பிப்ரேஷியஸின் மொழி வேதாகம மொழி பெயர்ப்புத் துறையில் ஒரு போற்றத் தகுந்த சாதனையாகக் கருதப்பட்டது. அதற்கு காரணம் “அவர் தன்னுடைய முழங்காலில் நின்று மூல பாஷையிலுள்ள, 4 பகுதியை வாசித்து ஒவ்வொரு வார்த்தையையும் ஆராய்ந்து சீர்தூக்கி பார்த்த பின்புதான் மொழி புதிய பெயர்ப்பார்” இவருடைய பின்னால் தோன்றிய எல்லா மொழி பெயர்ப்புக்கும் ஒரு ஆதாரமாக விளங்கியது.
சென்னையில் இவருடைய சபையில் பல்வேறு நாட்டினர் இருந்ததால், அவர்களிடையே பில்ரசங்கம் செய்வதற்காக ஜெருமன், டச்சு, போர்ச்சுக்கீசியம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளையும் கற்றறிந்து இந்த ஐந்த மொழிகளிலும் பிரசங்கம் செய்தார். இந்த சபை பிரசங்கம் தவிர, வெனி ஊர்களுக்கும் சென்று பல நாட்கள் தங்கியிருந்து கிறித்தவ சமயப் பணியை திறம்படச் செய்து வந்தார்.
1772ஆம் ஆண்டு, சென்னை கிறிஸ்து மார்க்க கல்வி அபிவிருத்திச் சங்க (J.S.M.Hooper) வேதாகமத்தில் ஒத்த வாக்கியக் குறிப்புகள் பக்கங்களின் கீழ் பகுதியில் கொடுக்கப்பட்டிருந்தன.
புதிய ஏற்பாடு முடிந்ததும், பப்ரிஷியஸ் பழைய ஏற்பாடு வேலையைத் தொடங்கினார். முந்தைய மொழிபெயர்ப்பில் அவருக்குத் தேவையான அனுபவமும், மொழிபெயர்க்கும் திறனும் வளர்ந்திருந்ததால் மொழிபெயர்ப்பு வேலையை முன்னிலும் சிறப்பாகச் செய்தார். அதனால் புதிய ஏற்பாடு மொழிபெயர்ப்பை விட பழைய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு அதை விட சிறந்ததாக அமைந்தது.