மொழிபெயர்ப்புப் பணியோடு சீகன்பால்க் சில புத்தகங்களையும் எழுதினார். தென் இந்தியாவின் மதக் கொள்கைகள், பழக்க வழக்கங்கள், ஆசாரங்கள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவற்றைப் பற்றியும்.
நீதி வெண்பா, கொன்றை வேந்தன், உலக நீதி என்ற புத்தகங்களை ஒன்று சேர்த்து“ நானாவித நூல்கள்” என்ற புத்தகத்தையும், லத்தீன் மொழியில் தமிழ் இலக்கணம் (Grarmmatica Tamulica) , தமிழ் – ஜெர்மன் அகராதியையும் சீகன்பால்க் எழுதினார்.
சபையார் பாடுவதற்காகப் பல பாடல்களை மொழிபெயர்த்தார். ஐரோப்பிய ராகங்களுக்கு இசைந்த ( ஞானப்பாட்டுகளும், தமிழ் ராகங்களுக்கு ஏற்ற கீர்த்தனைகளையும் இயற்றினார். கிறிஸ்தவ விசுவாசத்தைப் பற்றிச் சிறிய வினா – விடை புத்தகமும் சீகனால் எழுதப்பட்டது.
பர்த்த லோமேயு சீகன்பால்க் – தமிழ் மொழிப்பற்று(Bartholomlaus Ziegenbalg) – 12