நீரில்லா வாழ்வு ஏது (Hema John) | Neerila Vaazhvu Yedhu | Tamil Christian Songs | Rev. B. E. Samuel


நீரில்லா வாழ்வு ஏது
நின் அன்பில்லா ஜீவன் ஏது
இயேசுவே இயேசுவே இயேசுவே

1. மெய்யில்லா வாழ்வு ஏதற்கு
பொய்யான வாழ்வு எனது – 2
மெய்யான வாழ்வு தேவை – 2
மெய்யான ஒளியே உமது

2. நீரில்லா உலகம் ஏது
நினைத்து நான் பார்த்த போது – 2
நீரே உலகின் ஒளியாய் – 2
கொடுத்திட்டாய் வாழ்வை பலியாய்

3. பாவத்தில் வாழ்ந்த என்னை
பாசத்தால் அன்பாய் அழைத்தீர் – 2
நானும் வாழ்வு காண – 2
கண்ணீரை சிந்தினீரே

4. ஓடினேன் காடு மேடு
என்னை தேடினீர் ஜீவன் தந்து – 2
பாடுவேன் அன்புக் கூர்ந்து – 2
உம் கிருபையை தேடிவந்து

5. மெய்யான தெய்வம் நீரே
மெய்ப்பொருள் ஞானம் நீரே – 2
காணுவேன் உந்தன் மீட்பு – 2
பாடுவேன் நீசன் நானும்
பாடுவேன் தேவ தாசன் நானும்

Online Christian SongBook :  நீரில்லா வாழ்வு ஏது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *