19ம் நூற்றாண்டில் உண்டான ஒரு பெரிய மாற்றம்:
ஆரம்ப நாட்களில் வேத மொழிபெயர்ப்புகள் தனிப்பட்டவர்களின் முயற்சியினாலோ அல்லது அரசர்கள், அதிகாரிகளின் முயற்சியினாலோ நடைபெற்றன.
உதாரணமாக போப்பின் கட்டளையினால் கி.பி 4ம் நூற்றாண்டில் ஜெரோம் மொழிபெயரப்பு செய்யப்பட்டது. கி.பி 1611ல் முதலாம் ஜேம்ஸ் அரசனின் கட்டளைப்படி ஆங்கிலத்திலும் 1759ல் டச்சு நாட்டைச் சேர்ந்த கிழக்கிந்திய கம்பெனி அரசினருடைய முயற்சியில் புதிய ஏற்பாடு மொழி பெயர்க்கப்பட்டது. டின்டேல், கவரடேல் ஆங்கிலத்திலும், மார்டின் லுத்தர ஜெர்மனியிலும், சீகன்பால்க் பப்ரிஷியஸ் தமிழிலும் மொழி பெயாத்தனர்.
இங்கிலாந்தில் 19ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் வெளி நாடுகளில் உள்ள கிறிஸ்தவ ஊழயங்களின் வளர்ச்சியைக் குறித்து அதிக தாகம்மிருந்தது. 1806ஆம் ஆண்டில் தமிழ் தேசத்தைச் சுற்றி பார்த்த டாக்டர். புச்சண்ணன் என்பவர் இத்தேசத்திலே வேதாகமத்திற்கு அதிக வேட்கை இருந்ததாகக் குறிப்பிட்டார்.
தமிழ்தேசமக்களும் நாங்கள் உணவையோ பணத்தையோ உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை, எங்களுக்கு தேவனுடைய வார்த்தையே தேவை என்று அவரிடம் கூக்குரலிட்டனர்.