திருநெல்வேலி, தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள 10,000 பிராட்டஸ்டண்டு கிறிஸ்தவமக்களிடையே முழு வேதாகமத்தை உடையவர்கள் ஒருவரும் இல்லை, நூற்றுக்கு ஒருவர் கூட ஓரு புதிய ஏற்பாட்டை உடையவராக இல்லாதிருந்தார்கள்.
1804ல் மார்ச் 7ம் தேதி இங்கிலாந்தில் பிரிட்டானியா சர்வதேச வேதாகம சங்கம் உருவாயிற்று. இது போன்ற சங்கங்கள் பல்வேறு நாடுகளிலும் தோன்ற ஆரம்பித்தன. ஆனால் பிரிட்டானியா சர்வதேச வேதாகம சங்கமே பிறநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்க ஆரவம் கொண்டு இந்த முயற்சியில் ஈடுபட்டது.
1811ல் இதன் முதல் கிளை நம்நாட்டில் கல்கத்தாவில் நிறுவப்பட்டது. பின்பு இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் கிளைகள் நிறுவப்பட்டன. 1820ல் சென்னையில் ஒரு கிளை நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.