பெஞ்சமின் சூல்ச் ஐயர் ( Rev . Benjamin Schultze ) – 2

இவருக்கு ஊழிய வாஞ்சை அதிகம் இருந்தது. ஆனால் வேதாகமத்தை தமிழில் மொழி பெயர்ப்பதற்கு தேவையான தமிழ் அறிவு அவருக்கு போதுமானதாக இருக்கவில்லை. இவருடன் ஊழியம் செய்த இவருடைய உதவியாளர் பலர்கூட இவருடைய மொழிபெயர்ப்பில் குறைகளைக் கண்டனர். இது பிழைகள் நிரம்பியதாக இருந்தாலும், தமிழில் வேதாகமமே இல்லாமல் இருந்த அந்த நாட்களில் இது இமாலய வெற்றியாகும்.

புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பிலும் பெஞ்சமின் சூல்ச் ஐயர் திருத்தங்கள் செய்தார். புதிய ஏற்பாட்டின் திருத்திய இரண்டாம் பதிப்பு தரங்கம்பாடி அச்சகத்திலிருந்து 1724ல் வெளியிடப்பட்டது. அப்பதிப்பில் ஒவ்வொரு அதிகாரத்தின் தொடக்கத்திலும் ஒரு சுருக்கம் தரப்பட்டது புதிய கூறாக அமைந்தது. மீண்டும் தரங்கம்பாடி அச்சகத்திலிருந்து திருத்திய மூன்றாம் பதிப்பு 1758ல் வெளியிடப்பட்டது. அதைத் திருத்துவதில் பல மறைபரப்பாளர்கள் ஒத்துழைத்தனர். இது 40 ஆண்டுகள் மக்கள் பயன்பாட்டில் இருந்தது. இவர் தமிழில் மட்டுமல்ல வேறுபல நூல்களை தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வேதாகமத்தை மொழி பெயர்த்தார்.

பெஞ்சமின் சூல்ச் ஐயர் ( Rev . Benjamin Schultze ) – 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *