பர்த்த லோமேயு சீகன்பால்க் (Bartholomlaus Ziegenbalg) – 9

தமிழ் வேதாகம மொழிபெயர்ப்பு புதிய கிறிஸ்தவ விசுவாசிகள் பின்னோக்கிப் போகாமல் கிறிஸ்துவில் எப்போதும் நிலைத்திருக்க போதனைகள் மட்டும் போதாது வேதாகமமும் அவர்கள் கைகளில் அவர்களின் மொழியிலே கொடுக்கப்பட வேண்டும் என்று சீகன்பால்க் எண்ணினார். எனவே, சீகன், 1708ஆம் ஆண்டு, அக்டோபர் 17ஆம் நாள் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார்.

மொழி அவருக்குப் புதிது, அதோடு இந்தியாவில் அப்போது யாரும் வேதாகமத்தைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கவில்லை. மூல வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள சில வார்த்தைகளுக்கு நேரடியாக கிறிஸ்தவ வார்த்தைகள் இல்லாததால் இந்து மார்க்க புத்தகங்களிலிருந்தும், தமிழில் சாதாரணமாய் பயன்படுத்தப்பட்ட சில வார்த்தைகளையுமே பயன்படுத்த வேண்டியதாயிற்று. ரோமன் கத்தோலிக்க சபையார் ஏற்கனவே தமிழ் ஆராதனை முறையில் சில பதங்களை மொழி பெயர்த்திருந்தனர். இதை தன் மொழிபெயர்ப்பிற்கு உதவியாக பயன்படுத்தினார். ரோமன் கத்தோலிக்கர் அந்நாட்களில் தேவன் என்ற பதத்தை “சர்வேசுவரன்” என்று மொழி பெயர்த்திருந்தனர். எனவே சீகன்பால்க் அந்த வார்த்தையையே பயன்படுத்தினார். ஸ்கிமிட்டின் (Schmidt) கிரேக்க புதிய ஏற்பாடு, லத்தீன் வல்கேட், மார்ட்டின் லூத்தரின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு முதலானவைகளை ஆதாரமாகக் கொண்டு, டேனிய, போர்ச்சுக்கீசிய வேதாகமங்களின் உதவியுடன் புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு வேலையை 31 மார்ச் 1711ல் முடித்தார். பழைய ஏற்பாட்டில் ரூத் புத்தகம் வரை மொழிபெயர்த்திருந்தார். மொழிபெயர்ப்பு வேலையை செய்துகொண்டே முதல் புராட்டஸ்டண்ட் சபையை ஆரம்பித்தார்.

பர்த்த லோமேயு சீகன்பால்க் – அச்சு எந்திரம்: (Bartholomlaus Ziegenbalg) – 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *