வார்த்தையாகிய தேவன்| Rev. B.E. Samuel

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின்  நாமத்தினாலே இந்த இதழின் மூலமாய் உங்களை சந்திப்பதில் மிக்கமகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கு நாம் தியானிக்கபோகிற பகுதி

யோவான் 5:36-45 வரை

36. யோவானுடைய சாட்சியைப்பார்க்கிலும் மேன்மையான சாட்சி எனக்கு உண்டு,அதென்னவெனில், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்துவருகிறதுமான கிரியைகளே பிதா என்னை அனுப்பினார் என்று எனனைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறது.

37. என்னை அனுப்பின பிதா தாமே எனனைக்குறித்துச் சாட்சிகொடுத்திருக்கிறார்:நீங்கள் ஒருக்காலும்அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை.

38. அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசியாதபடியால் அவருடைய வசனம் உங்களில் தரித்திருக்கிறதுமில்லை.

39. வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்: அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.

40. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை.

41. நான் மனுஷரால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.

42. உங்களில் தேவ அன்பு இல்லையென்று உங்களை அறிந்திருக்கிறேன்.

43. நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுயநாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள்.

44. தேவனாலேமாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?

45. பிதாவினிடத்தில் நான் உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவேன் என்று நினையாதிருங்கள்; நீங்கள் நம்புகிற மோசேயே உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவான்.

நான் இன்றைக்கு வேதத்தை குறித்து ஒரு தெளிவை உண்டுபண்ண விரும்புகிறேன். குறிப்பாக யோவான் 5 அதிகாரம்;  39-ம் வசனத்தை பார்ப்போம். வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்: அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.

நன்றாக கவனியுங்கள் இன்று நம் எல்லாருடைய கைகளிலும் வேதாகமம் இருக்கிறது அதின்படிதான் நாம் வாழவேண்டும் எல்லோருக்கும் ஒரே சட்டம்தான் ஆண் என்றாலும் சரி பெண் என்றாலும் சரி சட்டம் ஒன்றுதான். நாம் எந்த நிலையில் உள்ளவர்களாயிருந்தாலும் ஒரே சட்டம் தான் உயர்வில் இருந்து வந்திருந்தாலும் சரி தாழ்வில் இருந்து வந்திருந்தாலும் சரி  வேத புத்தகம்தான் நமக்கு கொடுக்கப்பட்ட சட்ட புத்தகம் அதுவே பரிசுத்த வேதாகமம்.

பரிசுத்த வேதாகமத்திலே வார்த்தையாக வந்த இயேசு அதைத்தான் யோவான் 1:1 – ல் ஆதியிலே வார்த்தை இருந்தது அது மனு~னாக வந்தது என்று சொல்லப்பட்டுள்ளது அப்படியானால் இந்த வசனங்களை எல்லாம் பார்க்கும்போது அது ஒரு எழுத்து என்றோ அது ஒரு வசனம் என் என்றோ பார்க்காமல் அவ்வார்த்தைகளை இயேசு கிறிஸ்துவாக பார்க்கவேண்டும், வசனம் என்றால் இயேசு கிறிஸ்து இந்த இயேசு கிறிஸ்து வசனத்தின் மூலமாக நம்மோடு பேசக்கூடிய வல்லமையுள்ளவர் அவர் பேச நாம் கேட்கும் போது அது நமக்கு பிரயோஜனமாயிருக்கும், சிலர் என்ன நினைக்கிறார்கள் என்றால் அவர்களை தான் ஞானியென்றும் எல்லாம் எனக்குத்தான் தெரியும் என்பது போல பேசிக்கொண்டிருக்கிறார்கள்,

நானும் முப்பத்தைந்து வருடமாய் இந்த பரிசுத்த வேதத்தை வாசிக்கிறேன் தினம் தினம் ஒவ்வொரு வசனமும் எனக்கு புதிதாக இருக்கிறது. புதிராக இருப்பது போல்தான் இருக்கிறது, ஒரு நாள் இரண்டு நாள் அல்ல அதனை  விருப்பத்தோடு ஏற்றுக்கொள்ளும் போது அது ஞானப்பால்போல அறிவை கொடுக்கிறதாய் இருக்கிறது,

அது என்னை ஒருநாளும் சோர்ந்து போக பண்ணினதே இல்லை, ஒவ்வொரு நாளும் அந்த வார்த்தை புதியதாகவே இருக்கிறது ஏறக்குறைய 35 வருடமாக இந்த வேத வசனத்தை பிரசங்கித்து வருகிறேன். 35 வருடங்களாக பிரசங்கிக்கிற நான் எல்லாம் பிரசங்கித்து முடந்தாயிற்று என்று சொல்லக் கூடாதபடி இன்னும் புதிய புதிய வார்த்தைகள் பேசும்படியாக பிரசங்க வார்த்தைகளை கொடுத்துக் கொண்டே இருக்கிறார், நானும் பேசிக்கொண்டே தான் இருக்கிறேன். ஆனால், எவ்வளவு காலம் இருப்பேன் என்று தெரியாது அதுவரைக்கும் பேசிக் கொண்டுதான் எழுதிக்கொண்டுதான் இருப்பேன்,

வேத வசனங்களை ஆராய்ந்து பார்ப்பதினால் அப்படி என்ன கிடைக்கிறது என்றால் நித்திய ஜீவன் கிடைக்கிறது. அப்படியானால் எப்படி ஆராய்ந்து பார்க்க வேண்டும் ஒரு சில பேர் வசனத்தை வாசிக்கும்போது அவசரஅவசரமாய் படிப்பார்கள்  திடீரென்று வேதத்தை திறப்பார்கள் யூதாஸ் காட்டிக் கொடுத்தான் என்று வரும் நல்ல வார்த்தை வரும் என்று பார்த்தேன் ஏன் இப்படி வருகிறது? என்று சொல்லி வேறொரு பக்கம் எடுப்பார்கள் அங்கே பார்த்தால் அவன் நான்றுகொண்டு செத்தான் என்று வரும். நாம் வசனத்தை எப்படி வாசிக்க வேண்டும் என்றால் தொடர்ச்சியாக படிக்கவேண்டும்.

திடீரென்று நாம் வேதத்தை குறி பேசுவது போல ஜோசியம் பார்ப்பது போல பார்த்தோம் என்றால் இப்படி தான் வரும் தினம் ஒரு பகுதியை தொடர்ச்சியாக வாசித்தால் அதுவே நமக்கு மிகுந்த ஆசீர்வாதமாக இருக்கும். எதிர்த்து வரும் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒவ்வொரு வார்த்தைகள் அல்லது ஆலோசனைகள் உள்ளதா என்றால் உதாரணத்துக்கு ஒரு காரியத்தை சொல்கிறேன், வயதானவர்களுக்கும் மற்றும் கவலையாய் இருப்பவர்களுக்கும் சிலர் குழப்பத்தில் இருப்பவர்களுக்கும் தூக்கம் வராது இப்படி தூக்கம் வரவில்லை என்றால் வேதத்திலிருந்து ஏதாவது ஒரு வழி இருக்கிறதா என்று சொன்னால் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வசனத்தை வேதத்திலே தேவன் வைத்திருக்கிறார்

சங்கீதம் 4: 4-8

4. நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள், உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள்.

5. நீதியின் பலிகளைச் செலுத்தி, கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருங்கள்.

6. எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர், கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்.

7. அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிறகாலத்தின் சந்தோ~த்தைப்பார்க்கிலும், அதிக சந்தோ~த்தை என் இருதயத்தில் தந்தீர்.

8. சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன், கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த்  தங்கப்பண்ணுகிறீர்

     நன்றாய் பாருங்கள் தூக்கம் வரவில்லை என்று சொன்னால் புரண்டு புரண்டு படுப்போம் சில வேலைகளில் என்ன செய்வதென்று தெரியாமல் தூக்க மாத்திரை போட்டு தூங்குவோம். ஆனால், அப்படி செய்வது மிக தவறு அதை மாற்றிக்கொள்ளுங்கள் தூக்க மாத்திரை எடுப்பீர்கள் என்றால் அது ஒரு வியாதியாக மாறிவிடும்ஒரு அப்பா தன் மகனை காலேஜில் சேக்கிறார். மகனும் கல்லூரி விடுதியில் தங்குகிறான் அப்பாவும் வீட்டிற்கு போய் விட்டார்  வீட்டில் இருக்கும் போது குடும்பமாய் வேதம் வாசித்து ஜெபம் பண்ணுவான். ஆனால், கல்லூரிக்கு போன உடனேயே அங்கேயே தங்கி இருக்கிற பிள்ளைகள் எல்லாரும் ஒன்றுகூடி என்ன எப்போது பார்த்தாலும் சாமியார் போல வேதம் வேதம் என்று  இருக்கிறாய்.

     இந்த வயசில் தான் நன்கு என்ஜாய் பண்ண வேண்டும் என்று சொல்லி அவனை கெடுத்துவிட்டார்கள். இவனும் என்ன செய்தான் என்றால் வேதத்தை திறப்பதேயில்லை வேதம் வாசிப்பதில்லை ஜெபம் பண்ணுவதில்லை சுத்தமாய் தேவனோடு இருந்த தொடர்பே இல்லாமல் போய்விட்டான்சிலநாள் கழித்து மகன் அப்பாவுக்கு போன் பண்ணி அப்பா உடனே பீஸ் கட்டியாகனும் பீஸ் கட்ட பணம் அனுப்பிவையுங்கள் சாப்பிட பணம் அனுப்பிவையுங்கள் என்று சொல்லி கேட்டுக் கொண்டே இருப்பான். அப்பொழுது பதிலுக்கு அப்பா  ஆண்டவர் தருவார் நீ நன்றாக வேதத்தை வாசி வேதத்தை வாசித்து கொண்டேயிரு என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

பீஸ் கட்டாததால் ஒரு நாள் ஹாஸ்டல் சாப்பாடு கொடுக்கவுமில்லை காலேஜ் சேர்க்கவுமில்லை உடனே  அவனுக்கு  கோபம் வந்தது சூட்கேசை திறந்தான் பைபிள் எடுத்தான் நேராய் வீட்டிற்கு சென்று எனக்கு பீஸ் கட்டாமல் வேதத்தை படி படி என்று சொல்கிறீரே என்று வேதத்தை தரையிலே  வீசினான, கீழே விழுந்த வேதத்திலிருந்து 100,500 , 2000 என்று ரூபாய் நோட்டுகளாக ஆயிரக்கணக்கான பணம் கீழே கொட்டியது எப்படி வந்ததென்றால் அந்த தகப்பன் வேதத்தின் ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு பண நோட்டை வைத்திருந்தான் இதை அந்த மகன் அறியவில்லை தொடர் வேத வாசிப்பை மறவாமல் வேதத்தை ஒவ்வொரு நாளும் திறந்து வாசிக்கும்போது எல்லாம் வாய்க்ககூடும்  இதிலிருந்து நாம் என்ன தெரிந்து கொள்கிறோமென்றால் நம் எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் எல்லா சூழ்நிலைக்கும் ஏற்றார் போல் ஆசீர்வாதங்கள் எல்லாம் வேதவசனத்தில் இருக்கிறது என்பதை நாம் அறிகிறோம்.

நமக்கு சில நேரங்களில் தனிப்பட்ட காரியங்கள் தனிப்பட்ட எண்ணங்கள் ஏதோ ஒன்றை நினைத்து கொண்டிருப்போம், அதினால் தூக்கம் வராமல் போய்விடும் தூக்கம் வரவில்லை என்றால் என்னய்செய்யலாம், கோபம் வந்தாலும் பாவம் செய்யக்கூடாது தூக்கம் வர வேண்டுமென்றால் உங்கள் இருதயத்தில் பேசிக் கொண்டிருக்க வேண்டும் யாரிடத்தில் பேச வேண்டும் என்றால் நம்முடைய ஆண்டவரோடு பேசிக்கொண்டே   நீதியின் பலிகளை செலுத்தி கர்த்தர் மேல் பிரியமாக இருக்க வேண்டும்.

நம்முடைய நீதியெல்லாம் நம்முடைய நியாயங்கள் எல்லாம் தேவனுக்கு முன்பாக நான் எப்படி இருக்கிறேன் ஆண்டவரே உமக்கு முன்பாக நான் எப்படிபட்டவனாய் இருக்கிறேன் என்று சொல்லி நம்முடைய நீதியின் பலிகளை அவருக்கு முன்பாக செலுத்த வேண்டும் எப்படியென்றால்  ஆயக்காரன் ஜெபித்தது போல ஆண்டவரே ஆண்டவரே பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்று ஜெபித்து போல நாம் ஆண்டவரோடு பேசிக்கோணாடிருக்கவேண்டும், இரட்சிக்கப்பட்டு எத்தனை வருடம் ஆனாலும் இன்னும் நான் பாவி ஆண்டவரே பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்று வேண்டிக்கொண்டு இருப்பேன்.

1 யோவான் 1:8 நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.

தேவ சமூகத்திலே உட்கார்ந்து ஆண்டவரே என்னை பாரும் என் உள்ளத்தை பாரும் என் நினைவுகளை பாரும் என் சிந்தை களைப்பாரும் நான் என் நினைவுகளுக்கு தூரமாகி இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே தூங்க ஆரம்பித்து விடுவாய்  கர்த்தர் தமக்குப் பிரியமானவர்களுக்கு நித்திரை அளிக்கிறார், எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர், கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும். என்று சங்கீதம் 4:6; வசனம் சொல்லுகிறது கர்த்தாவே உம்முடைய முகத்தின் ஒளி எங்கள் மேல் பிரகாசிக்க பண்ணும் அவருடைய முகத்தின் ஒளி நம் மேல் பட்டால் உடனே ஆண்டவர் நமக்கு பதில் கொடுப்பார்.

ஏழாம் வசனத்தை பாருங்கள் அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிறகாலத்தின் சந்தோ~த்தைப்பார்க்கிலும், அதிக சந்தோ~த்தை என் இருதயத்தில் தந்தீர்.

சங்கீதம் 4:7 தூக்கம் வராததற்கு காரணம் என்னவென்றால் துக்கம் துயரம் கவலை தான் தூக்கம் வராததற்கு காரணம் இப்படி இவர்கள் செய்வார்கள் என்று எனக்கு தெரியாது இப்படி அவமானப்படுத்தி விட்டார்களே நான் அவர்களை நல்லவர்கள் என்று நினைத்து என் கூடவே வைத்துக்காப்பாற்றினேன் கடைசியாக இவர்கள் இப்படி செய்துவிட்டார்களே என்னுடயதை கொள்ளையடித்து விட்டார்களே என்று அதைக் குறித்து குழப்பமடைகிறோம் கஸ்டபடுகிறோம்.

அதனால் நமக்கு தூக்கம் வராது ஆனால் தேவ சமூகத்தில் அமர்ந்து ஸ்தோத்தரித்துபார் தூக்கத்தை கொடுப்பார். வேதம் சொல்கிறது சமாதானத்தோடு படுத்து நித்திரை செய்வாய் கர்த்தர் ஒருவரே என்னையும் உன்னையும் சுகமாய் தங்க பண்ணுவார்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *