மெய்யான ஒளி

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே  சாரோனின் ரோஜா ஊழியத்தின் மூலமாய் உங்களை சந்திப்பதில் மிக்கமகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கும் தியானிக்க போகின்ற வேதப்பகுதி யோவான் 1:1-15 வரை 

1.ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை வனாயிருந்தது. 2. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். 3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று: உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. 4. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. 5. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது: இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை. 6. தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பெயர் யோவான். 7. அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான். 8. அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான். 9. உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. 10. அவர் உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை. 11. அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. 12. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார். 13. அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள். 14. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார், அவருடைய மகிமையைக் கண்டோம், அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. 15. யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான்

            கர்த்தடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. நாம் இன்றைக்கு கிறிஸ்மஸ் தினத்தைப் பற்றி தியானிக்கபோகிறோம் கிறிஸ்மஸ் என்றாலே அந்த ஆராதனைக்கு எல்லோரும் சபைக்கு குடும்பம் குடும்பமாக வருவார்கள். மற்ற நாட்களிலே தடைபட்டாலும் இந்த நாட்களில் யாரும் தடைபடமாட்டார்கள். ஏனென்றால், இது விசேஷமான நாள் உலகத்திலே எத்தனையோ தலைவர்களின் பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள். ஆனால், அந்தத் தலைவர்கள் எல்லாம் திரும்பவும் உயிரோடு எழுந்ததே இல்லை மரித்துப் போனார்கள் அவ்வளவுதான். ஆனால், நம்முடைய தலைவர் இயேசு ராஜா மரித்தது மட்டுமல்ல உயிரோடும் எழுந்து விட்டார்.

நாம் வாசித்த வேத வசனங்களுக்கு நேராய் கடந்து போகலாம் யோவான் புத்தகத்தில் முதல் 14 வசனங்களில் சொல்லப்பட்ட காரியம் இயேசு எப்படி இருந்தார். எந்த நிலையில் எந்த ஸ்தானத்தில் இருந்தார் பிறகு எப்படி மாறினார் எப்படி இந்த உலகத்திற்கு வந்தார் என்றுதான் விவரமாக சொல்லப்பட்டுள்ளது. அந்த வார்த்தையை குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டும் முதலாவது பாருங்கள் அவர் ஆதியிலே வார்த்தையாக இருந்தார், அப்படியென்றால் வெறும் சத்தமாக ஓசையாக ஒலியாக இருந்தார். ஆதியிலே ஆதாமோடு இப்படித்தான் பேசினார் அதன் பின்பு அந்த வார்த்தை தேவனாகிய பிதாவானவர் இடத்தில் இருந்தது. அதாவது இயேசு பிதாவோடு கூட இருந்தார்

பின்பு அந்த வார்த்தை தேவனாகவே இருந்தது அநேகர் என்ன நினைக்கிறார்கள் என்றால் பிதா என்பவர் ஒருவர், இயேசு என்பவர் ஒருவர், பரிசுத்த ஆவி என்பவர் ஒருவர் நீங்கள் மூன்று கடவுளை வணங்குகிறீர்கள் என்ற தவறான எண்ணம் கொண்டு இருக்கிறார்கள் மூன்று கடவுள்கள் அல்ல அவர் ஒரே கடவுள் தான் அவர் பிதாவாக இருக்கிறார். அவர்தான் குமாரனாக இருக்கிறார் அவர்தான் ஆவியானவராக பரிசுத்த ஆவியாக காணப்படுகிறார் அவர் வார்த்தை அந்த வார்த்தை தேவனாயிருந்தது. இரண்டாம் வசனத்தை கவனியுங்கள் ஆதியிலே அவர் தேவனோடு இருந்தார் உலகத்தின் ஆரம்பத்திலே அவரும் தேவனும் ஒன்றாகத்தான் இருந்தார்கள். மூன்றாம் வசனத்தை கவனியுங்கள் சகலமும் அவர் மூலமாய் தான் உண்டாயிற்று உண்டானதொன்றும் இயேசு இல்லாமல் உண்டாகவில்லை.

இந்த உலகத்திலே உண்டானது எல்லாம் இயேசுவின் மூலமாகத்தான் உண்டானது உண்டானது ஒன்றும் இயேசு இல்லாமல் உண்டாக்கப்படவில்லை. எந்த ஒரு பொருளையும் பார்த்தால் அதற்குள் இயேசு இருக்கிறார். எந்த ஒரு அசையும் பொருளைப் பார்த்தாலும் அதற்குள் இயேசு இருக்கிறார் எந்த ஒரு அசையாத பொருளைப் பார்த்தாலும் அதற்குள் இயேசு காணப்படுகிறார். ஏனென்றால், அவரில்லாமல் இவைகள் உண்டாக்கப் படவில்லை அதற்கு அடுத்த வசனத்தை பார்க்கலாம் அங்கே இயேசுவுக்குள் ஜீவன் இருந்தது இயேசுவின் ஜீவன் மனுஷருக்கு ஒளியாய் இருந்தது என்ன ஒளி என்றால் வெளிச்சமாக இருந்தார்.

முதலில் சொன்ன ஒலி (சத்தம்) இரண்டாவது சொல்கிற ஒளி வெளிச்சம் முன்பெல்லாம் பார்த்தீர்களானால் ரேடியோ செட்டில் ஒலி ஒளி என்று எழுதி வைத்திருப்பார்கள் அதற்கு என்ன அர்த்தம் என்றால் ஒரு ஒலியானது சத்தம் மற்றொரு ஒளியானது வெளிச்சம் இந்த வித்தியாசங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இங்கே பாருங்கள் சத்தமும் அவர்தான் வெளிச்சமும் அவர்தான் எனவே அந்த ஜீவன் மனுஷருக்கு வெளிச்சமாக காணப்பட்டது. அந்த வெளிச்சத்தில் தான் இன்றைக்கும் நடந்து கொண்டிருக்கிறோம்.

அடுத்த வசனத்தை பாருங்கள் அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது இருள் அதைப் பற்றிக் கொள்ளவில்லை அந்த ஒளி இருளில் வருகிறது. ஆனால், இருள் அந்த ஒளியை ஆட்கொள்ள முடியவில்லை அருமையான தேவனுடைய பிள்ளைகளே இந்த கிறிஸ்மஸ் நாளிலே உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். நீங்கள் எல்லோரும் ஒளியின் பிள்ளைகள் ஒளியாகிய இயேசுவின் பிள்ளைகள் நீங்கள் ஒளியின் பிள்ளைகள் என்று சொன்னால் பாவமாகிய இருள் உங்களை தொடவே முடியாது.

நமக்கும் இருளுக்கும் சம்பந்தம் இருக்குமானால் நாம் யாரென்றால் இருளின் பிள்ளைகளாக இருக்கிறோம். வேத வசனம் தெளிவாக சொல்கிறது உங்களுக்கும் இருளுக்கும் சம்பந்தமே இல்லை மனுஷருக்கு ஒளியாய் இருக்கிற அந்த பிரகாசமான ஒளி இருளிலே பிரகாசிக்கிறது இருளானது அதைப் பற்றிக் கொள்ள முடியவில்லை அதை ஆட்கொள்ள முடியவில்லை இருள் என்பது பாவம், சாபம், துரோகம் இன்னும் ஏராளமாய் சொல்லலாம் இப்படிப்பட்டவைகள் உங்களிடத்தில் காணப்பட்டால், நீங்கள் இன்னும் இருளை விட்டு வெளியே வரவில்லை இயேசுவின் ஒளி உங்களிடத்தில் காணப்படவில்லை என்றுதான் அர்த்தம்.

அந்த ஜீவன் உங்களுக்குள்ளே இல்லை என்றுதான் அர்த்தம் இருளைவிட்டு வெளியே வந்து விட்டீர்கள் என்று சொன்னால் அப்பொழுது நீங்கள் யார் என்றால் வெளிச்சத்தின் பிள்ளைகள் நான் சொல்லவில்லை வேதமே உங்களுக்கு சொல்கிறது. அதன் பின்பு பார்த்தால் தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான் அவன் பெயர் யோவான் அவன் தன்னால் எல்லோரும் விசுவாசிக்கும் படி அந்த ஒளியை குறித்து இயேசு என்கிற ஒளியை குறித்து சாட்சி கொடுப்பதற்காக வந்தான். பூமிக்கு வந்த காரணம் எதற்கு என்றால் யோவான் போலவே இயேசுவாகிய ஒளியை குறித்து சாட்சி கொடுப்பதற்குதான்.

நீங்களும் அனுப்பப்பட்டு இருக்கிறீர்கள் நீங்கள் யாருக்கு சமம் என்றால் யோவானுக்கு சமமாக இருக்கிறீர்கள் ஸ்திரியினிடத்தில் பிறந்தவர்களில் யோவானை விட பெரிய தீர்க்கதரிசி ஒருவனும் இல்லை என்று இயேசுகிறிஸ்து சொல்கிறார். அப்படிப்பட்ட யோவானுக்கு சமமாக நம்மை தேவன் பார்க்கிறார் எப்படி என்றால் ஒலிக்குட்பட்டிருந்தால், அதாவது இயேசுவுக்கு சாட்சியாக காணப்பட்டால் யோவானுக்கு சமமாக்கபடுகிறீர்கள். மேலும் அவன் அந்த ஒளியல்ல என்று வேதம் சொல்கிறது அதுபோல நீங்கள் அந்த ஒளி அல்ல அந்த ஒளியை குறித்து சாட்சி கொடுக்கதான் வந்திருக்கிறோம்.

நாம் இயேசுவின் பிரகாசம் அல்ல இயேசுவைப் பிரதிபலிக்கிற விளக்காக காணப்படுகிறோம். இயேசு தான் வெளிச்சம் அந்த வெளிச்சம் நம்மிடத்தில் இருந்து வரவேண்டுமென்றால் விளக்காக மாறவேண்டும் உங்களிடத்தில் இருந்து வெளிச்சம் வந்தால் தான் அந்த வெளிச்சத்திற்கு சாட்சியாக இருக்கிறீர்கள். ஒரு விளக்கு எரிய வேண்டும் என்றால் எண்ணெய் தேவை? அதே போல் நம்முடைய விளக்கு எரிவதற்கு பரிசுத்த ஆவி தேவைப்படுகிறது பரிசுத்த ஆவியானவர் இல்லாமல் நாம் வெளிச்சம் கொடுக்க முடியாது பரிசுத்த ஆவியை குறித்து வேதத்தில் அதிகமாக சொல்லப்பட்டுள்ளது. இன்றைக்கு அநேக விசுவாசிகள் பரிசுத்த ஆவியானவரை குறித்த அக்கறையில்லாமல் காணப்படுகிறார்கள்.

ஒரு சகோதரி தொலைபேசியின் மூலமாக ஒரு சந்தேகம் கேட்டார்கள் நான் பரிசுத்த ஆவியில் நிறைந்து பேசுகிறேனா? இல்லை ஒளியின் தூதனின் பாஷையை பேசுகிறேனா? என்று எப்படி கண்டுபிடிப்பது என்று கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன் இதை கண்டுபிடிக்க ஆராய்ச்சி உங்களுக்கு தேவையே இல்லை. பரிசுத்ததோடு தேவனுடைய சிந்தனையோடு பேசினால் அது பரிசுத்த ஆவியின் நிறைவு, பாவம் செய்துவிட்டு வந்து மனதிலும் சிந்தனையிலும் தேவனேயில்லாமல் பேசினால் அது பிசாசின் ஆவி இதுதான் அடையாளம். இதில் பெரிய கண்டுபிடிப்பு ஒன்றும் இல்லை என்றேன் மனதும் சிந்தனையும் முழுமையாக தேவனைப் பற்றி இருந்தால் பேசினால் அவை தேவனுடைய பாஷையாகும் மனதும் சிந்தனையும் இருளடைந்து காணப்பட்டு  பேசினால் நிச்சயமாக அது பிசாசுதான் அதை சபையில் பேசினாலும் வேறு எங்கு பேசினாலும் அது பிசாசு பாஷையாகிய இலாட பாஷை தான் நன்றாக அறிந்து கொள்ளுங்கள் தேவனுடைய பாஷையை பேசுகிறீர்களா அல்லது லாட பாஷை பேசபோகிறீர்களா தேவனுடைய பாஷை பரிசுத்த ஆவியில் நிரம்பும் போது தான் வரும் லாட பாஷை எப்பொழுது வேண்டுமானாலும் வரும் நன்றாக கவனியுங்கள். மரியாள் இயேசுவை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் பரிசுத்த ஆவியானவர் தேவைப்பட்டார்.

தேவனுடைய பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது என்று சொல்கிறார் அப்போது மரியாள் பரிசுத்த ஆவியை பெற்றவர்களாக இருந்தார்கள் இன்றைக்கு விசுவாசிகள் பரிசுத்த ஆவி இல்லாமல் இருந்தார்களானால் உண்மையான கிறிஸ்துவை பெற்றுக்கொள்ள முடியாது அந்த உண்மையான அபிஷேகம் உங்களுக்குள்ளே தேவை. பிறந்தார் இயேசு பிறந்தார் என்று பாட்டு பாடுகிறோம் பிறப்பவர் பரிசுத்த ஆவியானவர் இல்லாமல் எப்படி உங்களுக்குள் பிறப்பார்? பரிசுத்த ஆவியானவர் வந்தால்தான் அவர்கள் உள்ளத்தில் இயேசு பிறக்க முடியும் மரியாள் இருந்த நாட்களில் எல்லா பெண்களை காட்டிலும் பரிசுத்தமாக காணப்பட்டார்கள். ஆனாலும், இயேசு அவர்களிடத்தில் பிறக்க வேண்டுமென்றால் பரிசுத்த ஆவி அவசியமாக காணப்பட்டது.

பரிசுத்த ஆவியின் அபிஷேகம் ஒவ்வொரு விசுவாசிக்கும் அவசியம் அது விசுவாசிகளுக்கு அடையாளம் விசுவாசி என்று சொன்னால் எதை வைத்து கண்டுபிடிக்கலாம் என்றால் அந்நியபாஷை வைத்துதான் அபிஷேகத்தை வைத்துதான், அந்நிய பாஷை பேசினால் அவர்கள் யாரென்றால் விசுவாசி அந்நியபாஷை பேசவில்லை என்றால் அவர்கள் அவிசுவாசி அப்பொழுது நீங்கள் விசுவாசிகள் என்றால் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டிருப்பீர்கள் ஒரு வசனத்தை வாசிப்போம்

லூக்கா 1:35 தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்தஆவி உன்மேல் வரும், உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும், ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்

நன்றாக கவனியுங்கள் மரியாள் கர்த்தருடைய ஆவியினால் நிரப்பப்பட்ட பிறகுதான் இயேசுவைப் பெற்றெடுத்தார்கள் இன்னொரு காரியம் பார்த்தால் இந்த மரியாள் எலிசபெத்தை வாழ்த்த போனார்கள் அந்த வசனத்தைப் படித்துப் பாருங்கள் லூக்கா 1:36 இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள், மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம்

எலிசபெத்துக்குள்ளும் பரிசுத்த ஆவியானவர் இருந்தார் எப்பொழுது பெற்றார்கள் என்றால் 

லூக்கா1: 40. சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து, எலிசபெத்தை வாழ்த்தினாள். 41. எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்டபொழுது, அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று, எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு

எலிசபெத் வயதானவர் அவர்களை கன்னிகையான மரியாள் வாழ்த்தினார்கள் வாழ்த்துவதற்கு வயது முக்கியமல்ல நல்ல மனது இருந்தால் போதும் இயேசுவை நீங்கள் வாழ்த்துகிறீர்களா? வாழ்த்துகிறீர்கள் எப்படி என்றால் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் என்று சொல்வதுதான் நான் வாழ்த்துகிறேன். உம்மை வாழ்த்துகிறேன் என்று அர்த்தம்.

ஒருமுறை சபைக்கு ஒரு ஊழியக்காரர் வந்திருந்தார் அந்த சபையில் ஆராதனை வேளையில் எல்லோரும் ஆவியில் நிறைந்து அந்நிய பாஷையில் பேசிக் கொண்டிருந்தார்கள், அப்போது இந்த போதகர் எழுந்து நின்று அந்நியபாஷையில் பேசுவதை நிறுத்துங்கள் என்றார். அந்நிய பாஷை பேசும்போது நிறுத்தலாமா நிறுத்தக்கூடாது. ஆனால், இவர் நிறுத்துங்கள் என்றார் எல்லோரும் பேசுவதை நிறுத்தி விட்டார்கள். நான் சொல்வதை கவனியுங்கள் எல்லோரும் அந்நியபாஷையில் தேவனை சபித்து கொண்டிருக்கிறீர்கள் என்றார் அந்நியபாஷை தேவன் எதற்கு நமக்கு கொடுத்திருக்கிறார் என்றால் தேவனை புகழ்வதற்காக வாழ்த்துவதற்காக மட்டும்தான் இன்றைக்கு அந்நியபாஷையை கண்ட இடங்களில் எல்லாம் பேசுகிறார்கள் தேவனுக்கு விரோதமாக பேசப்படும் வார்த்தைகூட மன்னிக்கப்படும். ஆனால், பரிசுத்த ஆவிக்கு விரோதமாய் பேசப்படும் எந்த வார்த்தையும் இம்மையில் மட்டுமல்ல மறுமையிலும் மன்னிப்பே இல்லை.

அந்நியபாஷையை பேசுகிறவர்களை பார்த்து நீங்கள் பரிகாசம் பண்ணுவீர்களானால் பயங்கரமான ஆபத்து உங்களுக்கு காத்திருக்கிறது என்று அர்த்தம் அதேமாதிரி அந்நியபாஷை பேசுகிறவர்களை சீர்ப்படுத்த வேண்டும். கண்டமாதிரி வாயில் வருவதெல்லாம் உளருவது அந்நியபாஷை அல்ல தேவனைப் புகழ்வது தான் அந்நிய பாஷை இங்கே பாருங்கள் சகரியாவின் வீட்டிற்கு மரியாள் போனார்கள் மரியாளுக்கு ஒரு இருபது வயது இருக்கும் எலிசபெத்துக்கு 60 வயதாக இருக்கும் இருபது வயதுள்ள மரியாள் 60 வயதுள்ள எலிசபெத்தை வாழ்த்தினார்கள். நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளுங்கள் உதாரணத்திற்கு நான் போதகர் நீங்கள் விசுவாசி நீங்கள் என்னை பார்த்து கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் என்று சொல்லும்போது அதை நான் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

அப்படி ஏற்றுக்கொள்ளும்போது நிச்சயமாக கர்த்தர் என்னை ஆசீர்வதிப்பார் என்னைவிட வயதில் மூத்தவர்களை பார்த்து நான் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் என்று சொல்லும்போது அவர்கள் என்னைவிட எவ்வளவு சிறியவன் நீ எப்படி என்னை வாழ்த்தலாம் என்று சொன்னால் நீங்கள் அதை நிராகரிக்கிறீர்கள் என்று அர்த்தம் வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை நல்ல மனதுபோதும் ஒருவரை ஒருவர் பார்க்கும்போது வாழ்த்திக் கொள்ளுங்கள ஒரு வசனத்தை வாசிப்போம் 

லூக்கா 1:41 எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்டபொழுது, அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று, எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு

அபிஷேகம் பெற்ற மரியாள் அபிஷேகம் பெற்ற எலிசபெத்தை வாழ்த்தும்போது வயிற்றில் உள்ள 6 மாத குழந்தை அபிஷேகத்தால் துள்ளினதாம்  நன்றாய் கவனியுங்கள் எலிசபெத் மரியாளுடைய வாழ்த்துகளை கேட்டபோது அவளுடைய வயிற்றுக்குள் இருந்த பிள்ளை துள்ளிற்று அவளும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டாள், நிரப்பப்பட்ட எலிசபெத் மரியாளை பார்த்து சொன்ன வார்த்தையை கவனியுங்கள்..

லூக்கா 1:42. உரத்த சத்தமாய்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது. 43. என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது

தேவதூதன் வந்து மரியாள் இடத்தில் இயேசு பிறப்பார் என்று சொன்னது மரியாளுக்கு மட்டும்தான் தெரியும் யேசேப்புக்கு தெரியாது பிறகு தேவதூதன் யோசேப்பினிடத்தில் போய் சொப்பனத்தில் உனக்கு நியமித்திருக்கிற மரியாள் இப்பொழுது பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாக இருக்கிறாள். நீ சந்தேகப்படாதே அவளை ஏற்றுக்கொள் என்று சொன்னார்

அதன் பின்பு பார்த்தால் எலிசபெத்துக்கு இந்த சம்பவம் தெரியவே தெரியாது. ஆனால், மரியாள் எலிசபெத்தை வாழ்த்தினபோது எலிசபெத்தின் மேல் பரிசுத்த ஆவியானவர் வந்தவுடனே மரியாள் யாரென்று வெளிப்படுத்துகிறார். பரிசுத்த ஆவியானவர் எதற்கு என்றால் தேவனை புகழ்வதற்கும் நமக்கு முன்பாக இருக்கிறவர்களை பற்றி அறிந்துகொள்வதற்காகதான் தேவன் பரிசுத்த ஆவியை உங்களுக்கு கொடுத்திருக்கிறார். கர்ப்பமாக இருப்பது எலிசபெத்துக்கு தெரியாது பாருங்கள் மரியாள் கர்ப்பமாக இருப்பதை பரிசுத்த ஆவியானவர் எலிசபெத்துக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.

என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது என்று சரியாக சொல்கிறார்கள் உண்மையான அபிஷேகம் உங்களுக்குள் இருக்குமானால் அந்த  ஆவியானவர் உங்களுக்குள் கிரியை செய்வார். ஆனால், உங்களுக்கு எதிராக எழும்புகிற சத்ருக்களை கூட அவர் வெளிப்படுத்துவார் நான் இரட்சிக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் ஒரு சகோதரி ஏவலினால் பாதிக்கப்பட்டு என்னிடத்தில் ஜெபிக்க வந்தார்கள் நான் அவர்களுக்கு ஜெபித்த போது அவர்களுக்கு விடுதலை ஆகிவிட்டது அவர்களுக்கு ஏவல் செய்தவர்கள் இதைப்பார்த்து மந்திரவாதியின் இடத்தில் போய் நீ என்ன ஏவல் செய்தாய் அங்கே கருப்பாக ஒல்லியாக ஒரு சிறுபையன் அதை ஜெபம் செய்து துரத்திவிட்டான் என்றார்கள்.

அதைக்கேட்ட மந்திரவாதி அன்று இரவே எனக்கு விரோதமாக ஒரு ஏவலை அனுப்பினான் அன்றிரவு நான் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் வேலையில் தேவன் என்னை தட்டி எழுப்பி தமது ஆவியினால் நிரப்பி அந்த பிசாசின் கிரியை காண்பித்தார். நான் என்ன ஆண்டவரே என்று கேட்டேன் அதற்கு அவர் உனக்கு விரோதமாக ஏவிவிட்டிருக்கிறார்கள் என்றார் நீங்கள் அனுமதித்தால் நான் என்ன செய்வது ஆண்டவரே என்றேன். அதற்கு அவர் இதை நான் அனுமதிக்கவில்லை அதை அழிக்க உனக்கு அதிகாரம் கொடுக்கிறேன் என்றார். அப்பொழுது சொன்னேன் இயேசுவின் நாமத்தினாலே போ பிசாசே என்றேன் உடனே அது ஓடிவிட்டது அன்றைக்கு இரவே எனக்கு விரோதமாய் ஏவிவிட்டவருக்கு கை கால் விழுந்து விட்டது. அது என்னை ஒன்றும் செய்ய முடியவில்லை இன்றைக்கு வரைக்கும் நான் இருக்கிறேன். ஆனால், அந்த மந்திரவாதி உயிரோடு இல்லை காரணம் என்னவென்றால் எனக்குள்ளிருந்த பரிசுத்த ஆவியானவர் நமக்கு பரிசுத்த ஆவியை கொடுத்திருப்பது எதிரியை ஜெயிப்பதற்கும் எதிரான சாத்தானை அழிப்பதற்கும் தான்.

லூக்கா 1:46. அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது. 47. என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது.

இப்பொழுது மரியாளும் அபிஷேகத்தில் நிறைந்து பேசுகிறார்கள் அடுத்ததாக 

லூக்கா 1:57. எலிசபெத்துக்குப் பிரசவகாலம் நிறைவேறினபோது அவள் ஒரு புத்திரனைப் பெற்றாள். 58. கர்த்தர் அவளிடத்தில் தம்முடைய இரக்கத்தை விளங்கப்பண்ணினாரென்று அவளுடைய அயலகத்தாரும் பந்துஜனங்களும் கேள்விப்பட்டு, அவளுடனேகூடச் சந்தோஷப்பட்டார்கள். 59. எட்டாம்நாளிலே பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணும்படிக்கு அவர்கள் வந்து, அதின் தகப்பனுடைய நாமத்தின்படி அதற்குச் சகரியா என்று பேரிடப்போனார்கள். 60. அப்பொழுது அதின் தாய்: அப்படியல்ல, அதற்கு யோவான் என்று பேரிட வேண்டும் என்றாள். 61. அதற்கு அவர்கள்: உன் உறவின் முறையாரில் இந்தப் பேருள்ளவன் ஒருவனும் இல்லையே என்று சொல்லி, 62. அதின் தகப்பனை நோக்கி: இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர் என்று சைகையினால் கேட்டார்கள்

பிள்ளைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று சகரியாவினிடத்தில் சைகையில் கேட்டார்கள், ஏன் அவர்கள் சைகையினால்  அவனிடத்தில் கேட்டார்கள் என்றால்? அவர் ஊமையாக இருந்தார் காரணம் ஆண்டவர் ஒன்று சொன்னால் அதை அப்படியே விசுவாசிக்க வேண்டும். ஆண்டவரையே இவர் சந்தேகப்பட்டார் எப்படி என்றால் எனக்கு வயதாகிவிட்டது என் மனைவிக்கும் வயதாகிவிட்டது எப்படி நீங்கள் சொல்வது நிறைவேறும் என்று கேட்டார் ஆகவே தேவன் இதை நிறைவேறும் வரைக்கும் நீ ஊமையாக காணப்படுவாய் என்றார்.

லூக்கா 1:63. அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி, இவன் பேர் யோவான் என்று எழுதினான், எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள். 64. உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவும் கட்டவிழ்க்கப்பட்டு, தேவனை ஸ்தோத்திரித்துப் பேசினான்.  67. அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, தீர்க்கதரிசனமாக

இயேசுவை பெறுவதற்கு முன்பும் அதன்பின்பும் மரியாள் எலிசபெத் சகரியா இவர்கள் எல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிறைந்தவர்களாய் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவர்களாக காணப்பட்டார்கள். இன்றைய நாட்களில் கிறிஸ்துமஸ் என்றால் புத்தாடை உடுத்துவது பிரியாணி சாப்பிடுவது இனிப்புகளை மற்றவர்களுக்கு கொடுத்து சந்தோஷப்படுவது இதுதான் கிறிஸ்துமஸ் என்று நினைத்தாள், அதுவல்ல கிறிஸ்துமஸ் அப்படியானால் எது கிறிஸ்மஸ் தேவனை எனக்குள் பெற்றுக் கொள்வதுதான் கிறிஸ்மஸ் தேவனை உங்களுக்குள்ளே பெற்றுக் கொள்வதுதான் கிறிஸ்மஸ் பரிசுத்த ஆவியானவர் உங்களிடத்தில் வரும்போது நிச்சயமாக இயேசு கிறிஸ்து மறுபடியும் உங்களுக்குள்ளே பிறப்பார் பரிசுத்த ஆவியானவர் உங்களிடத்தில் வரும்போது பரிசுத்த ஆவியானவரின் பெலன் உங்களுக்குள்ளே வரும்.

அப்போ 1:8  பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்

நீங்கள் நன்றாக கவனித்து பார்த்தால் எல்லாவற்றுக்கும் தேவை பரிசுத்த ஆவியானவர்தான் பரிசுத்த ஆவியானவரை பெற்றுக் கொள்ளவில்லை என்றால் நீங்கள் பரலோகமே செல்ல முடியாது. நான் சொல்லவில்லை வேதம் சொல்லுகிறது யோவான் மூன்றாம் அதிகாரத்தில் நிக்கெதேமு என்ற ஒருவர் இயேசுவை சந்திக்கிறார் அவர் பரிசுத்த ஆவியையும் ஞானஸ்தானமும் பெறவில்லை பழைய ஏற்பாட்டு காலத்தில் அவர் இயேசுவை சந்திக்கிறார் நீர் நல்ல போதகர் என்று சொன்னார். அதற்கு இயேசு நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன் தேவனை தவிர ஒருவனும் நல்லவன் இல்லையே ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான் பரலோகம் செல்ல வேண்டும் என்றால் ஞானஸ்நானம் முக்கியம் பரிசுத்த ஆவியும் முக்கியம் பரிசுத்த ஆவியானவர் சகல போதனைகளிலும் உங்களை போதித்து நடத்துவார் என்று வேதம் சொல்கிறது. 

யோவான் 14:6. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். 7. என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள், இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார். 8. பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும் அது எங்களுக்குப் போதும் என்றான்

மேற்கண்ட வசனத்தலே உங்களுக்கு தெளிவாக சொல்லப்படுகிறது பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள்ளே வந்து பாவத்தைக் குறித்தும். அதாவது தவறு செய்யும்போது உங்கள் மனது படபடவென்று அடித்துக் கொண்டு நான் செய்தது தவறு என உணர்த்தப்பட்டு வருந்தினால அப்பொழுது தான் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள்ளே இருக்கிறார் என்று அர்த்தம் அடுத்ததாக நீதியைக் குறித்தும் நியாயத் தீர்ப்பைக் குறித்தும் உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.

மறுபடியும் ஏற்கனவே பரிசுத்த ஆவியினால் செயல்பட்டவர்களை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன் மரியாள் பரிசுத்த ஆவியானவர் வந்ததினால் இயேசுவை பெற்றுக்கொண்டார்கள் இயேசுவை சுமந்து கொண்டிருந்த மரியாள் எலிசபெத்தை வாழ்த்தினபோது எலிசபெத்தின் வயிற்றில் உள்ள பிள்ளை ஆவியினால் துள்ளிற்று மரியாள் இயேசுவை சுமந்து கொண்டிருக்கிறார்கள் என்று எலிசபெத்திற்கு பரிசுத்த ஆவியின் மூலமாக தேவன் வெளிப்படுத்தினார். அருமையான தேவ பிள்ளைகளே இந்த கிறிஸ்துமஸ் ஏதோ ஒரு கிறிஸ்மஸ்ஸாக இல்லாமல் அபிஷேகத்தை பெற்று கொள்கிற நல்ல கிறிஸ்மஸ்ஸாக அமைய பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே நான் உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்கிறேன்.  

யோவான் 1:9 உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி

கடைசியாக உலகத்தில் வந்த எந்த மனுஷனாக இருந்தாலும் அவர்களுக்கு இயேசு என்கிற மெய்யான ஒளி தேவை எனக்குத் தெரிந்த ஒருவர் படிப்பறிவே இல்லாதவர் பள்ளி பக்கமே போகாதவர். ஆனால், அவர் இயேசுவை அறிந்து கொண்டார் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றுக்கொண்டார் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றபின்பு கல்விமானின் நாவை தேவன் அவருக்குத் தந்தருளினார் அன்னிய பாஷை பேசி தீர்க்கதரிசனம் சொன்னாரானால் அப்படியே நடக்கும் பரிசுத்த ஆவியை பெற்றால் நிச்சயம் உங்களால் கூட முடியும் 

யோவான் 1:10. அவர் உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை. 11. அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. 12. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்

ஆண்டவரை தெய்வம் என்று விசுவாசியுங்கள் அவராலே மட்டும் தான் இரட்சிக்க முடியும் என்று விசுவாசியுங்கள். அவராலே மட்டும் தான் உங்களை ஆசிர்வதிக்க முடியும் விசுவாசியுங்கள் அவரால் மட்டும்தான் உலகத்திலே உங்களை கறைபடாமல் காப்பாற்ற முடியும் என்று விசுவாசியுங்கள். அவராலே மட்டும்தான் உங்களை பரலோகத்திற்கு கொண்டு போக முடியும் என்று விசுவாசியுங்கள் அவரை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளவேண்டும் ஏற்றுக்கொண்ட அத்தனைபேரும் அவருடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.

யோவான் 1:13 அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்

நீங்கள் எப்பொழுது இயேசுவை ஏற்றுக் கொண்டீர்களோ அன்றைக்கே மனுஷருக்கு பிறந்த நீங்கள் மனுஷ ஜாதியான நீங்கள் தேவனுடைய பிள்ளைகளாக மாறுகிறீர்கள் மனுஷன் என்றால் அழிவுக்குறியவர்கள் தேவனுடைய பிள்ளை என்றால் அழிவுக்கு அப்பாற்பட்டவர்கள் எப்பொழுதுமே மரணமே வராது என்று அர்த்தமல்ல மரணம் நமக்கு ஒரு இளைப்பாறுதல் மனுஷருக்கு அது ஒரு முடிவு.

யோவான் 1:14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார், அவருடைய மகிமையைக் கண்டோம், அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது

ஆதியிலே தேவனோடு இருந்த வார்த்தை முதலில் மாம்சமாகிறது இரண்டாவது கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள் வாசம் பண்ணுகிறார். நீங்கள் முதலில் கிருபையில் நிறைய வேண்டும் அடுத்ததாக சத்தியத்தில் நிறைய வேண்டும் கிருபை என்பது தேவனுடைய இரக்கம்,  சத்தியம் என்பது கர்த்தருடைய வசனம் இவை இரண்டிலும் நாம் நிறைந்து காணப்பட வேண்டும் கடைசியாக ஒன்று சொல்கிறேன். இயேசு கிறிஸ்து 40 நாள் உபவாசம் இருந்து முடித்து மிகவும் பசியாயிருந்தார் அந்த நேரத்தில் பிசாசு இயேசுவை நோக்கி நீர் தேவனுடைய குமாரனாயிற்றே நீர் ஏன் பசியாக இருக்க வேண்டும்.

இந்த கல்லுகளை அப்பமாகும்படி சொல்லும் என்று சொன்னான் அதற்கு இயேசு வேதத்திலிருந்து ஒரு வசனத்தை சொல்கிறார். மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று வேதத்திளுள்ளதை எடுத்துச் சொன்னார் அவர் பிசானிடத்தில் தன் சொந்த அதிகாரத்தில் சொந்த வார்த்தைகளை அவனிடத்தில் பேசியிருக்கலாம் அவருக்கு அதிகாரம் உண்டு. ஆனால், அவர் வேதத்திலிருந்து அவனுக்கு சொல்கிறார்.

மறுபடியும் பிசாசு உங்களுக்கு மட்டும்தான் வசனம் தெரியுமா எனக்கும் தெரியும் என்று சொல்லி அவரை நோக்கி உப்பரிகையின் மேலிருந்து கீழே குதியும் உங்கள் தேவனுடைய தூதர்கள் உம்மை  ஏந்திக்கொள்வார்கள் என்று எழுதியிருக்கிறதே என்று சொன்னான். அதற்கு ஆண்டவர் உன் தேவனாகிய கர்த்தரை பரிட்சை பாராதிருப்பாயாக என்று எழுதி இருக்கிறதே என்றார். மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய் உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்கு காண்பித்து. நீ சாஷ்டாங்கமாய் விழுந்து என்னைப் பணிந்துகொண்டால் இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்.

அப்பொழுது இயேசு அப்பாலே போ சாத்தானே உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார். அப்படியானால்  உங்களுக்குள்ளே வசனமும் கிருபையும் நிறைந்திருக்க அதிகமாக ஜெபம் செய்யுங்கள் அதிகமாக வேத வசனத்தை வாசியுங்கள் எந்த அளவுக்கு வேதத்தை வாசிக்கிறீர்களோ அந்த அளவுக்கு நீங்கள் உயர்ந்து கொண்டே இருப்பீர்கள்

யோவான் 1:14 

அவருடைய மகிமையைக் கண்டோம், இவ்வசனப் பகுதியில் அவருடைய மகிமையைக் கண்டோம் என்று எழுதி இருக்கிறது மகிமை என்றால் நாம் ஜெபம் செய்யும்போது தேவ பிரசன்னத்தை உணர்வது மோசே கேட்கிறார். ஆண்டவரே நான் உம்மை காண வேண்டும் என்கிறார். அதற்கு ஆண்டவர் நீ என் மகிமையை பார்ப்பாய் என்கிறார். ஏனென்றால், என் பிரசன்னம் உனக்குப் போதும் என்னை நீ பார்த்தால் மரித்துப் போவாய் என்கிறார். நாம் ஜெபிக்கும் போதும் நாம் வேத வசனத்தை படிக்கும்போதும் அவருடைய பிரசன்னத்தை காண வேண்டும். ஆகவே, பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது கர்த்தர் தாமே இவ்வாக்கியங்களை உங்கள் வாழ்க்கையில் நிறைவேற்ற நான் ஜெபிக்கிறேன். கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென், அல்லேலூயா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *