வர வேணும் என தரசே | Varavenum Enadharasae | Tamil Christian Songs


வர வேணும், என தரசே,
மனுவேல், இஸ்ரேல் சிரசே.
அருணோ தயம் ஒளிர பிரகாசா,
அசரீரி ஒரே சரு வேசா!- வர

வேதா கருணா கரா,மெய் யான பரா பரா,
ஆதார நிராதரா ,அன்பான சகோ தரா,
தாதாவும் தாய் சகலமும் நீயே:
நாதா உன் தாபரம் நல்குவாயே. – வர

படியோர் பவ மோசனா, பரலோக சிம்மாசனா,
முடியா தருள் போசனா, முதன் மா மறை வாசனா,
இடையர் குடிலிடை மேவி எழுந்தாய்,
இமையவர் அடி தொழு மன்மையின் மேன்மை யின் எந்தாய் , -வர

வானோர் தொழும் நாதனே, மறையாகம் போதனே,
கானாவின் அதீதனே, கலிலேய வினோதனே,
ஞானகரமே, நடு நிலை யோவா,
நண்பா, உனத நன்மையின் மகா தேவா ! -வர

Online Christian SongBook :  வர வேணும் ,என தரசே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *