பர்த்த லோமேயு சீகன்பால்க் – சீகன் பால்க் மரணம்(Bartholomlaus Ziegenbalg) – 13

சீகன் பால்க் மரணம்:

முதல் இந்திய புராட்டஸ்டண்ட் மிஷனெரியும், முதல் இந்திய வேதாகம மொழிபெயர்ப்பாளருமான பர்த்தலோமேயு சீகன்பால்க் தமிழ் மொழியில் முழு வேதாகமத்தையும் ஆர்வத்தோடு மொழி பெயர்த்துக் கொண்டிருந்த சமயத்தில் சீகன் பால்க்கை எதிர்பாராத வண்ணம் மரணம் சந்திக்க நேர்ந்தது. 23 பெப்ரவரி 1719ல், தன்னுடைய 36 வயதில், மனைவியையும், இரண்டு மகன்களையும் விட்டுவிட்டு தரங்கம்பாடியில் தன்னுடைய பூலோக பயணத்தை முடித்தார். அவரது உடல் தரங்கம்பாடியில் அவர் கட்டிய “புதிய எருசலேம்” ஆலயத்தில் பலிபீடத்தின் முன்பாக அடக்கம் செய்யப்பட்டது. சீகன் பால்க் தன்னுடைய மரணத்தைச் சந்தித்த விதத்தை அவருடன் நருக்கமாய்யிருந்த ஆர்னோ லேமன் பின்வருமாறு விவரிக்கிறார். ” தன்னுடைய உடல் மிகவும் மோசமான நிலையை அடைந்துவிட்டதை உணர்ந்த சீகன்பால்க் தன் வசமுள்ள எல்லாவற்றையும் 1719 பிப்ரவரி 10ம் தேதி ஒழுங்குசெய்ய முற்பட்டார். தன் கைவசமுள்ள வெடழியத்தின் பத்திரங்கள், பணம், கணக்கு வழக்குகள் எல்லாவற்றையும் தன் நண்பர் வசம் ஒப்படைத்தார். தன் குடும்பக் காரியங்களையும் ஒழுங்கு செய்தார். பின்பு இந்திய கிறிஸ்தவ நண்பர்களிடம் விடை பெற்றுக்கொண்டு விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருக்கும் படியாய் ஆலோசனை கூறினார். அவருடைய மரண நearner 1713 பிப்ரவரி 23ம் தேதியன்று , அதிகாலையில் எழுந்து தன் மனைவியோடும் , குழந்தைக ளோடும் குடும்ப ஜெபம் செய்தார் . ஆனால் காலை 9 மணிக்கு தன்னுடைய மரண வேளை மிகவும் நெருங்கிவிட்டதை அவர் உணர்ந்தார் அவர் நண்பர் க்ரண்ட்லர் ஜெயித்தார். ஆனால் அவரோ தேவனுடைய இராஜ்யம் செல்வதற்கு அதிக வாஞ்சையாயிருந்தார். ” தேவன் தாயே என்னுடைய எல்லாப் பாவங்களையும் அவருடைய இரத்தத்தினாலே சுத்திக்கரித்து, கிறிஸ்துவின் நீதியின் வஸ்திரத்தினாலே என்னை அலங்கரித்து அவருடைய இராஜ்யத்திற்குள் சேர்த்துக் கொள்வாராக ” என் சொல்லிவிட்டு தனக்கு மிகவும் பிரியமான “இயேசு என் நம்பிக்கை” என்ற ஜெர்மனிய கீர்த்தனையைப் பாடும்படி யாக சைகையினால் விருப்பம் தெரிவித்தார். பின்பு தன்னுடைய படுக்கையை விட்டு எழுந்து சென்று நாற்காலியில் அமர்ந்து தன் ஜீவனை விட்டார். “

பர்த்த லோமேயு சீகன்பால்க் – இந்த மொழிபெயர்ப்பின் குறைகள்: (Bartholomlaus Ziegenbalg) – 14

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *