
சீகன்பால்க் இறந்த ஒருசில மாதங்களில் சென்னையில் மிஷனெரியாகப் பணிபுரிந்த ஜெர்மானியர் பெஞ்சமின் சூல்ச் ஐயர் என்னும் செருமானிய லூத்தரன் மறைபரப்பாளர், சிகன் பால்க் வேதாகமத்தில் முடிக்காமல் விட்டுச் சென்ற பழைய ஏற்பாட்டுப் பகுதிகளையும், தள்ளுபடியாகமத்தையும் மொழி பெயர்த்து முடித்து அச்சேற்றினார். இவருக்கு உதவியாக ஒரு பிராமனர் இருந்தார்.
சீகன்பால்க் தமிழில் பெயர்த்திருந்த பழைய ஏற்பாட்டுப் பகுதியை பெஞ்சமின் சூல்ச் ஐயர் 1723ல் அச்சேற்றினார். தொடர்ந்து 1726 , 1727, 1728ஆம் ஆண்டுகளில் பழைய ஏற்பாட்டின் எஞ்சிய பகுதிகளை பெஞ்சமின் சூல்ச் ஐயர் அச்சிட்டு வழங்கினார்.