நீங்கள் நிர்மூலமாகவில்லை | Rev. B.E. Samuel | Happy New Year – 2021

கிறிஸ்துவுக்குள் பிரியமான தேவனுடைய பிள்ளைகளே உங்கள் யாவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2021ஆம் ஆண்டு முழுவதும் நம்மை கண்மணிபோல் காப்பாற்றி உலகத்திலுள்ள எல்லா உபத்திரவங்கள், போராட்டங்கள், கஷ்டங்கள், நஷ்டங்கள், வியாதிகள், பெலவினங்கள் இன்னும் அநேக காரியங்களை கடந்து இந்த 2022 ஆம் ஆண்டை காணும்படியாக தேவன் கிருபை செய்திருக்கிறார். எத்தனையோ பேர் இந்த நாளை காண கூடாமல் போய்விட்டார்கள். ஆனாலும், தேவன் இந்த நாளை தந்து இந்த புதிய ஆண்டுக்குள் பிரவேசிக்க கிருபை செய்தபடியால் கோடாகோடி தோத்திரங்களை தேவாதி தேவனுக்கு செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம்.

இந்த ஆணடு உன் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு விசேஷித்த கிருபை நிறைந்த ஆண்டாக கொடுக்கபோகிறார். நீங்கள் கடந்து வந்த பாதைகளை எல்லாம் திரும்பிப் பார்க்கும் பொழுது கர்த்தர் நடத்திவந்த மகத்துவமான கிருபை நிறைந்த காரியங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாதவைகளாக இருக்கப்போகிறது தேவன் இந்த ஆண்டிலே நீங்கள் எதிர் பார்த்து இருக்கின்ற அநேக காரியங்களை செய்யப் போகிறார்.

உன் பிரச்சனைகள் மாறிப்போகபோகிறது, உன் எதிரிகள் காணாமல் போவார்கள், உன் கடன் பிரச்சினை உன்னை விட்டு தீர்ந்து போகும், எதிரிகளை குறித்த பயம் மரணத்தைக் குறித்த பயம் சுற்றியுள்ளவர்களால் ஏற்படும் திகில் அனைத்திலுமிருந்து இந்த ஆண்டு கர்த்தர் உன்னோடு இருந்து உனக்கு ஒத்தாசையாக மாபெரும் காரியங்களை செய்யப்போகிறார். நீ கையிட்டுச் செய்யும் எல்லா வேலையையும் அவர் ஆசீர்வதிப்பார்

மல்கியா 3:6 என்ற வேத வசனத்தை தேவன் இந்த ஆண்டின் வாக்குத்தத்தமாக கொடுத்திருக்கிறார். இந்த வேத வாக்கியத்தை நன்றாய் கவனித்து பாருங்கள் நான் கர்த்தர், நான் மாறாதவர், ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலம் ஆவதில்லை.


மல்கியா 3:6 “நான் கர்த்தர், நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை.”

இந்த வாக்குத்தத்த வசனத்திலிருந்து ஒரு மூன்று காரியங்களை நாம் இன்றைக்கு இந்த செய்தியின்; வழியாக பார்க்கபோகிறோம். இந்த ஆண்டின் ஒவ்வாரு நாளும் செவ்வையான பாதையாக மாற்றி இந்த ஆண்டு ஆசீர்வாதமாக நாம் பார்க்கப் போகிறோம்.

நான் கர்த்தர்:
இங்கு வேதம் என்ன சொல்கிறது என்று கவனித்துப் பாருங்கள். நான் கர்த்தர், கர்த்தர் என்ற அந்த வார்த்தை எவ்வளவு அதிகாரப்பூர்வமாக எவ்வளவு வல்லமை நிறைந்ததாக எவ்வளவு ஆச்சரியம் நிறைந்ததாக காணப்படுகிறது. நான் கர்த்தர் அப்படி என்றால் என்னை தவிர தெய்வமே இல்லை, கர்த்தரும் இல்லை இரட்சகரும் இல்லை என்று குறிப்பிடப்படுகிறது. நான் அல்பாவும் ஒமேகாவும் ஆதியும் அந்தமும் முந்தினவரும் பிந்தினவரும் இருக்கிறவரும் இருந்தவரும் வரப்போகிறவரும் ஆகிய கர்த்தர் என்று சொல்லுகிறதல்லவா.

“நான் கர்த்தர், நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை.” – மல்கியா 3:6

நான் கர்த்தர் நான் மாறாதவர் ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலம் ஆவதில்லை என்று, எனக்கு நிகராக ஒருவரும் இல்லை என்பதை இங்க வேதம் தெளிவுபடுத்துகிறது.

கர்த்தர் என்றால் சிருஷ்டிக்கிறவர், கர்த்தர் என்றால் உருவாக்கியவர் கர்த்தர் என்றால் உண்டாக்குகிறவர் தேவனாகிய கர்த்தர் ஏற்ற துணையை உண்டாக்குகிறவர் தேவனாகிய கர்த்தர் தொலைந்து போன உன்னை தேடுகிறாயிருக்கிறார் கர்த்தர் உன்னை உடுத்துவிக்கிறவராயிருக்கிறார் கர்த்தர் ஆசீர்வதிக்கிறவராயிருக்கிறார். கர்த்தர் காப்பாற்றுகிறவராயிருக்கிறார் தேசத்தை சுதந்திரமாக கர்த்தர் கொடுக்கிற வராக இருக்கிறார்
கர்த்தர் கர்ப்பத்தை அடைக்கவும் கர்ப்பத்தைத் திறக்கிறாயிருக்கிறார் கர்த்தர் நடுநின்று நியாயம் தீர்க்கிரவறாயிருக்கிறார் கர்த்தர் ஆதரிக்கிறவராக ஆறுதல் கொடுப்பவராக இருக்கிறார் கர்த்தர் தரிசனங்கள் மூலமாக தீர்க்கதரிசனம் மூலமாக நேரடியாக பேசுகிறாய் இருக்கிறார் தேவனாகிய கர்த்தர் தூரத்தில் இருந்தும் சமீபத்தில் இருந்தும் நம்மை அறிந்திருக்கிறார் தேவனாகிய கர்த்தர் தேசத்தை நீதிமான்கள் நிமித்தம் அழிவில்லாமல் பாதுகாக்கிறார் கர்த்தர் இறக்கம் உள்ளவராய் இருக்கிறார் தேவனாகிய கர்த்தர் அவருக்கு கீழ்ப்படிகிறவர்களுக்கு அவர்களையும் அவர்கள் சந்ததியும் ஆசீர்வதிக்கிறார். கர்த்தர் முதிர்வயதிலும் உங்களை ஆசீர்வதிக்கிறவராயிருக்கிறார் கர்த்தர் உன் பிரயாணத்தை ஆசீர்வதிக்கிறார் உன் போக்கையும் வரத்தையும் அவர் ஆசீர்வதிக்கிறவராக இருக்கிறார்;

நான் மாறாதவர்:
நான் கர்த்தர் என்று சொன்னவர் நான் மாறாதவர் என்றும் சொல்லுகிறார் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராகவே இருக்கிறார் அவர் வார்த்தைகள் மாறுவதில்லை அவர் செயல்கள்; மாறுவதில்லை அவருடைய எந்த ஒரு செயலும் மாறியதே இல்லை அவர் அற்புதங்கள் மாறுவதில்லை அதிசயங்கள் மாறுவதில்லை வாக்குதத்தங்கள் மாறுவதில்லை அவர் சொல்ல ஆகும் அவர் கட்டளையிட நிற்கும் என்று வேதம் சொல்லுகிறதல்லவா அவர் இருக்கிரவராகவே இருக்கிறார்.

சங் 102:27 நீரோ மாறாதவராயிருக்கிறீர்; உமது ஆண்டுகள் முடிந்துபோவதில்லை.

சங்கீதம் 102:27 ஆகிய வசனத்தில் சங்கீதக்காரன் சொல்லுகிறான் கர்த்தாவே நீ மாறாதவராய் இருக்கிறீர்; உமது ஆண்டுகள் முடிந்து போவதே இல்லை என்று. ஆம் பிரியமானவர்களே கர்த்தர் எந்த சூழ்நிலையிலும் எந்த நிலையிலும் அவர் மாறுவதே இல்லை அமெரிக்காவிலும் இந்தியாவிலும் மற்ற எல்லா நாடுகளிலும் வேத வார்த்தைகள் மாறுவதில்லை அவருடைய உபதேசங்கள் மாறவில்லை பரிசுத்தம் அவருடை நீதி மாறுவதேயில்லை இப்படி அநேக காரியங்கள் நாம் சொல்லலாம் அவர் மாறவில்லை மாறாதவராயிருக்கிறார் என்று ஆகையால் பிரியமானவர்களே ஆண்டவர் இந்த வருடம் கொடுத்த வாக்குவாதத்தை நன்ற கவனியுங்கள் நான் கர்த்தர் நான் மாறாதவர் என்று,

நீங்கள் நிர்மூலம் ஆவதில்லை:

யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலம் ஆவதில்லை நாம் இந்த ஆண்டு சரியாய் வாக்குத்தத்தத்தை புரிந்துக்கொள்வீர்கலனால் நிச்சயமாய் நீங்கள் நிர்மூலம் ஆவதில்லை வேதத்தை நன்றாக கவனியுங்கள் கொடுக்கப்பட்ட வார்த்தையை நன்றாய் கவனியுங்கள் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் யாக்கோபை குறித்து ஒரு காரியத்தை நீங்கள் சிந்திக்க வேண்டும். யாக்கோபு என்றாலே, அநேகருக்கு நினைவுக்கு வருவது யாக்கோபு எத்தன் என்பது மட்டும் தான். ஆனால், வேதம் சொல்கிறது யாக்கோபு குணசாலியாகவும் கூடாரவாசியாகவும் இருந்தான் என்று சொல்லுகிறது யாக்கோபு தன்னுடைய மாமனாகிய எத்திரோவை விட்டு தன் சொந்த தேசமாகிய காணானுக்கு வரும் பொழுது அவன் ஆண்டவரை நோக்கி யாபேக்கு நதிக்கரையிலே ஆண்டவரை நோக்கி மன்றாடி இராமுழுதும் போராடுகிறவனாக இருந்தான் அவனிடத்தில் ஜெபத்திலே போராடுகிற ஒரு குணம் இருந்தது. ஜெபத்திலே தேவனோடு அதிகமாய் போராடி ஜெபிக்கிறவனாய் ஆசிர்வாதத்தை கொடுத்தாலொழிய விடமாட்டேன் என்று கேட்கிற அல்லது ஜெபிக்கிற ஒரு அனுபவம் அவனுக்குள் இருந்ததை நாம் இங்கே பார்க்கிறோம். அவன் போராடி ஜெபித்து எதையும் தேவனிடத்தில் கேட்கிறவனாக எதையும் தேவனிடத்திலிருந்து பெற்றுக் கொள்கிறவனாக இருந்தான் என்று வேதம் தெளிவுபடுத்துகிறது.

சங் 104:35 பாவிகள் பூமியிலிருந்து நிர்மூலமாகி, துன்மார்க்கர் இனி இராமற் போவார்கள். என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி, அல்லேலூயா.

சங்கீதம் 104:35 வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது பாவிகள் பூமியிலிருந்து நிர்மூலம் ஆவார்கள் பாவிகள் தான் நிர்மூலம் ஆவார்கள் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் தேவனோடு போராடி ஜெபிக்கிறவர்களாகிய நீங்கள் போராட்ட குணமுள்ள ஜெபத்திலே போராட்ட குணமுள்ள நீங்கள் நிர்மூலம் ஆவதில்லை 2022 – ஆம் ஆண்டு போராடி ஜெபிக்கிற நீங்கள் நிர்மூலம் ஆவதில்லை என்று தேவன் உனக்கு வாக்குதத்தம் கொடுத்திருக்கிறார்.
2சாமு 7:9 நீ போன எவ்விடத்திலும் உன்னோடே இருந்து, உன் சத்துருக்களையெல்லாம் உனக்கு முன்பாக நிர்மூலமாக்கி, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்துக்கு ஒத்த பெரிய நாமத்தை உனக்கு உண்டாக்கினேன்.

2 சாமுவேல் 7:9 வசனத்தில் நாம் பார்க்கிறோம் நீ போகும் இடமெல்லாம் நான் உன்னோடு இருப்பேன் உன்னுடைய சத்துருக்கள் எல்லாரும் உனக்கு முன்பாக நிர்மூலம் ஆவார்கள். ஆனால், யாக்கோபின் புத்திரராகிய நீ நிர்மூலம் ஆவதில்லை இந்த நாளிலே இந்த வார்த்தையை ஆழமாக உங்களுக்குள் பதிய வைத்துக் கொள் அநேகர் சொல்லலாம். அநேகர் எழும்பலாம் உன்னை அழிக்காமல் விடமாட்டேன் என்று சொல்லலாம் இந்த முறை நீ தப்புவதில்லை என்று சொல்லலாம். இந்த முறை உன்னை அழிக்காமல் விடமாட்டேன் என்று சொல்லலாம். ஆனால், யாக்கோபின் புத்திரராய் நீ இருந்தாயானால் நான் சொல்லுகிறேன் நீ நிர்மூலம் ஆவதில்லை.
நீதி 2: 21செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். 22. துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.

நீதிமொழிகள் 2:21 வசனத்தில் நாம் பார்க்கிறப்பொழுது செம்மையானவர்கள் பூமியில் வாசம் பண்ணுவார்கள் மறுபடியும் சொல்லுகிறேன். செம்மையானவர்கள் பூமியில் வாசம் பண்ணுவார்கள் அதற்கு அடுத்த வசனம் சொல்கிறது துன்மார்க்கர் பூமியில் அறுப்புண்டு போவார்கள் துரோகிகள் அதில் இராமல் நிர்மூலம் ஆவார்கள். அருமையான தேவ பிள்ளையே செம்மையானவர்கள் யார் இவர்கள் யாக்கோபை போல தேவனுக்கு முன்பாக தன்னை செம்மைப்படுத்திக் கொள்கிறவர்கள். இவர்கள்தான் இந்த யாக்கோபின் புத்திரர்.
பிரியமானவர்களே ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் என்னவென்றால் யாகோபின் புத்திரராய் மாத்திரம் நடந்துகொள்ளுங்கள் யாக்கோபின் புத்திரர் என்றால் தேவனோடு போராடி வெற்றி பெறுகிறவர்கள் யாக்கோபின் புத்திரராக நீங்கள் இருப்பீர்களனால் வேதம் சொல்லுகிறது நீங்கள் நிர்மூலம் ஆவதில்லை அதை நானும் நம்புகிறேன்.
எண்; 24:17 அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத்புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும்.

எண்ணகமம் 24:17 என்ன சொல்கிறது என்றால் மோவாபின் எல்லையை நொருக்கி சேத்புத்திரர் எல்லோரையும் நிர்மூலமாக்குவேன் என்று சொல்லுகிறது ஆனால் யாக்கோபி புத்திரர்கள் என்று சொன்னால் அவர்கள் நிர்மூலமாவதில்லை.
இயேசு கிறிஸ்து வருவதற்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னமே அவரைக் காண்பேன் இப்பொழுது அல்ல அவரை தரிசிப்பேன் சமீபமாய் அல்ல ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிலிருந்து உதிக்கும் ஒரு செங்கோல் இஸ்ரேலில் இருந்து எழும்பும் என்று சொல்லியிருக்கிறார். அந்த யாக்கோபு யார் தெரியுமா அந்த இஸ்ரவேல் யார் தெரியுமா உன் ஆதி பிதாவாகிய இந்த யாக்கோபுதான் எனவே யாக்கோபின் புத்திரர் என்று சொல்லுகிற நீங்கள் தான் அந்த யாக்கோபின் புத்திரர். யாக்கோபு வம்சத்திலே இயேசு வந்துவிட்டது போல நீயும் அந்த வம்ச வழியாக யாக்கோபின் புத்திரராக இருக்கிறபடியால் இந்த ஆண்டில் நீ நிர்ழூலம் ஆவதில்லை என்று வாக்குதத்தம் தந்து உன்னை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *