பர்த்த லோமேயு சீகன்பால்க் (Bartholomlaus Ziegenbalg) – 4

கல்வி

சீகன்பால்க் ஆரம்பக் கல்வியை புல்ஸ்னிட்ஸ் மற்றும் காமென்ஸ் ஆகிய இடங்களில் உள்ள லத்தின் பாடசாலைகளில் பயின்றார். இவர் 12ஆம் வயதில் கோயர்லிட்ஸ் ( Goerlitz ) என்னும் இடத்திலுள்ள உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து 8 ஆண்டுகள் கல்வி கற்றார். பள்ளியின் பதிவேட்டில் அவரது பெயருக்கு அருகில் “சரத்திலும், ஆன்மாவிலும் வளர்ச்சியடையாத மாணவன்” (in body and soul an immature person) என எழுதப்பட்டிருந்தது. 1702ஆம் ஆண்டு சீகன்பால்க் பெர்லின் பட்டணத்தில் உயர்கல்விக்காகச் சேர்ந்தார். சுகவீனம் காரணமாக அவருக்கு 9 மாதங்கள் கல்வி தடைபட்டது. 1703ஆம் ஆண்டு இறையியல் கல்விக்காக ஹலே (Halle) சென்றார். அங்கு அவர் எபிரேய மொழியைக் கற்றார். அங்கும் அவர் அடிக்கடி சுகவீனமானார்.

“நான் எங்கிருந்தாலும் சிலுவை என்னைத் தவறாமல் பின் தொடர்கிறது”, என்று தன் சரீர பலவீனத்தைப் பற்றி சீகன் வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.,

பர்த்த லோமேயு சீகன்பால்க் (Bartholomlaus Ziegenbalg) – 5 (ஆயத்தம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *