யார் பாக்கியவான்?| Pastor B. E. Samuel | APA Church

            கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு நாம் தியானிக்க போகிற வேத வசனம் சங்கீதம் 65: 4. யார் பாக்கியவான் என்ற தலைப்பில் செய்தியை பார்க்கலாம்.

பாக்கியவான் என்றால் என்ன? பாக்கியவான் என்றால் பொதுவாக அவனுக்கு என்ன அவன் கொடுத்து வச்சவன், அவனுக்கு எந்தக் குறைவும் இல்லை, அவனுக்கு தேவையானதை அனைத்தும் கடவுள் கொடுக்கிறார் அதனால் அவன் கொடுத்து வச்சவன் (பாக்கியவான்.)

யார் பாக்கியவான்?

உம்முடைய பிராகாரங்களில் வாசமாயிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்; உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்.

(சங்கீதம் 65:4)

வேதம் தெளிவாக சொல்லுகிறது அவருடைய பிரகாரங்களில் வாசமாய் இருக்கும்படி அவர் தெரிந்து கொண்டு சேர்த்துக் கொள்கிறவன் தான் பாக்கியவான். இன்று நாம் அனேக பேரை பார்த்து சொல்கிறோம் அவர்கள் பாக்கியவான்கள் அதிக பணம் ஐஸ்வர்யம் உள்ளவர்கள் பாக்கியவான்கள் என்று ஆனால் அப்படியல்ல யார் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருக்கிறாரோ. யார் அவருடைய ஆலயத்திலே வாசமாய் இருக்கிறார்களோ, தேவனுடைய ஆலயத்தில் வந்து துதிக்கும் படி, தேவனுடைய ஆலயத்தில் ஆராதனை செய்யும்படி தேவன் தெரிந்து கொண்டு சேர்த்துக் கொண்டாரோ அவர்கள் தான் பாக்கியவான்கள்.

நானாக ஆலயத்துக்கு வந்தேன் என்று சொன்னாள் அதை நம்பவே முடியாது அவ்வளவு நல்லவர்கள் இல்லை எத்தனை ஓட்டம் எத்தனை ஆட்டம் இயேசுவைத் தேட சாதாரணமாக வரவில்லை அவர் தெரிந்து கொண்டார் அவர் அழைத்தார் அவர் சேர்த்துக்கொண்டார்.

ரோமர் 8:29 இப்படி சொல்லுகிறது

தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன் குறித்திருக்கிறார்;

நீங்கள் எதாச்சுமாகவோ தற்செயலாகவோ வந்தவர்கள் இல்லை நீங்கள் ஆதியிலே முன் குறிக்கப் பட்டவர்கள் தாயின் கர்ப்பத்திலே உருவாவதற்கு முன்னமே முன் குறித்தவர் அதனால்தான் இன்று நீ இரட்சிக்கப்பட்டு இருக்கிறாய்.

ரோமர் 8:30 ல் படிக்கிறோம்

எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.

அருமையான தேவ பிள்ளைகளே தேவன் முன் குறிக்கிறார், தேவன் தெரிந்து கொண்டார், தேவன் பரிசுத்தப்படுத்துகிறார், தேவனே உன்னை அழைக்கிறார். அவர்தான் உன்னை நடத்திக் கொண்டு வருகிறார். இங்கே உன்னுடைய செயல்பாடு என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை. நீங்களாக வரவில்லை அவர்தான் உன்னை அழைத்து வந்திருக்கிறார் அதனால்தான் நீ பாக்கியவான். நீ ஆண்டவரை விட்டு ஓட நினைத்தாலும் ஓடமுடியாது உண்மையாய் தேவன் அழைத்தவர்களை ஓடினாலும் விடமாட்டார் தேடி வந்து கண்டுபிடித்து உன்னை சேர்த்துக் கொள்வார்.

சிலபேருக்கு சபைக்கு வர வேண்டும் என்று சொன்னால் அலட்சியம் காட்டுவார்கள் அவர்கள் பாக்கியவான்கள் அல்ல அவர்களை தேவன் தெரிந்து கொள்ளவும் இல்லை இதை அனைத்தும் நான் சொல்லவில்லை வேதம் சொல்லுகிறது அவர் யாரை தெரிந்துகொண்டு சேர்த்துக் கொள்கிறாரோ அவர்கள் தான் பாக்கியவான்.

இப்பொழுது நீங்கள் சொல்லுங்கள் யார் பாக்கியவான்?

அவருடைய பிரகாரத்தில் இருப்பவன்

தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவன்

தேவனால் சேர்த்துக்கொள்ளப்பட்டவன்

இவர்கள்தான் பாக்கியவான் நீங்கள் பாக்கியவான்கள். ஏனென்றால், அவருடைய பிரகாரத்தில் இருக்கிறீர்கள் அவர் உங்களை தெரிந்து கொண்டார் அவர் உங்களை சேர்த்துக் கொண்டிருக்கிறார் அதனால் நீங்கள் பாக்கியவான்கள்.

இஸ்ரவேலே நீ பாக்கியவான்:

இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவNர் உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய், என்று சொன்னான்.

(உபாகமம் 33:29)

இஸ்ரவேலர் யார்?

கர்த்தரால் பிரித்தெடுக்கப்பட்டவர்கள், தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் தான் இஸ்ரவேலர். வசனம் தெளிவாக சொல்லுகிறது கர்த்தரால் பிரித்தெடுக்கப் பட்டவர்கள் இஸ்ரவேலர் என்று.

கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனமே உனக்கு ஒப்பானவன் யார் ? அப்படி என்ன நீங்க விசேஷித்தமானவர்களா ? ஆம்,  நாம் விசேஷித்தமானவர்கள்தான் ஏன் தெரியுமா கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனமாக இருக்கிறோமே அதனால் தான் உனக்கு ஒப்பானவன் யார் என்று கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் யாரை பார்க்கிறீர்கள் என்றால் பெரிய ஐசுவரியவானை பார்த்து ஒப்பிட்டு கொண்டிருக்கிறீர்கள். உலகத்தில் இருக்கிற அனைவருக்கும் முடிவு உண்டு ஆனால் நீங்க மரித்தால் எங்கு போகிறீர்கள் அவர்கள் மரித்தால் எங்கு போவார்கள் அதுதான் முக்கியம். கிறிஸ்துவுக்குள் மரிக்கிறவர்கள் அவர்கள் திரும்ப உயிரோடு எழுந்திருப்பார்கள். கிறிஸ்துவுக்குள் இல்லாமல் மரிக்கிறவர்கள் மீண்டும் உயிர் அடைவதில்லை ஆகையால் அருமையான தேவனுடைய பிள்ளைகளே நீ பாக்கியவான் கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனமே உனக்கு ஒப்பானவன் ஒருவனும் இல்லை.

உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவNர்

உங்களுக்கு சகாயம் வர வேண்டும் என்றாலும் அவர்தான் உங்களை எதிர்த்தவர்களை சங்கரிபதற்கும் அவர் தான் வரவேண்டும் ஏனென்றால் உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகம் அவர்தான் மகிமை பொருந்திய பட்டயமும் அவர்தான் நீங்கள் இஸ்ரவேலராக மாறினால் ஃ மாறியிருந்தால் நீங்கள் பாக்கியவான்கள்.

தேவன் தண்டிக்கிற மனுஷன்:

இதோ, தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான்; ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும்.

(யோபு 5:17)

தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான். – அப்படி என்றால் நாம் தவறு செய்யலாம் என்று அர்த்தமாம் இல்லை உதாரணத்துக்கு யோபுவின் சரித்திரத்தை பார்ப்போம் இவர் மிகுந்த ஐஸ்வரியம் உள்ளவர் இவருக்கு 7000 ஆடு, 3000 ஒட்டகம், 500 ஏர் மாடு மற்றும் 500 கழுதைகள் அனேக வேலைக்காரர்கள் 10 பிள்ளைகள் நல்ல ஆஸ்தி நல்ல வீடு அவருடைய வாழ்க்கையில் குறைவு என்பதே இல்லை.  இப்படிப்பட்ட மனுஷன்தான் பாக்கியவான். யோபின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் 7000 மாடு 3000 ஒட்டகம் 500 ஏர் மாடு மற்றும் 500 கழுதைகள் வேலைக்காரர்கள் மற்றும் பத்து பிள்ளைகள் ஒரே நேரத்தில் போய்விட்டது யோபு நம்பிக்கை இழக்காமல் கர்த்தர் கொடுத்தார் கர்த்தர் எடுத்துக்கொண்டார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னார்.

யோபு முதல் அதிகாரத்தில் இவரைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது அவன் உத்தமனும், சன்மார்க்கனும், தேவனுக்கு பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனாகிய இவனைப் போல ஒருவனும் இல்லை என்று தேவனே சாட்சி கூறுகிறார். அடுத்த அதிகாரத்தில் இவர் தண்டிக்கப் படுகிறார். மீண்டும் சத்துரு தேவனிடம் போகிறான் தேவன் கேட்கிறார் யோபு மறுதலித்தானா என்றார் சத்ரு பிரதியுத்தரமாக அவனுக்கு உயிரையும் நல்ல உடல் தேகத்தையும் கொடுத்திருக்கிறீர் அதனால் உம்மை அவன் உம்மை மறுதலிக்கவில்லை அதற்கு தேவன் அவன் சரீரதத்தை தொட்டாலும் அவன் மறுதலிக்க மாட்டான் என்று சொன்னார். சத்துரு யோபுக்கு உடலிலே வியாதியை கொடுக்கிறார் உடல்முழுவதும் பருக்களால் பாதிப்படைகிறார் ஓடு போட்டு தன் உடலை தேய்த்துக் கொண்டிருக்கிறார், சாம்பலில் உட்காருகிறார், அவரின் மனைவியும் இன்னும் உத்தமத்தில் நிக்க போகிறாயா? ஆண்டவரை நிந்தித்து ஜீவனை விடும் என்று  அவரை பார்த்து நிந்திக்கிறால். அதற்கு யோபு பைத்தியக்காரி பேசுகிறது போல் பேசுகிறாயே தேவனால் நன்மையை பெற்ற நாம் தீமை பெற வேண்டாமா? என்று சொல்லி தேவனுக்காக வைராக்கியமாக இருந்தான்.  இதுதான் உண்மையான தண்டனை. சிலர் நினைக்கிறார்கள் தவறு செய்வார்களாம் அதற்கு ஒரு தண்டனை கிடைக்குமாம் அதுதான் தேவன் தண்டிக்கும் மனுஷன் பாக்கியவான் என்று. யோபு போல உத்தமனும் சன்மார்க்கமும் தேவனுக்கு பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனும் ஆகிய யோபுவை போல ஒருவன் இவனே தேவன் தண்டிக்கிற மனுஷன் இவன் தான் அந்த   பாக்கியவான். எந்தத் தவறும் என் வாழ்க்கையில் இல்லை ஆனால் தண்டனை கிடைத்தது ஏனென்றால் என் வாழ்க்கையில் நான் இழந்ததை இரட்டத்தானையாக கொடுக்க தேவன் வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.

தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்:

கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

(சங்கீதம் 1:2)

இன்று அநேகம் பேர் வேதாகமத்தை வாசிக்கிறார்கள் அதுதான் இல்லை ஆனால் அனேகர் வேதத்தை பிரியமாய் வசிக்கிறார்களா? இல்லவே இல்லை கடமைக்காகவும் வேதாகமத்திலுள்ள அதிகாரத்தை சீக்கிரம் படித்து முடிப்பதற்காகவும் படிக்கிறார்கள். அல்லது போதகர் சொன்னார் என்று சிலர் படிக்கிறார்கள் இவர்கள் பாக்கியவான் அல்ல கர்த்தருடைய வேதத்தில் பிரியமாய் இருந்து இரவும் பகலும் தியானிக்கிர மனுஷன் தான் பாக்கியவான். வேதத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்குள் வரவேண்டும் கட்டாயத்திற்காக அல்லது வீம்புக்காக படிப்பதற்கு அல்ல பிரியமாய் வேதத்தை வாசிக்க வேண்டும். சிலர் குடும்ப ஜெபத்தில் மட்டும் வேதாகமத்தை படிப்பார்கள் பிறகு வேதாகமத்தை திறந்து கூட பார்க்க மாட்டார்கள் சிலர் தூக்கம் வரவில்லை என்று வேதத்தை படிப்பார்கள் அது அல்ல கர்த்தருக்கு பிரியம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பிரியமாய் வேதத்தைப் படித்து தியானம் செய்ய வேண்டும். வேதத்தைப் பிரியம் இல்லாமல் படிப்பது உபயோகமற்றது நீங்கள் வேதத்தை பிரியமாய் வாசித்தால் புதிய மனுஷனாக இருப்பீர்கள், உங்களுடைய பேச்சு வேற மாதிரி இருக்கும், உங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கை புதிதாய் இருக்கும், உங்களுடைய செயல்கள் புதிதாய் இருக்கும் இருக்கும் விசேஷித்த ஞானத்தை கர்த்தர் உங்களுக்கு அருள்வார்.

அதற்கு நீங்கள் கர்த்தருடைய வேதத்தில் பிரியமாய் இருக்க வேண்டும்

இரவும் பகலும் அவரது வேதத்தை தியானம் செய்ய வேண்டும். அப்பொழுது நீங்கள் பாக்கியவான்கள் இருப்பீர்கள்

எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான். (சங்கீதம் 32:1)

நான் இங்கு நிற்கவே தகுதியில்லாத நபர் பவுல் சொல்லும்போது பாவியில் பிரதான பாவி நான் என்று நான் வெளிப்படையாக எந்த பாவம் செய்யவில்லை என்றாலும் சிந்தனையில் பாவத்தை கர்ப்பம் தரித்துள்ளேன். வேதம் சொல்லுகிறது ஒரு பெண்ணை இச்சையோடு பார்க்கிற எவனும் அவளோடு விபச்சாரம் செய்தாயிற்று என்று அப்படி என்றால் நான் இருதயத்திலே சிந்தனையிலே அப்படிப்பட்ட நினைவுகளை கொண்டிருந்தேனே அது பாவமா? இல்லையா? பாவம்தான் ஆனால் தேவன் என் பாவங்களை மன்னித்தார் என் பாவங்களை மூடினார் நான் பாக்கியவானாக மாற்றப்பட்டேன்.

நம்முடைய பாவங்களை மன்னிக்கவும் ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் இயேசு மட்டும் தான். நாம் தேவனால் மன்னிக்கப்பட்டு இருக்கிறோம் தேவனால் நம்முடைய பாவங்கள் மூடப்பட்டிருக்கிறது வேதம் அழகாய் சொல்லுகிறது பாவத்தை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான் அதை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் என்று. ஆகவே தேவனுடைய பிள்ளைகளே எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ எவனுடைய பாவம் மூடப்பட்டதோ அவன் தான் பாக்கியவான். உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு இருந்தால் உங்களுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டு இருந்தால் நீங்கள் தான் பாக்கியவான். ஆமென்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வெருவரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *