பர்த்த லோமேயு சீகன்பால்க் (Bartholomlaus Ziegenbalg) – 2 (கல்வி)

கல்வி :

சீகன்பால்க் ஆரம்பக் கல்வியை புல்ஸ்னிட்ஸ் மற்றும் காமென்ஸ் ஆகிய இடங்களில் உள்ள லத்தின் பாடசாலைகளில் பயின்றார். இவர் 12ஆம் வயதில் கோயர்லிட்ஸ் ( Goerlitz ) என்னும் இடத்திலுள்ள உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து 8 ஆண்டுகள் கல்வி கற்றார். பள்ளியின் பதிவேட்டில் அவரது பெயருக்கு அருகில்

” சரத்திலும், ஆன்மாவிலும் வளர்ச்சியடையாத மாணவன் ” ( in body and soul an immature person) என எழுதப்பட்டிருந்தது. 1702ஆம் ஆண்டு சீகன்பால்க் பெர்லின் பட்டணத்தில் உயர்கல்விக்காகச் சேர்ந்தார். சுகவீனம் காரணமாக அவருக்கு 9 மாதங்கள் கல்வி தடைபட்டது. 1703ஆம் ஆண்டு இறையியல் கல்விக்காக ஹலே ( Halle ) சென்றார். அங்கு அவர் எபிரேய மொழியைக் கற்றார். அங்கும் அவர் அடிக்கடி சுகவீனமானார்.

“நான் எங்கிருந்தாலும் சிலுவை என்னைத் தவறாமல் பின் தொடர்கிறது”, என்று தன் சரீர பலவீனத்தைப் பற்றி சீகன் வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.,

பர்த்த லோமேயு சீகன்பால்க் (Bartholomlaus Ziegenbalg) – 3 (ஆயத்தம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *