யார் இவர்கள்?

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தினாலே இம்மாதஇதழின் மூலமாய் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கும் தியானிக்க போகின்ற வேதப்பகுதி வெள்ளை அங்கி தரித்திருக்கிற இவர்கள் யார்

வெளிப்படுத்தின விஷேசம் 7:9-17வரை

வேத வசனங்களை தியானிக்கும் படியாக கடந்து போகலாம் கடந்த இரண்டு மாதங்களாக நான் உங்களோடு எழுதும் போது உங்களைப் பற்றி எழுதிக்கொண்டிருந்தேன் நன்றாய் கவனித்தீர்களானால் தெரியும் வாழ்க்கையில் கஷ்டங்கள் தோல்விகள் பாடுகள் அவமானம்  நிந்தைகள் வரும். ஆனால், குறைவுகளை நிறைவாக்குபவர் உங்களோடு இருந்தால் உங்கள் குறைவிலிருந்து நிறைவாக்கபடுவீர்கள் என்றும் குறையுள்ள மனுஷன் எப்படி நிறைவான மனுஷனாய் மாறமுடியும் என்றும் உங்களுக்கு எழுதினேன் கடந்த மாதத்தில் நான் எழுதின காரியங்கள் என்னவென்றால் நீங்கள் தூக்கி எறிய வேண்டிய காரியங்களை தூக்கி எறிந்து தேட வேண்டிய விதத்தில் தேடினால் அவர் உங்களோடு கூட எப்பொழுதும் இருப்பார் என்று தியானித்தோம்.

இந்த மாதத்தில் கூட உங்களைப் பற்றிதான் எழுதப் போகிறேன். ஏன் ஆண்டவரைப் பற்றி எழுதாமல் எங்களைப் பற்றி எழுதுகிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம்? ஆண்டவர் என்ன எழுத சொல்கிறாரோ அதை எழுதுவதுதான் என்னுடைய வேலை மற்றும் என்னுடைய கடமை இப்பொழுது வேதத்தை வாசிப்போம் தேவனுடைய வார்த்தையை நாம் வாசிக்கும்போது எக்காள சத்தத்தை போல உன் சத்தத்தை உயர்த்து என்று வேதத்தில் சொல்லியிருக்கிறபடி சத்தமாய் அதை வாசிக்க வேண்டும் 

இப்பொழுது நாம் வாசித்த வேத வசனங்களைதான் நாம் தியானிக்க போகிறோம் என்னவென்றால் வெள்ளை அங்கி தரித்திருக்கிற இவர்கள் யார் எங்கிருந்து வந்தவர்கள் இதைத்தான் நாம் இன்று தியானிக்க போகிறோம் வெளிப்படுத்தல் 7:1-8  

ஒவ்வொரு கோத்திரத்திலும் பன்னீராயிரம்பேர் இருந்தனர் இந்த பன்னீராயிரம் பேர் முத்திரை போடபட்டார்கள் என்று எழுதியிருக்கிறது மொத்தம் 12 கோத்திரங்கள் அதில் ஒவ்வொரு கோத்திரத்திலும் 12 ஆயிரம் பேருக்கு முத்திரைபோட்டார்கள், 

வெளிப்படுத்தின விசேஷம் 7:13-14

13. அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான். 

14. அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள். இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள். 

அங்கே எல்லோரும் ஒரு பெரிய திரள் கூட்டமாய் வெள்ளை அங்கி தரித்து காணப்பட்டார்கள் அப்போழுது மூப்பர்களில் ஒருவன்ஆண்டவரை பார்த்து ஆண்டவரே வெள்ளை அங்கியை தரித்தவர்களாகிய இவர்கள் யார் என்று  கேட்கிறான் பொதுவாக வெள்ளை உடை என்றாலே உலகம்  என்ன சொல்லும் அது விதவை கோலம்  ஒரு கணவனை இழந்த ஒரு பெண் தரித்துக் கொள்ளும் உடையாக அது காணப்படுகிறது  ஆனால் வேதத்தின்படி அவர்கள் விதவைகள் அல்ல தேவனுடைய இரத்தத்தினாலே தங்கள் வஸ்திரத்தை தோய்த்தவர்கள் அவர்கள் விதவைகளல்ல கைவிடப்பட்டவர்களுமல்ல நிற்கதியானவர்களுமல்ல அவர்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே தங்கள் அங்கியை தோய்த்து வெளுத்தவர்கள் ஆகையால்தான் அவர்கள் அங்கி வெண்மையாக மாறியிருக்கிறது என்று வேதத்தில் பார்க்கிறோம் 

இவர்களிலே நாம் பார்க்கப்போகிற சிலவிசேஷங்கள் என்னவென்றால் அநேக நேரங்களில் நம்மைப் பற்றி நாமே தெரிந்துகொள்வதில்லை நம்மைப்பற்றி நமக்கே கவலையும் அக்கறையும் இருப்பதில்லை ஏதோ பிறந்தோம் வாழ்ந்தோம். ஒருநாள் சாகப்போகிறோம் அவ்வளவுதான்  ஏதோவொரு வாழ்க்கை வாழ்ந்து முடிப்போம் என்று எண்ணி கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு விஷயம் எப்பொழுதும் கவனத்தில் இருக்கவேண்டும் வாழப்போகிற வாழ்க்கை ஒரேவொரு வாழ்க்கை அது பிரயோஜனமுள்ள வாழ்க்கையாக வாழவேண்டும், பிரயோஜனம் என்று பார்த்தால் நம்மால் ஏதாவது ஒரு பொருளை கண்டுபிடித்தோ அதை உற்பத்திசெய்தோ ஆராய்ச்சி செய்து சாதித்தால்கூட நாம் இந்த பூமியை விட்டு போன உடனே கொஞ்ச நாட்கள்தான் அந்த பேர் நிலைநிற்கும் அதுபோல நீங்கள் ஆண்டவரின் காரியத்தில் பக்திவைராக்கியம் காண்பித்து நிலைத்திருந்தால் ஆண்டவர் உங்களை பயன்படுத்துவார் வரங்களினாலே கனிகளினாலே நிரப்பி உங்களை பயன்படுத்துவார், 

ஒருவேளை நாம் மரித்தபிறகும் அந்த வரங்களும் கனிகளும் தொடர்ந்து பேசப்படும் உதாரணமாக வேதத்தில் 12 அப்போஸ்தலர்கள் குறித்து இன்றயவரைக்கும் சபையில் பேசிக் கொண்டிருக்கிறோம். காரணம் என்னவென்றால், அவர்களுக்குள் செயல்பட்ட வரங்களும் கனிகளுமே  அதைப்போலவே இந்த உலகத்தில் நாம் ஏதாவது ஒன்றை சாதிக்க கூடியவர்களாக மாறவேண்டும். அதுதான் தேவன் உங்களிடத்தில் எதிர்பார்க்கிற மிகமுக்கியமான விஷயம் ஏதோ பிறந்தோம் வாழ்ந்தோம் மரித்துப்போனோம் என்று இல்லாமல் பிறந்தோம் வாழ்ந்தோம் வாழும் காலத்தில் ஒன்றை சாதித்தோம் என்று இருக்க வேண்டும் ஒரு உதாரணத்தை உங்களுக்கு கூறவிரும்புகிறேன்.

நன்றாக கவனியுங்கள் இங்கிலாந்து தேசத்திலிருந்து சீகன்பால்கு என்கிற ஊழியர் ஊழியத்திற்கு நம் தேசத்திற்கு தனது 20 வயதில் வந்தார் அவர் இந்தியாவிற்க்கு படகு மார்க்கமாய் வந்தார் ஏறக்குறைய 400 வருஷத்திற்கு முன்பு நடந்த ஒரு உண்மை சம்பவம் அவரை கடல் மார்க்கமாய் வந்து கரையேறும்போது தமிழ்நாட்டில் தரங்கம்பாடியில் வந்து தரை இறங்கினார் அவரைப் பார்த்த உடனே தமிழ் மக்கள் எல்லோரும் பயந்து ஓட ஆரம்பித்தனர் ஏனென்றால் தமிழக மக்கள் அந்த காலத்தில் அடிமைகளாக இருந்தார்கள் தன்னுடைய அறைக்கு மட்டும் ஒரு ஆடையைக் கட்டிக்கொண்டு கல்வியறிவு இல்லாதவர்களாக நாகரீகம் இல்லாதவர்களாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள் அப்பொழுது இவரை பார்த்தவுடனே வெள்ளை நிறமாக நல்லஉடை அணிந்து வந்து கரைஇறங்கின உடனே ஏதோ தேவதூதர் வந்து இறங்கிவிட்டார் என்று பார்த்து ஓடிவிட்டார்கள் அதன் பிறகு யாருமே இவரிடத்தில் பழகவில்லை பேசவில்லை இதைப்பார்த்த சீகன்பால்கு தமிழக மக்களைப் போலவே தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று விரும்பி இங்கிலாந்து உடைகளை மாற்றி தமிழ்நாட்டின் உடைகளை அணிந்து தமிழ் கலாச்சாரத்திற்கு உடன்பட்டு செயல்பட ஆரம்பித்தார் அப்பொழுது நம் ஜனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவரிடம் நெருங்கி வர ஆரம்பித்தார்கள் இவர் பேசுகிற மொழி ஆங்கிலம் நம் ஜனங்கள் பேசுவது தமிழ் இவர்கள் இருவருக்கும் மொழிப்பிரச்சினை வந்துவிட்டது இவர் என்ன பேசுகிறார் என்று அவர்களுக்கு புரியவில்லை ஜனங்கள் என்ன பேசுகிறார்கள் என்று இவருக்கு புரியவில்லை இப்படிப் புரியாத பட்சத்தில் அவர் என்ன செய்தார் என்று தெரியுமா

நீங்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லாமல் அவரே தமிழ் வார்த்தைகளை கற்றுக்கொள்ள ஆரம்பித்தார் தமிழைக் கற்றுக்கொண்டு தமிழில் இவர்களோடு பேச ஆரம்பித்தார் அதோடு நிறுத்திக்கொள்ளாமல் தமிழில் பேசினால் மட்டும் போதாது நம்முடைய வேதத்தையும் இந்த மொழியில் கொண்டு வரவேண்டும் என்று முதன் முறையாக வேதாகமத்தை தமிழில் மொழி பெயர்த்தார், இந்தியாவிலேயே முதன்முறையாக அச்சுஇயந்திரத்தை தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்து தமிழ் வேதாகமத்தில் புதியஏற்பாட்டை தான் முதன்முதலில் அச்சடிக்கப்பட்டது காலம் அதன் பிறகு அநேககாலம் ஊழியம் செய்து கடந்து போனார்  சீகன்பால்கு  கடந்துபோனபிறகும் சுமார் 400 ஆண்டுகளாகியும் இன்றும் நாம் அவரை நினைவு கூறுகிறோம் என்று சொன்னால் அவர் செய்த அவர் பெற்ற அபிஷேகமும் கனிகளும் வரங்களும் தான்,  அவருடைய நினைவிடம் இன்றும் தரங்கம்பாடியில் உள்ளது இன்றைக்கு நாம் அவரைப்பற்றி பேசுவதற்கான காரணம் என்ன நானூரு வருஷம் போய்விட்டது ஆனால் அதை நிறைவேற்றின அவர் சாதித்த அந்த ஒரு சாதனை இன்றும் நம்மால் மறக்க முடியவில்லை நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் உன்னுடைய வாழ்விலும் ஏதோ வாழ்ந்தோம் ஏதோ ஜெபித்தோம் இதெல்லாம் ஒன்றும் கிடையாது எல்லாம் மறைந்து போய்விடும் என்று நாம் நினைக்கக் கூடாது உதாரணத்திற்கு மற்றொரு சம்பவத்தை சொல்கிறேன்.

ஒரு தேசத்திற்கு பயணம் செய்ய வேண்டுமென்று ஒரு சிறுவன் பயண சீட்டு வாங்கிக்கொண்டு கப்பலில் ஏறினான் அவன் தனக்கு வேண்டிய ஆகாரத்தையும் தின்பண்டங்களையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டான் அந்நாட்களில் கப்பல் பயணம் என்றால் ஒரே நாளில் மற்ற தேசத்திற்கு போக முடியாது இப்பொழுதுதான் விமானத்தில் எங்கேயும் எப்போதும் சில மணி நேரங்களில் பயணித்து விடலாம் அந்நாட்களில் கப்பலில் பயணம் செய்வோர் பல நாட்களாய் கப்பலில் சென்று மாதக்கணக்கில் பயணம் செய்ய வேண்டும் அந்த சிறுவன் சென்றுகொண்டிருந்த கப்பலில் அவன் கொண்டு சென்ற ஆகாரமும் தின்பண்டங்களும் மூன்றாவது நாளிலேயே கெட்டுப் போய்விட்டது சாப்பிடவும் முடியவில்லை தின்பண்டங்கள் தின்னவும் முடியவில்லை பசி எடுத்துக்கொண்டது.

கடலில் குதித்து விடலாமா பசிக்கு நான் என்ன செய்வது இன்னும் பிரயாணம் எத்தனை நாட்கள் ஆகும் என்று தெரியவில்லையே என்று பலவிதமான சோதனையும் வேதனையும் அவனை நெருங்கியது வயிற்றைப் பிடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தான் அந்த கப்பலில் விசாரிக்கிறவர் ஒருவர் இருப்பார் அவர் ஒவ்வொரு அறைகளிலும் சென்று உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்று கேட்பார் சிறுவன் இருந்த அறையில் விசாரிக்கிறவர் சென்று கதவை தட்டினார் அப்போது அந்த சிறுவன் கதவை திறந்தான் விசாரிக்கிறவர் வந்து என்ன தம்பி ஏன் தனியாக இருக்கிறாய் ஏன் அழுகிறாய் என்று விசாரித்தார் அதற்கு அவன் ஐயா நான் வரும்போது சாப்பாடும்  தின்பண்டமும் எனக்கு எடுத்துக்கொண்டு வந்தேன் ஆனால் இப்பொழுது மூன்று நாட்கள் ஆகிவிட்டது எல்லாம் கெட்டுப் போயிற்று இப்பொழுது எனக்கு சாப்பிடுவதற்கு ஒன்றுமில்லை கப்பல் போய் சேர எத்தனை நாள் ஆகும் என்று தெரியவில்லை நான் என்ன சாப்பிடுவேன் என்று தெரியவில்லை என்ன செய்வதென்று எனக்கு தெரியவில்லை என்று அந்த சிறுவன் சொன்னான் விசாரிக்கிறவர் கேட்டார் தம்பி நீ பயணசீட்டு வாங்கினாயா என்று கேட்டார்.

உடனே அந்த சிறுவன் வாங்கின பயணசீட்டை அவரிடத்தில் காண்பித்தான் அவர் அந்த பயணசீட்டை பார்த்துவிட்டு பின்பக்கம் திரும்பி பார்த்தால் கப்பலின் பயண நாட்கள் முழுவதிற்க்கும் வேண்டிய ஆகாரம் தின்பண்டங்கள் மற்ற எல்லா வசதிகளும் அனுபவிக்க அதிகாரம் உண்டு என்று எழுதப்பட்டிருந்தது அப்பொழுது அவர் சொன்னார் உனக்கு கப்பல் பயணம் முடியும்வரை எல்லா வசதியும் இந்த கப்பலில் உண்டு நீ ஏன் இதை பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று சொல்லி அவனுக்கு வேண்டிய எல்லாவற்றையும் வழங்க ஏற்பாடு செய்தார் அதேபோல தான் இன்றைக்கும் நாம் அனைவரும் பூமிக்குரிய வாழ்க்கை என்னும் கப்பலில் ஏறி பயணம் செய்து கொண்டிருக்கிறோம் பசியோடு வயிற்று வலியோடு தலைவலி நெஞ்சுவலி கால்வலி என்று பலவித வலிகளோடு சுருண்டு போய் ஓரிடத்தில் உட்கார்ந்து இருக்கிறோம்.

ஏன் தெரியுமா நாம் இன்னும் நம்முடைய பயணச்சீட்டை அறியவில்லை நாம் பயண சீட்டில் எழுதியிருக்கிறதை இன்னும் வாசிக்கவில்லை காரணம் எல்லாவற்றிக்கும் வேண்டிய ஆசீர்வாதங்களும் விடுதலையும் ஜெயமும் நமக்கு இலவசமாக ஆண்டவர் வைத்திருக்கிறார் அந்த சிறுவனைப்போலவே இன்றைக்கும் நம்முடைய வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அருமையான தேவபிள்ளைகளே கர்த்தர் உங்களை குறித்து ஒரு திட்டம் வைத்திருக்கிறார் அதை நீங்கள் அறிந்து கொள்ளவில்லை ஆகையால்தான் இன்னும் கஷ்டத்திலும் நெருக்கத்திலும் இருக்கிறீர்கள் ஆனால் நஷ்டமும் கஷ்டமும் உங்கள் வாழ்க்கை இல்லவே இல்லை என்று சொல்லமுடியாது சில உபத்திரவத்தின் மூலமாய் தேவன் உங்களுடனே பேசுவார் சிலரிடத்தில் கனவு வழியாய் பேசுவார் சிலரிடத்தில் தரிசனம் மூலமாய் சொப்பனமாய் பேசுவார் அதை எல்லாம் நாம் கண்டுகொள்வதேயில்லை நல்ல குறட்டை விட்டு தூங்குவோம் தேவன் பேசுகிறார் அதைப்பற்றிய கவலை கொஞ்சமும் இல்லை அவர் பேசினால் பேசட்டும் எனக்கு என்ன வந்தது அப்படி நாம் தூங்கிக்கொண்டிருப்போம் ஜெபம் பண்ணவேண்டும் அவரை தரிசிக்க வேண்டும் அவரை பார்க்கவேண்டும் என்று ஒரு கவலையே இல்லை என்னவென்றால் ஏதோ ஒரு வாழ்க்கை வாழ்ந்துவிட்டு போகலாம் என்றிருக்கிறோம்.

அருமையான தேவபிள்ளைகளே இந்த பரலோக கப்பல் யாத்திரையில் உங்கள் பயணத்தில் உங்களுக்கு இருக்கிற சகல ஆசீர்வாதமும் சகல நன்மையும் உங்களுக்கு கட்டாயம் உண்டு உங்களுக்கு என்னென்ன ஆசீர்வாதங்கள் எழுதி இருக்கிறதோ அதையெல்லாம் நீங்கள் கேட்கலாம் ஆண்டவரே எனக்கு இந்த ஆசீர்வாதம் கொடுப்பேன் என்று எழுதி இருக்கிறீரே ஏன் இன்னும் கொடுக்கவில்லை என்று நிச்சயமாய் கேட்கலாம்  ஆண்டவரே  இதுவரைக்கும் ஏன் செய்யவில்லை இதுவரைக்கும் ஏன் கொடுக்கவில்லை எப்பொழுது கிடைக்கும் என்று கேட்கலாம் நம்முடைய நினைவுகள் எல்லாம் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே உள்ளது  குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது என்று ஒரு பழமொழி சொல்வார்கள் சட்டி தட்டையாக இருக்காது கொஞ்சம் குழியாக இருக்கும் அதில் மனுஷன் உட்கார்ந்தால் சட்டியில் குதிரை ஓட்டுவது போல் தான் இருக்கும் அதேமாதிரியே அனேகர் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் உங்கள் வாழ்க்கை குண்டு சட்டிக்குள் இல்லை அதைவிட மேலான ஸ்தானத்தில் உள்ளது உங்கள் வாழ்க்கை அதை  பார்த்து தான் ஓட வேண்டும் அதை தான் கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கிறார்   

வெளிப்படுத்தல் 7:9-10 வசனங்கள் வாசிப்போம்.

9. இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன். 

10. அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள். 

ஒரு சம்பவத்தை சொல்லி கடந்து போகிறேன் 85 வயதுள்ள ஒரு பெரிய அறிஞர் ஒருநாள் மருத்துவருக்கு போன் செய்து டாக்டர் இன்று காலை முதல் என்னால் எழுந்திருக்க முடியவில்லை படுத்த படுக்கையில் இருக்கிறேன் நீங்கள் சீக்கிரமாய் வந்து என்னைப் பார்க்கவேண்டும் சிகிச்சை செய்ய வேண்டும் என்றுசொன்னார் உடனே டாக்டர் நீங்கள் மருத்துவமனைக்கு வரமுடியுமா வாருங்களேன் என்று சொன்னார் மருத்துவருக்கு இவரை விட ஐந்துவயது அதிகம் 90 வயது இவர் சொன்னார் டாக்டர் என்னால் கையையும் அசைக்கமுடியவில்லை காலையும் அசைக்கமுடியவில்லை அப்படிப்பட்ட நிலையில் இருக்கிறேன் என்று சொன்னார் சரியென கஷ்டப்பட்டு அந்த மருத்துவர் வீட்டிற்கு வந்தார் வீட்டுக்கு வந்தவுடனே டாக்டருக்கு இருதயவலி வந்து நாற்காலியில் அமர்ந்து துடித்துக்கொண்டிருக்கிறார்.

உடனே வீட்டிலிருந்து படுத்திருந்த மனுஷன் எழுந்து சீக்கிரமாய்போய் பாத்திரத்தில் தண்ணீர் சூடு செய்து அவரது கையில் இருந்த நெஞ்சுவலி மாத்திரையை கொடுத்து தண்ணீர் கொடுத்து பால் கொடுத்து குடிக்கச்சொன்னார் அவரும் குடித்தார் நெஞ்சுவலி உடனே நின்றுவிட்டது டாக்டர் சொன்னார் சரி நான் புறப்படுகிறேன் எனக்கு முப்பது பவுன் கட்டணம் தரவேண்டும் என்றார் நன்றாக கவனியுங்கள் டாக்டர் சிகிச்சை கொடுக்க வந்தார் வந்த இடத்தில டாக்டருக்கு நெஞ்சுவலி வந்தது நெஞ்சு வலி வந்த நேரத்தில் படுக்கையில் இருந்தவர் எழுந்து இவருக்கு உதவி செய்து மாத்திரை தண்ணீர் பாலெல்லாம் கொடுத்தார் தண்ணீர் சூடு பண்ணி கொடுத்தார் இப்போது இவருக்கு நெஞ்சுவலி தீர்ந்துவிட்டது இப்பொழுது டாக்டருக்கு சிகிச்சை செய்த அறிஞருக்கு தான் இவர் பவுன் கொடுத்திருக்கவேண்டும் ஆனால் டாக்டர் 300 பவுன் கட்டணம் கேட்கிறார் வியாதியிலிருந்து மனுஷன் கேட்கிறார் மருத்துவர்அய்யா நீங்கள் ஒரு சிகிச்சையும் செய்யவில்லையே ஏன் இந்த கட்டணத்தை கேட்கிறீர்கள் என்றபோது நீ எதற்காக என்னை அழைத்தாய் என்னால் எழும்பமுடியவில்லை கைகளை அசைக்கமுடியவில்லை கால்கள் அசைக்கமுடியவில்லை நடக்க முடியவில்லை என்றுதானே சொன்னாய் ஆனால் இப்பொழுதோ எனக்கு ஆபத்து என்று சொன்னவுடனே கட்டிலை விட்டு இறங்கினாய் ஓடிப்போய் தண்ணீரை சூடுபடுத்தினாய் பாலை சூடுபண்ணி கொடுத்தாய் மாத்திரை கொடுத்தாய் இதெல்லாம் எப்படி உன்னால் முடிந்தது எல்லாம் உன் மனபிரமைதான் இதற்கு காரணம் அதற்கு அறிஞர் நீர் என்ன சொல்லவருகிறீர் என்றதற்கு எனக்கு நெஞ்சுவலியும் வரவில்லை எனக்கு நீ கொடுத்த மாத்திரையும் நான் போடவில்லை எந்த குறையும் இல்லை நீ எழும்பவேண்டும் என்றுதான் நான் நடித்தேன் அதற்கு தான் இந்த சம்பளம் கேட்டேன் என்றார் அந்த மருத்துவர்.

  நாம் இப்பொழுது வேத வசனத்தை கவனிப்போம் ஒரு திறள் கூட்டம் ஜாதியிலிருந்து ஜனத்திலிருந்து கோத்திரத்தில் இருந்து வந்த ஒருகூட்டம் இந்த திறள் திரளானகூட்டம் என்ன செய்தார்களென்றால் வெள்ளையங்கியை தரித்துக்கொண்டு சிங்காசனத்திற்கு முன்பாக தங்கள் கைகளில் குருத்தோலை பிடித்து கொண்டு சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்ககண்டேன் எங்கே நிற்கிறார்கள் முதலாவது சிங்காசனத்திற்கு முன்பாகவும் இரண்டாவது ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கிறார்கள் இந்த இரண்டு ஸ்தானமும் ஒன்றல்ல இது நாம் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் வெள்ளையங்கி தரித்திருந்தவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாக பிதாவாகிய தேவன் உட்கார்ந்திருக்கிற சிங்காசனம் அதின் பக்கத்திலேயே இருக்கிற  ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நின்றார்கள் பிதாவானவர் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறார் இயேசுகிறிஸ்து பிதாவின் வலதுபாரிசத்தில் அமர்ந்துள்ளார் என்று எழுதப்பட்டிருக்கிறது அப்படியென்றால் சிங்காசனத்திற்கு முன்பாகவும் பிதாவுக்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவராகிய இயேசு கிறிஸ்துவிற்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன் அடுத்ததாக  வெளி 7:10 அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்

இரண்டாவதாக என்னசெய்தார்கள் இரட்சிப்பின் மகிமையையும் சிங்காசனத்தில் வீற்றிருக்கிற தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் மகிமை உண்டாவதாக என்று சொன்னார்கள் நன்றாக கவனியுங்கள் ஜனங்களிலிருந்து கோத்திரத்திலிருந்து ஜனத்தின் கூட்டத்திலிருந்து வெள்ளையங்கி தரித்துக்கொண்டு வந்திருக்கிற ஒரு கூட்டத்தை பார்க்கிறேன் அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாக குருத்தோலை கையில் பிடித்து இருந்தார்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக் கண்டேன் நின்றுகொண்டு மாத்திரமில்லாமல் சத்தமிட்டு இரட்சண்யமும் மகிமையும் சிங்காசனத்தில் வீற்றிருக்கிற தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று சொன்னார்கள் நன்றாக கவனியுங்கள் மகிமையானது ஆண்டவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக அதாவது பிதாவாகிய தேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் மகிமை உண்டாவதாக வெள்ளியங்கி தரித்திருக்கும் ஜாதியிலிருந்து கோத்திரத்திலிருந்து ஜனங்களிலிருந்து ஒரு திரள் கூட்டம் வந்துநிற்கிறார்கள் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியுமா சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முன்பாகவும் கையில் குருத்தோலை பிடித்துக்கொண்டு வெள்ளை அங்கியை தரித்துக்கொண்டு நிற்கக் கண்டேன்.

அப்போது அவர்கள் என்ன செய்தார்கள் எல்லோரும் ஆர்ப்பரித்தார்கள் குறிப்பாக எல்லாராலும் ஆர்ப்பரிக்க முடியாது ஜாதியிலிருந்தும் ஜனங்களிலிருந்தும் கோத்திரத்திலிருந்தும் வந்தவர்கள்தான் ஆர்ப்பரிக்கமுடியும் வாழ்க வாழ்கவென்று சத்தமிட்டார்கள் ஒருசிலர் பூமியிலே அரசியல் தலைவர்களுக்கு முன்பாக கத்தி கூச்சலிடுவார்கள் அதற்கு தலைவர்கள் என்ன செய்வார்கள் என்றால் பிரியாணி பாக்கெட்கள் வாங்கி கொடுத்து சொல்லவைப்பார்கள் இதற்காக உயிர் போகிற அளவுக்கு சத்தம் போடுவார்கள் ஆனால் உங்களுக்காக உயிரையே கொடுத்ததெய்வம் அவருக்கு சத்தமாக ஆர்ப்பரிக்க உங்களால் முடியவில்லை சபைக்கு உள்ளே வந்தால் சோர்வின்ஆவி தூக்கமயக்கத்தின் ஆவி தாக்குகிறது இதே சபைக்குள்ளே பதினெட்டு வருஷமாய் கூனியாய் இருந்த ஒரு பெண் இருந்தாள் எங்கே இருந்தால் சபைக்கு உள்ளேதான் இருந்தாள் ஆண்டவர் அதை விட்டு விட்டாரா உங்களுக்கு தூக்கம் சோர்வு பலவீனம் சபையிலே காணப்படுகிறது

நீங்கள் சபையில் இருக்கிறீர்கள் ஆனால் அபிஷேகம் பெற்றவர்களாக இருக்கவேண்டும் எப்படிப்பட்ட பிசாசினால் கட்டப்பட்டவர்களாய் இருந்தாலும் இயேசுவின் நாமத்தினாலே அப்பாலே போ சாத்தானே என்னை தொடுவதற்கு உனக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லவேண்டும் பெலவீனம் இடுப்புவலி சோர்வு வரும்போது உடனே சொல்லுங்கள் இயேசுவின் நாமத்தினாலே அப்பாலேபோ சாத்தானே என்று அதைத்தான் தந்தை பெர்க்மான்ஸ் இப்படியாய் பாடுகிறார் துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான் முறுமுறுத்தால் திரும்பவருவான்.

வெளிப்படுத்தின விசேஷம் 7:11-12

11 தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழநின்று, சிங்காசனத்திற்குமுன்பாக முகங்குப்பற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு: 

12 ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக, ஆமென், என்றார்கள். 

அவர்கள் அடுத்ததாக செய்த காரியம் வெள்ளையங்கி தரித்தவர்கள் யாரென்றால் நீங்களும் நானும்தான் நாம் என்ன நினைக்கிறோம்  யாரைக் குறித்தோ பேசுகிறார் என்று நினைக்கிறோம்  நீங்கள் நன்றாக கவனியுங்கள் தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் முப்பர்ங்களையும் நான்கு ஜீவன்களையும் சூழநின்று சிங்காசனத்திற்கு முன்பாக எப்படி தொழுது கொள்கின்றார்கள் என்றால் முகம்குப்புற விழுந்து தேவனை தொழுது கொள்கிறார்கள் ஆனால் நாம் எப்படி தொழுது கொள்கிறோம் நாம் விழுந்து தொழுதுகொள்ளுகிற பழக்கமில்லை வேதத்தில் எப்படியெல்லாம் ஆராதித்தார்கள் தொழுது கொண்டார்கள் எப்படி கூப்பிட்டார்கள் என்று பலவிதங்கள் உண்டு இஸ்லாமிய ஜனங்கள் முக்காடு போட்டு நெற்றி தரையில் தொடுகிற அளவில் தொழுகை செய்வார்கள் நாம் எப்படி செய்கிறோம் நேரே முழங்காலில் கையை உயர்த்தி வானத்தை அண்ணாந்து பார்த்து ஆராதனை செய்கிறோம் அவர்கள் பூமியை தொட்டு ஆராதிக்கிறார்கள் நாம் வானத்தை நோக்கி பார்க்கிறோம் அவர்கள் பூமிக்குறியவைகளை தேடுகிறார்கள் நாம் வானத்துக்குரியவரை தேடுகிறோம் அவ்வளவு தான் வித்யாசம் முகம் குப்புற விழுவது என்னவென்றால் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும் சமர்ப்பணம் என தேவனுக்கு முன் முழுவதுமாக சமர்ப்பிப்பது படைப்பது என்பது பொருள் அதுதான் முழுமையாக ஒப்புக் கொடுப்பது எப்படி ஆராதித்தார்கள் என்று பாருங்கள்.

எங்கள் தேவனுக்கு துதியும் மகிமையும் கனமும் ஸ்தோத்திரமும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாவதாக ஆமென் இப்படிபட்ட ஆராதனை தான் தேவன் விரும்புகிறார் ஒவ்வொருவரும் ஜெபத்தில் பிதாவுக்கு முன்பாகவும் இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாகவும் நிற்க்கிறவர்களாய் இருக்கிறார்கள் இப்படிப்பட்டவர்களே வெள்ளையங்கியை தரித்தவர்கள் அவர்கள்தான் அங்கே போய் நிற்கமுடியும் மற்றவர்கள் எல்லாம் நானும் சபைக்கு வந்தேன் அவர்களைப் போல நானும் கடமைக்காக வருகிறேன் என்றல்ல நம்முடைய கணக்கு பரலோகத்தில் எழுதப்பட்டு கொண்டிருக்கிறது இதை மறக்க வேண்டாம் அப்படியானால் அவர்களுக்கு எப்படி வெள்ளை தரிக்கப்பட்டது கீழ்க்கண்ட வசனங்களை வாசிக்கலாம் 

அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான்

 அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள். இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்

(வெளிப்படுத்தின விசேஷம் 7:13-14)

அப்படியானால் வெள்ளையங்கி தரித்தவர்கள் யார் என்றால் மிகுந்த உபத்திரவத்தை ஜெயித்து வந்தவர்கள் மிகுந்த உபத்திரவத்தில் இருந்து மீண்டு வந்தவர்கள் வேதத்தில் வாசிக்கிறோம் இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள் என்று சொல்கிறார் நம்முடைய வாழ்க்கையில் நாம் நினைப்போம் இப்போதான் ஒரு பிரச்சனை முடிந்தது அதற்குள் அடுத்த பிரச்சினை ஆரம்பித்துவிட்டது நான் என்ன செய்வது யாரிடம் போவது  இது எல்லாம் ஜெயிக்க தேவன் நமக்கு என்ன கொடுத்திருக்கிறார் என்ன செய்யப்போகிறோம் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் நாம் ஜெயிக்க வேண்டும். ஆற்றில் உயிருள்ள மீனுக்கும் செத்த மீனுக்கும் என்ன வித்தியாசம் என்று பார்த்தால் செத்த மீன் ஆறு ஓடுகிற பாதையில் தானும் சேர்ந்து அடித்துக் கொண்டுபோகும் ஆனால் உயிருள்ள மீன் எதிர்நீச்சல் போட்டு முன்னேறும் நீந்தி மேலேவரும் இதுதான் உயிருள்ள மீனுக்கும் செத்தமீனுக்கும் உள்ள வித்தியாசம் இப்பொழுது நீங்கள் உயிருள்ள மீனா அல்லது செத்த மீனா நீங்கள் செத்த மீனாய் இருப்பீர்கள் என்றால் பிரச்சனைகள் போகும் போக்கில் போய்க் கொண்டிருப்பீர்கள் ஆனால் நீங்கள் உயிருள்ள மீனாய் இருப்பீர்களென்றால் எதிர்த்து மேலே வருவீர்கள் உயிருள்ள மீனுக்கும் செத்த மீனுக்கும் இதுதான் வித்தியாசம்.

இன்னும் பிரச்சனை பக்கமாக சாய்ந்து கொண்டிருப்பீர்கள் என்றால் நீங்கள் தேவனுக்கு முன்பாக நிற்பவர்கள் அல்ல பிரச்சினைகள் வந்தாலும் அதை மேற்கொண்டு தேவனை நோக்கி பார்ப்போம் பிரச்சனையை தள்ளிவிட்டு கடந்து போவோம் பிரச்சினை எவ்வளவு நம்மை சூழ்ந்து வந்தாலும் எவ்வளவு நெருங்கினாலும் பலவீனங்கள் என்னை சூழ்ந்து வந்தாலும் தொல்லைகள் என்னை சூழ்ந்து கொண்டாலும் பாடுகள் சூழ்ந்து வந்தாலும் அத்தனையும் நான் தள்ளிவிட்டு இன்னும் தேவனை நோக்கிக் கடந்து போவேன் என்று சொல்லவேண்டும் அப்பொழுதுதான் நீங்கள் வெள்ளையங்கி தரிக்கப்பட்வர்கள் எந்தப் பக்கம் தண்ணீர் அடிக்கப்பட்டு ஓடுகிறதோ அந்த பக்கம் போகிறவர்களாய் இருந்தீர்கள் ஆனால் நீங்கள் எப்பொழுதோ செத்துப் போய்விட்டீர்கள் அதுதான் அதற்கு அர்த்தம் எது வந்தாலும் எதிர்த்து நிற்கவேண்டும் வசனத்தின்படி போகவேண்டும் வசனத்தின்படி செய்யவேண்டும் வசனத்தின்படி வாழவேண்டும் யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை வசனங்களைப் பார்த்தால் யாரை கனம்பண்ண வேண்டுமோ அவர்களை கனம்பண்ணுங்கள் நாம் யாவரையும் கனம்பண்ணவேண்டும்  இப்பொழுதும்  மனைவி கணவனை கனம்பண்ண வேண்டும் கணவன் மனைவியிடத்தில் அன்புகூற வேண்டும்.

      ஒரு சிலர் சொல்லுகிறார்கள் பிசாசு இதோ இங்கே நிற்கிறான் அதோ அங்கே நிற்கிறான் என்று சொல்வார்கள் நான் அவர்களுக்கு சொல்கிறேன் இன்னும் அவர்கள் ஆண்டவரிடத்தில் நெருங்கிவரவில்லை என்பதுதான் அர்த்தம் நீங்கள் நன்றாய் புரிந்து கொள்ளவேண்டிய காரியம் அநேகர் பிசாசு போய்விட்டால் கூட கெட்ட சொப்பனம் பெலவீனம் வந்தால் உடனே பிசாசு தான் மறுபடியும் இப்படி செய்கிறான் என்று நினைக்கிறார்கள் இயேசு கிறிஸ்து எப்பொழுது வந்தாரோ அப்பொழுதே சாத்தான் ஓடிபோய்விட்டான் ஆனால் நாம் தான் அதை மறுபடியும் உள்ளே உட்கார வைக்கிறோம் அவன் ஓடிப் போய்விட்டான் என்று அறிக்கை இடுக்கிறோம் ஆனால் மனதிற்குள்ளேயே இன்னும் அவனைப் பற்றிய பயம் உள்ளது இயேசு வந்த உள்ளத்தில் பிசாசுக்கு இடமே இல்லை மறுபடியும் நீங்கள் பிசாசுககு இடம் கொடுக்கிறீர்கள் என்றால் நீங்கள் கற்பனை உலகத்தில் வாழ்கிறீர்கள் என்று தான் அர்த்தம் போய் தூங்கு போகும்போதே அவனை நினைத்துக்கொண்டே தூங்குவதால் தான் பயம் பதட்டம் எல்லாம் கனவில் கொண்டு வருகிறான்.

மாறாக நாம் படுக்கும்போது ஆண்டவரை நினைத்துப் படுத்தால் நம் கனவில் ஆண்டவர் வருவார் தேவதூதர்கள் வருவார்கள் தேவனுடைய பிள்ளைகள் ஜெபம் பண்ணுகிறது போல ஆவியில் நிறைந்து ஆராதிப்பது போல மகிழ்ந்திருப்பீர்கள் ஆகையால் கற்பனை வாழ்க்கையை அகற்றிவிடுங்கள் என்றைக்கு இயேசு நம் உள்ளத்திற்குள்ளே இல்லத்திற்குள்ளே வந்தாரோ அன்றைக்கே சாத்தானுக்கு இடமில்லை சத்துரு வருவான் வர முயற்சி செய்வான் ஆனால் வீட்டை சுற்றிலும் உன்னை சுற்றிலும் தேவனுடைய அக்கினி வேலியிடப்பட்டு இருக்கிறது அதை பார்த்து அவன் போய்விடுவான் 

இப்பொழுது நாம் தியானிக்கின்ற பகுதியில் வெள்ளை அங்கிதரித்தவர்கள் எங்கிருந்து வந்தவர்களானால் மகா உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள் அவர்களை யாராலும் எப்பொழுதும் எந்த நிமிடத்திலும் ஒன்றும் செய்ய முடியாது நீங்கள் இயேசுவின் நாமத்தினாலே உங்களுக்கு வருகிற உபத்திரவங்களை ஜெயிப்பீர்கள் ஒருவராலும் உங்களை ஒன்றும் செய்ய முடியாது நமக்கு பாடுகள் கஷ்டங்கள் பலவீனங்கள் வரக்கூடாது என்று நினைத்தால் இன்னும் சரியாய் வளரவில்லை என்றுதான் அர்த்தம் நாம் வளர வேண்டுமென்றால் அநேக காரியங்களை கடந்து வரவேண்டும் அப்படி கடந்து வரும்போது தான் ஜெயிக்கமுடியும் தலைவலி வந்தால்தான் உணர்வுகள் ஏற்படும் உடலில் வலிகள் வந்தால்தான் உணர்வுகள் இருக்கிறதே தெரியும் இன்றைக்கு அநேக காரியங்களில் என்ன செய்கிறோமென்றால் அது வரவேகூடாது உடல் இருக்கிறவர்களுக்கு உடல்வலி வரும் தலை இருப்பவர்களுக்கு தலைவலி வரும் ஆனால் இயேசுவின் நாமத்தினாலே நம்மை சூழ்ந்திருக்கும் வியாதிகள் பிரச்சினைகள் எல்லாவற்றையும் நான் ஜெயித்து மேலே வந்துவிடலாம் வேத வசனத்தில்

ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள், சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார். வெளிப்படுத்தின விசேஷம் 7:15

கவனியுங்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இரவும் பகலும் அவருடைய ஆலயத்தில் அவரை சேவிக்கிறவர்கள் யார் தெரியுமா இன்றைக்கு தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறோம் என்றால் வேதம் சொல்லுகிறபடி அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து இரவும் பகலும் அவருடைய ஆலயத்தில் அவரை சேவிக்கிறவர்களாய் இருக்க வேண்டும் ஆலயம் நமக்கு இரண்டு அல்லது மூன்று கிலோமீட்டர் தூரத்தில் இருந்தாலும் பரவாயில்லை ஆலயத்தை தேடி எங்கே இருந்தாலும் போக வேண்டும் நான் சொல்லவில்லை வேதம் சொல்லுகிறது யார் இவர்கள் வெள்ளை அங்கி தரித்த இவர்கள் மிகுந்த உபத்திரவத்தில் இருந்து வந்தவர்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் தொய்ந்து வெளுத்தவர்கள் அடுத்தது கவனியுங்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து அவருடைய ஆலயத்திலே சேவிப்பவர்கள் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள் வாசமாய் இருப்பார் நாம் என்ன செய்வோம் என்றால் அவருக்கு முன்பாக இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே சேவிப்போம் அவரை ஆராதிப்போம் ஜெபிப்போம் அதற்கு பதிலாக அவர் நமக்கு என்ன செய்வாரென்றால் நமக்குள்ளே வாசமாய் இருப்பார் வாசிக்கலாம்

இவர்கள் இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை, வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள்மேல் படுவதுமில்லை. (வெளிப்படுத்தின விசேஷம் 7:16)

இவர்களுக்கு பசியும் இல்லை இவர்களுக்கு தாகமும் இல்லை இவர்களுக்கு வெயிலாகிலும் உஷ்ணமாகிலும் சேதப்படுத்த மாட்டாது நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் 17 ஆம் வசனத்தில் சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார், தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர்யாவையும் துடைப்பார் என்றான்.  (வெளிப்படுத்தின விசேஷம் 7:17 )

சிங்காசனத்தில் மத்தியில் இருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்க்கிறவராக இருப்பார் அவர் நம்மை மேய்த்தால் ஆகாரத்துக்கு குறைவோ தண்ணீர் குறைவோ வேறு எந்த குறைவோ வாழ்க்கையில் வரவே வராது ஏனென்றால் நம்மை மேய்ப்பது போஷிப்பது யாரென்றால் சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஆட்டுக்குட்டியானவர் அவர் நம்மை மேய்க்கிறபடியினால் குறைவு என்பது இல்லவே இல்லை ஆகாரகுறைவோ வஸ்திரகுறைவோ தண்ணீர் பஞ்சமோ வரவேவராது அடுத்தது பாருங்கள் இவர்கள் ஜீவத்தண்ணீர் உள்ள ஊற்றுக்கு நடத்துகிறார் அவர்கள் தண்ணீர் தாகம் அடைவதில்லை ஏனென்றால் ஜீவத்தண்ணீர் இருக்கிற இடத்திலே அவர்களை நடத்துகிறார் அடுத்தது வாசித்தால் தேவன் தாமே இவர்கள் கண்ணீர் யாவையும் துடை பார் கண்ணீரா வேதனையா விக்கினமா கவலைப்படாதீர்கள் உங்கள் கண்ணீரை துடைக்க தான் இயேசு வந்திருக்கிறார் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *