பர்த்த லோமேயு சீகன்பால்க் (Bartholomlaus Ziegenbalg) – 8 (நான்கு மாத சிறைவாசம்)

நான்கு மாத சிறைவாசம்:

சீகனின் மிஷனெரிப் பணிக்கு, டேனிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் கவர்னர் ஹாசியஸ் பெரிதும் இடையூறாகவே இருந்தார். இந்தியர்கள் கிறிஸ்தவர்களாக மாறினால் வியாபாரம் பாதிக்கப்படும் என்றும் அவர் கருதினார். அதனால் அவர் பிறமதத்தவர்களைச் சிகனுக்கு விரோதமாய் ஏவி விட்டார். ஐரோப்பியர் பலர் இந்தியரை அடிமைகளாய் வேலை வாங்கி வந்தனர். பொறையாரில் போதகர் ஒருவர் தாய்நாடு திரும்பும் போது தன் அடிமையை ஒரு பெண்ணிடம் விற்று விட்டுச் சென்றார். சீகனும், புளுட்ச்சோவும் இதை எதிர்த்தனர்.

ஓர் ஏழை விதவைக்கு நியாயம் கோரும் விஷயத்தில் ஹாசியஸ் சீகன் மேல் கோபம் கொண்டார். தரங்கம்பாடி டேனியத் தொழிற்சாலை அலுவலர்கள் சீகன் பால்க்கையும் அவரது தோழர் புளுட்ச்சோசாவையும் நடத்திய முறையானது அடிப்படை மனித தன்மைக்கும் அபிமானத்திற்கும் அப்பாற்பட்டதாயிருந்தது. அவர்களது மிஷனெரி ஆர்வத்தை தணியச் செய்து, மிஷனெரி பணியை கைவிட்டு பின்னிடைச் செய்யும் நோக்கத்தோடு அவ்விடத்து அதிகாரி (Cornimander) அவர்களை இலச்சையுட்டும் பலவித இழி நடத்தைகட்கு ஆளாக்கினான். எந்தக் காரணமுமின்றி மிக அற்பமான காரியங்களைச் சாக்குக் காண்பித்து அவர்களை 1708 நவம்பர் மாதம் துப்பாக்கி ஏந்திய போலீசார் சீகனின் வீட்டிற்குள் நுழைந்து, ஜெபம் பண்ணிக் கொண்டிருந்த அவரைக் பகிரங்கமாக கைது செய்து கவர்னர் முன் நிறுத்தினர். தவறான குற்றச்சாட்டுகளால் சீகன் சிறையில் அடைக்கப்பட்டார். அவர்களை அடித்து “நாய்களே” என்றும் அழைத்தான். இதோடு திருப்தியடையாமல், வாரினால் அடிக்கப்போவதாக அவர்களை அச்சுறுத்தி வசைமொழியனைத்தையும் அவர்கள் மீது வாரிக்கொட்டினான். திடமனமும், மிஷனெரித் தரிசனமும் உடைய அவர் சூழ்நிலையைக் கண்டு சோர்ந்து போகவில்லை. நான்கு மாத சிறைவாசத்தில், இரண்டு ஜெர்மன் வீரர்கள் ஜன்னல் வழியாக காகிதமும், பேனாவும், மையும் சீகனுக்குக் கொடுத்து உதவ, “The God pleasing State of a Christian” , “The God pleasing Profession of Teaching” என்னும் இரு சிறிய புத்தகங்களை அவர் எழுதினார்.

பர்த்த லோமேயு சீகன்பால்க் – அச்சு எந்திரம்: (Bartholomlaus Ziegenbalg) – 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *