை எல்லாம் நான் கேட்க மாட்டேன் நான் சொல்வது மட்டும் நீங்கள் கேட்டால் போதுமென்று சொல்வதுதான் நம்முடைய பதிலாயிருக்கிறது. ஆண்டவர் சொல்கிறதை செய்யாமல் இருப்பதால்தான் நம்முடைய வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்ககூடாதபடி தடையாக காணப்படுகிறது. உங்கள் பிரச்சனைகளை ஆண்டவரிடத்தில் சொல்லுங்கள் உங்கள் பிரச்சனை எதுவாயிருந்தாலும் அதை ஆண்டவர் கேட்கிறதுபோல சொல்லவேண்டும். நாம் சொல்லுகிற காரியம் ஆண்டவர் கேட்டாரா இல்லையா என்று நமக்குத் தெரிய வேண்டும்.

உதாரணமாக நீங்கள் ஒருவரிடத்தில் தொலைபேசியில் பேசும்போது எதிர் பக்கத்திலிருந்து எந்த சத்தம் வராமல் நீங்கள் மட்டும் பேசிக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம் அதுபோலதான் அநேகருடைய ஜெபம் ஆண்டவர் கேட்கிறாரா? இல்லையா? என்று தெரியாமல் அவர்கள் பிரச்சினைகளை மட்டும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அருமையான தேவனுடைய பிள்ளைகளே உங்களுடைய ஜெபங்கள் ஆண்டவர் கேட்கும்படியாக இருக்க வேண்டும். நாம் ஜெபிக்கும்போது ஆண்டவர் என்ன மகனே(ளே) சொல் என்று கேட்டால்தான் அவர் அற்புதம் செய்ய முடியும். அவர் உங்கள் ஜெபத்தை கேட்காமல் இருந்தால் எப்படி உங்கள் வாழ்க்கையில் அற்புதம் நடக்கும் நாம் ஆராதிக்கிற ஆண்டவர் நிச்சயம் நமது ஜெபத்தைக் கேட்பார் நாம் உண்மையாய் அவரை விசுவாசிக்க வேண்டும்.

நான் கூப்பிடும்போது எனக்கு பதில் கொடுக்கிற ஆண்டவர் நிச்சயமாக நீங்கள் கூப்பிடும்போதும் உங்களுக்கு பதில் கொடுக்க வல்லமையுள்ளவராயிருக்கிறார். நீங்கள் ஆராதிக்கிற தெய்வம் கல்லோ மண்ணோஅல்ல உண்மையான ஜீவனுள்ள தேவன் உயிருள்ள ஆண்டவரை நீங்கள் அழைத்தால் நிச்சயம் பதிலளிப்பார்.

முதலில் நாம் அவரை அழைக்க வேண்டும் அதற்கு அவர் பதில் அளிக்க வேண்டும் அப்பொழுது நம்முடைய தேவையெல்லாம் அவரிடத்தில் சொல்லவேண்டும் அப்படி சொல்லும் போது அதையெல்லாம் அவர் கேட்டு நமக்கு பதில் கொடுப்பவராகமாறுவார். நீங்கள் விசுவாசித்தால் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அவைகளை மாற்றக் கூடிய ஒரே அதிகாரமுள்ள வல்லமை உள்ள ஒரே தெய்வம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.

சென்னையில் நானும் இன்னொரு போதகரும் ஒருவரை சந்திப்பதற்காக ஒரு தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தோம் அப்படி செல்லும்போது ஆண்டவர் எனக்குள்ளே ஒரு உணர்வைத் தந்தார் என்னவென்றால் யாரோ ஒருவருக்காக நான் ஜெபம் பண்ண போகிறேன் என்றும் அவர்கள் பிசாசின் கட்டுகளிலிருந்து விடுதலை பெறப் போகிறார்கள் என்றும் சுகமடைய போகிறார்கள் என்றும் என்னோடு ஆண்டவர் சொல்லிக்கொண்டேயிருந்தார். அப்பொழுது என்கூட வந்திருந்த போதகரிடத்தில் இந்த காரியம் சொன்னேன் நாம் ஜெபிக்க போகிறோம் அவர்கள் விடுதலையாக போகிறார்கள் என்றேன். அதற்கு அவர் யார் இதை உங்களுக்கு சொன்னார்கள் என்றார் ஆண்டவர் எனக்கு பின்னாக சொல்லிக்கொண்டே இருக்கிறார் என்றேன் இப்படியாக தெருவில் நடந்து கொண்டிருந்தபோது ஒரு வீட்டின் வாசலில் வயதான ஒருவர் 80 வயது மதிக்கக்கூடிய சரியாக காதுகேட்காத ஒருவர் எங்களைப் பார்த்து ஐயா, ஸ்தோத்திரம் என்றார். நாங்களும் ஸ்தோத்திரம் என்று சொன்னோம் எங்களைப் பார்த்த உடனே நாங்கள் ஊழியக்காரர் என்று கண்டு பிடித்து விட்டார். நீங்கள் ஊழியக்காரா என்று கேட்டார். ஆமாம், நாங்கள் ஊழியக்காரர் தான் என்றோம். எங்கள் வீட்டிற்குள் வந்து சின்ன ஜெபம் செய்து விட்டு போக முடியுமா என்று கேட்டார் சரி என்று உள்ளே போனோம், உட்கார்ந்தபோது ஆண்டவர் மறுபடியும் என்னிடத்திலே வந்திருக்கிற வீட்டில்தான் பிசாசின் வல்லமைகளை நீ உடைக்க போகிறாய் என்றார். எனக்கு ஒரு சந்தேகம் வயதானவருக்கு என்னவென்று ஜெபம் செய்வது பிசாசின் வல்லமைகளை உடைக்க போகிறோம் என்று நினைத்து உட்கார்ந்து கொண்டிருந்தோம்.

