இந்த சிற்றாலயம் அவரின் மறைவுக்குப் பிறகு SPCK விடம் ஒப்படைக்கப்பட்டது. அதுமுதற்கொண்டு 1825 ஆம் ஆண்டு வரை தரங்கம்பாடி மிஷனைச் சேர்ந்த லுத்தரன் பாதிரியார்கள் ஆலயவழிபாட்டை நடத்தி வந்தனர். 1826ல் அருள்திரு. ரிச்சர்டு வில்லியம் மூர்சம் (Rev. Richard William Moorsom) என்ற முதல் ஆங்கிலேயப் பாதிரியார் சிற்றாலயத்தின் பொறுப்பினை ஏற்றார். அதுமுதற்கொண்டு அந்த ஆலயத்தில் ஆங்கிலிக்கன் முறைப்படி ஆங்கிலத்தில் வழிபாட்டு முறை இன்றுவரை பின்பற்றப்படுகிறது.
மறைவு:
23-01-1791ல் பப்ரிஷியஸ் ஐயர் இறந்தபோது அவருடைய உடலை லுத்தார்கள் இடம் இருந்த இந்த சிற்றாலய வளாகத்தில் நல்லடக்கம் செய்தனர்.
சீகன் பால்கை போலவே இவரது கடின உழைப்பினால் வெளிவந்த முதல் வேதாகமத்தை இவரும் காண்வியலாமல் போனது. இவர் மொழிபெயர்த்த முழுவேதாகமும் 1840ல் வெளியானது. இதுவே தற்போது புழக்கத்திலிருக்கும் கிறிஸ்தவ தமிழ் நடை (எபிரேயத்தமிழ் நடை) உருவாகக் காரணமாக இருந்தது.