நிலைத்திருக்கலாம் | Rev. B.E. Samuel

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே சாரோனின் ரோஜா பத்திரிக்கை மூலமாய் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கும் தியானிக்க போகின்ற வேதப்பகுதி மத்தேயு 13:18-30 வரை

தேவனுடைய வார்த்தைக்கு நேராய் கடந்து போகலாம். நாம் எப்படி இருந்தால் இயேசுவுக்குள் நிலைதிருக்கமுடியும் என்பதை நாம் பார்க்க போகிறோம். நாம் சிலரை பார்த்தால் சபைக்கு ஒருவாரம்வரை வருவார்கள், சிலர் ஒருமாதம் வரை வருவார்கள், சிலர் ஒரு வருடம்வரை வருவார்கள், ஞானஸ் நானம் கூட எடுப்பார்கள். ஆனால், அதற்கு பின்பு கிறிஸ்துவைவிட்டு பின்வாங்கி போய்விடுவார்கள.; ஏன் இப்படி போகிறார்கள்? அதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் இப்பொழுது நாம் வாசித்த வசனத்தின்படி.
மத்தேயு 13:21 – ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவர்களாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பார்கள், வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவார்கள்.

இடறலடையாமல் இருந்து நிலைத்து இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது சிலர் நிலைத்திருக்கிறது போல வேஷம் போடுவார்கள் அவர்களை எப்படி கண்டுபிடிப்பது உண்மையாக நிலைத்திருப்பவர்களையும் நாம் எப்படி கண்டறிவதென்று இன்றைக்கு பார்க்கப் போகிறோம். உங்கள் மத்தியில் 5 வசனங்களை சொல்லப்போகிறேன்.
யோவான் 3:36 – குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்: குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.
இந்த வசனத்தில் நமக்கு எழுதப்பட்டுள்ள காரியம் என்னவென்றால் எப்படி இருந்தால் அவன் நிலைத்திருப்பான் பிதாவின் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாய் இருக்க வேண்டும், அப்படியானால் இரட்சிக்கப்பட்ட ஆரம்பநாட்களில் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கவில்லையா என்றால் விசுவாசித்தார்கள். ஆனால், காலப்போக்கில் அது மறுதலித்து போனது. எப்படி என்றால்? அந்தக் கடவுளும் ஒன்றுதான் இந்த கடவுளும் ஒன்றுதான் அதற்கும் இதற்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை என்று தன் மனதில் ஒத்துபோவது. ஆனால், வேதாகமம் ஒத்துப் போவதில்லை வேதாகமத்தை பொறுத்தவரையிலும் ஆம் என்றால் ஆம்தான் இல்லை என்றால் இல்லைதான் எல்லாவற்றிற்கும் ஏற்றார்போல ஒத்துப்போவது இல்லை ஒரு வசனத்தை வாசிப்போம்.
மத்தேயு 13:21 – ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பான், வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான்.

ஆகிலும் வேரில்லை என்றால் அவன் நிலைத்து இருக்கமாட்டான். வேர் இல்லாததினால் கொஞ்ச காலம் மட்டும் தான் நிலைத்திருப்பான் அப்படியானால், அது என்ன வேர்? இயேசுவை தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கிற அந்த வேர் உங்களுக்குள் இருந்தால் நீங்கள் நிலைத்திருப்பீர்கள். இந்த வேர் எப்பொழுது மாறுகிறதென்றால் உபத்திரம் வரும்போது போராட்டம் பிரச்சனை கஷ்டம் ஏதாவது ஒரு விபத்து வரும்போதெல்லாம் மற்ற ஜனங்கள் நம்மைப் பார்த்து நீ என்ன இயேசுவை வணங்கினாய் அவர் வந்து உன்னை காப்பாற்ற கூடாதா இன்று இப்படிப்பட்ட கேள்விகள் எல்லாம் கேட்கும் போது நாம் அந்த இடத்தில் இடறி போகிறோம்.

ஏன் என்னிடத்தில் கூட அநேகர் சொன்னார்கள் என்னுடைய மகன் சாரோன் ஜெபராஜ் கர்த்தரிடத்தில் போனபோது உங்களுக்கு ஏன் இப்படி நேரிட்டது? நீங்கள் அந்த கடவுளை நேராக பார்த்து பேசினீர்களே அவருக்கு கண்கள் இல்லையா? என்று கேட்டார்கள். அந்த நேரத்தில் நானும் அவர் ஏன் இப்படி செய்தார் என்று சொல்லவில்லை தேவ சித்தம் எதுவோ அது மட்டும் தான் நடக்கும் என்று சொன்னேன். ஏனென்றால், எனக்கும் ஒருநாள் மரணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது மரணம் என்பது பிறந்த ஒவ்வொருவருக்கும் நியமிக்கப்பட்டிருக்கிற ஒரு நீதி எப்பொழுது வேண்டுமானாலும் நடக்கும் இயேசுவை விசுவாசிக்கிற விசுவாசத்தில் நிலைத்திருக்க வேண்டும்.
என்ன வந்தாலும் எது வந்தாலும் சரி. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிதாவின் குமாரன் என்று நான் விசுவாசிக்கிறேன். என்னை கொன்று போட்டாலும் நான் அவரை விசுவாசிக்கிறேன். என்னை என்ன செய்தாலும் நான் விசுவாசிக்கிறேன் என்ற மனநிலை உங்களுக்கு வருமா? அப்படி வந்தால் தான் நீங்கள் நிலைத்து இருக்கிறீர்கள் என்று அர்த்தம், இரஷ்ய நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவம் சோவியத் யூனியன் நாடாக இருந்த நாட்களில் நடந்த காரியம்.

இப்பொழுது ரஷ்யா துண்டு துண்டாக போய்விட்டது முழு நாடாக இல்லை. முன்பு பல நாடுகள் சேர்ந்து ஒரே நாடாக இருந்தது அந்த நாட்களில் என்ன நடந்தது என்றால் கம்யூனிஸ்ட் கொள்கையில் லெனின் என்பவர் அவருடைய கொள்கை மேலோங்கியிருந்தது, அந்தக் கட்சியில் கடவுள் இல்லை அதனால் அந்த தேசத்தில் எந்தக் கடவுளைப் பற்றியும் யாரும் சுவிசேஷம் சொல்லக்கூடாது என்று கட்டளை இருந்தது. அதில் ஒரு கிறிஸ்தவ குடும்பம் இருந்தது பொதுவாக இரட்சிக்கப்பட்டவர்கள் யாராலும் சுவிசேஷம் அறிவிக்காமல் இருக்கவே முடியாது இரட்சிக்கப்பட்டவர்கள் ஜெபிக்காமல் இருக்கவே முடியாது இரட்சிக்கப்பட்டவர்கள் வேதாகமத்தை வாசிக்காமல் இருக்கமாட்டார்கள். ஆகவே இந்த கிறிஸ்தவ குடும்பத்தில் கணவன் மனைவி இரண்டு வாலிப பெண் பிள்ளைகள் இவர்கள் நான்கு பேரும் இரட்சிக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகள், அந்த நாட்டில் வெளிப்படையாக இயேசுவை சொல்ல முடியாது. ஏனென்றால், காவலர்கள் எப்பொழுதும் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்குத் தெரிந்தால் தண்டனைதான். அதனால், இந்த இரட்சிக்கப்பட்ட குடும்பம் ஒரு வீட்டிற்குள் செல்வார்கள் அந்த வீட்டிலுள்ளவர்களிடத்தில் பேசுவார்கள். அதற்குப் பின்பு கூடி ஜெபிப்பார்கள்.

இப்படியாக நாள்தோறும் நடந்துகொண்டிருந்தது. ஒரு நாள் காவலர்கள் இவர்களை கண்டுபிடித்துவிட்டார்கள். ஜெபம் செய்யக்கூடாது என்று கண்டித்தார்கள். இரண்டாவது முறையும் கண்டுபிடிக்கப்பட்டு காவலர்கள், அவர்களை கண்டித்து விட்டு போனார்கள். தொடர்ந்து மூன்றாவது முறையும் பிடித்த உடனே நாங்கள் இரண்டு முறை உங்களுக்கு கண்டித்தும், மறுபடியும் நீங்கள் இந்த காரியத்தை செய்தபடியால் நீங்கள் இப்போது இயேசுவை தெய்வம் இல்லை என்று சொல்லிவிட்டு அவரை காரி துப்பிவிட்டு அவரைப் பற்றி சொல்லமாட்டோம் என்று சொல்லுங்கள் என்றார்கள். இப்பொழுது அந்த குடும்பத்தார் என்ன செய்வார்கள் என்று யோசித்துப்பாருங்கள். இயேசுவை சுவிசேஷமாக சொல்வேன் என்றால் தண்டனை கிடைக்கும் அவரை மறுதலித்தால் தண்டனை இல்லை இந்த நிலைமையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள் என்று நினைத்து பாருங்கள். ஆனால், அவர்கள் என்ன செய்தார்கள் என்றால் ஐயா நீங்கள் எங்களுக்கு தண்டனை கொடுத்தாலும் பரவாயில்லை கொன்று போட்டாலும் பரவாயில்லை நாங்கள் இயேசுவை மறுதலிக்கமாட்டோம் என்று சொன்னார்கள்.

உடனே அதிகாரிகள் உன்னை தண்டித்தால் தானே நீ மறுக்க மாட்டாய் என்று சொல்லி அவர் மனைவியை பிடித்து கட்டிப்போட்டு எல்லோருக்கும் முன்பாக மனைவியின் உடைகளை கழற்றி நிர்வாணம் ஆக்கினார்கள். இயேசுவை விட்டு ஓடிப் போகிறாயா? இல்லையா? என்றார்கள் அதற்கு அவர் மனைவி சொல்கிறார்கள் இது அழிந்து போகிற சரீரம் நீங்கள் கவலைப்படாதீர்கள் இயேசுவை மட்டும் மறுதலித்து விடாதீர்கள். அந்தத் தாயாரின் மன நிலைமை பாருங்கள் அவர்கள் நிர்வாணமாய் இருக்கிறார்கள் அந்த நிலையிலும் இது அழிந்து போகிற சரீரம் எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை இயேசுவை மாத்திரம் மறுதலித்து விடாதீர்கள் என்று சத்தமிட்டு கத்தினார்கள். இதை சொன்ன பின்பு அவர் இயேசுவை மறுதலிக்கவில்லை அடுத்தது என்ன செய்தார்கள் என்றால் அவர்களின் இரண்டு வாலிப பெண் பிள்ளைகளையும் பிடித்து கட்டினார்கள் மனைவியை மட்டும் நிர்வாணமாக்கினால் நீ இயேசுவை மறுதலிக்க மாட்டாய் ஏற்கனவே தகப்பனை நிர்வாணமாக்கி விட்டார்கள் இரண்டு பெண் பிள்ளைகளையும் நிர்வாணமாக்கபோகிறோம் என்று சொல்லி பெற்ற தாய் தகப்பன் முன்பாக அந்த பெண் பிள்ளைகளை நிர்வாணமாக்கினார்கள். பெற்ற பிள்ளைகளை தன் கண்களுக்கு முன்பாக நிர்வாண படுத்தும்போது அவர்கள் மனநிலை எப்படி இருக்கும் பாருங்கள். ஆனால், பிள்ளைகள் என்ன சொல்கிறார்கள் அப்பா தயவுசெய்து இயேசுவை மட்டும் மறுதலித்து விடாதீர்கள். நாங்கள் இன்றைக்கு மரிப்போமா நாளைக்கு மரிப்போமா என்று தெரியாது. இந்த உடலை மட்டும் தான் இவர்களால் அழிக்க முடியும் நம் இயேசுவை இவர்களால் அழிக்க முடியாது.

இயேசுவை மறுதலித்து விடாதீர்கள் என்று அந்த இரண்டு வாலிபபெண்பிள்ளைகளும் கத்தி சொன்னார்கள் அப்பா அம்மாவின் கண்களுக்கு முன்பாக கடைசியில் இவ்வளவு செய்து அவர் இயேசுவை மறுதலிக்கவில்லை. அந்த இரண்டு பிள்ளைகளையும் தன் தாய் தகப்பனுக்கு முன்பாக சித்திரவதை செய்து கொன்று போட்டார்கள் அதன்பிறகு மனைவியை சித்திரவதை செய்து கொன்று போட்டார்கள் புருஷனுடைய கண்களுக்கு முன்பாக கடைசியில் இவ்வளவும் செய்து அவன் இயேசுவை மறுதலிக்கவில்லை என்று அவனையும் கொன்று போட்டார்கள். ஆனால், அந்த ரஷ்ய நாடு என்ன ஆயிற்று தெரியுமா அந்த நாடு முழுவதும் உடைந்து சுக்குநூறாக துண்டு துண்டாய் போயிற்று. இப்போது ரஷ்யா நாட்டில் யார் வேண்டுமானாலும் சுவிசேஷம் சொல்லலாம் அந்த நான்கு பேரின் ரத்த தியாகம்தான் அந்த ரஷ்ய நாட்டின் கிறிஸ்துவுக்கு விரோதமாய் இருந்த பெரியதொரு எதிர்ப்பை முறித்துப் போட்டது. ஏன் இந்த குடும்பம் உயிர் தியாகம் செய்தார்கள் என்றால் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறதில் என்ன வந்தாலும் எது நடந்தாலும் உறுதியாய் இருந்து நிலைத்திருக்க வேண்டும் என்ற ஒரு ஸ்திரமான ஒரு நோக்கம் இருந்தது. முதலில் நீங்கள் எப்படி இருந்தீர்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறதில் என்ன வந்தாலும் எது நடந்தாலும் இயேசுவின் அன்பை விட்டு என்னை பிரிக்க மாட்டாதென்று நிச்சயிக்கப்பட்ட உறுதியில் இருந்தீர்கள்.

ரோமர் 8:28-29 அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த்தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். 29 தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்.யாரையெல்லாம் அவர் தாயின் வயிற்றில் உருவாகும் முன்னே தெரிந்து கொண்டாரோ அவர்கள் பிறக்கும் போதே அவர்களை இயேசுவின் பிள்ளைகள் என்று முன் குறிக்கிறார்.

ரோமர் 8:30 வசனத்தை வாசித்தோம் என்றால் தேவன் எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார், எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்,எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.
பாருங்கள் அவர் தெரிந்து கொண்டார் முன் குறித்தார் அழைத்திருக்கிறார் அழைத்ததோடு மட்டுமல்லாமல் நீதிமானாய் மாற்றுவதற்கு வல்லமை உள்ளவராக இருக்கிறார் இப்பொழுது நீங்கள் எல்லோரும் யார் என்றால் நீதிமான்கள் நீதித்துறையில் இருக்கிற நீதிபதி உண்மையான நீதிபதி இல்லை உண்மையான நீதிமான் யார் என்று சொன்னால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே முழுகி ஞானஸ்நானம் எடுத்து பரிசுத்த ஆவியை பெற்றவர்கள் மட்டுமே உண்மையான நீதிமான்கள்.
அவர்கள் படித்ததினால் நீதிபதியாக வந்திருக்கிறார்கள் உலகத்தை நியாயம் தீர்க்க அதிகாரம் அவர்களுக்கு இல்லை. உலகத்தை நியாயம் தீர்க்க நமக்கு தான் அதிகாரம் வைத்திருக்கிறார். எவர்களை நீதிமான்கள் ஆக்கினாரோ அவர்களை மகிமைப் படுத்தியிருக்கிறார். இவன் என் மகன் இவள் என் மகள் என்று எல்லோருக்கும் முன்பாக நம்மை மகிமைப்படுத்தி உயர்த்தி காண்பிக்கிறார் ஆசீர்வதிக்கிறார் மகிமையினாலே உன்னை நிறைத்து வைக்கிறார். தெரிந்து கொண்டதோடு மட்டும் விடவில்லை முன் குறிக்கிறார் முன்குறித்ததோடு மட்டுமல்லாமல் ஏற்ற வேளையில் அழைக்கிறார் அழைத்ததோடு மட்டுமல்லாமல் நீதிமான்களாக்குகிறார். நீதிமான் ஆக்குகிறது மட்டுமல்லாமல் மகிமை படுத்துகிறார். எல்லாருக்கும் முன்பாக உங்களை ஆசீர்வதிக்கிறார். அதோடு மட்டும் நிறுத்தவில்லை

ரோமர் 8: 31 இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? 32 தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?
இயேசுகிறிஸ்து தம்முடைய ஜீவனை உங்களுக்கும் எனக்கும் கொடுத்திருக்கிறார் என்றால் மற்றதை எல்லாம் நமக்கு கொடுக்காமல் இருப்பாரா பிதா இயேசுவை அழைத்து இவர்களுக்கு உன் ஜீவனைக் கொடுத்து விடு என்றார் உங்களுக்காக இயேசுகிறிஸ்து தன் உயிரையே கொடுக்க துணிந்துபோது மற்ற எவைகளை உங்களுக்கு கொடுக்காமல் இருப்பார். நிச்சயமாய் நான் சொல்கிறேன் நீங்கள் விசுவாசித்தால் அது உங்களுக்கு கொடுக்கப்படும்.

ரோமர் 8: 33-39 வரை
33 தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். 34 ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர், அவரே எழுந்துமிருக்கிறவர், அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர், நமக்காக வேண்டுதல்செய்கிறவரும் அவரே. 35 உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும், 36 கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? 37 இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. 38 மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், 39 உயர்வானாலும், தாழ்வானாலும், வேறொந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.

இதுதான் அவர் மேல் நாம் வைத்திருக்கிற நம்பிக்கை உறுதியாய் இருப்பது இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று விசுவாசிப்பது. அநேகர் இன்றைய நாட்களில் ஒருவரது மனதை புண்படுத்தி காயப்படுத்தி கலைத்து விட்டுப் போய்விடுகிறார்கள். நமது இந்திய நாட்டு கலாச்சாரம் எப்படி என்றால் மிகவும் பக்திவைராக்கியம் உள்ளவர்கள். தவறான எண்ணம் உள்ளவர்கள் அல்ல ஒரு மரத்தையே புடவை சுற்றி அதையே தெய்வமாய் மாற்றி விடுவார்கள். ஜனங்கள் கடவுளை வணங்க வேண்டும் என்றால் கல்லை தொழுதாலும் மரத்தை தொழுதாலும் அதற்கு புடவை சுற்றி மிகவும் பக்தியோடு தொழுதுகொள்வார்கள். ஆனால், வெளிநாட்டவர் அப்படியல்ல எந்த ஒரு தெய்வீக காரியமா இருந்தாலும் எதைக் குறித்தும் பயப்படாமல் தெய்வ பயம் மற்றவர்களாய் எல்லா அக்கிரமம் அநியாயத்தையும் அவர்கள் தான் செய்வார்கள். வெளிநாட்டில் இயேசுகிறிஸ்து விரோதமாய் வெளியிட்ட இந்த படத்தைப்பற்றி பார்க்கும்போது டாவின்சி கோட் என்ற திரைப்படம் அவர்கள் வெளியிட்டார்கள் இயேசு கிறிஸ்து திருமணமானவரைபோல சித்தரித்திருந்தார்கள் இதைப்போல அக்கிரமமான காரியங்களை தமிழ் மக்கள் செய்யமாட்டார்கள்.

தமிழ் மக்கள் எப்போதுமே பண்பாடு உள்ளவர்கள் ஒரு விஷயத்தை நம்பினார்கள் என்றால் அப்படியே உறுதியாய் நம்புவார்கள் நமது தமிழ்நாட்டின் மக்களைப்போல பண்பாடு நாகரீகம் இல்லாத அநேகர்கள் தான் இப்படிப்பட்ட காரியங்களை செய்வார்கள் நமது தமிழக ஜனங்கள் பொருத்தவரை வேதத்தில் எப்படி எழுதப்பட்டுள்ளதோ அதை அப்படியே நம்புகிறவர்கள் கைகொள்கிறவர்கள் ஆனால் வெளிநாட்டவர் அப்படி அல்ல துணிகரமாய் கதைகட்டுவதிலும் கட்டுக்கதை விடுவதிலும் தேறினவர்கள் ஆகவே தான் அந்த திரைப்படம் பாதியிலே நின்று போய்விட்டது அது நமக்கு முக்கிய காரியம் அல்ல ஆனால் அவர்களுக்கு உண்டான அந்த முரண்பாடான எண்ணம் எவ்வளவு துணிகரமானது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் ஆனால் இவ்வளவு துணிகரம் நமது ஜனங்களுக்கு ஏற்படாது ஒரு கத்தோலிக்க பாதிரியார் திறன்பட பேசுவதிலும் தைரியமாய் உபதேசித்து கொண்டும் இருந்தார் கிறிஸ்துவ சமுதாயத்திற்கு எதிரான பிரச்சனை நடந்து கொண்டிருந்த நாட்களில் இப்படிப்பட்ட ஒரு கேள்வி அவருக்கு கேட்கப்பட்டது நீங்கள் கிறிஸ்தவராக இருப்பதினால்தான் இவ்வளவு திறன்பட பேச்சும் தைரியமான உபதேசமும் கொடுப்பதற்கு காரணம் என்று கேட்டார்கள்.

அதற்கு அவர் அப்படி அல்ல நான் கிறிஸ்தவனாய் மாறுவதற்கு முன்னே தமிழனாய் பிறந்துள்ளேன் ஆகவேதான் இப்படி பேசுகிறேன் என்னுடைய வித்தானது தமிழன் என்னுடைய விசுவாசம் தான் இயேசு கிறிஸ்து அந்தப் பாதிரியார் பேசின காரியங்கள் தமிழ் நாட்டைன் பண்பாட்டை குறித்தும் கலாச்சாரத்தைப் பற்றியும் அவர் பேசின அநேக காரியங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது தமிழ் புதிதாக வந்தது அல்ல ஏதோ 500 1000 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது அல்ல தமிழானது ஆதி முதற்கொண்டு இருக்கிறதென்பதை அவர் நிரூபித்துக் காண்பிக்கிறார் ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும் இயேசு கிறிஸ்து தேவன் என்று விசுவாசிக்கிறதில் உறுதியாக இருக்க வேண்டும் இரண்டாவதாக.

யோவான் 5:24 என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு, அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டுநீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
இவ்வசனத்தில் சொல்கிறது என்னவென்றால் வேத வசனத்தை அப்படியே நம்ப வேண்டும் அப்படியே விசுவாசிக்க வேண்டும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் வேத வசனத்தை இது தேவனுடைய வாக்கு தேவனுடைய தீர்க்கதரிசனம் இது தேவனால் எனக்கு எழுதப்பட்ட வார்த்தை என்று நம்பி விசுவாசித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் அநேகர் வேதாகமத்தை பிரித்து பேசுகிறார்கள்.

அது எவ்வளவு ஆபத்து என்று தெரியவில்லை வேதாகம வசனங்களை பிரித்து பேசுகிறவர்களிடத்தில் சேரக்கூடாது அவர்களிடத்தில் பேசவும் கூடாது ஏனென்றால் வேத வசனத்தை தாறுமாறாக பேசுகிறவர்கள் தவறானவர்கள் அதாவது நானாக இருந்தாலும்கூட வேத வசனத்தை மாற்றியோ மறுத்தோ என்ன சொன்னாலும் கேட்க வேண்டியதில்லை இப்படி பேசுகிறவர்கள் என்ன சொன்னாலும் கேட்கவேண்டிய கட்டாயமோ அவசியமோ இல்லை வேத வசனம் பொதுவானது அது இருபுறமும் கருக்குள்ள பட்டயம் என்று நாம் நம்ப வேண்டும் வேத வசனம் ஆகிய பட்டயத்தை நான் எடுத்து ஓங்கும் போது முதலில் அது என்னை வெட்டும் அதை வீசும்போது அடுத்தது உங்களை வெட்டும் வேத வசனம் ஆகிய வார்த்தை வெட்டின மாதிரி காணப்பட்டால்.

அது முதலில் என்னை வெட்டினது என்று அர்த்தம் போதகர் ஏன் எப்பொழுதும் கண்டிப்பாக பேசுகிறார் என்று நினைப்பீர்கள் இல்லை இல்லை முதலாவது அந்த வசனம் என்னை கண்டித்த பிறகு தான் உங்களிடத்தில் கடந்து வருகிறது அது இருபுறமும் கருக்குள்ள பட்டயம் அந்த பட்டயத்தை எடுத்து ஓங்கும்போது முதலாவது என்னை வெட்டுகிறது அதன் பிறகு வீசும்போது உங்களையும் வெட்டுகிறது ஆகவே உங்களுக்கு மார்பில் அடி என்றால் எனக்கு முகத்தில் அடி எனவே இரண்டு பேருக்கும் தான் வெட்டப்படுகிறது உங்களுக்கு ஆறுதல் வந்தால் எனக்கும் அது ஆறுதல்தான் உங்களுக்கு தேறுதல் வந்தால் அது எனக்கும் தேறுதல்தான் இதிலே மாற்று கருத்து எதுவும் இல்லை மறுபடியும் கவனியுங்கள் முதலில் இயேசு கிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்க வேண்டும், இரண்டாவதாக வேத வசனங்களை விசுவாசித்து அதை நம்பி அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் அதில் உறுதியாக இருப்பதற்கு அடையாளம்.

யோவான் 10:27 என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது, நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. 28 நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன், அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. 29 அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார், அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.

அவருடைய சத்தம் என்னவென்றால் அவருடைய போதனைகள் அவருடைய சட்டதிட்டங்கள் அவருடைய கற்பனைகள் இவைகளைக் கேட்டு இவைகளின்படி நடக்கிறதுதான் அவருடைய சத்தம் அவருடைய போதனைகளில் நடக்கிறது தான் நல்ல ஆட்டுக்கும் வழி தப்பி நடக்கிற ஆட்டுக்கும் வித்தியாசம் நல்ல ஆடு என்றால், அவர் சொன்னதை கேட்டு அப்படியே நடக்கும் அங்கே போக வேண்டாம்.

அங்கேயே நில் என்று சொன்னால் அப்படியே நடக்கும் கீழ்படியும் இதுதான் நல்ல ஆடு இல்லையென்றால் திரும்பி ஓடினால் அது திருட்டு ஆடு நீங்களும் நானும் நிச்சயமாக திருட்டு ஆடுகளாக இருக்க மாட்டோம் என்று நான் நம்புகிறேன் நாம் எல்லோரும் நல்ல ஆடுகள் என்று விசுவாசிக்கிறீர்களா? எத்தனை பேர் நம்புகிறீர்கள் நான் நல்ல ஆடு என்றால் முதலில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்க வேண்டும் இரண்டாவதாக வேத வசனத்தை கேட்டு விசுவாசித்து அதன்படி வாழ வேண்டும்.

மூன்றாவதாக அவருடைய போதனைகளின்படி அப்படியே நடக்க வேண்டும் குரு சீடன் பற்றி உங்களுக்கு தெரியுமா குரு என்றால் ஆசிரியர் அதாவது கற்றுக் கொடுப்பவர் சீடர் என்றால் மாணவன் அல்லது கற்றுக் கொள்கிறவன் ஒரு நல்ல மாணவன் ஆசிரியர் சொல்லுகிறதை உற்று கவனிப்பான் அதேவேளையில் திருட்டு மாணவன் என்றால் ஆசிரியர் சொல்லித் தரும்போது பரிகாசம் செய்து கொண்டும் அவமதித்துக் கொண்டுமிருப்பான் அல்லது பக்கத்தில் பேசிக் கொண்டிருப்பான் மாணவர்கள் என்று சொன்னால் பாடத்தை கவனிக்கிறவர்களாக இருக்க வேண்டும் குருவை பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும்.

இயேசு என் குருநாதர் அவரையே பின்பற்றுவேன் அதுதான் இயேசுவின் போதனைகளை பின்பற்றுவது இயேசு சொல்வதை அப்படியே பின்பற்றி நடக்க வேண்டும் இயேசு வாழ்ந்தது போல நாமும் வாழ்ந்து விட்டுப் போக வேண்டும் இயேசுவின் வாழ்க்கை பார்த்து நாம் வாழ வேண்டும் இயேசுவின் உருவத்தைப் பார்த்து வாழ சொல்லவில்லை இயேசு வாழ்ந்த வாழ்க்கை பார்த்து வாழ வேண்டும் அவருடைய உபதேசங்களை அவருடைய போதனைகளை அப்படியே பின்பற்ற வேண்டும் வேதத்தின்படி இயேசு கிறிஸ்துவை அப்படியே பின்பற்ற வேண்டும் ஆரம்ப காலத்தில் ஒரு சகோதரி சபைக்கு வந்து கொண்டிருந்தார்கள் ஒருநாள் அந்த சகோதரியின் அண்ணன் வந்திருந்தார் இருவரும் வயதானவர்கள் அவர் என்னிடத்தில் வந்து தனியாக கூப்பிட்டு ஐயா என் தங்கை இயேசு கிறிஸ்து பேசினார் என்று சொல்லி மாத்திரை போடுவதை நிறுத்தி விட்டார்கள்.

அதற்கு நான் அவர்கள் என்ன மாத்திரை சாப்பிடுவார்கள் என்று கேட்டேன் மாத்திரை போட வில்லை என்றால் மூளை குழம்பின மாதிரி பேசுவார்கள் அதுமட்டுமல்லாமல் கெட்டவார்த்தை பேசிக்கொண்டிருப்பார்கள் அதனால்தான் மாத்திரை போட சொல்கிறேன் ஆனால் மாத்திரை போடும் போது நன்றாக இருப்பார்கள் என்றார் சரி என்று இரண்டு நாட்களாக நான் அவர்களை உற்றுக் கவனிக்க ஆரம்பித்தேன் அவள் திடீரென்று தானாகவே பேசுகிறார்கள் ஏதோ செய்கிறார்கள் இதை நான் எப்படி தான் அவர்களிடத்தில் சொல்வது என்று யோசித்து அந்த சகோதரியை அழைத்தேன் என்னம்மா மாத்திரை எல்லாம் போடுகிறீர்களா என்று கேட்டேன் அதற்கு அவர்கள் இல்லை ஐயா இயேசுநாதர் மாத்திரை போடவேண்டாம் என்று எனக்கு சொல்லி விட்டார் என்றார்கள்.

நான் சொன்னேன் ஆண்டவர் என்னிடம் நான்தான் அந்த மகளிடம் மாத்திரை போட வேண்டாம் என்று சொன்னேன் இப்பொழுது அந்த மகளை மாத்திரை போட சொல் என்று என்னிடம் சொன்னார் என்று நான் சொன்னேன், அதன் பிறகு சரிங்க ஐயா என்று சொல்லி அன்றிலிருந்து மாத்திரையை தொடர்ந்து சரியாக போடுவதை கடைபிடித்தார்கள் அதற்கு பிறகு மிகவும் ஒழுங்கும் கிரமாக உடையணிந்து நன்றாக இருந்தார்கள் இப்படிதான் அனேக நேரங்களில் ஆண்டவர் பேசுவதாகவும் அவர்களாகவே ஒரு கற்பனை செய்து கொண்டு தகாத காரியங்களை செய்து கொண்டிருப்பார்கள் இன்னொரு சம்பவம் கூட சொல்கிறேன் எனக்கு முகப்பேரில் ஒரு போதகரை நன்றாக தெரியும் மிகவும் ஆத்தும சிநேகிதர் அவரை நான் அடிக்கடி சந்தித்து பேசுவேன் அங்கிருக்கிற விசுவாசிகளுக்கு என்னை நன்றாக தெரியும் அதில் ஒரு விசுவாசி கொடுங்காலூர் கூட்ரோட்டில் என்னை ஒருநாள் பார்த்தார் ஐயா நீங்கள் அந்த முகப்பேறு சபைக்கு வருவீர்கள் உங்களை நான் பார்த்து இருக்கிறேன் அந்த சபையின் விசுவாசி தான் என்றார் சரி நீங்கள் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டேன்.

ஆண்டவருக்காக ஊழியம் செய்ய வந்தேன் என்றார் ஆனால் அவரைப் பார்த்தால் பிச்சைக்காரர்களை விட மிகவும் மோசமானவராகவும் அழுக்கு உடை அணிந்து தலைமுடி எல்லாம் கலைந்து போய் பல நாட்களாக குளிக்காமல் மிகவும் மோசமாக காணப்பட்டார் அவர் கைப்பிரதியை கொடுக்கிறார் ஆனால் யாரும் அவரிடத்தில் வந்து வாங்க பயப்படுகிறார்கள் அந்த அளவுக்கு மிகவும் கேவலமாக காணப்பட்டார் இயேசுவைப் பின்பற்றுவதற்கு பைத்தியமாக அல்ல மனப்பூர்வமாக ஊழியம் செய்ய வேண்டும், அப்பொழுது நான் அவரிடத்தில் இங்கே நீங்கள் என்ன ஊழியம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றேன்.

அதற்கு அவர் என்னை ஊழியம் செய்ய சொன்னார் நான் அதை செய்து கொண்டிருக்கிறேன் என்றார் அதற்கு நான் ஆண்டவர் இப்போது உனக்கு ஜெபம் பண்ண சொல்லுகிறார் என்றேன் சரி என்று பக்கத்தில் ஒரு விசுவாசி வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போய் அவரை முழங்கால் போட சொன்னேன் அவ்வளவுதான் கீழே விழுந்து புரளுகிறார் கட்டுப்படுத்தவே முடியவில்லை அப்போது நான் சொன்னேன் பொல்லாத ஆவியே இயேசு பேசுகிறதாக சொல்லி இந்த சகோதரனைக் கெடுத்து வைத்திருக்கிற பொல்லாத ஆவியே இயேசுவின் நாமத்திலே போ வெளியே என்று சொன்னேன் கொஞ்ச நேரம் கழித்து புத்தி தெளிந்து எழுந்து உட்கார்ந்தார் நான் எப்படி இங்கே வந்தேன் என்று கேட்டார் அங்கே இருந்து வந்தது நீதானே என்னைக் கேட்டால் எனக்கு எப்படி தெரியும் என்றேன் அதற்கு அந்த சகோதரன் பிசாசு என்னை வஞ்சித்து என்னை கொண்டு வந்திருக்கிறான் ஐயா என்று சொன்னார் நான் சொன்னேன் உடனே உன் போதகரிடம் போ நடந்ததைச் சொல்லி ஜெபித்துக் கொள் என்று சொன்னேன் நாம் ஒன்றை நன்றாய் கவனிக்க வேண்டும் கர்த்தர் சொல்லுகிறது போதகர் சொல்லுகிறது சபையில் சொல்லுகிறது மான வார்த்தைகள் முதலாவது வேதத்திற்கு ஒத்து வருகிறதா என்று பார்த்து ஊழியத்திற்கு போகவேண்டும் கிதியோனை பாருங்கள் கர்த்தர் அவனோடு பேசுகிறார் ஒரு தடவை சோதித்துப் பார்க்கவில்லை மூன்று தடவை சோதித்துப் பார்க்கிறார் கர்த்தர் ஒரு முறை பேசினால் உடனே முடிவு எடுத்து விடாதீர்கள் ஆண்டவரே மறுபடியும் ஒருமுறை பேசும் என்று கேளுங்கள் அது தவறல்ல தயவுசெய்து கர்த்தரை பின்பற்றுங்கள் மூன்றாவது அவருடைய போதனைகளை பின்பற்றுவது

ரோமர் 8: 16 ஆம் வசனம் நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார்.

நீங்கள் இயேசுவின் பிள்ளைகளாக ஆவியானவர் சாட்சி கொடுக்கிவராக சாட்சி வாழ்க்கை வாழவேண்டும் நீங்கள் வாழும்போது யாராக வாழ வேண்டுமென்றால் இயேசுவின் பிள்ளைகளாக வாழ வேண்டும் இயேசு தான் நாம் எல்லோருக்கும் தகப்பன் நாம் அவரின் பிள்ளைகள் நாம் இயேசுவின் பிள்ளைகளாக சாட்சியாக வாழ வேண்டும் அநேக கிறிஸ்தவர் செய்வது என்னவென்றால் சபைக்குள் வாழ்கிற வாழ்க்கை ஒரு மாதிரியும் சபைக்கு வெளியே சென்றால் அவர்கள் வாழ்க்கையும் முறையே முற்றிலும் வேறுபாடாகவும் காணப்படுகிறது இதனால் மற்ற ஜனங்கள் நம்மை கேவலமாக நினைக்கிறார்கள் ஆனால் நாம் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்ந்தால் ஜனங்கள் அவர்களை போல நம்மால் வாழமுடியாது என்று பயப்படுவார்கள் அந்த மாதிரி வாழ்க்கை தான் நீங்கள் வாழ வேண்டும் சபையிலும் வெளியிலும் எங்கே இருந்தாலும் இயேசுவோடு இயேசுவின் பிள்ளைகளாக மட்டும் தான் வாழ வேண்டும் சபையில் இருந்தாலும் வீட்டில் இருந்தாலும் ஊரில் இருந்தாலும் தெருவில் இருந்தாலும் உங்களை பார்க்கிறவர்கள் உங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்கிறார்கள் ஆதலால் நாம் சாட்சியாக வாழ வேண்டும் ஒரே ஒரு வாழ்க்கை தான் இயேசுவுக்காக அதை இயேசுவோடு வாழவேண்டும் நான்காவதாக நாம் பார்த்தோம் இயேசுவின் பிள்ளைகளாக சாட்சி வாழ்க்கை வாழவேண்டும்.

1யோவான் 5: 1-12 வரை
நாம் எப்படி நிலைத்திருக்க வேண்டும் என்று பார்க்கப்போகிறோம் இயேசு கிறிஸ்துவின் அன்பை நீங்கள் பெற்றுக்கொண்டது போல அதை மற்றவர்களுக்கும் நீங்கள் வெளிப்படுத்த வேண்டும் உதாரணமாக நீங்கள் போய் இயேசு உங்களை நேசிக்கிறார் இயேசு மிகவும் அன்பானவர் இயேசு உங்களுக்கு சுகம் அளிக்கிறார் என்று சொல்லும்போது அதை அன்பாக சொல்வதற்கும் கோபமாக சொல்வதற்கும் வித்தியாசம் உண்டு அன்பை கூட சிலர் கோபமாக சொல்வார்கள் அன்பை அன்பாகவே சொல்ல வேண்டும் அதுதான் இங்கே சொல்லப்பட்ட வார்த்தை தேவனுடைய அன்பு உங்களில் நிலைத்திருக்கிறது அந்த அன்பை நீங்கள் மற்றவர்கள் காணும்படி வெளிப்படுத்த வேண்டும் இன்னும் சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் இயேசுவையும் இயேசுவின் அன்பையும் மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும் எப்படி நாம் நிலைத்திருக்கலாம் 1.இயேசு கிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்று விசுவாசத்தினால் நிலைத்து இருக்கலாம்.

  1. வேத வசனத்தை விசுவாசித்து அதை பின்பற்றினால் நிலைத்திருக்கலாம்
  2. அவருடைய போதனைகளை பின்பற்றுவதினால் நிலைத்திருக்கலாம்
  3. இயேசுவின் பிள்ளைகளாக சாட்சியாக வாழ்வதன் மூலம் நிலைத்திருக்கலாம்
  4. அவர் அன்பு நமக்குள் நிலைத்திருந்தால் அந்த அன்பை மற்றவர்கள் காணும்படி வாழ்வதன் மூலம் நிலைத்திருக்கலாம்
    கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *