இலங்கையில் தமிழ் வேதாகம பதிப்பு:
தரங்கம்பாடியில் வெளியான இரண்டாம் பதிப்பு 1741 – 1743 ஆண்டுகளில் இலங்கையில் கொழும்பு நகரில் மறுபதிப்பாக வெளியிடப்பட்டது. இலங்கைத் தமிழரின் மொழி வழக்கத்திற்கு ஏற்ப அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இலங்கையில் டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநராக இருந்த ஐ.பி. இம்ஹோஃப் (I.B,Imhoff) என்பவரின் ஆதரவின் கீழ் அது வெளியானது.