இது குறித்து ஹீப்பர் (Golden Version) என்பர் குறிப்பிடும் போது, வேத மொழிபெயர்ப்பின் சரித்திரத்திலே பப்ரிஷியஸ் செய்து முடித்த வேலை அரும் பெரும் செயலெனப் பாராட்டப்பட வேண்டும் என்றார். ந்த மொழிபெயர்ப்பு பொன் மொழிபெயர்ப்பு ( எர்ப்க்ங்ய் யங்ழ்ள்ண்ர்ய் ) என்று பலராலும் பாராட்டப் பெற்றது. இந்த மொழிபெயர்ப்பு இன்று வழக்கில் இல்லாவிடினும் இதற்குப் பின் வந்த எல்லா மொழிபெயர்ப்புகளுக்குள்ளும் இதன் தாக்கம் திருத்தப்பட்ட வாசகங்களாய் புதைந்து கிடக்கிறது என்பது உண்மை.
பழைய ஏற்பாடு பாகம் பாகமாய், நிறைவு பெற பெற, அச்சிடப்பட்டது. 1777ல் ஆதியாகமம் முதல் நியாயாதிபதிகள் வரையும், 1782ல் ரூத் முதல் யோபு வரையும், 1791ல் சங்கீதங்கள் முதல் உன்னதப்பாட்டு வரையும், 1796ல் தீர்க்கதரிசன நூல்களும் அச்சிடப்பட்டன.
குறிப்பு: இவர் தள்ளுபடியாகமத்தைத் தமிழாக்கம் செய்யவில்லை