ஒரு ஐந்து நிமிஷம் கழித்து நடுத்தர வயதுள்ள ஒரு சகோதரி வீட்டுக்குள்ளே இருந்து வந்தார்கள் அவர்கள் இரண்டு கைகளும் அழுகிப்போன நிலையில் புண்கள் நிறைந்து காணப்பட்டது. அவர்களால் துணிகூட கட்டமுடியாமல் அந்த கைகளினால் எந்த வேலை செய்ய முடியாமல் இருந்தது அழுகிப்போன நிலைமையில் சொதசொதவென்று அந்தகை இரண்டுமே காணப்பட்டது அவர்களைப் பார்த்தவுடனே இவர்களுக்காக தான் நீ ஜெபம் பண்ண போகிறாய் என்று ஆண்டவர் சொன்னார். எனக்கு அப்போதுதான் தெரியவந்தது அதற்காக நான் ஜெபிக்க போகிறேன் என்று தெளிவு வந்தது அப்பொழுது ஆண்டவர் நீ இவர்களுக்கு பிசாசை  அதட்டி ஜெபம்பண்ணு என்று சொன்னார்.

நான் சொன்னேன் இயேசுவின் நாமத்தினாலே எல்லா பிசாசின் தந்திரமந்திரங்களையும் நிர்மூலமாக்குகிறேன், என்று ஜெபம் செய்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டோம். சரியாக ஏழு நாட்கள் கழித்து என்னுடைய விலாசத்திற்கு ஒரு கடிதம் வந்தது ஐயா, நீங்கள் ஜெபம் செய்துவிட்ட பிறகு மறுநாளிலே என் மகளுடைய கை பூரணமாக சுகம் அடைந்து விட்டது என் மகள் ஒரு டாக்டர் அவளொரு கிளினிக் ஒன்றை திறக்க உள்ளாள் நீங்கள் வந்து தான் ஜெபித்து திறந்து வைக்கவேண்டும் என்று அழைத்தார்கள். அப்பொழுது நான் யாருக்கு ஜெபம் செய்து விட்டு வந்தேன்  அந்த மகளுக்கு நான் ஜெபிக்கபோது அவர்கள் டாக்டர் என்று எனக்கு தெரியாது பாருங்கள் அவர்கள் டாக்டராக இருந்தும் அவர்கள் யாருக்கும் சிகிச்சை கொடுக்க முடியாதபடிக்கு அவர்களுக்கு அந்த அளவுக்கு அOகி போயிருந்தது கர்த்தர் அவர்களுக்கு பூரண சுகம் கொடுத்தார் நான் போய் ஜெபம் செய்து புதிய கிளினிக் திறந்து வைத்து வந்தேன்.

விசுவாசம் பிணியாளியை இரட்சிக்கும் விசுவாசம் இருந்தால் போதும் டாக்டர்களுக்கு கூட உங்கள் மூலம் சுகம் கிடைக்கும் விசுவாசம் தான் மிகவும் முக்கியம் நமக்கு வருகிற பிரச்சினைகளை பார்த்து விசுவாசிக்க மறந்துவிடுகிறோம் இல்லையெனில் ஏதோ விசுவாசிக்கிறேன் என்று சொல்கிறோம் நீங்கள் முழுமையாக விசுவாசியுங்கள் அப்பொழுது தேவனுடைய மகிமையை காண்பீர்கள் உங்கள் வாழ்க்கையில் பெரிய காரியங்களை அவரால் செய்யமுடியும், 

       இது நடக்காது என்று நினைக்கிறீர்களா இது நடக்கவில்லையே என்று கலங்குகிறீர்களா ஆண்டவரை நான் விசுவாசிக்கிறேன் என்றும் ஆண்டவர் எனக்கு செவிக்கொடுக்கிறார் என்றும் மனதில் நீங்கள் விசுவாசித்தால் நீங்கள் ஜெபிக்க கூட தேவையில்லை அற்புதங்கள் தானாகவே நடக்கும். நம் ஆண்டவர் செய்வார் என்று விசுவாசித்தால் போதும் விசுவாசம் பிணியாளியை இரட்சிக்கும் நான் என்னிடத்தில் வருகிற வியாதியஸ்தர்காகவும் இன்னும் அநேக பிரச்சினைகளுக்காகவும் ஜெபிக்கிறேன் என்னிடத்தில் வல்லமை இருக்கிறது என்று அல்ல நான் ஜெபம் செய்துவிட்டு போகிறேன் ஆண்டவர் அற்புதம் செய்வார் என்ற விசுவாசம் தான் சுகம் கொடுக்கிறது. ஆண்டவர்தான் உங்களுக்கும் அற்புதம் செய்வார் என்று நான் நம்புகிறேன். உங்களுக்கு அதிசயம் செய்வார் என்று நான் நம்புகிறேன், நீங்களும் நம்புங்கள் நிச்சயம் தேவன் உங்களுக்கும், அற்புதங்கள் செய்ய வல்லமை உள்ளவராக இருக்கிறார்,     

     பெரிய போதகரிடத்தில் இடத்தில் போய் சொன்னாள் நம் பிரச்சினை தீர்ந்து விடுமா என்று நினைக்கிறீர்கள். பெரிய போதகரோ அல்லது  சிறிய போதகரோ பிரச்சினை தீர வேண்டும் என்றால் இயேசுகிறிஸ்துதான் வரவேண்டும். போதகரால் பிரச்சினை தீர்ந்தால் இயேசு கிறிஸ்து ஏன் சிலுவையில் அறையப்படவேண்டும்? பிரச்சனை போதகரால் தீர்க்கமுடியாது பிரச்சினைகள் தீர வேண்டுமென்றால் நீங்கள் ஆராதிக்கிற தேவனால் மாத்திரம்தான் முடியும். போதகர் மூலமாக வேண்டுமென்றால் ஆலோசனைகளை கொடுக்கலாம். ஆனால், போதகரால் அற்புதம் செய்யமுடியாது அப்பொழுது முக்கியமாக தெரிந்துகொள்ளுங்கள் விசுவாசம்தான் முக்கியம் அதினதின் காலத்தில் அதினதின் காரியத்தை அவர் நேர்த்தியாக செய்ய வல்லவர் விசுவாசத்தோடு நாம் காத்திருந்தால் கண்டிப்பாக அதிசயம் நடக்கும் விதைக்கிறவனுக்கு அறுக்கிறதற்கான ஒரு காலம், நேரம் வரும் வரை கட்டாயமாக காத்திருக்கத்தான் வேண்டும்.

நாம் எப்படி என்றால் எல்லாம் வேக வேகமாக நடக்க வேண்டும் என்று நினைக்கிறோம் பேருந்தில் ஏறினால் வேகமாக போகவேண்டும் எதுலே போனாலும் வேகமாக போக வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், நாம் வேகமாக இருக்க மாட்டோம் யோசித்து பாருங்கள். நாம் ஆண்டவரிடத்தில் ஒன்றை செய்ய சொல்லிவிட்டு அவர் செய்கிறவரையிலும் அதற்காக நாம் காத்திருக்கவேண்டும். உதாரணமாக ஒருவருக்கு திருமணம் ஆகி ஒரே மாதத்தில் உங்களுக்கு ஏன் இன்னும்குழந்தை பிறக்கவில்லை என்று கேட்டால்எப்படி இருக்குமோ? அப்படி போல தான் ஆண்டத்தில் ஜெபம் செய்தேன் இன்னும் ஏன் அவர் அற்புதம் செய்யவில்லை ஆண்டவர் என் ஜெபம் கேட்கவே மாட்டார் அப்படியா? ஆண்டவர் மேல் குற்றம்சொல்வது மிகவும் சுலபமாக காணப்படுகிறது.

ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு நெல்பயிர் வைத்தால் மூன்று மாதம் அல்லது ஆறு மாதம் வரை காத்திருக்க வேண்டும். கரும்பு பயிர் செய்தால் ஒரு வருஷம் காத்திருக்க வேண்டும். ஒவ்வொரு பயிருக்கும் ஒவ்வொரு நேரமுண்டு ஒவ்வொரு விஷயத்திற்கும் காத்திருக்க கூடிய நேரம் உண்டு. அந்த காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும். தென்னை கன்று நட்டால் குறைந்தது 5 வருஷம் காத்திருக்கதான் வேண்டும். நேற்று நட்டுவிட்டு இன்றைக்கு பார்த்து இன்னும் வளரவில்லையே அப்படியே தானே இருக்கிறது என்று சொல்வது எவ்வளவு முட்டாள்தனமாக இருக்குமோ அதேபோலதான் ஜெபம் செய்துவிட்டு ஏன் இன்னும் நடக்க வில்லை என்று கேட்பது இருக்கும் நீங்கள் எதை கேட்டாலும் ஆண்டவரிடத்தில் விசுவாசத்துடன்  கேளுங்கள் அவைகள் கட்டாயம் நிறைவேறும்வரை காத்துகொண்டிருங்கள். ஆண்டவர் அதை செய்ய வல்லமை உள்ளவர் அவர் செய்ய நினைத்தது தடைபடாது இப்படிப்பட்டதான நம்பிக்கையுள்ள வார்த்தைகளைச் சொல்லி நம்பிக்கையாக இருக்க வேண்டும் மற்றொரு சம்பவத்தை உங்களுக்கு சொல்ல நினைக்கிறேன் வேதாகமத்தில் ஆபிரகாம் என்பவர் அவருடைய விசுவாசத்தைப் பற்றிய கொஞ்சம் பார்த்துவிட்டு போகலாம் ஆதியாகமம் 11:1-6

  1. இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: ஆபிராமே, நீ பயப்படாதே. நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார். 2. அதற்கு ஆபிராம்: கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே. தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக்கர்த்தனாய் இருக்கிறானே என்றான். 3. பின்னும் ஆபிராம்: தேவரீர் எனக்குப் புத்திரசந்தானம் அருளவில்லை. இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்குச் சுதந்தரவாளியாய் இருக்கிறான் என்றான். 4. அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி: இவன் உனக்குச் சுதந்தரவாளியல்ல, உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான் என்று சொல்லி, 5. அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி. பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார். 6. அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார். 

இங்கே வரும் காரியங்களை நாம் நன்றாக கவனிக்க வேண்டும். இங்கே ஆபிரகாமுக்கு 90 வயதுவரை குழந்தை இல்லை ஆபிரகாமுக்கு 99 ஆவது வயதில் ஆண்டவராகிய தேவன் அவருக்கு தரிசனம் ஆகிறார் அவர் தரிசனத்தில் வந்து என்ன சொல்லுகிறார் என்றால் 

ஆதியாகமம் 15:1-2 1. இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: ஆபிராமே, நீ பயப்படாதே. நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார். 2 அதற்கு ஆபிராம்: கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே. தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக்கர்த்தனாய் இருக்கிறானே என்றான். ஆண்டவர் சொல்லுகிறார் நான் உனக்கு மகா பெரிய பலனுமாய் இருக்கிறேன் என்றார் அதற்கு ஆபிரகாம் எனக்கு நீர் என்ன தருவீர் நான் பிள்ளை இல்லாமல் இருக்கிறேனே என்றார் அதற்கு ஆண்டவர் ஐந்தாம் வசனத்தை வாசியுங்கள்

ஆதியாகமம் 15:5 5  அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி. பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார். 

ஆபிரகாமுக்கு 99 வயதில் தரிசனம் கொடுத்த ஆண்டவர் சொல்லுகிறார் பயப்படாதே நான் உனக்கு மகா பெரிய கேடகமுமாயிருக்கிறேன் என்று சொன்னார். அதற்கு ஆபிரகாம் சொல்லுகிறார் எனக்கு என்ன கிடைக்கும். ஆண்டவரே, எனக்கு இன்னும் பிள்ளை இல்லையே வயதும் 99 ஆகிவிட்டது என்று சொல்கிறார். அதற்கு ஆண்டவர் வானத்தை அண்ணாந்து பார் நட்சத்திரங்களை உன்னாலே எண்ணகூடுமானால் அவைகளை எண்ணு உன் சந்ததியை இவ்விதமாய் நான் ஆசிர்வதிப்பேன் என்றார்.

 அவர் சொன்னஉடனே குழந்தை பிறந்ததா என்று பார்த்தால் குழந்தை பிறக்கவில்லை 100 வயதில் தான் ஆண்டவர் குழந்தையை கொடுத்தார் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலத்தை வைத்திருக்கிறார். பகலிலே சூரியன் வருவதற்கு சூரியனுக்கு ஒரு காலம் வைத்திருக்கிறார். கடலை பாருங்கள் ஒரு எல்லையைத் தாண்டி அலைகள் வராதபடி அதையும் அளந்து வைத்திருக்கிறார் கடலானது எல்லையைத் தாண்டி வரும்போது அது சுனாமியாக மாறுகிறது. எல்லாரையும் வாரிக் கொண்டு போகிறது கடல் அலைகளுக்கு யாராவது மதில்சுவர் போட்டுத் தடுத்து இருக்கிறார்களா இல்லை சாதாரணமாகத் தான் இருக்கிறது. எப்படியெனில் அந்த எல்லையை மீறாதபடிக்கு தேவன் கட்டளை கொடுத்திருக்கிறார், சில நேரங்களில் ஆண்டவர் அதற்கு கட்டளை கொடுக்கிறார் அது பொங்கி மேலே வந்து அழிவை ஏற்படுத்துகிறது. அப்படியாக ஆபிரகாம் இடத்தில் தேவன் ஒரு மனுஷனைப் போல அவனிடத்தில் பேசுகிறார் அவனை வெளியே அழைத்துக்கொண்டுபோய்   என்று சொல்லப்பட்டுள்ளதை பாருங்கள் ஆண்டவர் உங்களோடுகூட பேசுகிறதை  நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள் என்றால் ஆண்டவர் எல்லாம் எப்படி மனுஷனை போல வந்து பேசுவார் என்று சந்தேகப்படுகிறதினால்தான் அவர் இன்னும் பேசவில்லை.

ஆண்டவரிடத்தில் கேட்டுப்பாருங்கள் ஆண்டவரே என்னோடு பேசுமென்று, நிச்சயமாக அவர் உங்களோடு பேசுவார் அவர் பேசுகிற தெய்வம் அவர் பேசாத கல்லோ மரமோ அல்ல ஆண்டவரே என்னோடு வாங்க என்று அழைத்துப்பாருங்கள் அவர் உங்களோடு வருவார் நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை என்று சொல்லியிருக்கிறார் உன்னோடு கூட இருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் நிச்சயமாகவே உங்களோடு கூடயிருப்பார் அப்படியானால் நாம் செய்ய வேண்டியது என்ன விசுவாசிக்க வேண்டும் ஆபிரகாமை வெளியே அழைத்து கொண்டு போய் நட்சத்திரங்களைப் பார் உன்னால் எண்ண முடியுமா உன் சந்ததியை அதைப்போல் மாற்றுவேன் என்றார் அதை சொல்லி ஒரு வருஷம் கழித்துதான் ஆபிரகாமுக்கு ஈசாக்கு என்னும் பிள்ளையை கொடுத்தார் அவர்கள் மூலம்தான் இவ்வளவு பெரிய சந்ததி கிறிஸ்தவர்கள் என்கிற சந்ததி நாமும் அந்த சந்ததியில் சேர்ந்தவர்கள்தான் எப்படி நாம் அந்த சந்ததியில் சேர்ந்தவர்கள் தெரியுமா ஆறாம் வசனத்தை வாசிப்போம்

ஆதியாகமம் 15:6. அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார். 

            நீங்கள் கர்த்தரை விசுவாசித்தீர்களென்றால் கர்த்தர் ஆபிரகாமுக்கு பிள்ளைகளாகும்படி அதிகாரம் கொடுப்பார். அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும் அவரையே விசுவாசிக்க வேண்டும் என்ன பிரச்சினை வந்தாலும் ஆண்டவர் அற்புதம் செய்வார் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும். எல்லாரும் சொல்லுவார்கள் அவ்வளவுதான் உன் வாழ்க்கை முடிந்துவிட்டது என்பார்கள் நீங்கள் என்ன செய்யவேண்டுமென்றால் ஆண்டவர் என் கூடவே இருக்கிறார். நீங்கள் எதை சொன்னாலும் பரவாயில்லை அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை என் ஆண்டவர் எல்லாவற்றையும் செய்ய வல்லவராயிருக்கிறாரென்று சொல்லிப்பாருங்கள் நிச்சயமாக உங்களை யாரெல்லாம் வெட்கப்படுகிறார்களோ அவர்கள் யாவரும் வெட்கப்படும்படியாக தேவன் பெரிய காரியங்களை செய்வார். முக்கியமானது என்னவென்றால் விசுவாசம் நமக்குள் உறுதியாய் இருக்க வேண்டும் நம்முடைய தேவன் நமக்கு விசுவாசி என்று பெயரிட்டுள்ளார்.

ஏன் நமக்கு விசுவாசி என்று பெயர் வைத்திருக்கிறாரென்றால் இயேசுவை விசுவாசிகளாய் இருப்பதினால் தான் விசுவாசி என்று நம்மை அழைத்திருக்கிறார், விசுவாசியாதவர்களுக்கு ஒரு பெயர் உண்டு அந்தப் பெயர் அவிசுவாசி அப்படி என்றால் அழிந்து போகிறவிசுவாசம் என்று அர்த்தம் விசுவாசி என்றால் நிலைத்திருப்பவர்கள் அவிசுவாசி என்றால் அழிந்துபோகிறவர்கள் நீங்கள் விசுவாசிகளா? அவிசுவாசிகளா? என்பதை நீங்களே நிதானித்துப் பாருங்கள், ஏனென்றால் நாம் வாழ்வதற்காகவே வாக்குதத்தம் பண்ணப்பட்டவர்கள் ஆண்டவருடைய விசுவாசத்தினால் அழைக்கப்பட்டவர்கள், ஆபிரகாம் விசுவாசித்தான்.

அப்பொழுது ஆண்டவர் உன் சந்ததியை இவ்வளவாய் பெருகப்பண்ணுவேன் என்று சொன்னார் அதை அப்படியே நம்பினார் விசுவாசித்தார் ஆகையால் அவர் நீதிமானாய் மாற்றப்பட்டார் அதுபோல ஆண்டவர் உங்களிடத்தில் பேசினாரென்றால் அப்படியே நம்புங்கள் அப்படியே விசுவாசியுங்கள் உங்களையும் தேவன் நீதிமானாய் மாற்ற வல்லமை உள்ளவராக இருக்கிறார். இன்னொரு நபரையும் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஏனென்றால், விசுவாசத்திலே நாம் எப்படி இருக்கிறோம் என்பது முக்கியம் விசுவாசம் நம்முடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியம் ஜெபத்திலே தனிப்பட்ட வாழ்க்கையிலே விசுவாசம் மிக மிகமுக்கியம் உங்கள் குடும்ப வாழ்க்கையில் விசுவாசம் மிகவும் முக்கியம் உங்கள் குடும்பத்திற்கு விசுவாசம் மிகமுக்கியம் உங்களுக்கு கொடுக்கப்பட்ட தனிப்பட்ட வாழ்க்கையில் விசுவாசம் மிகவும் அவசியம் எல்லாவற்றுக்கும் ஆணிவேர் மூலகாரணம் விசுவாசம் தான் ஆணிவேர் இல்லை என்றால் மரம் பட்டுப் போய்விடும். விசுவாசம் இல்லாதவர்கள் செத்தவர்களாக மாறிவிடுகிறார்கள் வேதத்தில் இருந்து ஒரு பகுதியை வாசிக்கலாம் 

யோவான் 20:24-29 இயேசு வந்திருந்தபோது பன்னிருவரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா என்பவன் அவர்களுடனேகூட இருக்கவில்லை. 25. மற்றச் சீஷர்கள்: கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னார்கள்.அதற்கு அவன்: அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என்விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான். 26. மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டிக்குள்ளே இருந்தார்கள், தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான், கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். 27. பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப்பார், உன் கையை நீட்டி, என் விலாவிலேபோடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார். 28. தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான். 29. அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார். 

இப்பொழுது கவனியுங்கள் இயேசு கிறிஸ்துவினுடைய வாழ்நாட்களில் நடந்த ஒரு சம்பவம் அவருக்கு 12 சீஷர்கள் இருந்தனர். இயேசுகிறிஸ்து பிறந்தபோது குறிக்கப்பட்டவராக இன்னாருடைய பிள்ளையாக பிறப்பார் என்று முன் அறியப்பட்டவராக 12 வயது வரை அவர் தாய் தகப்பனார் கூட வளர்ந்தார். 12 வயதிலிருந்து 30 வயது வரையிலும் என்ன செய்தார் எப்படி இருந்தார் என்கிற அவருடைய சரித்திரம் எழுதப்படவில்லை. அவருடைய வாழ்க்கைப்பற்றி எதுவும் சொல்லப்படவில்லை வேண்டுமென்றால் நாம் சொல்லலாம் அவர் தகப்பனார் காலமான பிறகு தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றவேண்டிய பொறுப்பு அவருக்கு இருந்ததினால் அவர் வேலை செய்து தன் குடும்பத்தைக் காப்பாற்றினார். இயேசு கிறிஸ்துவின் தகப்பனார் ஒரு தச்சர் வேலை செய்த படியினால் இயேசுவும் தச்சர் வேலை செய்து தன் குடும்பத்தை காப்பாற்றியிருப்பார் என்று நாம் ஒரு சரீத்திரத்தை சொல்லலாம். 30 வயதிலேயே இயேசுகிறிஸ்து பிதாவின் சித்தத்தின்படி ஞானஸ்நானம் எடுத்து கரையேறினவுடனே வானத்திலிருந்து ஒரு சத்தம் வந்தது இவர் என் நேச குமாரன் இவரில் நான் பிரியமாயிருக்கிறேன், இவருக்கு நீங்கள் செவிகொடுங்கள் என்று அறிவிக்கப்பட்டது.

அவர் ஞானஸ்தானம் பெற்ற பிறகு அவர் பரிசுத்த ஆவியையும் பெற்றார் உடனே அவர் பரிசுத்த ஆவியின் ஏவுதலால் வனாந்திரத்திற்கு போய் 40 நாள் உபவாசம் இருந்தார் வனாந்திரத்தில் உண்ணாமலும் குடிக்காமலும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார் ஜெபம் என்று சொன்னால் இயேசுவைப்போல ஜெபம் செய்யவேண்டும். தனக்கு யாரும் தடையாக இருக்ககூடாது தனிமையாக இருக்கவேன்டுமென்று வனாந்திரத்தில் ஆவியானவரால் கொண்டுபோக பட்டார். 40 நாட்கள் உபவாசம் முடித்தபிறகு பசி உண்டாயிற்று நமக்கு எப்பொழுதெல்லாம் தேவை உண்டாகிறதோ அப்பொழுதெல்லாம் பிசாசு நம்மிடத்தில் வருவான் என்று அர்த்தம்.

ஏன் தெரியுமா நீங்கள் தேவனை விசுவாசியாதபடிக்கு திசைதிருப்புவதற்காகவேதான் உங்களிடத்தில் வருவான் இயேசுவிற்கு பசி உண்டான சமயத்தில்  பிசாசு  வருகிறான். ஆண்டவரே நீர் யார் தெரியுமா? தேவனுடைய குமாரன் நீர், தேவனுடைய குமாரனாயிருந்தால் இந்த கல்லுகளைப் பார்த்து அப்பமாகும்படி சொல்லும் அப்பமாகிவிடும். நீர் உடனே புசித்து பசி ஆற்றப்படலாம் ஏன் பசியாய்  இருக்க வேண்டுமென்று ஆண்டவரை சோதித்தான். ஆண்டவர் என்ன சொன்னார் என்றால் மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல தேவனுடைய வாயிலிருந்து பிறக்கும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று சொல்லி சாத்தானை அதட்டினார் மறுபடியும் சாத்தான் உயர்ந்த மலைக்குமேல் கொண்டுபோய் மேலேயிருந்து கீழேகுதியும் தேவதூதர்கள் உங்களை கைகளினால் ஏந்திகொண்டுபோவார்கள் என்று சொல்லி சொன்னான். அதற்கு ஆண்டவர் உன் தேவனாகிய கர்த்தரை பரிட்சை பாராதிருப்பாயாக என்று எழுதி இருக்கிறது என்று சொன்னார் மூன்றாவது பிசாசு உலகத்தில் உள்ள அனைவருமே என்னைத்தான் வணங்குகிறார்கள் நீ சாஷ்டாங்கமாய் விழுந்து என்னை பணிந்துகொள் அப்பொழுது இவைகளெல்லாம் உமக்குத் தருவேன் என்றான் அதற்கு ஆண்டவர் சொன்னார். அப்பாலே போ சாத்தானே உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

அதற்கடுத்தபடியாக நடந்தது என்னவென்றால் தேவனுடைய  திட்டத்தின்படியும் சட்டத்தின்படியும் 33.1/2 வயதில் சிலுவையில் அடிக்கப்படும்படி ஒப்புகொடுக்கப்பட்டார் சிலுவையில் அடிக்கப்பட்டார் மரித்து அடக்கம்பண்ணபட்டார். ஆனால், இயேசு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார் இயேசு உயிரோடு எழுந்து அவருடைய சீஷர்கள் கூடியிருந்த கதவு பூட்டப்பட்டவீட்டிலே இயேசு உள்ளே பிரவேசித்து உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக. பயப்படாதீர்கள், நான்தான் என்றார். எல்லோரும் ஆச்சரியப்பட்டு அவர் உயிர்த்தெழுந்தார் என்று அவர்மேல் நம்பிக்கை வைத்தார்கள் அந்த நேரத்தில் தோமா இல்லை தோமா வந்தவுடன் அவரிடத்தில் இதை விவரித்து சொன்னார்கள். இயேசு எங்களுக்கு தரிசனமானார் அவர் உயிர்த்தெழுந்தார் என்று சொன்னார்கள் அதற்கு தோமா நான் நம்பவேமாட்டேன் இயேசுவின்  ஆணி அடிக்கப்பட்ட அவருடைய கையை நான் பார்க்க வேண்டும் என்றும் அந்தக் கையில் என் விரலை விட்டு பார்ப்பேன் என்றும் அவரது விலாவிலே என் கையை போட்டுபார்த்தால் தான் நம்புவேன் என்றும் சொன்னான் கீழ்கண்ட வசனத்தை வாசித்து நன்றாக கவனியுங்கள் :

யோவான் 20:27 பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப்பார், உன் கையை நீட்டி, என் விலாவிலேபோடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்.  28. வசனத்தை வாசித்து பாருங்கள் தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான். 

            ஆண்டவர் தோமாவை பார்த்து நீ ஏன் இப்படி இருக்கிறாய்  அவிசுவாசியாக நீ இராதே  யாராக இருக்க வேண்டும் என்றால் விசுவாசியாக இருக்கவேண்டும் என்று சொன்னார். நீ உன் விரலை நீட்டி என் கைகளைப் பார் உன் கையை நீட்டி என் விலாவில் போடு என்றார். அதற்கு தோமா ஆண்டவரே என்னை மன்னியுங்கள் நான் பாவம் செய்தேன் என்று சொல்கிறான் தோமாவை விட யார் பாக்கியவான்கள் தோமாவோ  இயேசுகிறிஸ்துவோடு கூட இருந்தவர்.  இயேசுகிறிஸ்து மரித்த பிறகு சீஷர்கள் எல்லோரும் ஒவ்வொரு தேசத்திற்கு போய் இயேசுவை சொல்ல வேண்டுமென்று முடிவு செய்கிறார்கள் எந்தெந்த தேசத்திற்கு போவோம் என்று சீட்டு போடும்போது தோமாவின் சீட்டில் இந்தியா என்று இருந்தது.

இந்தியாவிற்கு தோமா வந்தார் இந்தியாவிலே தோமா வந்ததற்கான அடையாளங்கள் ஏராளமாய் இருக்கிறது கேரளாவில் அவர் கட்டிய ஆலயம் இன்னும் உள்ளது. அப்பொழுது கேரளாவும் தமிழ்நாடும் ஆந்திராவும் எல்லாம் ஒரே பகுதியாக இருந்ததினால் தென்னிந்தியாவிற்கு முதன்முதலில் கடற்கரைபகுதியான கேரளாவிற்கு வந்தார் கேரளாவில் 20 வருஷம் ஊழியம் செய்தார். தமிழ்நாட்டிலே வந்து 20 வருஷம் ஊழியம் செய்தார் அதற்குப் பின்பு மறைமுகமான சிலரால் கொலை செய்யப்பட்டு சென்னையில் அடக்கம் செய்யப்பட்டார். இவரை கவனித்துப்பாருங்கள் நான் இயேசுவை தொட்டுப் பார்த்தால்தான் விசுவாசிப்பேன் என்றார். ஆனால்\, இயேசு சொல்கிறார் நீ என்னை காண்பதினால் தான் விசுவாசிக்கிறாய் இதோ என்னை காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்களே பாக்கியவான்கள் என்று சொன்னார். நீங்கள் ஜெயிக்க வேண்டுமானால் விசுவாசிக்க வேண்டும். உங்கள் பிரச்சினை தீர வேண்டுமென்றால், உங்களுடைய வியாதி தீர வேண்டுமென்றால், உங்கள் குடும்பத்தில் உள்ள பிசாசின் கிரியைகள் நீங்க வேண்டும் என்றால், உன்னுடைய குடும்பத்தை ஆட்டிப் படைக்கிற சாபத்தில் இருந்து வெளியே வர வேண்டும் என்றால், உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்த்திருக்கிற காரியம் நடக்க வேண்டுமென்றால், விசுவாசியுங்கள்.  விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பீர்கள் தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக,  ஆமென் அல்லேலூயா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *