பர்த்த லோமேயு சீகன்பால்க் (Bartholomlaus Ziegenbalg):
பர்த்தலோமேயு சீகன்பால்க் 1682ஆம் ஆண்டு, ஜூன் 20ஆம் நாள் ஜெர்மனியிலுள்ள புல்ஸ்னிட்ஸ் ( Pulsnitz ) என்னுமிடத்தில் பர்த்தலோமேயு, கத்தரின் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். சீகனுக்கு நான்கு மூத்த சகோதரிகள் இருந்தனர். அவருடைய தந்தையார் செல்வந்தர், நவதானியங்களை விற்பனை செய்து வந்த ஒர் வணிகர், சீகன் பலவீனமான தேகத்தைக் கொண்டிருந்தார். சீகனுக்குச் சிறுவயதாயிருக்கும் போதே, இறைப்பற்று மிக்க அவரின் தாயார் இறந்து போனார். தாயை இழந்த இரண்டே வருடத்தில் தந்தையையும், அதன்பின்பு ஒரு வருடம் கழித்து ஒரு சகோதரியையும் இழந்தார் . அவர்களது தாய் மொழி ஜெர்மன் ( German ) ஆகும்.