பர்த்த லோமேயு சீகன்பால்க் – தமிழ் மொழிப்பற்று(Bartholomlaus Ziegenbalg) – 12

ஐரோப்பியக் கிறிஸ்தவர்களில் அநேகர் தமிழையும், தமிழரையும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் தமிழ் மொழியை ஏளனமாக எண்ணி ஒதுக்கினர். தமிழரை அநாகரீகராகக் கருதினர். சீகன்பால்க்கும், புளுட்ச்சோவும் தொடக்கத்தில் இந்த எண்ணத்திலேயே இருந்தனர். அவர்கள் தமிழுடனும் , தமிழருடனும் நெருங்கிய உறவு கொண்ட பின்னரே இந்த எண்ணம் நீங்கிற்று.

இதுபற்றி சீகன்பால்க் குறித்திருப்பதாவது :

“நானும் முதலில் தமிழ் மொழி தரம் குன்றியது என்றும் , தமிழர் வாழ்க்கை தாறுமாறானது என்றும் நினைத்தேன். தமிழ் மொழியைப் பயின்றேன் . தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்தேன். தமிழரோடு உரையாடினேன் , உறவாடினேன். அதன் பின்னர் என் எண்ணத்தை முற்றிலும் திருத்திக் கொண்டேன். தமிழ் மிகப் பழமையான மொழிகளில் ஒன்று . தமிழ் இலக்கண விதிகள் மிகச் சிறந்த முறையில் அமைக்கப் பெற்றுள்ளனர் . எழுத்தாணியால் பனை ஓலையில் அழகாக எழுதும் திறமை வாய்ந்தவர்கள் தமிழர்கள் . பல கலைகளில் புலமை எய்தியவர்கள் . வாணிபத்திலும் , ஓவியத்திலும் தேர்ந்தவர்கள் . அவர்களுடைய ஆட்சிச் சட்டமும் , நீதி நெறியும் மக்கள் நல வாழ்க்கைக்கு அரணானவை மனோதத்துவ வேதாந்தம் பொருட்களிலும் அவர்களின் நூல்கள் வியந்து போற்றுதற்குரியது . வேதசரித்திர நுட்பங்களை அவர்கள் உரிய முறையில் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.”

பர்த்த லோமேயு சீகன்பால்க் – சீகன் பால்க் மரணம்(Bartholomlaus Ziegenbalg) – 13

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *