தமிழின் வேறு எந்த உரைநடை அச்சு புத்தகமும் இல்லாத்தால் இவருக்கு தெளிந்த வார்த்தைகள் எதுவும் கிடைக்கவில்லை. சாதாரணமாக அவருடன் பழகின, பேசி வந்த மக்கள் பேசின தமிழையே நன்கு அறிந்திருந்தார். இலக்கியத் தமிழைப்பற்றி அவர் அதிகம் சிந்திக்கவில்லை. ஆகவே சாமானியர்கள் பயன்படுத்தும் தமிழிலேயே புத்தகத்தை வெளியிட்டார். மேலும் தமிழ் மொழி எழுத்துக்கள் இடைவெளியில்லாமலும், இரட்டை கொம்போ, மெய் எழுத்துக்கள் புள்ளியில்லாமலும் இருந்தது. இவர் பயன்படுத்திய வார்த்தைகள் சில கீழ்வருமாறு இருந்தது.
இவர் பயன்படுத்திய தமிழ் வார்த்தைகள் சில . . . .
1. தேவன் (தற்போதைய வார்த்தை) – சர்வேசுவரன் (சீகன் பால்கு வார்த்தை)
2. அப்பம் (தற்போதைய வார்த்தை)- கஞ்சி (சீகன் பால்கு வார்த்தை)
3. கழுதை (தற்போதைய வார்த்தை) – நீசவாகனம் (சீகன் பால்கு வார்த்தை)
4. ஆவி (தற்போதைய வார்த்தை) – ஸ்பிரித்து (சீகன் பால்கு வார்த்தை)
5. அத்தியிலை (தற்போதைய வார்த்தை) – வாழையிலை (சீகன் பால்கு வார்த்தை)
6. ஓய்வுநாள் (தற்போதைய வார்த்தை) – சவாது (சீகன் பால்கு வார்த்தை)
இது போன்ற சில குறைகள் இருந்தாலும் இவரது முயற்சி முதல் வெற்றி ஆகும். இவர் மூலமாகவே இந்தியாவில் புராட்டஸ்டண்ட் அல்லது சீர்திருத்த சபை ஆரம்பமாயிற்று.
இலங்கையில் தமிழ் வேதாகம மொழிபெயர்ப்பு:
முயற்ச்சி 17ம் நூற்றாண்டில் டச்சு மிஷனேரியாக யாழ்பாணத்திலிருந்த பிலிப்புஸ் பல்தேயஸ் என்பவர் வேதாகமத்தை தமிழில் மொழி பெயர்க்க ஆர்வம் கொண்டு, முதலாவது மத்தேயூ சுவிசேஷத்தை மொழி பெயர்த்தார். பின்பு அட்ரியானாஸ் டீ மே என்ற மிஷனேரி புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பை 1692ல் தொடங்கி முழுவதையும் செய்து முடித்தார். இதைத்தொடர்ந்து அடால்ப் கிராமர் என்ற மிஷனேரி தமிழ் கற்று வேதாகம மொழிபெயர்ப்பு வேலையை தொடர்ந்தார். ஆனால் முடிக்க முடியாமல் மரித்தார். 1746ல் பிலிப் ம மெல்லோ என்பவர் மொழிபெயர்ப்பை தொடர்ந்தார். இவர் யாழ்பாண தமிழில் புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு வேலையை முடித்தார். ஆனால் யாரும் பழைய ஏற்பாட்டு, புதிய ஏற்பாட்டு அடங்கிய முழு வேதாகமத்தையும் மொழிபெயர்க்கவில்லை.