வருவேன் என்றவர் தாமதியாரே
வரும்நாளை எதிர்பார்ப்போம்
வந்தவர் நம்மை அழைத்து செல்வார்
ஆயத்தமாகிடுவோம்
1. எக்காள சத்தம் தொனித்திடவே
என்றும் அவரை துதித்திடவே
இன்னல்கள் எல்லாம் மறைந்திடுதே
வானமீதிலே தேவதேவனாய்
இராஜராஜனாய் வருவார்
இதுவே அவரின் வருகையாகும்
எனவே மனிதா மார்க்கமுண்டு
பாதுகாப்பு உண்டு
2. வானமானது வாடி போயிடும்
சுடர்களானது சுருங்கி போயிடும்
கடலானது வற்றிப்போகிடும்
மேகமீதிலே தேவதேவனாய்
இராஜராஜனாய் வருவார்
இதுவே அவரின் வருகையாகும்
எனவே மனிதா மார்க்கமுண்டு
பாதுகாப்பு உண்டு
Online Christian SongBook: வருவேன் என்றவர் தாமதியாரே
karaoke : https://youtu.be/W_amaDLuZg4