போற்றுவேன் இயேசுவை புகழுவேன்
வாழ்த்துவேன் இயேசுவை வணங்குவேன்
உலகின் முன்னே அறிந்தவரை நான் போற்றுவேன்
தாயின் கருவில் என்னை காத்தவரை புகழ்வேன்
பேர்சொல்லி அழைத்து தெரிந்துகொண்ட வரை வணங்குவேன் (வாழ்த்துவேன்)
தம் புத்திர சுந்தரம் தந்தவரை நான் வணங்குவேன்
கிருபையால் என்னை மீட்டவரை நான் போற்றுவேன்
திருமுழுக்கால் என்னை காத்தவரை நான் புகழுவேன்
அருள்மாரி அபிஷேகம் செய்தவரை நான் வாழ்த்துவேன்
பரிசுத்த வாழ்வால் ஜெயம் தந்தவரை நான் வணங்குவேன்
என்னோடு என்றும் இருப்பேன் என்றோரை போற்றுவேன்
எனக்காக பரிந்திடும் பரமன் இயேசுவை புகழுவேன்
எனக்கோர் ஸ்தலத்தை ஆயத்தம் பன்னுவோரை வாழ்த்துவேன்
என்னை சேர்த்திட மீண்டும் வந்திடும் இயேசுவை வணங்குவேன்
Online Christian SongBook : போற்றுவேன் இயேசுவை