ஆயத்தம் :
சீகன் பால்க் தனது 16வது வயதில் இரட்சிக்கப்பட்டார். இந்த அனுபவத்திற்குப் பின்பு கல்லூரி மாணவராக இருக்கும் சமயத்தில் பின்வரும் சவால் நிறைந்த வார்த்தைகளை அவர் கேட்க நேர்ந்தது.
“புறஜாதியார் தேசத்திலே ஒரே ஒரு ஆத்துமா இரட்சிக்கப்படுவது, ஐரோப்பாவிலுள்ள ஒரு கிறிஸ்துவ தேசத்தில் 100 ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுவதற்கு சமம்”
இந்த வார்த்தைகளின் மூலமாக தேவன் சீகன் பால்க்கை மிசினரி ஊழியத்திற்கு அழைத்தார். இதில் சீகன்பால்க் சரீர பலவீனத்தினால், இவருக்குக் கொடுக்கப்பட்ட அருட்பணி அழைப்பை ஏற்றுக் கொள்ளத் தயங்கினார். இருப்பினும் இறைவனின் விருப்பம் என்று எண்ணி அதை ஏற்றுக் கொண்டார். உபத்திரவம், அடிக்கடி உண்டாகும் சரிரசுகவீனம் இவைகள் மத்தியில் சீகன் பால்க் தேவனுடைய அழைப்பை ஏற்றுக்கொண்டு இந்தியாவிற்கு மிசினெரியாக போக தன்னை ஆயத்தப்படுத்தினார். அவர் இந்தியாவிற்கு மிஷனெரியாக செல்வதற்கு தீர்மானித்த அந்த நாட்களிலே, ஐரோப்பா கண்டத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அனைத்து கிறிஸ்தவ சமுதாயமும் வெளிநாட்டிற்கு மிஷனெரியை அனுப்புவது வீண் என்றும் விருதா ஊழியம் என்றும் சொல்லுகின்ற ஒரு காலமாக இருந்தது சீகன்பால்க் இந்தியாவிற்குப் போவதை அநேக கிறிஸ்தவர்கள் விரும்பவில்லை,
ஐரோப்பாவில் செடிக்கு தண்ணீர் பாய்ச்சுகிற வேலையே செய்யாமல் கிடக்கும் பொழுது, ஏன் வெளிநாட்டிற்கு சென்று செடியை நடுகின்ற வேலையைத் தொடங்கவேண்டும்?. என்று விவாதித்து தர்க்கம் செய்யும் காலம் அது . இதன் காரணத்தால் , சீகன்பால்க் , புளுட்ச்சோ இருவருமே மிஷனெரி தகுதித் தேர்வில் தோல்வியடைய நேர்ந்தது . அவர்கள் இருவரையும் ஆலயத்தில் பிரதிஸ்டை செய்வதற்குக் கூட அங்கிருந்த பிஷப் மறுத்துவிட்டார் . இறுதியில் டென்மார்க் அரசன் 4 வது பிரடெரிக் இந்த இரண்டு விஷயத்திலும் நேரடியாக குறுக்கிட தரங்கம்பாடியில் அமைக்கப்பட்டுள்ள வேண்டியதாயிற்று . இறுதியில் அவர்கள் இருவரும் டர்தலோமாள் : சிகண்டநால் , ) க் அவர்களின் தேர்வில் வெற்றி பெற்றார்கள் . பின்பு ஒரு லுத்திரன் உருவச்சிலை ஆலயத்திலே பிரதிஷ்டை செய்யப்பட்டு இந்தியாவிற்கு பிராட்டெஸ்டெண்டு சபையால் அனுப்பப்பட்ட முதல் மிஷனெரிகளாக தங்கள் பயணத்தை தொடங்கினார்கள்.
பர்த்த லோமேயு சீகன்பால்க் (Bartholomlaus Ziegenbalg) – 6 (கடற்பயணம்)