தேவனின் சித்தம்

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இம்மாத இதழின் மூலமாக உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கர்த்தர் தாமே இந்த வார்த்தைகள் மூலம் உங்களை ஆசீர்வதிப்பாராக. 

எபிரேயர் 6:1-3

1.ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேசவசனங்களை நாம்விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், 2. ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்து போவோமாக. 3. தேவனுக்குச் சித்தமானால் இப்படியே செய்வோம். எபிரெயர் 6:1,2,3

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே வாசித்த வசனத்திலிருந்து ஒரு காரியத்தை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். நம்முடைய முன்னோர்களாகிய அப்போஸ்தலர் நம்மை எந்த அடிப்படையில் நடத்தினார்கள் என்றால் செத்த கிரியைகளுக்கு நீங்கி மனந்திரும்புதல், தேவன் பேரில் வைக்கும் விசுவாசம் ஸ்தானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்கிற இதுதான் நம் அனைத்து விசுவாசிகளுக்கும் ஆரம்பத்திலிருந்து முடிவு வரையிலும் சொல்லப்பட்டிருக்கிற அடிப்படை உபதேசம். 

இன்றைய நாட்களில் கிராமத்தில் இருப்பவர்களுக்கும் பட்டணத்தில் இருப்பவர்களுக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு வருகிகிறது. அதை நீங்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறீர்கள் என்றால் மனந்திரும்பி சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்கிறீர்கள். இதுதான் முதலாவதான மனந்திரும்புதல் மனம் திரும்பிய பிறகு இரண்டாவதாக தேவன் பேரில் விசுவாசம் ஆரம்பமாகிறது. மூன்றாவதாக ஞானஸ்தானத்தை குறித்தும் பரிசுத்த ஆவியை குறித்தும் உபதேசிக்கப் படுகின்றன. ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று வேதம் கூறுகிறது இதுதான் ஞானஸ்தானத்தை குறித்த உபதேசம். 

நான்காவது கைகளை வைத்தல் ஆண்டவர் சொல்லுகிறார் வியாதியஸ்தர் மேல் உங்கள் கைகளை வையுங்கள் அவர்கள் சொஸ்தமாவார்கள் கைகளை வைக்கிறதுதான் நம்முடைய வேலை சுகம் தருவது ஆண்டவருடைய வேலை கைகளை வைத்து ஜெபிப்பது உபதேசத்தின் ஒரு பகுதி.

ஐந்தாவது நமக்குச் சொல்லப்பட்ட காரியம் கிறிஸ்துவுக்குள் மரித்த யாவரும் நிச்சயமாக உயிரோடு எழுந்திருப்பார்கள் கடைசியாக நியாயத்தீர்ப்பு உலகத்தின் முடிவில் உண்டாகும் வானமும் பூமியும் வெந்து உருகிப் போகும் அப்பொழுது எல்லோருக்கும் நியாயத்தீர்ப்பு கொடுக்கப்படும் புதிய ஏற்பாட்டில் வெளிப்படுத்தின விசேஷத்தில் புதிய வானமும் புதிய பூமியும் உண்டாகும். அப்பொழுது யார் யாரெல்லாம் அவரோடு அரசாளுவார்கள் என்றால் இப்பொழுது இந்த உபதேசங்களுக்கு கீழ்ப்படிந்து நடக்கிற அவர்கள் எல்லாரும் காணப்படுவார்கள் நியாயத் தீர்ப்பு குறித்து வெளிப்படுத்தின விசேஷம் 20 மற்றும் 21ஆம் அதிகாரத்தில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. 

மனந்திரும்புல் ஒவ்வொரு கிறிஸ்துவர்களுக்கும் அஸ்திபாரம் இதுதான். இன்னொரு காரியத்தை நாம் கற்றுக் கொள்ள வேண்டும் பூரணராகும்படி கடந்து போவோமாக எப்படி நாம் பூரணராகும்படி கடந்து போக வேண்டும்? உதாரணமாக மனந்திரும்புதல் என்று சொல்லப்பட்ட காரியத்தில் முழுமையாக மனந்திரும்பி விட்டோமா இல்லை இன்னும் அதே பாரம்பரியம் கோபம், கெட்ட வார்த்தை, கெட்ட செயல் இயேசுவை ஏற்றுக் கொள்வதற்கு முன்னே எப்படி இருந்தோமோ அதே மாதிரி தான் இயேசுவை ஏற்றுக் கொண்ட பிறகும் இன்னும் அப்படியே காணப்படுகிறோம்.

மனம்திரும்புதல் என்றால் முற்றிலுமாக மாறுவது. அப்படியானால் மனந்திரும்புதலிலே நீங்கள் பூரணர் ஆகவேண்டும் மனந்திரும்புவதற்கு முன்பு நீங்கள் ஜோசியம் நல்ல நேரம் கெட்ட நேரம் பார்ப்பவராகவும் வெளியே போகும்போது விதவைகள் பார்த்தால் உடனே வீட்டிற்குள்ளே போவதுமான  நிலையில் இருந்திருக்கலாம். ஆனால், இப்பொழுதும் அதே போல இருப்பீர்கள் என்றால் நீங்கள் எப்படிப்பட்ட மனந்திரும்புதல் அடைந்தீர்கள் என்று கேள்விக்குறியாக உள்ளது.

ஏற்கனவே உங்கள் எல்லா பாவங்களையும் சாபங்களையும் இயேசு தொலைத்து விட்டார் சிலுவையிலே எல்லாவற்றையும் தீர்த்துவிட்டார் மனம் திரும்பி விட்டேன் என்று சொல்லி கெட்ட வார்த்தைகளை நீங்கள் சரளமாக பேசினால் உங்கள் மனந்திரும்புதலில் ஏதோ பிரச்சனை உள்ளது கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து வரக்கூடாது என்று வேதம் கூறுகிறது அப்படியென்றால் இன்னும் நீங்கள் மனம் விரும்பவில்லை என்றுதான் அர்த்தம். 

நீங்கள் கவனிக்க வேண்டிய காரியம் தேவன் பேரில் விசுவாசம்.  இந்நாட்களில் உங்களுக்கு  தேவன் பேரில் வைக்கும் விசுவாசம் உள்ளதா அதில் நீங்கள் பூரண படவேண்டும். இயேசுவை நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் என்று சொன்னால் அவரை எப்படி விசுவாசிக்கிறீர்கள் நான் எப்படி நம்புகிறேனென்றால் அவர்தான் தெய்வம் என்று நான் நம்புகிறேன். அவர்தான் உலகத்தை ரட்சிக்கிறவர் என்று நான் அவரை நம்புகிறேன். அவர்தான் நியாயத்தீர்ப்பு கொடுக்க முடியும் என்று நான் நம்புகிறேன் அவர்தான் என் பாவத்தை மன்னித்தார் என்று நான் நம்புகிறேன் அவர்தான் எனக்கு சுகம் தர முடியும் என்று நான் நம்புகிறேன். இப்படிப்பட்ட விசுவாசம் எனக்குள் மட்டுமல்ல இதை வாசிக்கிற நாம் யாவருக்கும் காணப்படவேண்டும்.

 ஓர் சாதாரண தலைவலியோ வயிற்று வலியோ வரும்போது அல்லது சிறிய பிரச்சினைகள் வரும்போது நாம் எதை நம்புகிறோம் உங்கள் நம்பிக்கை எதின் பேரில் காணப்படுகிறது என்றால் தேவன் பெயரில் இல்லை ஒரு பிரச்சனை நீங்கள் சந்திக்கும்போது தேவ சமூகத்தில் போய் ஜெபம் பண்ணுவது இல்லை நாம் யாரிடத்தில் போய் ஆலோசனை கேட்கலாம் என்று நினைக்கிறோம். முதலில் ஆண்டவரிடத்தில் ஆலோசனையை கேளுங்கள் அதிலே பூரணமாகுங்கள் ஆண்டவரிடத்தில் உட்கார்ந்து அவரிடத்தில் பேசுங்கள் அப்படி நீங்கள் பேசும் போது உங்கள் பிரச்சினைக்கான விடுதலையும் தீர்வையும் அவரே உங்களுக்கு கொடுத்துவிடுவார்.

உங்கள் பிரச்சினைக்கு முடிவு அவரால் தான் கொடுக்க முடியும் நீங்கள் யாரை நம்புகிறீர்கள் எங்கள் ஐயா இருக்கிறார் நன்றாக ஆலோசனை தருவார் என்று நினைக்கிறீர்களா ? அப்படியல்ல அதைவிட நம்இயேசையா  இருக்கிறார் அவர் எனக்கு பெரிய ஆலோசனை கொடுக்கிறவர் அவருடைய பாதத்தில் உட்கார்ந்து அவரிடத்தில் நம் பிரச்சினைகளை சொல்லலாம் உங்கள் விசுவாசம் யார் பெயரில் இருக்க வேண்டும் என்றால் இயேசுவின் பெயரில் மட்டும் தான் இருக்க வேண்டும். நீங்கள் பசியாய் இருக்கிறீர்கள் அடுத்த வேளை சாப்பாட்டுக்கே வழியில்லை என்றால் என்ன செய்யலாம் பக்கத்துவீட்டில் போய் கேட்கலாம் இல்லை எதிர்வீட்டில் போய் கேட்கலாம் என்று இல்லாமல் இயேசுவை நோக்கி கேட்போம் என்று நினைத்தீர்கள் என்றால் அதுதான் தேவன் பேரில் வைக்கிற விசுவாசம் எத்தனை பேரை ஆண்டவர் போஷித்து இருக்கிறார்.

இஸ்ரவேல் ஜனங்களை வனாந்தரத்திலே மன்னாவைகொண்டு போஷித்து இருக்கிறார். உன்னையும் என்னையும் போஷிக்க அவர் வல்லவராய் இருக்கிறார் நம்முடைய கஷ்டத்தை எல்லாம் கேட்க ஒரு சுமைதாங்கி ஒருவர் இருக்கிறார் அவர் தான் இயேசு கிறிஸ்து. உங்கள் பிரச்சினைகளையும் கஷ்டங்களையும் அவரிடத்தில் சொல்லுங்கள்  உங்கள் விசுவாசத்திலே நீங்கள் பூரணராக ஆகவேண்டும். 

ஸ்தானங்களுக்கடுத்த அடுத்த உபதேசம்:

ஸ்தானங்களுக்கடுத்த  உபதேசம் என்றால் ஞானஸ்தானம் வேதத்தில் இயேசு கிறிஸ்து சொன்ன பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்தானம் எடுக்க வேண்டும் என்ற உபதேசத்திற்கு இணங்க அநேகர் இன்றைக்கு ஞானஸ்தானம் எடுக்கிறார்கள். ஆனால், எதற்கு எடுத்தீர்கள் என்று கேட்டால் எனக்கு உடல்நிலை சரியில்லை ஆலயத்தில் வந்து ஞானஸ்நானம் எடுத்தால் சுகமாகிவிடும் என்றார்கள். அதற்கு தான் நான் ஞானஸ்தானம் எடுத்தேன் என்பார்கள் இது சரியான ஒரு காரியமல்ல இயேசு கிறிஸ்துவே தெய்வம் என்று ஏற்றுக்கொண்டு ஞானஸ்நானம் எடுத்தவர்கள் சில பேர்தான்.

ஞானஸ்தானம் எடுத்தால் வயிறு வலி நீங்கிவிடும் என்று சொன்னார்கள் அதனால்தான் ஞானஸ்நானம் எடுத்தேன் என்பார்கள் இதுவெல்லாம் அவருக்கு லேசான காரியம் மரித்தவனை உயிரோடு எழுப்பிவருக்கு வயிற்று வலி தலை வலி போக்குவது ஒரு பெரிய காரியமா தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றியவருக்கு நம்முடைய சரீரத்தில் சுகம் தருவது பெரிய காரியமா அதை நாம் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும் இதுதான் ஞானநானத்துக்கு அடுத்த உபதேசம். 

கைகளை வைத்தல்:

உங்கள் தலையின் மேல் கைகளை வைத்து ஜெபிக்க உங்கள் சபை போதகருக்கு மட்டும்தான் கர்த்தர் அதிகாரத்தை கொடுத்திருக்கிறார். வேறே யாருக்கும் உங்கள் தலை மேல் கைகளை வைக்க அதிகாரம் கொடுக்க வேண்டாம். சிலர் எல்லாரிடத்திலும் போய் தலையை கொடுப்பார்கள் அது மிகவும் தவறு அவர்கள் யார் என்று தெரியாது அவர்கள் என்ன அபிஷேகத்தில் இருக்கிறார்கள் என்று தெரியாமல் அவர்கள் எப்படிப்பட்ட உபதேசத்தில் இருக்கிறார்கள் என்று தெரியாமல் அவர்களைப் பார்த்தவுடனே நம்முடைய தலையை ஜெபிக்க கொடுக்கக்கூடாது. கைகளை வைத்தல் என்கிற இந்த உபதேசத்தில் ஒரு பூரணராக வேண்டும். 

மரித்தோரின் உயிர்த்தெழுதல்:

இதைக்குறித்து விசுவாசம் அநேகருக்கு இல்லை மரித்த பிறகு உயிரோடு இருப்போம் என்கிற விசுவாசம் அநேக விசுவாசிகளிடத்தில் இல்லவே இல்லை. நான் சொல்லுகிறேன் நீங்கள் மரித்தால் நிச்சயமாக இயேசு கிறிஸ்துவின் வருகையில் உயிரோடு எழுந்திருப்பீர்கள். இந்த விசுவாசம் உங்களுக்கும் காணப்படவேண்டும் இதை குறித்து தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுமானால் 1 கொரிந்தியர் 15ம் அதிகாரத்தை பொறுமையாக ஒவ்வொரு வசனத்தையும் நேரம் எடுத்து வாசித்துப் பாருங்கள் உயிர்த்தெழுதலை குறித்து மிகவும் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. இதில் நீங்கள் பூரணாகவேண்டும். 

நியாயத்தீர்ப்பு நாள்:

உங்களுக்கு முன் பகுதியில் சொல்லியிருக்கிறேன் வெளிப்படுத்தின விசேஷம் 20-21 அதிகாரத்தை நீங்கள் வாசித்துப் பார்த்தால் எப்படிப்பட்ட நியாயத் தீர்ப்பு வரும் எப்படிப்பட்ட ஆட்சி வரும் என்பதை குறித்து சொல்லி இருந்தேன். அந்நாளில் புதிய வானம் புதிய பூமி உண்டாகும் அதிலே நாம் யார் எல்லாம் போகப் போகிறோம் என்பதை குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. இப்படி சொல்லப்பட்டிருக்கிறதுதான் நியாயத்தீர்ப்பு இதை தெளிவாக அறிந்துகொள்ள வேண்டுமானால்.

 II பேதுரு 3:8 பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம் வருஷம்போலவும், ஆயிரம் வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம். 9. தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.

இங்கு நாம் நன்றாக கவனிக்க வேண்டும் இவை எல்லாவற்றிலும் நாம் பூரணமாக வேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும் என்பதை குறித்து நாம் இப்பொழுது வாசிக்கப் போகிற வசனம் மூலம் அறிந்து கொள்ளலாம் எப்படி இருந்தால் நாம் பூரணம் அடைய முடியும்? என்பதை இதைத் தொடர்ந்து வரும் வசனங்களில் வாசிக்கலாம். 

2 பேதுரு1:1-8 & 2 பேதுரு1:3.தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி, 4.இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

உலகத்தைப் பற்றி வேதம் என்ன கூறுகிறதென்றால், உலகம் என்றால் பூமி உலகத்தில் இருந்து தப்பி திவ்யசுபாவத்திற்கு பங்குள்ளவர்கள் ஆகும் பொருட்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பொழுது எங்கே போக வேண்டும் என்றால் திவ்ய சுவாபத்திற்கு போகவேண்டும் திவ்ய சுபாவத்திற்கு போவது என்றால் பூரணத்தை நோக்கி போவது அல்லது பரலோகத்தை நோக்கி போவது ஆகும். திவ்யம் என்ற வார்த்தைக்கு அழகான பசுமையான செழிப்பான என்று ஆயிரம் அர்த்தங்கள் சொல்லிக்கொண்டே போகலாம் அப்படிப்பட்ட இடத்தை நோக்கி நாம் கடந்து போக வேண்டும். உலகம் இப்பொழுது இச்சையினால் காணப்படுகிறது உலகத்தில் எங்கு பார்த்தாலும் இச்சையைத் தவிர வேறு எதுவும் இல்லை.

இரட்சிக்கப்பட்டவர்களுக்கும் இரட்சிக்கப்படாதவர்களுக்கும் சரி பெரியோருக்கும் சிறியோர்க்கும் சரி அவரவர் வயதுக்கு ஏற்றவாறு இச்சை உண்டாயிருக்கிறது. உலகத்தில் உள்ள இச்சையிலிருந்து தப்பித்து பரலோகத்தை நோக்கி அல்லது திவ்ய சுபாவத்தை நோக்கி அல்லது பூரணமாகுதலைநோக்கி கடந்து போக வேண்டும். ஏற்கனவே நாம் பார்த்த ஐந்து காரியங்களிலே நமக்கு அடித்தளம் போடப்பட்டுள்ளது இதை மறுபடியும் அஸ்திபாரமாக திரும்பி போடாமல் இதிலே நாம் வளர வேண்டும் வளர்ச்சி அடைய வேண்டும் உலகத்தில் யாரை பார்த்தாலும் அவர்களுக்கு ஏதாவது ஒரு ஆசை இருக்கிறது.

நினைத்ததை அடைய வேண்டும் என்று போராடுகிறார்கள். ஆனால், வேதம் சொல்லுகிறது உங்கள் ஆசை எதுவாக இருக்க வேண்டுமானால் பரலோகமாகத்தான் இருக்க வேண்டும். இதுதான் திவ்ய சுபாவம் உலகத்தில் வாழ்ந்தால் இதுவெல்லாம் இல்லாமல் வாழ முடியாது என்று சொன்னீர்களென்றால், நமக்கு இயேசுவே அதை வாழ்ந்து காண்பித்துள்ளார். இச்சை இல்லாமல் அவர் மனுஷனாக உலகில் வந்து வாழ்ந்து காண்பித்ததினால் நாமும் மனது வைத்தால் அவரைப்போல் வாழ முடியும், ஆனால் நம்மால் மனது வைக்க முடியவில்லை. அதனால்தான் நம்மால் வாழ முடியவில்லை அடுத்து என்ன வேண்டும் என்றால் திவ்ய சுபாவத்திற்கு பங்குள்ளவர்கள் ஆகும்பொருட்டு மேன்மையும் அருமையான வாக்குதத்தங்களும் அவைகளினாலே நமக்கு அருளப்பட்டிருக்கிறது. இப்பொழுது நான் ஒவ்வொரு படியாக கடந்து போக போகிறேன் நாம் பூரணத்தை கடந்து போக வேண்டும் என்றால் ஏழுபடிகளை நான் உங்களுக்கு சொல்லிக் கொடுக்க போகிறேன்.

2பேதுரு 1:5 இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும்,

முதலில் நீங்கள் நன்றாய் அறிந்து கொள்ளுங்கள். அதிக ஜாக்கிரதையோடு இருந்து அதோடுகூட விசுவாசத்தை கூட்டவேண்டும் ஜாக்கிரதை என்றால் பத்திரமாக என்று அர்த்தம். அப்படியென்றால், நீங்கள் உங்களை அதிக பத்திரமாக ஜாக்கிரதையாகப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். எப்பொழுதும் யார் வேண்டுமானாலும் உங்கள் விசுவாச வாழ்க்கையை கெடுக்க வரலாம், நம்முடைய வாழ்க்கையில் பாவம் நம்மை தொட்டு விடாதபடி அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

ஜாக்கிரதையோடு கூட விசுவாசத்தை சேர்க்கவேண்டும் அருமையான தேவனுடைய பிள்ளைகளே நீங்கள் பூரணம் அடைய வேண்டுமென்றால் ஜாக்கிரதையாய் இருந்தால் மட்டும் போதாது எல்லாவற்றையும் என் தேவன் செய்ய வல்லவர் என்பதை விசுவாசிக்க வேண்டும். எல்லோரிடத்திலும் விசுவாசம் காணப்படுகிறது. ஆனால், அது நோய்வாய்ப்பட்டு மிகவும் பலவீனமாக காணப்படுகிறது. விசுவாசம் எப்படி இருக்க வேண்டுமானால் யுத்தவீரனை போல வீரம் உள்ளதாக காணப்பட வேண்டும் விசுவாசம் அக்கினியாய் உங்களுக்குள் காணப்படவேண்டும். 

அதைத்தொடர்ந்து விசுவாசத்தோடு தைரியத்தையும் கூட்ட வேண்டும் என்பதைக் காண்கிறோம். இதை ஆங்கில வேதாகமத்தில் வாசித்துப் பார்த்தால் தைரியம் என்று சொல்லாமல் நல்லொழுக்கம் என்று சொல்லப்பட்டிருக்கிறது இங்கே நமக்கு தைரியம் தேவை இல்லை விசுவாசத்திற்கு பின்பு நல்லொழுக்கம் தான் தேவை. நாம் பள்ளிக்கு சென்ற காலங்களில் கற்றுக்கொண்ட காரியம் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும். அப்படியானால், ஒழுக்கம் உயிரை காட்டிலும் அதிகமாய் மதிக்கப்படுகிறது. 

விசுவாசத்தோடு தைரியம்:

விசுவாசத்தோடு தைரியம் என்கிற நல்லொழுக்கத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் கிறிஸ்தவர்கள் என்று சொன்னால் மற்றவர்களை காட்டிலும் வேறுபட்ட வாழ்க்கை நம்மிடத்தில் காணப்படவேண்டும். பத்து கட்டளைகளில் சொல்லப்பட்ட அந்த ஒழுக்கம் நாம் கடைபிடிக்க வேண்டும். 10 கட்டளைகளில் முதல் நான்கு கட்டளைகள் அவருக்கு செய்ய வேண்டிய காரியம். ஐந்தாவது கட்டளை முதல் பார்ப்போமென்றால், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக இந்த ஒழுக்கம் உங்களுக்கு காணப்பட்டால் போதும் ஆறாவது கட்டளை கொலை செய்யாதிருப்பாயாக கொலை செய்யவது மட்டும் அல்ல அவனை கொன்று போடலாம் போல இருக்கிறது என்கிற சிந்தனையே கூட உங்களுக்கு வராமல் இருக்கவேண்டும்.

ஏழாவது விபச்சாரம் செய்யாதிருப்பாயாக அநேகர் நினைத்துக் கொள்வது செய்தால் தான் விபச்சாரம் என்று இல்லை நீங்கள் மனதிலே சிந்தையிலே ஒரு பெண்ணை ஒரு ஆணை இச்சையோடு பார்த்தாலே விபச்சாரம் செய்தாயிற்று என்று வேதம் சொல்லுகிறது. அப்பொழுது நன்றாக அறிந்து கொள்ளுங்கள் சிந்தித்தாலே நினைத்தாலே உங்கள் ஒழுக்கம் கெட்டுப் போய்விட்டது அங்கே ஒழுக்கக்கேடு வந்துவிட்டது.

எட்டாவது கட்டளை களவு செய்யாதிருப்பாயாக களவு என்ற திருட்டு செய்யாதிருப்பாயாக ஒன்பதாவது கட்டளை பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக. ஒருவருக்கும் விரோதமாய் நீங்கள் பேசாமல் இருந்தாலே போதும் மற்றவர்களைப் பற்றி குறை பேசுகிற ஒழுக்கக்கேடு நம்மிடத்தில் இருக்கக்கூடாது இருதயத்தின் நிறைவுதான் வாய் பேசும் உங்கள் இருதயத்தில் அப்படிப்பட்ட சிந்தை காணப்படுகிறது.

பத்தாவது பிறனுக்கு உள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக  மற்றவர்கள் பொருட்கள் மேல் ஆசைப் படக்கூடாது மற்றவர்கள் தங்கச் செயின் போட்டிருந்தாள் நீங்கள் அதைப் பார்த்து ஆசைப்படாதீர்கள் நீங்கள் ஆண்டவரை கேட்டால் உங்களுக்கு வைரத்தினாலான செயினை கொடுக்க அவர் வல்லவராய் இருக்கிறார் நன்றாக அறிந்து கொள்ளுங்கள்.

விசுவாசத்தோடு நல்ல ஒழுக்கத்தையும் கூட்ட வேண்டும் :

நல்ல ஒழுக்கத்தோடு ஞானத்தை சேர்க்க வேண்டும் ஞானம் என்றால் அறிவு எது நன்மை எது தீமை என்பதை பகுத்தறிவு தான் ஞானம் ஆகும் திருவள்ளுவர் ஒரு செய்யுளில் அழகாக சொல்லுகிறார் எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு எந்தப் பொருளைப் பற்றி யார் பேசினாலும் அதனுடைய மெய்ப் பொருளை அறிந்து கொள்வது தான் அறிவு என்கிறார். உலகத்திலே அநேக தெய்வங்கள் உண்டு ஆனால், இதிலே மெய்ப்பொருளான தெய்வம் யார் என்று அறிந்து கொள்வது தான் அறிவு. 

ஞானத்தோடு இச்சையடக்கத்தை சேர்க்க வேண்டும் இச்சையடக்கம் என்றால் நிதானம் ஒருவருக்கு முதலில் நிதானம் தேவை ஒரு சிலருக்கு கோபம் வந்தால் என்ன பேசுகிறோம் என்றே தெரியாது. தாங்கள் பெற்ற பிள்ளைகளை பார்த்து கெட்ட வார்த்தைகளில் பேசுவார்கள் நீங்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் முதலில் உங்களுக்கு எல்லா காரியங்களிலும் ஒரு நிதானம் தேவை.

அதேபோல் ஒரு பொருள்மேல் ஆசைப்படும் போது உதாரணமாக எனக்கு அல்வா சாப்பிட ஆசை வந்தால் அது தவறா என கேட்டால் இல்லை ஆனால் எனக்கு உடலில் சர்க்கரை வியாதி இருப்பதனால் நான் சாப்பிடலாமா என்றால் கட்டாயம் சாப்பிடக் கூடாது. அப்படிப்பட்ட நிதானம் நமக்குத் தேவை அந்த நாவு அடக்கம் என்கிற இச்சை அடக்கம் நமக்குத் தேவை. அதுதான் நிதானம் நாம் எந்த ஒரு காரியத்திற்காகவும் பதற்றப் பட கூடாது நீங்கள் யாரிடத்தில் பேசினாலும் முதலில் உங்களைப் பற்றி நன்றாக அறிந்து கொள்ளுங்கள் உங்களுடைய தரத்தையும் தகுதியையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள். அதன் பின்பு நீங்கள் யாரிடத்தில் பேசினாலும் அந்த பேச்சிலேயே பாவம் வராது. 

அதைத் தொடர்ந்து இச்சை அடக்கத்தோடே பொறுமையை கூட்ட வேண்டும். ஒரு பழமொழி சொல்வார்கள் பொறுமை கடலினும் பெரியது என்று ஆனால், நம்மிடம் அது இருக்காது யாரோ ஒருவர் சி என்று சொல்லிவிட்டால் போதும் அவ்வளவு தான் அந்த நாள் முழுவதும் யாரையும் சாப்பிடுவோ தூங்கவோ விடுவதில்லை. ஒன்றை கவனியுங்கள் ஆண்டவராகிய நமது இயேசு கிறிஸ்துவை காரி துப்பினார்கள் அவர் அமைதியாக இருந்தார். அந்த பொறுமை நமக்கு வேண்டும் ஏன் தெரியுமா நீங்கள் செய்யாத தவறுக்கு உங்களை யாராவது ஒருவர் தீர்ப்பு செய்திருந்தால் நிச்சயமாக சொல்லுகிறேன் அதற்குரிய நித்திய தண்டனையை அவர்களுக்கு கர்த்தர் கொடுப்பார்.

தண்டனை உண்டு உன்னை தொடுகிறவன் என் கண்மணியை தொடுகிறான் என்று வேதம் கூறுகிறது ஆகவே பொறுமை வேண்டும் சிலர் கணவன் மனைவிக்குள்ளே பொறுமை இல்லை ஒருவருக்கு ஒருவர் பொறுமையாக பேசுவதில்லை பெண்களை பூமாதேவி மாதிரி பொறுமையாக இருக்கிறார்கள் என்று சொல்வார்கள் இப்போது இந்த காரியத்தில் யாராவது ஒருவர் அதுபோல காணப்படுகிறார்களா சொல்லுங்கள் பார்ப்போம். அப்படிப்பட்டவர்கள் இருந்தார்கள் என்றால் நீங்கள் தான் உண்மையாகவே பூரணம் அடைந்தவர்கள். 

பொறுமையோடு தெய்வபக்தி சேர்க்க வேண்டும்:

தேவ பக்தி என்றால் ஜெபிக்காமல் உங்களால் இருக்கவே முடியாது சபைக்கு போகாமல் உங்களால் இருக்கவே முடியாது தேவ பக்தி இருந்தால் வேதத்தை வாசிக்காமல் உங்களால் இருக்க முடியாது தெய்வ பக்தி இருந்தால் மற்றவருக்கு சுவிசேஷம் சொல்லாமல் இருக்கவே முடியாது. இதுதான் தெய்வபக்தி பின்பு தங்களை ஆவியிலே தேற்றிக்கொண்டு தங்களை கர்த்தருக்குள் உறுதிப்படுத்திக் கொள்வார்கள். இப்படி இருந்தால் தான் தெய்வபக்தி இதில் ஏதாவது ஒன்று இல்லை என்றால் கூட உங்களிடத்தில் தேவபக்தி குறைவாக இருக்கிறது என்றுதான் அர்த்தம்.

தெய்வ பக்தியோடு சகோதர சிநேகத்தை சேர்க்க வேண்டும் அப்படி என்றால் மனிதநேயம் கண்ட சகோதரனிடத்தில் அன்பு கூறாத நீங்கள் காணாத தேவனிடத்தில் எப்படி அன்பு கூறப் போகிறீர்கள் உங்கள் கண்களுக்கு முன்பாக இருக்கிற கஷ்டப்படுகிற சகோதர சகோதரிகளுக்கு நீங்கள் உதவி செய்ய முடியாமல் போனாலும் அவர்களை பார்க்கும் போது எப்படி இருக்கிறீர்கள் என்று விசாரித்தாலே போதும் அவர்களுக்கு ஆயிரம் கோடி சொத்து வந்து சேர்ந்தது போல் காணப்படும். இப்படியாக கண்களுக்கு முன்பாக இருக்கிறவர்களை விசாரிக்காமல் ஆண்டவரே நான் உங்களோடு கூட இருக்கிறேன் என்று சொல்லுகிறது அவ்வளவும் முழுமையான  வேஷம் ஆகும்.

சகோதர சினேகம் என்பது  மனுஷனை மனுஷனாக நீங்கள் மதிக்கவில்லை என்றால் நீங்கள் ஆண்டவரை பார்த்து பேசினேன் பரலோகம் சென்று வந்தேன்  என்று இதெல்லாம் சொன்னாலும் அதெல்லாம் வெறும் நாடகமதான் நீங்கள் ஆண்டவரை ஏமாற்றவில்லை நீங்களே உங்களை ஏமாற்றிக் கொள்கிறீர்கள் என்று அறிந்து கொள்ளுங்கள். ஒருவரை ஒருவர் பார்த்து அன்பு காட்ட வில்லை என்றால் நீங்கள் நிச்சயம் பரலோகத்தில் போவதற்கு தகுதியில்லாதவர்கள் என்று அர்த்தம். 

சகோதர சிநேகத்தோடு அன்பை கூட்டவேண்டும்:

அன்பு என்றால் 1 கொரிந்தியர் 13 ஆம் அதிகாரத்தில் அழகாக விளக்கிச் சொல்லப்பட்டிருக்கிறது அன்பு சகலத்தையும் தாங்கும் சகலத்தையும் சகிக்கும் சகலத்தையும் நம்பும் சகலத்தையும் விசுவாசிக்கும் இதுதான் அன்பு உங்கள் பிள்ளைகளை எப்படி நேசிக்கிறீர்களோ அதேபோல் மற்றவர் பிள்ளைகளையும் நேசிப்பது தான் அன்பு. வசனம் சொல்லுகிறது எல்லாம் ஒழிந்து போகும் நம்பிக்கை விசுவாசம் கூட ஒழிந்துபோகும் அன்பு ஒருக்காலும் ஒழியாது நாம் எதை சேர்க்க வேண்டும் என்றால் ஒருக்காலும் அழியாத அன்பை சேர்க்கவேண்டும் 

II பேதுரு 1:8 இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது.

ஆமென் கர்த்தர்தாமே இந்த வசனங்களை ஆசீர்வதிப்பாராக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *