தேவனுக்காக என்ன செய்தீர்கள்? | Rev. B.E. Samuel

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இம்மாத இதழின் மூலமாக உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கர்த்தர் தாமே இந்த வார்த்தைகள் மூலம் உங்களை ஆசீர்வதிப்பாராக. 

பிலிப்பியர் எழுதின நிருபம் 3:9-11 வரையிலான வசனங்களை வாசிக்கலாம் இந்த வசனங்களை தான் இன்றைக்கு தியானிக்க போகிறோம். 

பிலிப்பியர் 3:9. நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும், 10. இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும், 11.அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.

அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பியருக்கு எழுதுகிறபோது நான் எல்லாவற்றையும் நஷ்டம் என்று விட்டேன் குப்பையாக எண்ணுகிறேன் என்று சொல்லுகிறார் எல்லாவற்றையும் என்று சொல்லும்போது என் ஆஸ்தி அந்தஸ்து என் தகுதி என் சொந்தம் என் பந்தம் எல்லாவற்றையும் இயேசுவுக்காக நஷ்டம் என்று விட்டேன். அதை குப்பையாக எண்ணுகிறேன் என்று சொல்லுகிறார். ஏன் அவர் எல்லாவற்றையும் நஷ்டம் என்று எண்ணினார்? என்றும் குப்பையாக எண்ணுகிறேன் என்றும்  சொன்னால், 

பிலிப்பியர் 3:9 நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும்,

அருமையான தேவனுடைய பிள்ளைகளே நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நன்றாக கவனியுங்கள் அவர் ஏன் நஷ்டம் என்று எண்ணுகிறார் என்றால், கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படியாக அதாவது சொந்தமாக்கிக் கொள்ளும் படியாக அல்லது அவரை அடையும்படி அப்படி சொல்லுகிறார். நாம் ஒரு நாளிலே உலகத்தை விட்டு போய்தான் ஆகவேண்டும். கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம் என்று வேதம் சொல்லுகிறபடியால், கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படியே நாம் உலகத்தை நஷ்டம் என்றும் குப்பையயுமாக என்ன வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

பிலிப்பியர் 3:9 நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும்,

இரண்டாவதாக அவர் சொல்லுகிறார் – விசுவாசம் மூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதி என்று சொல்லுகிறார். இரண்டாவதாக நான் சுய நீதியை உடையவனாய் இராமல் விசுவாசத்தினால் என்று சொல்லப்படுகிறது. விசுவாசம் மூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாக இருக்க வேண்டும் என்பதற்காக உலகத்தை நஷ்டம் என்று விட்டேன் குப்பையாக எண்ணுகிறேன் என்கிறார். மூன்றாவதாக இன்னும் ஒரு காரியத்தை கூட அவர் சொல்லுகிறார் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன் அல்லது இருக்கிறாராம் காணப்ப்படுபம்படிக்கு என்று வேதம் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. கிறிஸ்தவராக இருப்பது அல்ல கிறிஸ்துவுக்குள் இருப்பதுதான் வேதம் தெளிவுபடுத்துகிறது. எனவே கிறிஸ்துவுக்குள் காணப்படும்படிக்கு  உலகத்தை நஷ்டம் என்றும் குப்பையாக எண்ணுகிறேன்.

நாம் எங்கே இருக்கிறோம் என்பது மிகவும் முக்கியம் வேதாகமத்தில் தேவன் ஆதாமை தேடினார். ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய் என்று தேவன் ஆதாமை தேடினார் என்று சொல்லியிருக்கிறது அப்பொழுது நாம் நன்றாக கவனிக்க வேண்டிய முக்கியமான காரியம் தேவன் தேடும்படியாக மனிதர்கள் காணப்படுகிறார்கள் ஆதாம் எங்கே இருந்தான்யென்றால், அவன் ஒளிந்து கொண்டிருந்தான்.  ஏனென்றால், தேவன் செய்ய வேண்டாமென்று சொன்னதை செய்ததினால் ஓடி ஒளிந்து கொண்டான். அதனால் தேவன் அவனை தேடினார் நன்றாக கவனியுங்கள் நாம் எங்கே இருக்க வேண்டும் என்றால் கிறிஸ்துவுக்குள் இருக்கிறவன் என்று காணப்படவேண்டும்.

மூன்று காரியங்களை உங்களுக்கு சொல்கிறேன் முதலில் கிறிஸ்துவை ஆதாயபடுத்திக் கொள்ள வேண்டும் இரண்டாவது விசுவாசத்தினால் உண்டாகிற தேவ நீதியை உடையவராய் இருக்க வேண்டும் மூன்றாவது கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களாக நாம் காணப்படவேண்டும் நீங்கள் முதலில் எதை ஆதாயப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால் மிகவும் முக்கியமாக வேதம் சொல்லுகிறது முதலில் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒருவன் உலகம் முழுவதும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு என்ன லாபம் என்று வேதம் சொல்லுகிறது. அப்பொழுது நீங்கள் எதை ஆதாயபடுத்த வேண்டுமென்றால் தேவனை ஆதாயப்படுத்திக் கொள்ளவேண்டும்

பிலிப்பியர் 3:11 அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.

பிரியமானவர்களே இந்த வசனத்தை பார்க்கும்போது அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டம் என்று விட்டேன் குப்பையுமாக எண்ணுகிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எதை என்றால் உலகத்தின் மகிமையை எல்லாம் உலகத்தின் செல்வமெல்லாம் உலகத்தின் பாசமெல்லாம் உலகத்தில் இருந்து வருகிற எல்லாவற்றையும் நான் நஷ்டம் என்று விட்டேன் குப்பையாக எண்ணுகிறேன்.

எதற்காக இவைகளை விட்டார் என்று பார்த்தால் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படியாக. அருமையான தேவ பிள்ளைகளே நீங்கள் எதை ஆதாயபடுத்த வேண்டும் எதை ஆதாயப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட கொள்ளை நோய்கள் ஏன் தேசத்தில் வருகிறது? சபைக்குள் ஏன் வருகிறது? இரட்சிக்கப்பட்டவர்களுக்கு ஏன் வருகிறது? என்று நீங்கள் கவனிக்க வேண்டும் அவரிடத்தில் அதைக் குறித்து கேட்க வேண்டும் அல்லவா ஏன் அனுமதித்தார் என்றால், ஆதாயபடுத்துவதை விட்டுவிட்டு எல்லாரும் இரட்சிக்கப்பட்டு தியாகத்தோடு தேவனை ஏற்றுக்கொண்ட மக்கள் கூட  எதை தேடுகிறார்கள் என்றால் உலகத்தை தேட ஆரம்பித்துவிட்டார்கள்.

இயேசுவுக்காக என் உயிரையும் கொடுப்பேன் என்று சொன்னவர்கள் இயேசுவுக்காக வாழ்வேன் என்று சொன்னவர்கள் இயேசுவுக்காக என் வாழ்வு என் மூச்சு என் பேச்சு எல்லாம் இயேசுவுக்காக என்று சொன்னவர்கள் எல்லோரும் எதிர்மறையாக மாறி உலகத்தை தேடிக்கொண்டிருக்கிறார்கள். செல்வங்களை தேடிக்கொண்டிருக்கிறார்கள் உலகத்தில் உள்ள சொந்தங்களை தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அருமையான தேவனுடைய பிள்ளைகளே நீங்கள் எதை தேட வேண்டுமென்றால் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக் கொள்ள வேண்டும் யோபுவை பார்த்தீர்களானால் ஒரேநாளில் 7000 ஆடுகள் இழந்தார், 3000 ஒட்டகங்கள் இழந்தார், 500 கழுதைகள், 500 ஏர்மாடுகளை இழந்தார், பத்து பிள்ளைகளையும் இழந்தார், மனைவி ஒரு பக்கம் தூஷித்த போதிலும் உலகத்தின் ஆஸ்தி எல்லாவற்றையும் இழந்துவிட்டபோதிலும் அவர் எதை ஆதாயப்படுத்திக்கொண்டார் தெரியுமா கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக் கொண்டார்.

யோபு உலகத்தை நஷ்டம் என்று எண்ணினார் குப்பையாக விட்டார் அதற்கு பலனாக தேவன் அவருக்கு எப்படிப்பட்ட நன்மை தந்தார் என்றால் இரட்டிப்பான நன்மைகளை தந்தார். என்ன இரட்டிப்பாக தந்தார் என்றால் அவருடைய ஆயுசை இரட்டிப்பாக தந்தார் 7000 ஆடுகளுக்கு பதிலாக 14000 ஆடுகளை கொடுத்தார், 3000 ஒட்டகங்களுக்கு பதிலாக 6000 ஒட்டகங்களை கொடுத்தார் 500, கழுதைகளுக்கும் 500 ஏர்மாடுகளுக்கும் பதிலாக ஆயிரம் கழுதைகளும் ஆயிரம் ஏர்மாடுகளும் கொடுத்தார், பிள்ளைகள் மட்டும் திரும்ப அதே பத்து பிள்ளைகளை தேவன் திரும்பக் கொடுத்தார்.

இப்பொழுது நாம் எதை ஆதாயப்படுத்தி கொண்டிருக்கிறோம் நாம் எதை நம்பி தேடி ஓடி கொண்டிருக்கிறோம். எதற்காக நாம் அலைவுபட்டு ஓடிக்கொண்டிருக்கிறோம். நான் உங்களுக்கு சொல்கிறேன் கிறிஸ்துவை ஆதாயபடுத்துவதுதான் உங்கள் அலைச்சலாக இருக்க வேண்டும் அதுதான் உங்கள் விருப்பமாக இருக்க வேண்டும் இந்த உலகத்தை நீங்கள் ஆதாயப்படுத்தினால் ஒருநாள் நீங்கள் போகும்போது வேறு ஒன்றும் கொண்டு போக முடியாது. ஆம் பிரியமானவர்களே நீங்கள் எதை ஆதாயப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால், கர்த்தராகிய இயேசுவை ஆதாயப்படுத்தி கொள்ளுங்கள் சம்பாதித்து கொள்ளுங்கள் ஆதாயம் என்பது கிறிஸ்துவை சொந்தமாக்கிக் கொள்வது. 

இரண்டாவது விசுவாசத்தின் மூலமாய் உண்டாகிறதான நீதியை உடையவர்களாய் இருக்க வேண்டும். நாம் சுயநீதி உடையவர்களாக இருக்க கூடாது சுயநீதி என்றைக்கும் ஆபத்துடையது சுயநீதியை தேடக்கூடாது சுய ஞானத்தை தேடகூடாது எந்த நீதி நீ தேட வேண்டும் என்றால் சுயஞானம் அல்ல விசுவாசத்தினால் உண்டாகும் தேவ நீதியை தேடுகிறவர்களாக இருக்கவேண்டும். வேதத்தில் ஆபிரகாம் விசுவாசித்தான் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. ஆண்டவர் ஆபிரகாமுக்கு நூறு வயது ஆகும்போது ஒரு ஆண் பிள்ளையை கொடுக்கிறார் அவன் பெயர் ஈசாக்கு அவனுக்கு பதினேழு வயதாகும்போது ஆபிரகாமை பார்த்து ஆண்டவர் உன் சேஷ்ட புத்திரனும் ஒரே மகனாகிய ஈசாக்கை எனக்கு தகனபலியாக தரவேண்டும் என்று சொல்லுகிறார்.

தகனபலி என்றால் சிறுக வெட்டி கட்டையில் அடுக்கி நெருப்பினால் எரித்து சாம்பலாக்கி தரவேண்டும் என்று அர்த்தம் ஆண்டவர் மிகவும் மோசமானவர் என்று நினைக்கலாம் அவர் எவ்வளவு நீதியுள்ளவர் என்பது இதன்பின்பு அறிந்துகொள்வீர்கள். ஆபிரகாம் ஈசாக்கை தகனபலியாக தருவாரா? இல்லையா? என்று ஆண்டவர் அவரை சோதிக்கும்படியாக இதைக் கேட்டார். ஆபிரகாம் ஆண்டவர் கேட்டவுடனே அவர் சொன்ன இடத்தில் ஈசாக்கை பலி செலுத்தும்படி அழைத்துக்கொண்டு போனார் போகும் வழியில் ஈசாக்கு ஆபிரகாமிடம் அப்பா பலிக்கு நெருப்பும் எரிப்பதற்கு கட்டையும் இருக்கிறது. ஆனால், பலியிட ஆடு எங்கே என்று கேட்கிறார். அதற்கு ஆபிரகாம் கர்த்தர் அதை பார்த்துக் கொள்வார் என்கிறார் இரண்டு பேரும் மலைக்கு போனார்கள் ஆபிரகாம் கட்டைகளை அடுக்கினார் பலியிட ஆடு இல்லை என்று அறிந்த ஈசாக்கு நான் தான் பலி என்று அறிந்து கொண்டான்.

தகப்பனை எதிர்க்கிறவனாக இல்லாமல் தகப்பனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறவனாக காணப்பட்டான் ஆபிரகாமுக்கு 117 வயது ஈசாக்குக்கு 17 வயது நிரம்பிய வாலிபன் அவன் தகப்பனை தள்ளிவிட்டு ஓடி இருக்கலாம்.ஆனால், அவன் கீழ்ப்படிந்து நடந்தான் ஆபிரகாம் அவன் கைகளையும் கால்களையும் கட்டி பலிபீடத்தின் மேல் அவனை படுக்க வைத்து அவனை வெட்டும்படி ஆபிரகாம் தன் கைகளை ஓங்கின போது ஆபிரகாமே ஆபிரகாமே நில் என்று ஆண்டவர் கூப்பிடுகிறார். அவனுக்கு பதிலாக பலிக்கு ஆட்டையும் காண்பிக்கிறார் ஆபிரகாமிடம் ஈசாக்கை தந்துவிட்டார். ஆம் பிரியமானவர்களே ஆபிரகாம் விசுவாசித்தான் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. ஆண்டவர் நம்மிடம் பேசினால் அதை நாம் விசுவாசிக்க வேண்டும் நீ இங்கேயிருந்து எழுந்திரு நிற்காதே அப்படி ஏதாகிலும் சொல்லும்போது அதை விசுவாசிக்க வேண்டும் நம்ப வேண்டும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

எனக்கு தெரிந்த ஒரு நண்பர் அவர் நன்றாக ஜெபத்தில் உள்ளவர் வசதியாகவும் பாதுகாப்பான ஒரு இடத்தில் அவர் அமர்ந்து கொண்டு இருந்தபோது எழுந்து போ எழுந்து போ என்று யாரோ அவரிடத்தில் சொல்வதைப்போல் இருந்துகொண்டே இருந்தது சரி என்று அவர் அந்த இடத்தை விட்டு சற்று தூரம் போன பின்பு மேலே இருந்து ஒரு கல் அந்த இடத்தில் வந்து விழுந்தது. ஆண்டவர் சொன்னவுடனே கீழ்ப்படிந்தார் காப்பாற்றப்பட்டார் அவர் அந்த சத்தத்திற்கு கீழ்ப்படியவில்லை என்றால் அந்தக் கல் அவர் தலைமேல் விழுந்து உயிர் சேதம் ஏற்பட்டு ஆபத்தாகி இருக்கும். அதேபோல் தான் மலையேறுகிற ஒரு சகோதரர் மலை ஏறிக் கொண்டிருந்தாராம் அப்போது கால் தவறி அப்படியே மலைமேலிருந்து புரண்டு கொண்டே வருகிறார். புரண்டு கொண்டு வரும்போது தன் கையை எட்டின தூரத்தில் ஒரு மரக்கிளையை இருக்கமாக பிடித்துக் கொண்டார்.

உடனே அந்த மரக்கிளையும் உடைகிற நேரம் கை வலி அதிகமாகிக்கொண்டே இருக்கிறது ஆண்டவரே என்னை இரட்சியும் இரட்சியும் என்று சொன்னாராம். அப்பொழுது ஒரு சத்தம் கேட்டது நீ பிடித்துக் கொண்டிருக்கிற மரக்கிளையை விட்டுவிடு மகனே என்று கேட்டதாம் ஒரு பக்கம் அவருக்கு பயமாக இருந்தது. ஆனால், ஆண்டவர் சொல்வதைக் கேட்போம் என்று சொல்லி கையை விட்டாராம் வேகமாக வந்து பள்ளத்தில் விழுந்தார். ஆனால், அவர் மரிக்கவில்லை ஆண்டவர் அவரை காப்பாற்றினார். எப்படி என்றால் அதற்கு முந்தின நாளில் திரைப்பட படப்பிடிப்பிற்கு நடிக்கிறவர்கள் பாதுகாப்பிற்காக கீழே விழுந்தாலும் அடி படாமல் இருப்பதற்கு கீழே ஒரு வலையை கட்டியிருந்தார்கள். அது இன்னும் அவிழ்க்காமல் இருந்ததினால் ஆண்டவர் கையை விடு என்று சொன்னார் அதற்கு இவர் கீழ்ப்படிந்தார் காப்பாற்றப்பட்டார். அப்படியானால் நாம் சொந்த சுயநீதி தேடுகிறார்களாக இருக்கக் கூடாது விசுவாசத்தினால் உண்டாகிற தேவநீதியை உடையவர்களாக இருக்க வேண்டும்.

கந்தாகே என்கிற மந்திரி ஏசாயா புத்தகத்தை படித்துக் கொண்டே வருகிறார் பிலிப்பு அவரை சந்திக்கிறார் நீங்கள் வாசிக்கிற இந்த புத்தகத்தின் அர்த்தம் புரிகிறதா? என்று கேட்கிறார் அதற்கு மந்திரி ஒருவன் எனக்கு சொல்லாவிட்டால் எப்படி தெரியும் என்றார். அதற்கு பிலிப்பு நசரேயனாகிய இயேசுவைப்பற்றிய தான் சொல்லப்பட்டிருக்கிறது என்று தெளிவாக சொன்னவுடனே அப்படியானால் நான் ஞானஸ்நானம் பெறுவதற்கு என்ன தடை என்று கேட்டார் மந்திரி அதற்கு பிலிப்பு நீர் விசுவாசித்தால் தடை ஒன்றும் இல்லை என்று சொன்னார். உடனே அங்கேயே ஞானஸ்தானம் கொடுக்கப்பட்டது அப்பொழுது ஒன்றை நன்றாக கவனியுங்கள் அங்கே எந்த நீதி செயல்படுகிறது என்றால் விசுவாசத்தினால் உண்டாகிற தேவ நீதியே கிரியை செய்கிறது. அருமையான தேவனுடைய பிள்ளைகளே நீங்கள் சுயநீதியை உடையவர்களாய் இராமல் விசுவாசத்தினால் உண்டாகிற தேவ நிதீயை உடையவர்களாக இருக்க வேண்டும். 

மூன்றாவதாக கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனாக காணப்படவேண்டும். நீங்கள் எங்கே காணப்பட வேண்டுமென்றால் கிறிஸ்துவுக்குள் காணப்பட வேண்டும். யாராவது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டால் நான் அப்பா வீட்டில் இருக்கிறேன் அல்லது என் கணவர் வீட்டில் இருக்கிறேன் என்று சொல்கிறோம். நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் நாம் இங்கே காண்பது காட்சியும் அல்ல இங்கே இருப்பது இருப்பும் அல்ல அருமையான பக்தர் ஒருவர் பாடுகிறார். இவ்வுலக பாடு என்னை என்ன செய்திடும் அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன் என்று பாடுகிறார்.

இந்த உலக பாடு நம்மை என்ன செய்து விடும் நான் பரலோக வாழ்வைக் காண காத்திருக்கிறேன் என்கிறார். ஆம் பிரியமானவர்களே நீங்கள் எங்கே இருக்கிறவர்களாக மற்றவர்களுக்கு தெரிய வேண்டுமென்றால், ஒரு பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார் என்று அல்ல வீட்டில் இருக்கிறார் என்று அல்ல அவர் ஒரு பெரிய ராணுவ வீட்டில் இருக்கிறார் என்று அல்ல அவர் ஒரு பெரிய கோட்டைக்குள் இருக்கிறார் என்பது அல்ல அவர் கிறிஸ்துவுக்குள் இருக்கிறாரா? என்பதை தான் நாம் பார்க்கவேண்டும் மற்றதையெல்லாம் நஷ்டமாகவும் குப்பையுமாக என்ன வேண்டும். உங்களை பார்க்கிறவர்கள் கிறிஸ்துவுக்குள் தான் உங்களை பார்க்க வேண்டும்.

சிலபேர் கொஞ்ச நாட்கள் கிறிஸ்துவுக்குள் இருப்பார்கள் கொஞ்ச நாட்கள் கிறிஸ்துவுக்கு வெளியே இருப்பார்கள் சிறுபிள்ளைகள் விளையாடுவார்கள் பார்த்தீர்களா உள்ளே வெளியே உள்ளே வெளியே என்று அதுபோல் தான் இவர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இதனால்  இவர்களுக்கு என்ன பிரயோஜனம் என்றால் அவர்கள் கிறிஸ்து உள்ளேயும் இல்லை கிறிஸ்துவுக்கு வெளியேயும் இல்லை பிசாசின் கட்டுப்பாட்டிற்குள் காணப்படுகிறார்கள். அப்படியானால், நீங்கள் எங்கே இருக்க வேண்டுமானால் கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களாக காணப்படவேண்டும் நீங்கள் உண்மையாக கிறிஸ்துவின் மறைவில் காணப்பட்டால் இந்த உலகமே எதிர்த்து வந்தாலும் உங்களை ஒன்றும் செய்ய முடியாது உலகமே அழிந்தாலும் உங்களுக்கு அழிவு வராது. ஏனென்றால், கிறிஸ்துவுக்குள் வாழ்பவருக்கு வெற்றி உண்டு தோல்வியை அவர்கள் பார்ப்பதே இல்லை தோல்வி அவர்கள் கண்களுக்கு தெரிவதே இல்லை கிறிஸ்துவுக்குள் வாழ்பவர்களாக நாம் இருக்க வேண்டும்.

எப்பொழுதும்  எந்த சூழ்நிலை வந்தாலும் நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளே இருக்கிறீர்கள் என்று மற்றவர்கள் சொல்கிறவர்களாக காணப்படவேண்டும். ஆம், பிரியமானவர்களே முதலாவது நீங்கள் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக் கொள்ள வேண்டும், இரண்டாவது விசுவாசத்தின் மூலமாக உண்டாகிற தேவ நீதியை உடையவர்களாக இருக்க வேண்டும், மூன்றாவது எப்பொழுதும் கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களாக காணப்படவேண்டும், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நான் கிறிஸ்தவன் நான் கிறிஸ்துவுக்குள் இருப்பேன் என்று பெருமையாகப் பேசுவது பெருமை அல்ல அது சிறுமை நான் எல்லா நாட்களிலும் கிறிஸ்துவுக்குள் இருப்பேன் என்று சொல்வதுதான் பெருமை ஆகும். நீங்கள் எதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதை நான் உங்களுக்கு சொல்லித் தரப்போகிறேன். 

பிலிப்பியர் 3:10 இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்.

தேவ பிள்ளைகளே முதலில் நீங்கள் எதை அறிந்து கொள்ளவேண்டுமானால் எதை முதலாவது தேட வேண்டுமென்றால், இயேசுவையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அவருடைய பாடுகளில் ஐக்கியத்தையும் தேடவேண்டும். நன்கு அறிந்து கொள்ள வேண்டும் முதலில் நான் சொன்ன மூன்று காரியங்களை பெற்றுக் கொள்ள வேண்டும். இப்பொழுது நான் சொல்லுகிற காரியங்களும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவைகள் நமக்கு இயேசுவை முதலில் தெரிந்திருக்க வேண்டும் உங்கள் உள்ளத்திலே மனதிலே அவரை உணர வேண்டும் அருமையான ஒரு சகோதரர் சொன்னார். ஐயா, ஒரு சமயம் எனக்கு மிகவும் பயமாக இருந்தது நான் ஒரு சகோதரனிடத்தில் போய் சொல்லி ஜெபிக்க சொன்னேன் அவரும் ஜெபித்தார். ஆனால், எனக்கு பயம் போகவில்லை நான் என் ஜெப அறைக்குள் போய் ஜெபித்தேன் ஜெபித்துக் கொண்டே இருந்தேன்.

அதிகநேரம் ஜெபித்தேன் யாரோ வந்து என் தோள் மேல் ஒரு கரத்தை வைத்து தொடுவது போல காணப்பட்டது. உடனே அந்த பயம் என்னை விட்டு நீங்கியது இதைத் தான் நம்முடைய வாழ்க்கையில் தெரிந்துகொள்ளவேண்டும். இரண்டாவதாக அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையை அறிந்துகொள்ளவேண்டும், மூன்றாவது எதை அறிந்து கொள்ள வேண்டுமென்றால், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறியவேண்டும். இயேசுவை பார்த்து இருக்கிறீர்களா? என்று கேட்டால் எல்லோரும் சொல்லுவார்கள் நான் படத்தில் பார்த்திருக்கிறேன் என்று ஆனால், உண்மையாக அவர் இயேசு இல்லை வெறும் பொம்மை தான் ஆவியான தேவனுக்கு ரூபம் ஒன்றும் இல்லையே ரூபம் ஒன்றும் இல்லாததினால் சொரூபம் ஒன்றும் இல்லையே இப்பொழுது அவர் ஆவியாக இருக்கிறார் அவர் உங்கள் அருகில் இருக்கிறார் எங்கே அவரை சிந்திக்கிறீர்களோ எங்கே உட்கார்ந்து அவரை நினைத்து தியானித்துக் கொண்டு இருக்கிறீர்களோ அங்கே அந்த இடத்தில் உங்களுக்குள் அவர் இருக்கிறார்.

அந்த இயேசுவை அறிகிற அறிவு நமக்கு வேண்டும் முதலில் இயேசுவை அறிந்து கொள்ள வேண்டும் அவர் யார் அவரால் என்ன செய்ய முடியும் என்பதை அறிந்திருக்க வேண்டும் அவரால் முடியாத காரியம் ஒன்றுமே இல்லை இயேசுவாலே முடியவில்லை என்றால் இந்த உலகத்தில் யாராலும் எங்கு போனாலும் முடியாது அவ்வளவுதான் முடிந்தது உங்கள் வாழ்க்கையில் என் தேவனால் செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை அந்த இயேசுவை நீங்கள் அறிய வேண்டும் வெறும் தண்ணீரை இரசமாக மாற்றின அந்த இயேசுவை நீங்கள் சரியாக அறிய வேண்டும் கூனியை சுகமாக்கின இயேசுவை நீங்கள் அறிய வேண்டும் குருடனை தொட்டு சுகமாக்கும் இயேசுவை நீங்கள் அறிய வேண்டும் மரித்துப்போன வாலிபனை எழுந்திரு என்று சொன்ன இயேசுவை நீங்கள் அறிய வேண்டும் அவரை அறிகிற அறிவு உங்களுக்கு தேவை. 

இரண்டாவது உயிர்த்தெழுதலின் வல்லமையை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்: இயேசு கிறிஸ்து மரித்து விட்டார் அவ்வளவுதான் என்று நினைத்தார்கள். ஆனால், அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் அழியாமையின் சரீரத்தை அவர் தரித்துக் கொண்டார் அநேகர் சொல்வது இரட்சிக்கபட்டவர்களும் இரட்சிக்கப்படாதவர்களும் நாம் மரித்த பிறகு எல்லாருமே ஒரே இடத்திற்கு தான் போகப் போகிறோம் என்று சொல்லுகிறார்கள். நான் உங்களுக்கு சொல்கிறேன் மண்ணில் இருந்து எடுக்கப்பட்டது மண்ணுக்கே திரும்பும் தேவன் கொடுத்தது தேவன் இடத்திற்கே போகும் உயிர் தேவனிடத்திலிருந்து வந்தது தேவனிடத்தில் போகும். அப்பொழுது ஆத்துமா எங்கே போகும்? என்பதுதான் கேள்வி உண்மையாக நாம் அறிய வேண்டிய முக்கியமான காரியம் நாம் மரித்தபின் உயிர்த்தெழுவது தான் இன்றும் அனேகருக்கு தெரிவதில்லை.

ஏதோ, வந்தோம் வாழ்ந்தோம் மரித்தோம் என்று இருக்கிறார்கள் அவர் உயிர்த்தெழுதலின் வல்லமையை நீங்கள் அறியவேண்டும் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் அழிவில்லாமல் உயிர்த்தெழுந்தார் அவரை யாராலும் அழிக்க முடியவில்லை அப்படிப்பட்ட மகிமையின் சரீரத்தோடு கூட இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார் அவர் பழைய சரீரம் மரித்து புதிய சரீரம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அவர் சரீரம் அழிவில்லாததாக எழுந்திருந்தது இயேசு மரித்தபின் கல்லறையில் வைத்து மூடி விட்டார்கள் மூன்றாம் நாள் இயேசுவை சுற்றி வைத்து இருந்த வெண் வஸ்திரம் அப்படியே அங்கு இருந்தது. ஆனால், அவருடைய சரீரம் அங்கு இல்லை இயேசுவின் சரீரம் உயிர்த்தெழுந்துவிட்டது அதுதான் வல்லமை அதுதான் மகிமை அதுதான் அதிசயம் அந்த அதிசயத்தை தான் நீங்கள் எல்லோரும் அறிந்து கொள்ளவேண்டும். அடுத்தது அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் அவர் எதற்காக பாடுபட்டார் யாருக்காக பாடுபட்டாரானால் அருமையாக ஏசாயா புஸ்தகம் 53 அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது

ஏசாயா 53:3-4 அவர் அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்.மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.

இந்தப் பாடுகளின் ஐக்கியத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் அனைத்தும் அவருக்காக அல்ல நமக்காக இத்தனை பாடுகளை அனுபவித்தார் அடுத்ததாக

பிலிப்பியர் 3:10-ன் பின் பகுதி

இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்,

அன்பான தேவ பிள்ளைகளே அவருடைய மரணத்திற்கு ஒப்பான மரணத்திற்குள்ளாகி என்று எழுதப்பட்டுள்ளது. அப்படியானால், அவருடைய மரணத்திற்கு இணையாக நாம் மரிக்க வேண்டும் அது எப்படி நடக்கும் இது சாத்தியமா? இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மாதிரி நாமும் அறியப்பட முடியுமா என்று கேட்டால் நான் உங்களுக்கு சொல்கிறேன். கிறிஸ்துவுக்குள் மரணத்திற்கு உள்ளாகி மரிக்க வேண்டும் என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறார்.

கலாத்தியர் 2:20 கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.

எப்படி என்றால் ஞானஸ்நானத்தின் மூலமாக நாம் கிறிஸ்து உடனே கூட சிலுவையில் அறையப் படுகிறோம் ஞானஸ்நானம் என்பது நாம் மரித்து உயிர்த்து எழுவதற்கு ஒரு ஒப்பனையாக சொல்லபடுகிறது. இயேசுகிறிஸ்து எனக்காக மரித்தார் அதனால், நான் அவருக்காக மரிக்கிறேன் என்று அல்ல உங்களுக்காகவும் உங்களுடைய புது வாழ்விற்காகவும் உங்களுடைய நல்வாழ்விற்காகவும் நீங்கள் கிறிஸ்துவின் மரணத்திற்கு ஒப்பானவர்களாக மாறவேண்டும்.

பிலிபியர் 3:10 இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்,

இந்த வசனத்தின் கடைசி பகுதியில் எப்படி ஆயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்து இருப்பதற்கு நாம் எப்படி தகுதியாக வேண்டும் என்பதை அறிய வேண்டும். நீங்கள் எப்படி இருந்தால் உயிர்த்தெழ முடியும் நீங்கள் மரிக்காமல் உயிர்த்தெழ முடியாது மனம்திரும்பாமல் மரிக்கவும் முடியாது அந்த மனந்திரும்புதல் தான் நம்மை மரணத்திற்குள்ளாக நடத்துகிறது. அதுதான் கலாத்தியர் 2:20 வாசித்தோம் இயேசுவை எப்பொழுது நான் ஏற்றுக்கொண்டேனோ அப்பொழுதே நான் மரித்துவிட்டேன். எனக்குள் இயேசு வாழ்கிறார் என் சரீரத்தை இயேசுவுக்கு கொடுத்துவிட்டேன் என் இயேசுவுக்கு என் சரீரத்தை அற்பணம் செய்துவிட்டேன் இனி அது என் சரீரம் இல்லை அது எனக்கு சொந்தமானதுமில்லை எப்படி உங்கள் சரீரத்தை ஆண்டவருக்கு  கொடுப்பீர்கள்?  எப்பொழுது இயேசுவை ஏற்றுக் கொண்டீர்களோ எப்பொழுது இயேசுவிடம் மனந்திரும்பினீர்களோ இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொள்கிறேன் என்று ஞானஸ்நானத்தினால் தண்ணீரில் மூழ்கினீர்களோ அன்றைக்கே நீங்கள் மரித்து விட்டீர்கள். ஆண்டவருக்காக உங்கள் சரீரத்தை கொடுத்து விட்டீர்கள் தண்ணீரில் மூழ்கி உங்கள் பாவசரீரம் மரித்ததினால், இப்பொழுது நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள் உங்களுக்குள் இருக்கும் ஜீவன் உங்களுடையது அல்ல உங்களுக்குள் இயேசு கிறிஸ்துதான் இருக்கிறார்.

நீங்கள் எப்பொழுது இயேசுவுக்காக ஞானஸ்தானம் எடுத்தீர்களோ இயேசுவுக்கு சொந்தமாகிவிட்டீர்கள். இனி பெருமை பாராட்ட ஒன்றும் இல்லை எல்லாம் இயேசுவுக்கு சொந்தம் நாம் நன்றாக கவனித்துப் பார்த்தோம். என்றால், ஏன் இயேசுவை அறியவேண்டும்? ஏன் ஜெபிக்க வேண்டும்? ஏன் வேதத்தை வாசிக்க வேண்டும்? ஏன் காணிக்கை கொடுக்க வேண்டும்? என்று யோசித்துப்பார்த்தால் நான் உயிர்த்தெழுதலுக்கு தகுதியாகும் படிக்குத்தான்.

இரட்சிக்கப்பட்டவர்கள் உயிர்தெழுவார்கள் இரட்சிக்கப்படாதவர்களும் உயர்த்தெழுவார்கள். ஆனால், இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு வலதுபக்கம் போகிறவர்கள் இரட்சிக்கப்பட்டவர்கள் இடது பக்கம் போகிறவர்கள் இரட்சிக்கப்படாதவர்கள் அழுகையும் பற்கடிப்பும் நிறைந்த நரகத்திற்கு போவார்கள் அங்கே அவர்களுடைய புழு சாகாமலும் அக்கினி அவியாமலும் இருக்கும் என்று வேதம் சொல்லுகிறது. வலது பக்கம் போகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்  நேராக சொர்க்கத்திற்கு நேராக அதாவது பரலோகத்திற்கு நேராக நடத்தப்படுகிறார்கள். அருமையான தேவனுடைய பிள்ளைகளே எல்லோரும் உயர்த்தெழுவார்கள். ஆனால், இரட்சிக்கப்பட்டவர்கள் பரலோகத்திற்கு நேராகவும் இரட்சிக்கப்படாதவர்கள் நரகத்திற்கு நேராகவும் கடந்து போவார்கள். இதுதான் வித்தியாசம் அப்பொழுது நீங்கள் உயிர்த்தெழுவது எப்படிப்பட்ட உயிர்த்தெழுதலாக இருக்க வேண்டும் வேதத்தில் சொல்லப்பட்ட வசனங்களை  கடைபிடிக்க வேண்டும்.

இந்த உயிர்த்தெழுதலுக்கு தகுதி உள்ளவர்களாக மாறவேண்டும் அது எப்படி என்று அறிய வேண்டும் அந்த அறிவு நமக்கு வேண்டும் இயேசு கிறிஸ்து சொன்ன உபதேசங்களுக்கு நாம் தகுதி உள்ளவர்களாக மாற வேண்டும் ஞானஸ்தானம் எடுத்ததோடு நின்றுவிடாமல் உயிர்த்தெழுதலுக்கும் தகுதி ஆகவேண்டும் உயிர்த்தெழுதலுக்கு தகுதி அடையாமல் நாம் உயிர்த்தெழமுடியாது முதலில் கிறிஸ்துவுக்குள்ளே மரிக்கிறவர்கள் தான் உயிர்தெழுவார்கள் அதன்பின்பு கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்கள் மறுரூபமாக்கப்படுவார்கள். கடைசியில் இயேசுகிறிஸ்து ராஜாவாக வரும்போது எல்லாரும் உயிர்த்தெழுந்திருப்பார்கள் அவர் நியாய தீர்ப்புக்கொடுப்பார் நியாயத்தீர்ப்பு யாருக்கு இல்லை என்றால் தேவனுடைய பிள்ளைகளுக்கு இல்லை. ஏனென்றால், 1 கொரிந்தியர் 11:23-31 நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்.

நிறைவாக திருவிருந்து பகுதியை குறித்து நாம் வாசிக்கிறோம். நம்மை நாம் நிதானித்து அறிந்தால் நாம் நியாயத்தீர்க்கபடோம் அந்த வசனம் அழகாக சொல்லப்பட்டுள்ளது. நாம் இங்கேயே நியாயம் தீர்க்கப்படுவதினால் அதோடுகூட வேதவசனம் சொல்லுகிறபடி வாழ்ந்தால்தான் ஆயிரம் வருட அரசாட்சிக்கு பிறகு நமக்கு நியாயத்தீர்ப்புஇல்லை திருவிருந்து பந்தியில் அதை வெறும் அப்பமாகவும் வெறும் திராட்சரசமாகவும் நினைத்து புசித்தால் நமக்கு அதினால் நியாயத்தீர்ப்பு உண்டு அதற்கு மாறாக அது அவருடைய சரீரம் என்றும் அது அவருடைய இரத்தம் என்றும் விசுவாசத்தோடும் பயபக்தியோடும்  நாம் பங்குபெறும்போது நமக்கு நியாயத்தீர்ப்பு இல்லை என்பதை வேதவசனம் நமக்கு தெளிவாக தெளிவுபடுத்துகிறது. கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தமாவோம் நியாயத்தீர்ப்புக்கு தப்பித்துக்கொள்ளுவோம் இயேசு வருகிறார் விரைவில் வருகிறார். ஆமென் அல்லேலூயா.

கர்த்தர்தாமே இந்த வார்த்தைகளை உங்களுக்கு ஆசீர்வாதமாய் மாற்றித் தருவாராக ஆமேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *