யொகான் பிலிப் பப்ரிஷியஸ் ஐயர். ( Johann Phillip Fabricius ) – 9

கல்லறை:

மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்த ஆலயக் கட்டிடத்தை SPCK மற்றும் ஆங்கிலேய அரசாங்கமும் இணைநந்து இடித்து விட்டு அந்த இடத்தில் ஒரு புதிய ஆலயத்தை 1828ஆம் ஆண்டு கட்டி முடித்து. 1842ஆம் ஆண்டில் ஆலயப் பிரதிருஷ்டை செய்தனர்.

இதனால் ஆலயக் கல்லயைத் தோட்டத்தில் இருந்த அனைத்துக் கல்லறைகளையும் பழுதுபார்த்து புதுப்பித்தனர். இப்படி புதுப்பிக்கப்பட்ட கல்லறைகளில் பப்ரிஷியஸ் ஐயர் கல்லறையும் ஒன்று. இக்கல்லறையின் மேல் John என்ற அவரது ஜெர்மன் பெயர் Johann என்று ஆங்கிலமாக்கப்பட்டிருக்கிறது.

சென்னை, வேப்பேரியில் உள்ள ரிதர்டன் சாலையில் (Ritherdon Road) இருக்கும் புதுப்பிக்கப்பட்ட இந்த சிற்றாலயம் தற்போது தூய மத்தியாஸ் ஆலயம் (St.Matthias) என்றும், தி இங்கிலிஷ் சர்ச் (The English Church) என்றும் அழைக்கப்படுகிறது. அதோடு அவரைப்பற்றிய முக்கிய செய்திகள் எதுவும் குறிப்பிடப்படாமல் விடுபட்டுப் போயிருப்பதோடு, அவரது கல்லரை ஒரு சரித்திரச் சான்றாக (For Historical Records) மட்டும் அங்கு இருப்பது வருந்தத்தக்க செய்தியாகும். சென்னை, வேப்பேரியில் ரித்தர்டன் சாலையில் (Ritherdon Road) இருக்கும் சென்னை சி எஸ் ஐ திருமண்டலத்துக்கு சொந்தமான தூய மத்தியாஸ் ஆலயம் (St.Matthias) அல்லது தி இங்கிலிஷ் சர்ச் (The English Church) தான், 1828 ஆம் ஆண்டு இடித்து கட்டப்பட்ட சிற்றாலயமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *