யார் அந்த நீதிமான் ? | Pr. B. E. Samuel

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கர்த்தர் தாமே இந்த வார்த்தைகள் மூலம் உங்களை ஆசீர்வதிப்பாராக. இன்றைக்கு சங்கீதம் 92:1-15 வரையிலான வசனங்களை தியானிப்போம். இவைகளில் மூன்று காரியங்களை பார்க்கப்போகிறோம்.

சங்கீதம் 92: 12 நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.

1.         நீதிமானை பற்றி பார்க்க போகிறோம்

2.         பனையை போல் எப்படி செழிக்கிறான் என்பதை பற்றி பார்க்கப் போகிறோம்

3.         கேதுரு வளருவதை பற்றி பார்க்கப் போகிறோம்.

முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான காரியம் நீதிமான். வேதத்தில் ஆபிரகாம் நீதிமானாக என்ன பட்டார். ஏனென்றால், அவர் தேவனை விசுவாசித்தார் அது அவருக்கு நீதியாக எண்ணப்பட்டது. அவர் விசுவாசிகளின் தகப்பன் என்றால், நீங்கள் எல்லோரும் யார்? ஆபிரகாமின் பிள்ளைகள் என்று அர்த்தம் நீங்கள் விசுவாசிகள் என்றால், ஆபிரகாமின் பிள்ளைகள் என்று அர்த்தம். ஆகையால், நீங்களும் நீதிமான்கள்தான். ஆபிரகாம் விசுவாசிக்கும்போது நீதிமானாக எனப்பட்டார் அப்படியே அவருடைய பிள்ளைகளாகிய நீங்களும் தேவனை விசுவாசிக்க வேண்டும்.

சிலர் சொல்லுகிறார்கள் நான் விசுவாசிதான். ஆனால், என்னிடத்தில் விசுவாசமே இல்லை என்கிறார்கள். விசுவாசம் இல்லாமல் எப்படி விசுவாசிகளாக இருக்க முடியும்? விசுவாசம் இருந்தால்தான் நீங்கள் விசுவாசிகளாக இருக்க முடியும். உங்களுக்கு விசுவாசம் இல்லை என்றால்! விசுவாசியே இல்லை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் விசுவாசிக்கிறதினால் தான் நீங்கள் விசுவாசி. விசுவாசிக்கவில்லை என்றால் நீங்கள் விசுவாசி இல்லை. நீங்கள் நீதிமான்கள் இல்லை மறுபடியும் சொல்லுகிறேன். ஆபிரகாம் விசுவாசத்தினால் தான் நீதிமான் ஆக்கப்பட்டான் விசுவாசிகளுக்கு தகப்பன் என்று பெயர் பெற்றார். அப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறதினால் ஆபிரகாமுக்கு பிள்ளைகளாக இருக்கிறீர்கள்.

விசுவாசமாய் இருக்கும்போதுதான் நீதிமானாக மாறுகிறீர்கள் நீங்கள் நீதிமான் என்றால் இதன்பிறகு சொல்லப் போகிற ஆசிர்வாதங்கள் உங்களுக்கு மட்டும்தான் சேரும். யாரெல்லாம் இயேசுவை விசுவாசிக்கிறார்களோ அவர்கள்தான் நீதிமானின் பட்டியலில் காணப்படுவார்கள். அந்த பட்டியலில் இருப்பவர்களுக்கு தான் நான் சொல்ல போகிற ஆசிர்வாதங்கள் வந்து சேரப்போகிறது.

இரண்டாவது பாருங்கள் :

என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். எசேக்கியேல் 18:9

நீங்கள் நீதிமானாக இருந்தால் நிச்சயமாக சொல்கிறேன் உங்களை யாராலும் அழிக்கவே முடியாது முதலில் அவருடைய கட்டளைகளின்படி நடக்க வேண்டும், இரண்டாவது அவருடைய நியாயங்களை கைக்கொள்ள வேண்டும், மூன்றாவது உண்மையாக இருக்க வேண்டும்.

முதலாவது நீங்கள் கட்டளையின்படி நடக்க வேண்டும். கட்டளை என்றால் உங்களுக்கு எல்லாருக்கும் தெரியும் பத்து கட்டளைகளின் படி நடக்க வேண்டும் அதில் ஒவ்வொரு கட்டளைகளின்படி நடக்க வேண்டும்.

1.         முதல் கட்டளை உன் தேவனாகிய கர்த்தர் நானே

2.         என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.

ஒரு சிலர் விக்கிரங்களை பார்த்து பயப்படுவார்கள் எனக்குத் தெரிந்த ஆசிரியர் குடும்பம் இருக்கிறார்கள். அவர்கள் இப்பொழுது வெளியூரில் இருக்கிறார்கள் சமயம் கிடைக்கும்போது அவர்கள் போன் செய்து ஜெபித்துக் கொள்வார்கள். அந்த ஆசிரியரின் தாயார் வயதானவர்கள். அவர்கள் சபைக்கு வருகிற வழியில் ஒரு விக்கிரக கோவிலை தாண்டிதான் வரவேண்டும் அப்பொழுது ஒருநாள் சொன்னார்கள் ஐயா இந்த விக்கிரக கோவிலை தாண்டி வரும்போது எனக்கு பயமாக உள்ளது என்றார்கள். ஏன் அம்மா என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அந்த சிலையை பார்க்கவே மிகவும் கொடூரமாகவும் பயங்கரமாகவும் உள்ளது என்றார்கள். அப்பொழுது நான் சொன்னேன் அது வெறும் பொம்மை தானே அதை நீங்கள் போய் காலை பிடித்து இழுத்தாலும் வராது கையை பிடித்து இழுத்தாலும் வராது நீங்கள் என்ன செய்தாலும் அதற்கு சொரணையும் உண்டாகப் போவதில்லை.

நான் சொல்லுகிறேன் அது உங்களை ஒன்றும் செய்ய முடியாது என்றேன் அதற்கு கண்ணிருந்தும் காணாது காதிருந்தும் கேளாது கால்கள் இருக்கிறது. ஆனால், நடக்காது கைகள் இருந்தாலும் கூட அவை ஒன்றும் செய்ய முடியாது. அதை பண்ணுகிறவர்களும,; அதை வணங்குகிற அவர்களும், அதை போலவே இருப்பார்கள் என்று வேதம் சொல்லுகிறது. நம்முடைய இந்தியாவில் அநேக சிலைகளை கடத்துகிறார்கள் உண்மையாக அவற்றுக்கு வல்லமை இருந்தால் நான் எவ்வளவு பெரிய சக்தி வாய்ந்தவன் என்னை போய் நீங்கள் கட

த்துகிறீர்களே என்று ஏதாவது அவர்களுக்கு செய்திருக்கும் அல்லவா. அவர்களை அது ஒன்றும் பண்ணமுடிவில்லை என்றால் அது உங்களை என்ன செய்ய முடியும் பயப்படாதீர்கள் என்று சொன்னேன் ஆகவே அவற்றுக்குள் ஒரு வல்லமையும் இல்லை பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை.

இரண்டாவதாக கட்டளை யாதொரு விக்கிரகத்தை ஆகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம் நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம். அவருக்கு நிகராக ஒரு சிலையும் பொம்மையோ செய்து இதுதான் இயேசு என்று சொல்லி வணங்கக்கூடாது.

மூன்றாவது கட்டளை கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக

அப்படியானால் அவர் பெயர் கெட்டுப் போவதற்கு நீங்கள் எந்த சூழ்நிலையிலும் காரணமாக இருந்துவிடக் கூடாது நான்கு பேர் கெட்டவர்கள் இருக்கும் இடத்தில் நீங்கள் போய் இயேசு எப்படிப்பட்டவர் என்று தெரியுமா என்று கேட்டால் உங்களை திட்டுவது மட்டுமல்லாமல் இயேசுவையும் சேர்த்து கெட்டவார்த்தையில் பேசுவார்கள். அப்பொழுது நீங்கள் இயேசுவின்  பெயரை வீணிலே வழங்கி விட்டீர்கள் என்று அர்த்தம். இப்படிப்பட்ட செயல்களை நாம் செய்யக்கூடாது என வேதவசனம் கூறுகிறது. இது பன்றியின் மூக்கிலே பொன் மூக்குத்தி போடுவதற்கு சமம். பன்றியின் மூக்கு பெரிதாக காணப்படும் அந்த முக்கிலே ஐந்து சவரம் தங்கமுள்ள மூக்குத்தியை போட்டால் அது என்ன செய்யுமென்றால் நேராகப் போய் சேற்றில் போட்டு புரளும் அதுபோல இயேசுவின் நாமத்தை நாம் கெடுத்து விட கூடாது.

நான்காவது கட்டளை ஓய்வு நாளை பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக.

நீங்கள் நீதிமானாக இருக்க வேண்டுமென்றால், ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசரிக்க வேண்டும் எப்படி என்றால் ஆராதனை ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும் போது 8: 45 குள்ளே வரவேண்டும் இல்லையென்றால் 9 மணிக்கு ஆவது வந்துவிட வேண்டும் அப்படி இராமல் 10 மணிக்கு வருவீர்கள் என்றால், அது எப்படிப்பட்ட ஓய்வு நாளின் ஆசரிப்பாக இருக்க முடியும். அந்த இடத்தில் மற்றவர்களுக்கு இடறலாக மாறிவிடுவீர்கள் ஆராதனைக்கு முன்பே நீங்கள் வந்து ஆண்டவரே எனக்குள்ளே வந்து தங்க வேண்டும் என்று சொல்லவேண்டும். ஏனென்றால், வசனத்தின்படி கட்டளைகளை நீங்கள் கைக்கொள்ள வேண்டும்.

மேற்கண்ட வசனத்தின் படி தேவனின் கட்டளைகளின்படி நடந்து கொள்கிறவன் தான் நீதிமான் ஒன்பது மணிக்கு ஆராதனை என்றால் 5 நிமிடத்திற்கு முன்பதாகவே வந்துவிடவேண்டும். அதை தவிர்த்து 9 மணிக்குதான் வீட்டிலிருந்து புறப்படுவது தேவனுக்கும் ஏற்புடையது அல்ல. போதகர் உங்களை பார்க்கிறாரோ இல்லையோ ஆண்டவர் உங்களை பார்க்கிறார். என் மகள் என் மகன் எங்கே என்று ஆண்டவர் தேடுகிறார் பேதுருவும் யோவானும் ஆலயத்திற்கு ஜெப வெளியாகிய ஒன்பதாம் மணி நேரத்தில் போனார்கள். பாருங்கள் அவர்கள் எவ்வளவு சரியாக அந்த ஜெப வேலைக்கு போய் இருக்கிறார்கள். ஏன் உங்களுக்கு அந்த ஜெப நேரத்தை கடைப்பிடிக்க முடியவில்லை கர்த்தருடைய ஓய்வுநாளை ஏன் பரிசுத்தமாய் ஆசரிக்க முடியவில்லை? உங்களை மாற்றிக் கொள்வீர்களானால் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். மேற்கண்ட இந்த நான்கு கட்டளைகளும் கர்த்தரை சார்ந்தது மீதமுள்ள ஆறு கட்டளைகளோ உங்களை சார்ந்தது.

ஐந்தாவது தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக, ஆறாவது கொலை செய்யாதிருப்பாயாக, ஏழாவது விபச்சாரம் செய்யாதிருப்பாயாக, எட்டாவது களவு செய்யாதிருப்பாயாக, ஒன்பதாவது பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, பத்தாவதாக பிறருடைய யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக இந்த கட்டளைகள் எல்லாம் நமக்கு தந்தருள பட்டுள்ளது. இவை அவசியமாக கடைபிடிக்கவேண்டும் இந்த பத்து கட்டளைகள் இப்படி நடந்தால் தான் நீங்கள் நீதிமான் மேலே பார்த்த நான்கு கட்டளைகளும் கர்த்தருக்கு நாம் செலுத்த வேண்டிய காரியங்கள்.

ஐந்தாவது தாய் தகப்பனுக்கு கீழ்ப்படிய வேண்டும் சிறுவயதில் கீழ்ப்படிந்து பெரிதானவுடனே அவர்களை எதிர்த்துப் பேசுவது தவறான காரியம் அந்த கீழ்ப்படியாமை கனவீனம் பண்ணுவதாய் மாறிவிடும்.

ஆறாவது கொலை செய்வது நீங்கள் கேட்கலாம் நான் யாரை கத்தியால் கொலை செய்கிறேன் என்று அல்ல நீங்கள் ஒருவரது மனதை துன்புறுத்தி வேதனைப்படுத்தி பேசினாலே நீ ஒரு கொலைகாரிதான் நீ ஒரு கொலைகாரன் தான்.

ஏழாவது விபச்சாரம் செய்யாதிருப்பாயாக ஒரு பெண்ணை இச்சையோடு பார்த்தாலே அவன் விபச்சாரம் செய்தாயிற்று ஒரு பெண் இச்சையோடு பார்த்தாலே அந்தப் பெண்ணும் விபச்சாரம் செய்கிறவளாய் இருக்கிறாள்.  நாம் போய் விபச்சாரம் செய்தால் தான் விபச்சாரம் இல்லை பார்த்துவிட்டு உள்ளத்தில் நினைத்தாலே அதுவே விபச்சாரம் தான்.

எட்டாவது களவு திருடுவது மற்றவர் பொருளை திருடுவது மட்டும்தான் திருடுவது இல்லை, அவர்களின் சமாதானத்தை கெடுப்பது, குடும்ப உறவை கெடுப்பது, மற்றவர்கள் மனது கஷ்டப்படும்படி வேதனைப்படும்படி செய்கிற, எல்லாமே திருடுவதற்கு ஒப்பாயிருக்கிறது.

ஒன்பதாவது பொய் சாட்சி சொல்லக்கூடாது பார்க்காததை பார்த்ததாக சொல்லவே சொல்லாதீர்கள் உள்ளதை உள்ளதென்றும் இல்லாததை இல்லை என்றும் சொல்ல வேண்டும். இதற்கு மீறினது பாவம் என்று வேதம் கூறுகிறது.

பத்தாவது பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக. மற்றவர்கள் நன்றாக அழகாக சிவப்பாக இருந்தால் நீங்கள் அவரை பார்த்து என்னை மட்டும் ஏன் கருப்பாக படைத்தீர் என்று கேட்கவே கூடாது. கர்த்தர் எதை உங்களுக்கு கொடுக்கிறாரோ அதுதான் சிறந்தது நான் ரட்சிக்கபடுவதற்கு முன்பு என்னை நான் வெள்ளையாக இல்லை என்று யோசித்தேன். ஆனால், இரட்சிக்கப்பட்ட பிறகு ஒருநாள் கூட அப்படிப்பட்ட எண்ணம் எனக்கு வந்ததே இல்லை. ஏன் தெரியுமா இது கர்த்தர் கொடுத்த வண்ணம் கர்த்தர் எதை தந்தாலுமே சரியாக தருவார்.

ஆண்டவர் உங்களுக்கு எதை தந்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்று யோசிக்க வேண்டும். அப்படி நீங்கள் யோசித்தால் நிறத்தைப் பற்றி வருத்தமே வராது அதுபோலவே நம் கூட இருக்கிறவர்கள் நல்ல தங்க நகைகளை போட்டிருந்தால் எப்படி அவர்களுக்கு மட்டும் கிடைத்திருக்கிறது நமக்கு இல்லையே என்றால் அது இச்சை தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள் கர்த்தரிடத்தில் நீங்களும் கேளுங்கள் உங்களுக்கும் கொடுக்க வல்லவராயிருக்கிறார் அவர் பட்சபாதம் உள்ளவர் அல்ல.

இரண்டாவது நியாயங்களை கைக்கொள்ள வேண்டும். சங்கீதம் 19:8 கர்த்தருடைய  நியாயங்கள் என்பது கர்த்தருடைய சட்டதிட்டங்களை குறிக்கிறது கட்டளை அல்லது கற்பனை என்பது வேறு நியாயங்கள் என்பது அவர் சொன்ன மற்றும் அவர் உபதேசித்த சட்ட திட்டங்களை குறிக்கிறது நாம் கற்பனையின் படி நடப்பது மட்டுமல்லாமல் அவருடைய நியாயங்கள் அதாவது சட்ட திட்டங்களின் படி கைக்கொள்ளவேண்டும்.

நீங்கள் உண்மையாக இருங்கள் கர்த்தருக்கு உண்மையாக இருங்கள், உங்கள் புருஷனுக்கு உண்மையாய் இருங்கள், உங்கள் மனைவிக்கு உண்மையாய் இருங்கள், உங்கள் பெற்றோருக்கு உண்மையாக இருங்கள், வேதாகமத்தில் படித்துப் பார்த்தால் உன் சொந்த மாம்சத்திற்கு உன்னை ஒளிக்காமலும் என்று எழுதப்பட்டுள்ளது ஒருவருக்கொருவர் மறைவு இருக்கக்கூடாது உதாரணமாக நான் போய் நேராக பீரோவில் பணம் வைக்கிறேன் என்றால் எல்லாரையும் நம்பி வைக்கிறேன் என்று அர்த்தம் அப்படி இல்லாமல் ஒளித்து பயந்து மறைத்துக் கொண்டு போய் பீரோவில் வைக்கிறேன் என்றால் ஏன் யாராவது எடுத்து விடுவார்கள் என்று நினைத்து அப்படி செய்கிறேன். அதேபோல் என் மனைவி என் கண்ணுக்கு முன்பாக போய் பணத்தை வைக்கிறார்கள் என் மேல் உள்ள நம்பிக்கை அப்படி இல்லாமல் மறைத்து வைக்கிறார்கள் என்றால் எனக்குத் தெரிந்தால் நான் எடுத்து விடுவேன் என்கிற பயம்.

 அப்பொழுது ஒளிக்கிறதே நம்முடைய காரியமாக இருந்தால் நாம் இன்னும் சரியாக இல்லை என்றுதான் அர்த்தம் உதாரணமாக ஒரு குடும்பத்தலைவர் பத்து ரூபாய் வைத்திருந்தால் அது யாருக்கு சொந்தம் முதலாவது மனைவிக்கு பின்பு பிள்ளைகளுக்கு தான். அதேபோல் குடும்பத்திலுள்ள அம்மா பத்து ரூபாய் வைத்திருந்தால் முதலாவது கணவனுக்கு சொந்தம் பின்பு அந்த பிள்ளைகளுக்குதான் அது சொந்தம் உங்கள் புருஷனை நீங்கள் நன்றாக கவனியுங்கள் பிள்ளைகள் தானாக நன்றாக வளர்வார்கள் உங்கள் புருஷனை உங்கள் கண்ணுக்குள்ளே வைத்து பாருங்கள் உங்கள் மனைவியை உங்கள் கண்ணுக்குள்ளே வைத்து பாருங்கள் உங்கள் பிள்ளைகள் கண்மணி போல வளர்வார்கள். அநேகருடைய  வீட்டில் புருஷன் மனைவியை சரியாக பார்ப்பதே இல்லை மனைவி புருஷனை சரியாக பார்ப்பதே இல்லை. இப்படி காணப்பட்டால் அந்த குடும்பம் நன்றாக இருக்காது ஒரு வீட்டில் உள்ள புருஷனும் மனைவியும் பிள்ளைகளும் ஒருவருக்கு ஒருவர் உண்மையாகவும் நம்பிக்கையாகவும் காணப்படவேண்டும் இப்படி இருந்தால் நீங்கள் நீதிமான்களாக காணப்படுவீர்கள்.

நீதிமான்கள் எப்படிப்பட்ட பலனை அடைவார்கள்

1. நீதிமான் பனைமரம் போல செழிப்பான

நீதிமான் பனைமரம் போல செழிப்பான் என்பதைப் பார்க்கப் போகிறோம். பனை என்ற பனை மரம் எந்த இடத்தில் வறட்சி காணப்பட்டாலும் அதை பற்றி இதற்கு கவலை இல்லை வறட்சி வரும் போது தென்னை மரமும் காய்ந்து போகும் கொய்யா மரமும் காய்ந்து போகும் நீங்கள் தண்ணீரே ஊற்ற வில்லை என்றாலும் பனைமரம் மாத்திரம் காய்ந்தே போகாது. எவ்வளவு வறட்சி வந்தாலும் தண்ணீர் இல்லாமல் போனாலும் பனை மரம் காய்ந்து போகாது. அதேபோல நீங்களும் பனைமரம் போல் செழிப்ப்பீர்கள் மழையையும் பார்க்க மாட்டீர்கள் காற்றையும் பார்க்கமாட்டீர்கள். ஆனால், நீங்கள் ஆசீர்வாதமாய் காணப்படுவீர்கள். பனைமரம் மக்கள் குடியிருக்கும் பகுதியில் காணப்படும். ஏனென்றால், மனுஷர் தான் அதை நடுகிறார்கள். ஆனால், காடுகளில் அதிகமாக காணப்படுவதில்லை எங்கேயாவது ஒரு இடத்தில் ஒன்றோ அல்லது இரண்டோ தான் காணப்படும். பனை மரங்கள் ஏறக்குறைய 34 வகையாக காணப்படுகின்றன.

இதனுடைய தாயகம் எதுவென்றால்  ஆப்பிரிக்கா தேசம் அந்த மக்கள் குடியேறும் இடத்திலே இம்மரத்தை நடுவார்கள் அது அவர்களுக்கு விசிறி பாய் கூடை தயாரிப்பதற்க்கும். அதின் கட்டைகளை எல்லாம் வீடு கட்டவும் அதனுடைய எல்லாமே மக்களுக்கு மிகவும் உபயோகம் உள்ளதாக இருக்கிறது. பின்பு மரம் நன்றாக வளர்ந்தது நுங்கு தர ஆரம்பிக்கிறது. அந்த காய் பழுத்தவுடனே பழமாக மாறுகிறது, அதன் நுங்கு வெயில் காலத்தில் மனுஷனுக்கு குளிர்ச்சியை தருகிறது. பின்பு கிழங்கு விடுகிறது ஆகவே பனையினுடைய சிறப்பு அதிகமாக உள்ளது அந்த நுங்கு இன்னும் கொஞ்சம் மேலே போனால் கல்லாக மாறும் பின்பு நாறாக மாறும் பின்பு பனைவெல்லம் பனை சர்க்கரை பனங்கற்கன்டென அநேக விதத்தில் பலன் கொடுத்துக் கொண்டே இருக்கும். வேத வசனம் சொல்லுகிறது எவ்வளவு சோர்ந்து போனாலும் வெயில் வந்தாலும் மழை வந்தாலும் துன்பம் வந்தாலும் துக்கம் வந்தாலும் எப்பொழுதும் நீங்கள் மட்டும் பலன் கொடுக்கிறவர்களாக காணப்படுவீர்கள்.

எப்படி என்றால் ஆன்டவர் உங்களோடு இருக்கிறார் நீதிமான்கள் பனை மரத்தைப் போல செழிப்பாக இருப்பார்கள் எவ்வளவு வெயில் வந்தாலும் பசுமையாக காணப்படுவார்கள். எவ்வளவு பெரிய காற்றிலும் பசுமையாக காணப்படுவார்கள் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் எவ்வளவு ஆபத்து வந்தாலும் பசுமையாக காணப்படுவார்கள் அந்த நீதிமானை வெட்டி போட்டாலும் பயன்படுவார்கள் அவர்களை என்ன செய்தாலும் பயனுள்ளவர்களாக காணப்படுவார்கள் அப்படிப் பயனுள்ள பாத்திரமாக உங்களை மாற்ற தேவன் வல்லமை உள்ளவராக இருக்கிறார்.

2. கேதுருவைப் போல வளர்வாய்

கேதுருவைப் போல வளரும் வளர்ச்சியைப் பற்றியும் கேதுரு மரத்தின் சிறப்பும் என்னவேன்றால் அது ஒரு காட்டு மரம் அந்த மரத்தின் உயரம் 100 அடிக்கு மேல் வளரும் அகலம் 6 அடி வரை வளரும் அது தண்ணீர் உள்ள பகுதியில் மட்டும்தான் வளரும் நீர்க்கால்களின் ஓரமாய் காணப்படும். கேதுரு மரத்தின் பெருமை என்னவென்றால் லெபனான் நாட்டின் தேசியகொடியில் இந்த மரத்தின் படம்தான் இடம்பெற்றுள்ளது நம் நாட்டின் கொடியின் வண்ணம் சிவப்பு வெள்ளை பச்சை என்பது சிவப்பு அநேகருடைய சுதந்திர தியாகத்திற்கும்  வெள்ளை சமாதானத்திற்கும் பச்சை பசுமைக்கும் அடையாளமாக காணப்படுகிறது. இதேபோல ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு கொடி உண்டு சாலமோன் ராஜா முதன்முதலில் கேதுரு மரத்தை வெட்டி தேவனுடைய ஆலயத்தை கட்டினார்.

இந்த காட்டு மரம் இப்பொழுது தேவனுடைய ஆலயத்தை தாங்குகிற புனிதமான மரமாக மாறிவிட்டது ஒரு காலத்தில் இந்த மரம் காட்டு மரம் இப்பொழுதோ சிறப்பான ஒரு மரமாகவும் உலகத்துல இருக்குற எல்லா மரங்களை விட கேதுரு மரம் சிறப்பு வாய்ந்ததாகும் மதுரமான மரமாகவும் திவ்ய மரமாகவும் பெயர் பெற்றது இதேபோல நீங்களும் தேவனுடைய ஆலயத்தில் இல்லாமல் இருந்தீர்களானால் நீங்களும் காட்டுமரம் போல தான் இருந்திருப்பீர்கள் எப்பொழுது நீங்கள் ஆண்டவரை ஏற்றுக்கொண்டு ஆலயத்திற்கு கடந்து வர ஆரம்பிப்பீர்களோ அப்பொழுதே புனிதமானவர்களாக மாறிவிட்டீர்கள்.

நீங்கள் ஒரு காலத்தில் காட்டுமரத்தை போல காணப்பட்டீர்கள். ஆனால், இப்பொழுதோ ஆலயத்தை அலங்கரிக்க கூடிய தூண்களாக காணப்படுகிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் ஆலயத்திற்கு தூண் ஆகவே தூண்கள்  இல்லாமல் ஆலயம் நிற்காது நீங்கள் தூண்களாக மாறவில்லை என்றால் தேவனுடைய ஆலயத்தை கட்ட முடியாது நீங்கள் சபைக்கு தூண்களாக இருக்க வேண்டும். வீணாக இருக்கக்கூடாது எப்படி ஒரு காட்டு மரம் வெட்டி சீவி தோல் உரிக்கப்பட்டு அதை கழித்து ஒரு தூணாக ஆலயத்தில் நிறுத்தப்டுகிறதோ அதுமாதிரி காட்டுமரமான நாம் நம்முடைய பழைய சுபாவங்கள் பழைய காரியங்கள் கழித்து நல்ல அழகான தூண்களாக ஆலயத்தில் கொண்டுவரப்பட்டு தூணாக நிறுத்த படுகிறோம்.

இந்த கேதுரு மரம் நீர்க்கால்களின் ஓரமாக இருக்கும் தண்ணீரை வேதாகமத்தில் எதற்கு ஒப்பிடுகிறோம் என்றால் பரிசுத்த ஆவியை குறிக்கிறது எந்த ஒரு விசுவாசியும் பரிசுத்த ஆவியோடு இருக்கும்போது மட்டும்தான் அவர்கள் நன்றாக வளரமுடியும் பரிசுத்த ஆவி இல்லை என்றால் ஒரு விசுவாசி வளர முடியாது. நீங்கள் பரிசுத்த ஆவி என்கிற நதி ஓரத்தில் நடப்பவர்களாக மாறவேண்டும்.

அநேக வருடங்களுக்கு முன்பாக சென்னையில் ஏவிஎம் ஸ்டுடியோ எதிரில் ஒரு சபையில் என்னை ஆண்டவருடைய வார்த்தையை சாட்சியோடு பகிர்ந்துகொள்ள அழைத்தார்கள் அப்பொழுது என்னுடைய சாட்சியாக நான் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒரு மனிதன் சாப்பிட்டு போடப்படுகின்ற எச்சை இலையாக காணப்பட்டேன் அப்பொழுது காற்று என் மேல் பட்டது அந்த காற்றில் நான் பறந்து மேலே போனேன் ஒரு கோபுரம் இருந்தது அந்த கோபுரத்தின் போய் நான் ஒட்டிக் கொண்டேன் அன்று முதல் தொடர்ந்து அந்த காற்று என் மேல் வீசுகிறவரை நான் கோபுரத்தின் மேல் தான் இருந்தேன் அந்த காற்று ஒரு வேலை நின்று போகுமானால் நான் அங்கிருந்து கிழிந்து போய் மறுபடியும் குப்பைக்கு போடபட்டவனாகிவிடுவேன்.

பரிசுத்த ஆவி மட்டும் என்னிடத்தில் இல்லை என்றால் எச்சை இலை தான் பரிசுத்தாவி மட்டும் என்னிடத்தில் இல்லை என்றால் நான் குப்பையில் தான் காணப்படுவேன். பரிசுத்த ஆவி மட்டும் நம்மிடத்தில் இல்லை என்றால் நான் இங்கே நிற்க தகுதியில்லை பரிசுத்த ஆவி தான் என்னை இங்கு தகுதிப்படுத்திக் இருக்கிறது என்று பகிர்ந்து கொண்டேன், அருமையான தேவனுடைய பிள்ளைகளே ஒவ்வொரு விசுவாசிகளும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள் பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிற அனைத்து காரியங்களும் ஆவிக்குரிய வரங்கள் ஆவிக்குரிய கனிகள் எல்லாவற்றையும் சீக்கிரமாய் பெற்றுக்கொள்ளுங்கள் இவைகளெல்லாம் வளர்ச்சிக்கு அடையாளம். பரிசுத்த ஆவி உன்மேல் வீசுகிற வரைக்கும்தான் நீங்கள் கேதுரு மரம் பரிசுத்த ஆவி உங்களை விட்டு போய்விட்டது என்றால் நீங்களும் குப்பைதான். பரிசுத்த ஆவியில் நீங்கள் வளர வேண்டும். ஆலயத்தில் தூண்களாக மாறவேண்டும் அதுதான் கேதுரு போல வளர்ச்சி உண்மையான நீதிமான்கள் பனையை போல் செழிப்பாகவும் கேதுரு மரத்தைப் போல் வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும் கர்த்தர்தாமே இந்த வார்த்தையை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *