மகிமை நிறைந்தவரே உம்மை
மனதார துதித்திடுவேன்
வானிலும் பூவிலும் மேலான நாமமே
உம்மை துதித்திடுவேன் (உயர்த்திடுவேன்)
1. கர்த்தாதி கர்த்தரே கருணையின் கடலே
கன்மலை வெடிப்பில் என்னையும் வைத்தீரே
காலமெல்லாம் பாடி துதித்திடுவேன்
அல்லேலூயா ஆமென்
2. அக்கினி மதிலே அரணான கோட்டையே
அல்லும் பகலும் அயராமல் காத்தீரே
அன்பின் தேவனே உம்மை நான் துதிப்பேன்
அல்லேலூயா ஆமென்
3. நெருக்கத்தில் என்னை தப்புவித்தீரே
நெருங்கி வந்து நெஞ்சத்தில் ஏற்றீரே
நேசரே உம்மை நான் துதித்திடுவேன்
அல்லேலூயா ஆமென்
Online Christian SongBook : மகிமை நிறைந்தவரே