யொகான் பிலிப் பப்ரிஷியஸ் ஐயர். ( Johann Phillip Fabricius ) – 3

அதன் பிறகு வேதாகமத்தில் சீகன்பால்க், ஸ்கர்ட்ஸ், சூல்ச் ஐயரின் மொழிபெயர்ப்புகளில் அதிகமான பிழைகள் காணப்பட்டதாலும், மொழிபெயர்ப்பு சரியில்லாத காரணத்தாலும், நல்லதொரு மொழி நடையில், அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக ஒரு தமிழ் வேதாகமம் சபையாருக்குத் தேவை என்பதை உணர்ந்து 1752ல் வேதாகம் மொழிபெயர்ப்புப் பணியைத் தொடங்கி 20 ஆண்டுகள் பொறுப்போடும் பக்தியோடும் செயல்பட்டு 1772ல் தமிழ் வேதாகமம் ஒன்றை உருவாக்கினார். சீகன் பால்க் மொழியாக்கம் இவருக்கு பேருதவியாக இருந்தது, அதிலுள்ள பிழைகளை நீக்கினார். இந்த வேதாகமம் தரமான, பிழைகள் இல்லாமல் உருவாக்கப்பட்ட ஒன்றாகக் கருதப்படுகிறது.

இதற்காக பிராமணர்கள், சூத்திரர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் யாவரையும் கூடச் செய்து தான் மொழிபெயர்த்த பகுதியை உபதேசியார் மூலம் வாசித்துக் காட்டச் சொல்லுவார். அவர்களுக்கு விளங்காதது ஏதாவது இருந்தால் அதைத் திருத்தி, நல்ல ஒரு மொழிபெயர்ப்பை உருவாக்கினார். இதைக் கடைசியாக அவருடன் நருக்கமாய்யிருந்த தரங்கம்பாடியிலுள்ள சீகிலின் ஐயருக்கும், தானியேல் என்பவருக்கும் அனுப்பி பரிசீலிக்கச் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *