தேவ ஆவியினாலே | Rev. B.E. Samuel

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தினாலே சாரோனின் ரோஜா ஊழியத்தின் மூலமாய் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கும் தியானிக்க போகின்ற வேதப்பகுதி 1நாளா 14:8-17 வரை

கர்த்தர் நமக்கு கொடுத்த இந்த வேதவசனத்தின் மூலம் நம்மோடு பேசுவாராக தாவீது ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்ட பிறகு பெலிஸ்தியர்கள் அதைக்கேட்டு அவனுக்கு விரோதமாக யுத்தம் செய்யப்போனார்கள். இதை அறிந்த தாவீது கர்த்தரிடத்தில் போய் நான் பெலிஸ்தியருக்கு விரோதமாக யுத்தத்திற்கு போகலாமா? வேண்டாமா? என்று கேட்டான் அதற்கு ஆண்டவர் நீ போ அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன் என்றார். அவருடைய வார்த்தையின்படி அவன் யுத்தம் செய்ய போனான் தண்ணீர்கள் உடைந்து ஓடுவதுபோல சத்துருக்கள் அவனுக்கு முன்பாக ஓடிப்போனார்கள்.

அவர்கள் தெய்வங்களை விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள் அப்பொழுது தாவீது அவைகளை அக்கினியால் சுட்டெரித்தான் சிலநாள் சென்றபின்பு பெலிஸ்தியர்கள் வேறு இடத்தில் பாளையம் இறங்கி உள்ளார்கள் என்று கேள்விப்பட்டபோது மறுபடியும் தேவனிடத்தில் விசாரித்தான் அப்பொழுது கர்த்தர் நீ அவர்கள் பின்னாலே போகாமல் வேறு வழியாகபோ என்றும் முசுக்கட்டை செடிகளில் செல்லுகின்ற இரைச்சலைக் கேட்கும்போது யுத்தத்திற்குப் போனால் நீ அவர்களை ஜெயிப்பாய் என்றார். அதேபோல அவன் கர்த்தருடைய வார்த்தையின்படி பெலிஸ்தியரை ஜெயித்தான்.

இது நாம் வாசித்த பகுதியின் சுருக்கம் இதிலிருந்து நாம் அறியவேண்டிய செய்தி என்னவென்றால் இன்றைய நம் வாழ்க்கையில் இயேசுவை ஏற்றுக்கொண்டுள்ள நாம் எந்த ஒரு காரியமானாலும் மற்றவர்களை சார்ந்து வாழவே பழகிவிட்டோம். சின்ன குழந்தையாய் இருக்கும்போது வளர்ந்து வரும்வரை அப்பா அம்மாவை சார்ந்து வாழ்கிறோம் திருமணமான பிறகு மனைவி கணவனையும் கணவன் மனைவியையும் சார்ந்து வாழ்கிறோம், நம் வாழ்க்கை முழுவதும் ஒருவரை சார்ந்து வாழவேண்டிய வாழ்க்கை இரண்டாவது வயதான உடனே பெற்றோர்கள் பிள்ளைகளை சார்ந்து வாழவேண்டிய வாழ்க்கை.
இப்படி நமக்கு சார்பு இல்லாத வாழ்க்கை இல்லை நீங்கள் நன்றாக யோசித்துப் பாருங்கள் இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையில் ஏதாவதொரு காரியம் செய்வதற்கு முன்பாய் நீங்கள் யாரிடம் கேட்கவேண்டும். யார் உங்களை நடத்தவேண்டும் யாரோடு கூட இருந்தால் நீங்கள் ஜெயிப்பீர்கள் என்பது மிக முக்கியமான விஷயம். இன்றைக்கும் அநேகருடைய வாழ்க்கை தவறான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறது உதாரணமாக தாவீதின் குமாரனாகிய சாலமோன் ராஜாவாகி 40 வருஷம் இஸ்ரவேலிலே அரசாண்டான் 18 வயது ஆவதற்கு முன்பாகவே ராஜாவாகிவிட்டான் அதன்பிறகு ஆண்டவரிடத்தில் வேண்டுதல் செய்கிறார். ஆண்டவரே நான் போக்கு வரவு தெரியாத சிறுவனாய் இருக்கிறேன், இத்தனை பெரிய நாட்டை ஆள்வதற்கு எனக்கு கிருபைசெய்யும், நான் இவர்களை நடத்த வேண்டுமானால் எனக்கு ஞானம் வேண்டும் என்று சொல்லி ஜெபித்தார்.
அவன் ஆண்டவரிடத்தில் ஆஸ்தி சொத்து பொன் வெள்ளியை கேட்காமல் ஞானத்தை கேட்டபடியால் உனக்கு ஞானத்தையும் நீ கேட்காத ஐஸ்வரியத்தையும் தருகிறேன் என்று சொல்லி ஆசீர்வதித்தார். அதன் பிறகு சுற்ற தேசத்தவர்கள் எல்லாரும் சாலமோனின் முகதரிசனத்தையும் ஞானத்தையும் பார்க்க வெறுமையாய் வராமல் பொன் வெள்ளியையும் பொக்கிஷங்களையும் கொண்டுவந்து சாலமோனின் பாதபடியில் வைத்தார்கள் அப்படியே திரளான பணத்தையும் சொத்துக்களையும் சாலமோன் சேர்த்து வைத்தான். அவனுக்கு பிறகு அவனுடைய மகன் ரெகோபெயாம் ராஜாவாகிறார் நீங்கள் நன்றாக கவனிக்க வேண்டும் அவரது மகன் ராஜாவான உடனே மக்கள் எல்லோரும் அவனிடத்தில் வந்து இராஜா உங்கள் தகப்பன் எங்களுக்கு வரியை அதிகமாய் விதித்திருக்கிறார். வரி கட்டுவதற்கு நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம் நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்று சொன்னபோது ரெகோபெயாம் மூன்று நாள் கழித்து வாருங்கள் நான் உங்களுக்கு சொல்கிறேன் என்றான்.
அதன்பிறகு அவன் அரண்மனையில் இருக்கிற முதியவர்களை அழைத்து நாட்டு மக்கள் வரி குறைக்கும்படி கேட்கிறார்கள் என்ன செய்யலாம் என்று கேட்கிறார். அதற்கு அவர்கள் நாட்டு மக்கள் கேட்கிறது நியாயம்தான் ஆகவே நீங்கள் அந்த வரியை கொஞ்சம் குறைத்தால் நலமாய் இருக்கும் என்று சொன்னார்கள் அவன் அவர்களின் ஆலோசனையை அசட்டைசெய்து தன் கூட இருந்த வாலிபர்களை அழைத்து தேசத்தின் மக்கள் இப்படிப்பட்ட கோரிக்கையை விடுக்கிறார்கள் என்ன செய்யலாம் என்று சொன்னபோது வாலிபர்கள் ராஜாவிடம் தகப்பன் சவுக்கினாலே தண்டித்தார் என்றால் நான் உங்களை தேள்களினாலே தண்டிப்பேன். என் சுண்டு விரல் என் தகப்பனாருடைய இடுப்பின் பாரத்தை பார்க்கிலும் பாரமாக இருக்கும். நான் இன்னும் கொடுமை செய்வேன் வரி எதுவும் குறைக்கவே முடியாது என்று கடுமையாக சொல்ல சொன்னார்கள்.
அப்படி சொன்னபோது ஜனங்கள் எல்லோரும் அந்த இடத்தை விட்டு வெளியேற ஆரம்பித்தார்கள் எங்களுக்கு இந்த ராஜா வேண்டாம் என்று ஜனங்கள் குழுவாக சேர்ந்து வேறு ஒருவரை ராஜாவாக்க முடிவு செய்தார்கள் ராஜா என்றால் மக்களுக்காகத்தான் ரெகோபெயாம் யாரிடத்தில் ஆலோசனை கேட்டான் என்றால் வாலிபரிடத்திலும் முதியோரிடத்திலும் ஆலோசனை கேட்டான் ஆனால் வாலிபரின் ஆலோசனைக்கு மாத்திரமே செவிகொடுத்து செயல்பட்டான் ஆகவே அவனுடைய ராஜ்ஜியம் நிலைத்து நிற்காமல் உடைந்து போயிற்று. 12 கோத்திரத்திற்கு ராஜாவாய் இருக்கவேண்டியவன் ஒரு கோத்திரத்திற்கு தான் ராஜாவாக செயல்படுகிறான் சாலமோன் ராஜ்யத்தில் பன்னிரண்டு கோத்திரங்கள் இருந்தது ஆனால் அவனது மகனின் காலத்தில் ஒரே ஒரு கோத்திரம் மாத்திரம் இவன் கீழே காணப்படுகிறது. மற்றவர்கள் எல்லோரும் தனியாக பிரிந்து போய் தனி கோத்திரமாக தனி ராஜ்ஜியமாக தனிநாடாக தெரிந்துகொண்டார்கள். காரணம் என்னவென்றால் அவன் மனுஷனிடத்தில் ஆலோசனை கேட்டால் பிரச்சனை இப்படியாக தான் முடியும் நீங்கள் யாரிடத்தில் ஆலோசனை கேட்கிறீர்கள்? உங்கள் குடும்பத்தில் பிரச்சனை வந்தால் நீங்கள் யாரிடத்தில் ஆலோசனை கேட்பீர்கள்? தனிப்பட்ட காரியத்தில் பிரச்சனை வந்தால் யாரிடத்தில் கேட்பீர்கள்? இதற்கு முன்பு தாய் தகப்பன் இடத்தில் ஆலோசனை கேட்பீர்கள் இப்பொழுது இரட்சிக்கப்பட்ட யாரிடத்திலாவது ஒருவரிடத்தில் ஆலோசனை கேட்கிறீர்கள்.
இதில் எது சரியானது எது சரி என்றால் தேவனிடத்தில் ஆலோசனை கேட்பது தான் சரி இந்த வசனத்தில் சொல்லப்பட்ட தாவீது யார் என்றால் அவன் ஒரு ஆடு மேய்க்கிற மேய்ப்பன் இவன் சகோதரர்கள் மூன்று பேரும் இரானுவத்தில் வேலை செய்கிறார்கள் ஆனால் தாவீதோ ஆடு மேய்த்துக் கொண்டிருக்கிறான். ஏனென்றால், இவன் கடைசி மகன் சரியாக படிக்கவில்லை அதனால் இவனை ஆடு மேய்க்க விட்டுவிட்டார்கள். சகோதரர்கள் எல்லோரும் நல்ல ஒரு வேலையில் இருக்கிறார்கள். ஆனால், இவன் மட்டும் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கிறான். நீங்கள் நன்றாக ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் இவன் ஆடு மேய்க்கிற சிறுவன்தான். ஆனால், அவன் ஆண்டவரை தேடுகிறமனிதனாய் இருந்தான். இன்றைக்கு நீங்கள் யாராய் இருக்க வேண்டுமென்றால் ஒருவேளை தாழ்த்தப்பட்டவர்களாய் தள்ளப்பட்டவர்களாய் ஒடுக்கப்பட்டவர்களாய் அவமானப்படுத்தப் பட்டவர்களாய் நீங்கள் இருக்கலாம். நமது ஊரில் யாரும் நம்மை மதிக்கவில்லை எனக்கு மதிப்பே கிடையாது நாயை விட கேவலமாக பார்க்கிறார்கள் என்று சொல்லலாம் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். யார் எப்படியாவது பார்த்துக்கொண்டு போகட்டும். ஆனால், நீங்கள் ஆண்டவரைத் தேடி பாருங்கள் யார் உங்களை புறக்கணித்தார்களோ, அவர்களே உங்களை முக்கியப்படுத்தி அழைப்பார்கள் தாவீது ஆண்டவரை தேடுகிறாவனைய் இருந்தபடியால் கர்த்தர் சவுலின் ராஜ்யத்தை தள்ளிவிட்டு தாவீதை ராஜாவாக அபிஷேகம் பண்ணுகிறார்.
கர்த்தர் சாமுவேலிடம் நான் சவுலை ராஜ்ஜியபாரத்திலிருந்து தள்ளி நான் தாவீதை ராஜாவாக தெரிந்து கொண்டேன். ஆகையால், நீ போய் ஈசாயின் குமாரனாகிய தாவீதை அபிஷேகம் பண்ணு என்றார். உடனே சாமுவேல் புறப்பட்டு ஈசாயினிடத்தில் வந்து உன் பிள்ளைகள் எல்லோரையும் அழைத்துக் கொண்டுவா என்றார். ஈசாய் அனைத்து பிள்ளைகளையும் வரவழைத்தான் ஒவ்வொருவராக சாமுவேலுக்கு முன்பாக நிற்க செய்கிறான் சாமுவேல் ராணுவத்தில் இருப்பவர்களைப் பார்த்து இவர்கள் ராஜாவாக இருப்பார்களோ என்று நினைத்து அபிஷேகம் பண்ணபோகிறார். உடனே ஆண்டவர் சாமுவேலை பார்த்து நான் இவர்களை தெரிந்து கொள்ளவில்லை இவர்களை நான் புறக்கணித்தேன் என்றார். இப்படியே ஆறு பேரையும் தெரிந்துகொள்ளவில்லை அப்பொழுது சாமுவேல் உன் பிள்ளைகள் இவ்வளவுதானா என்று கேட்டபோது இன்னும் ஒரு மகன் இருக்கிறான் அவன் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கிறான் என்றார். அப்போது சாமுவேல் அவனை அழைத்து வரச் சொல் என்றான்.
தாவீது ஆடு மேய்க்கிறவனாக மாத்திரமல்ல அவன் ஆண்டவரை தேடுகிறவனாய் இருந்தான் நீங்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் பரவாயில்லை ஒன்று மட்டும் உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமாக இருக்க வேண்டும். ஆண்டவரை தேடுகிறவர்களாய் இருந்தால் மாத்திரம் போதும் கவனியுங்கள் தாவீது வரவழைக்கப்பட்டான் அவன் வந்தவுடனே ஆண்டவர் சொன்னார் நீ எழுந்து உன் தைலகுப்பியை எடுத்துக்கொண்டு தாவீதை அபிஷேகம் பண்ணு என்றார். உடனே சாமுவேல் தாவீதை இஸ்ரேலுக்கு ராஜாவாக அபிஷேகம் செய்தார். பின்பு சாமுவேல் அவர் எல்லைக்கு போய்விட்டார் தாவீது ஆடு மேய்க்கபோய்விட்டான். ஆனால், தேவனின் தெரிந்து கொள்ளுதல் இருக்கும் இடங்களிலே அது எப்படி நிறைவேறுகிறது என்பதை இங்கே பார்த்தோம் ராஜாவாக அபிஷேகம் பண்ணினது யாருக்கும் தெரியாது அப்படி தெரிந்திருந்தால் சாமுவேலையும் தாவீதையும் சவுல் கொன்றிருப்பான். ஆகையால், அவரவர்கள் அவரவர்களின் வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள்.
நீங்கள் எங்கே இருந்தாலும் எப்படி இருந்தாலும் ஆண்டவரோடு கூட மட்டும் இருங்கள். தேவன் உங்களை தேடி வருவார் தேவன் எப்படிப்பட்டவர் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இப்பொழுது தாவீதை கர்த்தர் ராஜாவாக அபிஷேகம் பண்ணிவிட்டார். ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்ட அவனை அரண்மனைக்கு கொண்டு போகவேண்டும். ஆனால், அரண்மனைக்குச் சென்றால் ஏற்கனவே இருக்கிற ராஜா இவனை கொன்றுவிடுவார். ஆதலால் ஏற்கனவே இருக்கிற ராஜாவாகிய சவுலை அலைகழிக்கும்படி பயங்கரமான ஒரு அசுத்தஆவியை கட்டளையிடுகிறார். அப்பொழுது சுரமண்டலத்தை எடுத்து வாசித்தால்தான் இந்த அசுத்த ஆவி விலகும் என்பதை புரிந்து கொண்ட ராஜா அதை வாசிப்பதற்கு யாராவது ஒருவர் அறிந்திருக்க வேண்டும் என்று இஸ்ரவேல் நாடு முழுவதும் தேடுகிறார்கள் ஒருவனும் கிடைக்கவில்லை. அப்பொழுது ராஜாவின் இடத்தில் இருக்கிற ஒருவர் சொல்கிறார் நான் வருகிற வழியில் ஒரு சிறுவன் நன்றாக இசை வாசித்துக் கொண்டிருந்தான் என்று சொன்னவுடனே எங்கே அந்த சிறுவன் இருக்கிறான் என்று விசாரிக்கும் போது அவன் ஈசாயின் மகன் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கிறான் என்று சொன்னான் உடனே ராஜா அவனை கொண்டுவந்தால் நலமாயிருக்கும் என்றார்.
உடனே அவனை ஆளனுப்பி அரண்மனையிலேயே தங்கவைத்து ராஜாவுக்கு அசுத்த ஆவி எப்பொழுதெல்லாம் அலைக்கழிக்கிறதோ அப்பொழுதெல்லாம் இசை வாசிக்க இவனைப் பயன்படுத்தினார்கள். மிகவும் பிரியமான தேவ பிள்ளைகளே நீங்கள் தேவனை தேடுவது உண்மையானால் உங்களை உயர்த்த அவர் வல்லமை உள்ளவராக இருக்கிறார். அவர் உங்களை கொண்டுபோய் வைக்க வேண்டிய இடத்திலே வைக்க வேண்டுமென்றால் அவரே பாதைகளை திறந்துவைப்பார். எப்படி எல்லாம் கொண்டு போக வேண்டுமோ அப்படி எல்லாம் நம்மை நடத்துவார் நான் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு முன்னே இந்த கொடுங்காளூர் எங்கே இருக்கிறது என்று கூட எனக்கு தெரியாது கேள்விப்பட்டுள்ளேன். அது எங்கேயோ இருக்கிறது என்று இருந்தேன். ஏனென்றால், எங்க ஊரை விட்டு நான் வெளியூருக்கு போனதே இல்லை அப்படி போகவும் பிடிக்காது எங்க ஊரைவிட்டு எங்கே போனாலும் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்தில் வந்துவிடுவேன் எனது ஊரைவிட்டு போக எனக்கு பிடிக்கவே பிடிக்காது.
அப்படிப்பட்ட நான் இப்போது எங்க ஊர் பக்கம் போவதே இல்லை வருடக் கணக்காகிவிட்டது எங்கள் ஊர் பக்கமே போனதே இல்லை எப்படி தேவன் என்னை இப்படி மாற்றினார் என்பது எனக்கே தெரியவில்லை இதைப் போல தான் என் வாழ்க்கையில் நடந்ததை பார்த்தால்! தேவன் என்னை தெரிந்துகொண்டார் தேவன் என்னை தெரிந்து கொண்டவுடன் ஊழியத்திற்கு போக சொன்னார் ஆனால் இந்த ஊர் பெயர் சொல்லவில்லை இந்த ஊரின் சில அடையாளங்களை காண்பித்தார். தரிசனத்தின் மூலமாக சொப்பனத்தின் மூலமாக காண்பித்தார் தரிசனத்தில் இந்த ஊரை காண்பித்தபோது இந்த ஊரை இதுவரைக்கும் எங்கேயும் நான் பார்க்கவில்லையே என்று சொன்னேன் நான் சொன்னேன் ஆண்டவரே எனக்கு நீங்க காண்பிக்கிற இந்த ஊரில் இருந்து யாராவது வந்து என்னை அழைத்துக் கொண்டு போனால் நான் போகிறேன் என்று சொன்னேன். அதற்கு வேண்டிய வழியும் அவரே செய்தார் அந்த ஊரிலே ஒருவருக்கு சுகவீனம் ஆகி அதற்கு ஜெபிக்கும்படி என்னை ஒருவர் அழைத்தார் நான் போய் ஜெபித்த உடனே ஆண்டவரும் சுகம் கொடுத்துவிட்டார். இப்படியாக இந்த ஊரிலே ஊழியம் செய்யும்படியாக வாசலைத் திறந்துவைத்தார் நீங்கள் நன்றாக தெரிந்து கொள்ளவேண்டும். வாழ்க்கையிலே உங்களை மற்றவர்கள் அற்பமாய் எண்ணியிருக்கலாம்.

நீங்கள் அவர்கள் பார்வைக்கு அற்பமாய் கூட இருந்திருக்கலாம். ஆனால், அற்பமாய் எண்ணப்பட்ட தாவீது தேவனை தேடுகிறவனாய் இருந்தபடியால் அவனை தேவன் அரண்மனையில் கொண்டு போய்விட்டார். அங்கே நடந்தது என்னவென்றால், திடீரென்று பெலிஸ்தியருக்கும் இஸ்ரவேலருக்கும் யுத்தம் வந்தது. யுத்தம் வந்தவுடனே ஒரு பெரிய மனுஷன் எழும்பி வருகிறான். அவன் ஆறுமுழம் ஒரு ஜான் உயரம் இருந்தான் அப்படி என்றால் ஒன்பதே முக்கால் அடி உயரம் இருந்தான் தாவீது சவுலை விட எவ்வளவு முக்கியமானவராக இருந்தார் என்று எப்படி தேவன் உணர வைக்கின்றார் என்று பாருங்கள் இப்பொழுது இஸ்ரவேலருக்கும் பெலிஸ்தியருக்கும் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. இங்கே பெலிஸ்தியனாகிய கோலியாத் வந்து நிற்கிறான் அவனது ஒவ்வொரு கையும் கால் எவ்வளவு அளவு இருக்குமோ அந்த அளவுக்கு பெரிதாக இருந்தது. அவனது கால் நமது இரண்டு கால்களை சேர்த்தால் எப்படியோ அப்படி இருக்கிறது ஒரு ஆள் அவனுடைய கால்அளவு மட்டும் இருப்போம் அவ்வளவு பெரிய உருவம் இவ்வளவு பெரிய பலசாலி அவனிடத்தில் யாராவது போனால் தூக்கி எறிந்துவிடுவான்.

அவன் கையிலுள்ள ஈட்டி ஒரு பனைமரத்தை இரண்டாவது பிளந்தால் எப்படி இருக்குமோ அதுவும் அப்படித்தான் இருந்தது . அவன் அந்த ஈட்டியை பிடித்துக் கொண்டு வந்தால் 200 அல்லது 300 பேர் ஒரே நேரத்தில் செத்துப் போவார்கள் அவ்வளவு பெரிய பலசாலி அவன் இஸ்ரவேல் ஜனங்களை பார்த்து யாராவது ஒருவன் என்னிடத்தில் வந்து சண்டையிட்டு ஜெயித்தால் நாங்கள் அனைவரும் உங்களுக்கு அடிமை அல்லது நான் ஜெயித்தால் நீங்கள் அனைவரும் எங்களுக்கு அடிமை என்று கூக்குரலிட்டான.; இதனால் மக்கள் நாம்மால் இவனிடம் எதிர்த்து நிற்க முடியாது இஸ்ரவேலர்களாகிய நாம் இவர்களுக்கு அடிமையாகிவிடக்கூடாது என்று பயந்து நின்று கொண்டிருக்கிறார்கள.; இதில் தாவீதின் சகோதரர்மூன்று பேரும் பயந்து நடுங்கி கொண்டிருக்கிறார்கள் அந்த இடத்தில் சகோதரரை பார்க்க வந்த தாவீது கோலியாத் சொல்வதைக் கேட்டான். இஸ்ரவேலில் ஒருவனாகிலும் என்னோடு சண்டை போட தைரியம்இல்லையா என்று இஸ்ரவேலின் தேவனுடைய நாமத்தை நிந்தித்து பேசிக்கொண்டிருந்தான். நீங்கள் வணங்குகிற தேவன் பெலவீனமானவரா என்று பயங்கரமான மிகவும் கேவலமான வார்த்தைகளால் பேசி கொண்டிருந்தான் இதை தாவீது கேட்ட மாத்திரத்தில் நான் கொன்று போடுவேன் என்று சொன்னான். அப்படிசொன்ன அவனை ராஜாவின் இடத்தில் கொண்டு போனார்கள் காரணத்தை அறிந்த ராஜா உன்னால் முடியாது நீ சிறு பிள்ளை அவன் சிறு வயது முதல் அவன் ஒரு யுத்த வீரன் அவன் கையளவு கூட நீ இல்லை என்றான்.
அதற்கு தாவீது என்னால் முடியும் நான் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு கரடி என் ஆட்டை பிடித்துக்கொண்டது அப்பொழுது அந்த கரடியை இரண்டாக கிழித்து போட்டேன். இன்னொரு முறை சிங்கம் வந்தது அதையும் நான் கிழித்து போட்டேன் என்றான் இதைக் கேட்ட ராஜா உன்னால் எப்படி முடிந்தது என்று கேட்டார் அதற்கு தாவீது எனக்குள்ளே தேவனுடைய ஆவியானவர் இருக்கிறார் என்றான். என் சொந்த பலத்தினால் என்று அவன் ராஜாவினிடத்தில் சொல்லவில்லை நான் தேவனுடைய நாமத்தினாலே போகிறேன் என்றான். இன்றைக்கு அநேகர் நினைப்பது என்னவென்றால் தங்களுடைய பலத்தை மட்டும் பார்க்கிறார்கள் நன்றாக யோசித்துப் பாருங்கள்.
நாம் ஆராதிக்கும் தேவன் மிகவும் பெரியவர் இந்த உலகத்தில் அவருக்கு நிகரானவர் ஒருவரும் இல்லை தாவீது சொல்கிறான் கோலியாத் மாம்ச புயத்தோடும் பெலத்தோடு வருகிறான். நான் என் கர்த்தருடைய பலத்தோடுபோகிறேன் எனக்குள்ளே பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார் என்றான். இன்றைக்கு அநேக விசுவாசிகள் ஞானஸ்நானம் எடுத்துவிட்டு அதுதான் கிறிஸ்தவம் என்று அதோடுகூட நிறுத்திவிடுகிறார்கள். கிறிஸ்தவம் என்பது ஞானஸ்தானம் எடுப்பது மட்டுமல்ல தொடர்ந்து பரிசுத்த ஆவியை பெறவேண்டும். பரிசுத்தஆவி பெற்றுக்கொண்டால் மாத்திரம் போதுமா? இல்லை அதன்பின்பு தேவனுக்காக வாழவேண்டும் அநேகர் கிறிஸ்துவ வாழ்க்கை என்றாலே சபைக்கு போகவேண்டும் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். அபிஷேகம் பெறவேண்டுமென்று சொன்னால் அதற்காக நான் ஜெபித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறார்கள்.
ஏன் இன்னும் அபிஷேகம் கிடைக்கவில்லை எத்தனை வருடங்களாக ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள்? ஏன் இன்னும் அபிஷேகம் பெறவில்லை என்றால் ஆண்டவரே இன்னும் அபிஷேகம் கொடுக்கவில்லை என்று சாக்குபோக்கு சொல்வதுண்டு ஆண்டவர் அபிஷேகத்தை தரவில்லை என்றால் நாம் கேட்டு தான் பெற்றுக்கொள்ளவேண்டும். நாம் அபிஷேகத்தை அப்படி பெற்றுக்கொள்ள முடியுமா என்றால் கட்டாயம் முடியும் அவர் நம் முன்னே ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைத்திருக்கிறார் நமக்கு எது விருப்பமோ அதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அபிஷேகத்தை கேட்டு பெற்றுக்கொள்ளவேண்டும் அதன் பின்பு சாட்சியுள்ள வாழ்க்கை வாழவேண்டும் ஒரே ஒரு வாழ்க்கைதான். அதன் பின்பு வேறொரு வாழ்க்கை இல்லை அந்த வாழ்க்கையை இயேசுவோடு வாழவேண்டும். இதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை நாம் என்ன நினைக்கிறோம் ஞானஸ்நானம் எடுத்தால் போதும் எடுத்துவிட்டு சபைக்கு போகவில்லை என்றால் கூட பரலோகம் போய்விடலாம் என சபைக்கும் போகாமல் இருக்கிறோம். ஞானஸ்நானம் எடுத்தால் மட்டும் போதாது ஒழுங்காக ஆலயத்திற்கு போகவேண்டும் இரண்டாவதாக பரிசுத்தஆவியின் அபிஷேகத்தை பெறவேண்டும். அதற்கு பிறகு சாட்சியுள்ள வாழ்க்கை வாழவேண்டும் மற்றவர்களுக்கு முன்பாய் காட்சியாக இருக்கக்கூடாது காட்சி என்றால் நடிப்பு சபைக்கு வரும்போது பக்தியாய் இருப்பது சபையை விட்டு வெளியே போன உடனே நான் கிறிஸ்தவன் அல்ல சபைக்காவது செல்வதாவது என்று நாம் தேவனை மறுதலிக்கிறோம்.

பேதுரு அன்றைக்கு மறுதலித்தான் நாம் இன்றைக்கு மறுதலித்து கொண்டிருக்கிறோம் பேதுரு எப்படி மறுதலித்து மன்னிக்கப்படாமல் போனாரோ அப்படியே நாமும் மன்னிக்கப்படாமல் போய்விடுவோம் காட்டிக்கொடுத்தவனைவிட மறுதலித்தலித்தவனுக்கு அதிக தண்டனை கிடைத்தது யூதாஸ் தெரிந்தது போல காட்டிக் கொடுத்தான் இவர் தான் இயேசு இவரை பிடித்துக் கொள்ளுங்கள் என்றான் ஆனால் பேதுரு கூடவே இருந்து கொண்டு எனக்கு தெரியவேதெரியாது என்று சொன்னான் சத்தியம் செய்தான் சபிக்கவும் தொடங்கினான் அதேபோல நீங்களும் சொன்னீர்கள் என்றால் நீங்களும் அவனும் ஒன்றுதான் நாம் கொஞ்சம் மாடலாக சொல்லுகிறோம் அவ்வளவுதான் அருமையான தேவனுடைய பிள்ளைகளே ஒரு காரியத்தை நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள் நீங்கள்யாராக இருக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம் நீங்கள் கேவலமான இடத்தில் இருந்தாலும் கவலைப்பட வேண்டாம் இயேசுவோடு கூட இருங்கள் தேவன் உங்களை உயர்த்த வல்லமையுள்ளவராயிருக்கிறார் நீங்கள் எல்லாரைகாட்டிலும் தாழ்வான வேலை செய்யலாம் நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்பது அல்ல நீங்கள் செய்கிற வேலை பார்த்து உயர்வு தாழ்வு இல்லை நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் தேவனோடு இருப்பதுதான் முக்கியம் நீங்கள் எந்த வேலை செய்கிறீர்கள் எந்தக் குடும்பத்தில் இருக்கிறீர்கள் எந்த ஜாதியில் பிறந்தவர்கள் என்பதையெல்லாம் அவருக்கு அவசியம் இல்லை நீங்கள் இயேசுவோடு இருப்பதுதான் அவசியம் யாருக்கும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை உங்களுக்கும் ஆண்டவருக்கும் தெரிந்தால் போதும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான காரியம் என்னவென்றால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆண்டவருடைய பாதத்தில் வரவேண்டும் இரண்டாவது ஞானஸ்நானம் எடுக்கவேண்டும் மூன்றாவது பரிசுத்தஆவியின் அபிஷேகத்தை பெற்றுக்கொள்ளவேண்டும்.
4ஆவது சாட்சியாக வாழவேண்டும் இந்த நான்கையும் கடைபிடித்தால் நீங்கள் கீழாகாமல் மேலாவீர்கள் அதற்குப்பிறகு ஊழியக்காரராகிய சாமுவேல் தாவீதைப் அபிஷேகம் செய்து கடந்து சென்றுவிடுகிறார் அந்த வேலையில் யுத்தத்திலே கோலியாத்தை எதிர்த்து நிற்கிறவனாய் இருக்கிறான் ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர் அவனுக்குள்ளே இருக்கின்றார் வேதம் சொல்லுகிறது பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது பரிசுத்த ஆவியை நீங்கள் பெற்றுக் கொள்ளும்போது பெலன் உண்டாகிறது நீங்கள் சரீரத்தை நம்பாதீர்கள் சரீரத்தில் உள்ள பலனை நம்பாதீர்கள் அது ஒரு நாள் இருக்கும் ஒருநாள் போய்விடும் கடந்த வருடத்தில் எனக்கு டைபாய்டு காய்ச்சல் வந்தது அந்த நாள் முதல் இந்த நாள் வரை என்னால் அதிக நேரம் நிற்க முடியாது முட்டி வலிக்கும் ஆனால் சபைக்கு உள்ளே வந்து நிற்க முடிகிறது அது எப்படி என்று இன்று வரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை ஏன் தெரியுமா அது மாம்ச பெலனல்ல ஆவியானவருடைய பெலமாய் இருக்கிறது அப்படியானால் நீங்கள் எந்த பெலத்தில் நிற்கிறீர்கள் என்று அறிந்து கொள்ள வேண்டும் ஆவியின் பெலத்திலே நிற்க்கிறீர்களா அல்லது மாம்சத்தின் பெலத்திலே நிற்க்கிறீர்களா நமக்கு ஆவியின் பலன்தான் வேண்டும்.
கோலியாத்தோடு யுத்தம் செய்ய தாவீது போகிறான் கோலியாத் ராணுவ உடையில் வருகிறான் தாவீதோ ஆடு மேய்க்கிற உடையோடு கவன்கல் கையில் எடுத்துக்கொண்டு போகிறான் ஆற்றிலிருந்து ஐந்து கூழாங்கற்களை எடுத்து சட்டையில் போட்டுக்கொண்டான் தாவீது ஆடு மேய்க்கும் அடையாளத்துடன் போகிறான் கோலியாத்து போர்வீரனுக்குரிய உடையில் வருகிறான் கோலியாத்து தாவீதைப் பார்த்து நீ என்ன தடியோடு வருகிறாய் நீ தடி எடுத்துக் கொண்டு வருவதற்கு நான் ஒரு நாயா என்று கேட்கிறான் அதற்கு தாவீது நீ ஈட்டியின் பலத்தோடு வருகிறாய் நானோ நீ நிந்திக்கிற தேவனுடைய நாமத்தினால் வருகிறேன் நீ மாம்ச பலத்தை நம்புகிறாய் நான் எனக்குள்ளே இருக்கிற பரிசுத்த ஆவியின் பலத்தை நம்புகிறேன் எந்த பெலன் பெரியது பாருங்கள் பரிசுத்த ஆவியின் பலன்தான் பெரியது அதற்குத்தான் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் மேலே சொல்லப்பட்ட நான்கு காரியங்களை பெற்றுக் கொள்ளவேண்டும் இயேசு கிறிஸ்துவுக்கே பரிசுத்த ஆவியின் வல்லமையும் அக்கினியின் அபிஷேகமும் தேவைப்பட்டது
அப்போஸ்தலர் நடபடிகள் 10:38 -ல் நசரேயனாகிய இயேசுவை தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினால் அபிஷேகம் பண்ணினார் நன்றாக கவனியுங்கள் நசரேனாகிய இயேசுவுக்கு பரிசுத்த ஆவியானவரின் வல்லமை தேவையாயிருக்கிறது என்றால் நீங்களும் நானும் எம்மாத்திரம் அடுத்ததாக தாவீது கோலியாத்தை கொன்றான் உடனே ஜனங்கள் எல்லோரும் சவுல் கொன்றது ஆயிரம் தாவீது கொன்றது பதினாயிரம் என்று சொன்னார்கள் சவுல் அதற்கு எனக்கு ஆயிரமும் தாவீதுக்கு பதினாயிரம் கொடுத்தார்கள் என்று அன்று முதல் கொண்டு தாவீதை கொல்ல சமயம் தேடிக்கொண்டிருந்தான் சவுல் சொல்கிறான் தாவீதுக்கு என் மகளை திருமணம் செய்யப் போகிறேன் என்றான் அதற்கு தாவீது நான் தகுதி இல்லை என்று ஒதுங்கி போகிறான் உடனே சவுல் ஒரு போட்டிவைக்கிறார் 30 பெலிஸ்தரின் நுனித்தோலை கொண்டுவந்தால் உனக்கு என் மகளை திருமணம் செய்து வைப்பேன் என்றான் தாவீது அதன்படி செய்தான் சவுல் அப்பொழுது தன் மகளை தாவீதுக்கு திருமணம் செய்து வைத்தான் தொடர்ந்து சவுல் தாவீதை பின்தொடர்ந்து கொண்டே இருந்தான் அனேகர் தாவீதுக்கு எதிராக மாறினார்கள் ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவனோடே கூடயிருந்தார் உங்கள் ஊர் உலகம் நாடு தேசம் மன்னன் மந்திரி எல்லாரும் உங்களை பகைத்தாலும் பரிசுத்த ஆவியானவர் மட்டும் உங்களுக்குள்ளே இருந்தால் ஒருவராலும் உங்களை அசைக்க முடியாது பெலிஸ்தியரின் தேசம் முழுவதும் தாவீதுக்குக்கு எதிராய் மாறிவிட்டது சவுல் எதிராய்மாறிவிட்டான் சவுலினுடைய எண்ணம் நமக்கு பிறகு நமது மகன்தான் ராஜாவாக வரவேண்டும் தாவீதோடு கூட பரிசுத்த ஆவியானவர் இருந்தபடியால் எல்லாரிடத்திலும் இருந்து அவனை காப்பாற்றி ராஜாவாக ஏற்படுத்தினார்
1 நாளாகமம் 14:8 ஆம் வசனத்தில் தாவீது சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக அபிஷேகம்பண்ணப்பட்டதைப் பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தர் எல்லாரும் தாவீதைத் தேடும்படி வந்தார்கள், அதைத் தாவீது கேட்டபோது அவர்களுக்கு விரோதமாகப் புறப்பட்டான்.
தாவீது சமஸ்த இஸ்ரவேலின் மேலும் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டதை பெலிஸ்தியர் கேள்விப்பட்டபோது எல்லோரும் தாவீதை தேடும்படி வந்தார்கள் ஏன் தெரியுமா இவ்வளவு நாட்கள் தேடியும் தாவீது கிடைக்கவில்லை ஆவியானவர் அவனை மறைத்துக்கொண்டார் இப்பொழுது இஸ்ரவேலில் முழுவதற்கும் ராஜாவாகிவிட்டான் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த தாவீதை இஸ்ரேல் நாட்டுக்கு ராஜாவாக அபிஷேகம் பண்ணினார் நீங்கள் யார் என்று முக்கியமில்லை ஆண்டவராகிய ஆவியானவர் உங்களுக்குள் இருப்பதுதான் முக்கியம் படித்தவர்களாக இருக்கலாம் படிக்காவர்களாக இருக்கலாம் ஆனால் ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளவேண்டும் பரிசுத்த ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்ய வேண்டும்
1 நாளாகமம் 14 ஒன்பதாவது வசனத்தில் பெலிஸ்தர் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள்.
பெலிஸ்தியர் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவி இருந்தார்கள் தாவீது என்கிற ஒரு மனுஷனுக்கு விரோதமாக பெலிஸ்திய தேசமே ஒரு பெரிய கூட்டமாக வந்திருந்தது
பத்தாவது வசனத்தில் பெலிஸ்தருக்கு விரோதமாகப் போகலாமா, அவர்களை என் கையில் ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது தேவனைக் கேட்டபோது, கர்த்தர், நீ போ அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார். பெலிஸ்தருக்கு விரோதமாக படையெடுக்கும் விஷயத்தை தேவனிடத்தில் தாவீது விசாரித்து அறிந்து கொள்கிறார் நீங்கள் எந்த காரியமானாலும் யாரிடத்தில் விசாரிக்கிறீர்கள் வயதில் மூத்தவர்கள் இடத்திலா இல்லையென்றால் சபை நடத்தும் ஊழியர் இடத்திலா யாரிடத்தில் கேட்கிறீர்கள் முதலாவது நீங்கள் இயேசுவிடத்தில்தான் விசாரிக்க வேண்டும் போதகரும் உங்களுக்கு ஒரு மாதிரிதான் அவர் சொல்வது எப்படியும் நியாயமாக தான் இருக்கும் என்று நினைக்கிறீர்கள் ஆனால் தாவிதின் காலத்தில் ஊழியர்கள் இல்லையா அவரை அபிஷேகம் பண்ணினதே சாமுவேல் தீர்க்கதரிசிதான் ஆனால் அவர் ஊழியக்காரரிடத்தில் போகவில்லை உங்களை நடத்துவதற்கு தான் ஊழியக்காரர்கள் இருக்கிறார்கள் ஆனால் உங்களோடு பேசுவதற்கு தேவன் விரும்புகிறார் தேவன் உங்களோடு நேரடியாக பேச விரும்புகிறார் நீங்கள் எப்பொழுதும் வேறு ஒருவர் மூலமாக போக ஆசைப்படுகிறீர்கள் சில சபையில் பார்த்தார்களால் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் மரியாளே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் சூசையப்பரே என்று மற்றவரை சார்ந்து வாழ்கிறார்கள் தேவனைப் பொறுத்தவரையில் மற்றவரை சார்ந்து அல்ல தேவனையே நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும் ஜெபம் எதற்கு செய்கிறோம் என்றால் நாம் தேவனோடு நேரடியாக பேசுவதற்குதான் பாரம்பரிய சபையை உருவாக்கியது மனுஷர் முதலில் கடவுளை பக்தியாகத்தான் தேடினார்கள் காலப்போக்கில் அதற்கு ஒரு தலைவன் வருகிறார் அந்தத் தலைவன் எப்படியெல்லாம் நினைக்கிறாரோ அப்படியெல்லாம் சபையை நடத்துகிறார் உதாரணத்திற்கு இந்த சபைக்கு நான் தலைவர் என்றால் நான் நினைக்கிற மாதிரி சபை நடத்த வேண்டுமென்று நினைக்கிறேன் அதுதான் தவறு நான் எப்படி சபையை நடத்த வேண்டுமானால் தேவன் விரும்புகிறது போல இந்த சபை போகவேண்டும.;

அதுதான் சபை எது சரி என்றால் வேதாகமத்தின்படி நடக்க வேண்டும் அதுதான் சரி போதகர் விருப்பத்தின் படி நடந்தால் தவறு ஏனென்றால் போதகர் சிலுவையில் அடிக்கப்படவில்லை இயேசுதான் நமக்காக ஜீவன் கொடுத்தார் என்ற நினைவை மனதில் ஆழமாக பதிவு செய்யவேண்டும் எல்லாவற்றையும் போதகருக்கு சொல்ல வேண்டும் தெரியபடுத்தவேண்டியது நியாயம்தான் ஆனால் ஆலோசனை ஆண்டவருக்கு பதிலாக போதகர் சொல்வது தவறு ஆண்டவரே உங்களிடத்தில் பேசுவதற்கு விரும்புகிறார் பேசுகிற தெய்வம் அவர்தான் ஆலோசனையை அப்பா அம்மாவிடம் கேட்கலாம் வேண்டாம் என்று சொல்லவில்லை முடிவை இயேசுவிடம்தான் கேட்கவேண்டும் யாரிடத்தில் வேண்டுமானாலும் ஆலோசனை கேட்கலாம் ஆனால் இயேசுவினிடத்தில் தான் கடைசி முடிவு எடுக்கவேண்டும் நான் எந்த ஒரு காரியம் செய்யவேண்டுமானாலும் என்னைவிட மூத்த போதகர் ஒருவர் இருக்கிறார் அவரிடத்தில் கேட்பேன் ஏனென்றால் அவருக்கு என்னை என்றால் மிகவும் பிடிக்கும் ஏன் என்னை மிகவும் அவருக்கு பிடிக்கும் என்று எனக்கு தெரியவில்லை அவர் வயதும் என் வயது ஒன்றுஇல்லை அவருக்கு இருக்கிற படிப்பும் எனக்கு இல்லை அவருக்கு இருக்கிற ஆஸ்தி அந்தஸ்து எனக்கு இல்லை ஆனால் அவருக்கு என்னை என்றால் மிகவும் பிடிக்கும் இப்படியாக அவர் ஆலோசனை சொன்னாலும்கூட முடிவுஇல்லை என் இயேசு சொல்வதுதான் இந்தநாள் வரைக்கும் முடிவாகஉள்ளது.
ஆலோசனை யார் சொன்னாலும் கேட்பது தவறல்ல கடைசியாக ஆண்டவர் சொல்லுகிறதுதான் நிறைவான முடிவு இப்படியாக தேவனிடத்தில் தாவீது கேட்டவுடனே நீ போ உன் கையில் பெலிஸ்தியரை ஒப்புக் கொடுப்பேன் என்றார் எப்படி ஒப்புக்கொடுத்தார் பாருங்கள் தேங்கி நிற்கும் தண்ணீர் எப்படி உடைந்து போகிறதோ அந்த அளவுக்கு சத்துருக்கள் ஓடினார்கள் தண்ணீர்கள் எப்படி உடைந்து போகுமோ அதுபோல தாவீதை பார்த்து ஓடினார்கள் ஏன் தாவீதைப் பார்த்து சத்துருக்கள் ஓடினார்கள் என்றால் அவனுக்குள் பரிசுத்த ஆவியானவர் இருந்தார் தேவனுடைய சித்தம் அவனுக்குள் காணப்பட்டது இன்று நம் ஒவ்வொருவருக்குள்ளேயும் பரிசுத்த ஆவியானவர் காணப்படவேண்டும் தேவ சித்தம் காணப்படவேண்டும் நீங்கள் எதை செய்தாலும் செய்ய வேண்டுமானாலும் செய்யுங்கள் ஆனால் அது இயேசுவுக்கு பிரியமா என்று கேளுங்கள் இல்லையென்றால் அது எவ்வளவு பெரிய காரியமானாலும் சரி தூக்கி எறிந்துவிடுங்கள் இயேசுவின் நாமத்தினாலே அதைவிட தேவன் உங்களை ஆசீர்வதிக்க வல்லமைஉள்ளவராக இருக்கிறார் கடைசியாக 14 வசனம் வாசிப்போம்
அப்பொழுது தாவீது திரும்ப தேவனிடத்தில் விசாரித்ததற்கு, தேவன் நீ அவர்களுக்குப் பின்னாலே போகாமல், அவர்களுக்குப் பக்கமாய்ச் சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிரேயிருந்து, அவர்கள்மேல் பாய்ந்து,
1 நாளாகமம் 14:14
மறுபடியும் பெலிஸ்தியர் வருகிறார்கள் அப்போது தாவீது தேவன் இடத்திலேயே தான் விசாரிக்கிறார் விசாரித்தபோது தேவன் அவர்களுக்கு பின்னாலே நீ போகாமல் அவர்களுக்கு பக்கமாய் சுற்றி முசுக்கட்டை செடிகளில் ஒரு இறைச்சல் வரும் அதுவரையிலும் காத்திரு இறைச்சல் வந்தவுடனே அவர்கள்மேல் பாய்ந்து போ அப்பொழுது உன்கையில் அவர்களை ஒப்புக் கொடுப்பேன் என்றார் முதலில் சொன்னது அவர்களை தண்ணீர்கள் உடைந்து போவது போல சத்துருக்கள் அவனுக்கு முன்பாக உடைந்து போகபண்ணினார் இரண்டாவதாக அவர் சொன்னார் பெலிஸ்தியர் பின்னாலே போகாமல் பக்கமாய் சுற்றி போ என்றார் அதேபோலவே தாவீது செய்தான் முசுக்கட்டை செடியில் இறைச்சல் வரும்வரை காத்திரு என்றால் அது வரைக்கும் காத்திருக்க வேண்டும.;
அந்த இரைச்சல் வந்தவுடனே போய் ஜெயம் எடுத்தான் மூன்றாவதாக தேவனுடைய சத்தம் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும் மறுபடியும் சொல்கிறேன் முதலாவது ஆவியில் நிறைந்திருக்க வேண்டும் இரண்டாவது தேவ சித்தத்திற்கு கீழ்ப்படியவேண்டும் மூன்றாவதாக அவருடைய வார்த்தை வரும் வரை காத்திருக்க வேண்டும் மேலே முதலாவது நான்கு காரியம் சொன்னேன் என்னவென்றால் ஞானஸ்தானம் எடுக்கவேண்டும் ஆலயத்திற்கு போகவேண்டும் அபிஷேகம் பெறவேண்டும் சாட்சியாக வாழவேண்டும் இதுதான் அடிப்படை கிறிஸ்தவம் கடைசியாக நான் சொன்னது மூன்று காரியங்கள் நாம் செய்ய வேண்டும் அபிஷேகத்தில் நிலைத்திருக்கவேண்டும் தேவ சித்தம் செய்யவேண்டும் தேவ சத்தம் கேட்கும் வரை காத்திருக்கவேண்டும் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென் அல்லேலூயா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *