பப்ரிஷியஸ் ஐயர் தமிழில் மொழிபெயர்த்த கிறிஸ்தவ வேதாகமம் தான் தமிழ் மொழியின் வசன நடையின் ஆரம்ப காலத்தில் முதலில் வெளிவந்த பெரிய வசன நடை தமிழ் நூலாகும். பப்ரிஷியஸ் ஐயருடைய மொழிபெயர்ப்புக்குப் பின் வேறுபல மொழிபெயர்ப்புகள் வந்த போதிலும் தமிழ் சுவிசேஷ லுத்தரன் சபையார் இன்றளவும், அதாவது சுமார் 210 ஆண்டுகளுக்கும் மேலாக பப்ரிஷியஸ் ஐயருடைய பிழைகள் நீக்கப்பட்ட தமிழ் சீர்திருத்தக் கிறிஸ்தவர்கள் உபயோகிக்கும் கிறிஸ்தவத் தமிழுக்கு பப்ரிஷியஸ் ஐயர் மொழிபெயர்ப்பே ஆதாரமாக விளங்குகிறது. இன்றும் தென்னாட்டுத் தமிழ்க் கிறிஸ்துவத் சபைகளில் ஐயர் தமிழில் மொழிபெயர்த்த அல்லது உருவாக்கிய பல ஞானப்பாட்டுகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறன.