
சந்நியாசி ஐயர்ராகிய இவர், ஜெருமனி நாட்டில் பிராங்க்ஃபுர்ட்டில் கிலீபெர்க் என்ற ஊரில் பிறந்த இவர் யூறா, ஹாலே பல்கலைக்கழகங்களில் பயின்று 1739, அக்டோபர் 28ல் கிறித்துவ மத போதகர்களுக்கான குரு பட்டம் பெற்றார்.
அதன் பிறகு இந்தியாவில் கிறித்தவ சமயத்தை வளர்க்கும் நோக்கத்துடன் அங்கிருந்து இந்தியாவிற்கு வந்து சேர்ந்தார். இவர் இந்தியாவுக்கு வருவதற்கு முன்னரே தமிழில் தொடர்ந்து மூன்று மணி நேரம் சொற்பொழிவு ஆற்றவும், எழுதவும் படிக்கவும் தெரிந்தவராவார்.