தமிழ் வேதாகம சரித்திரம்
இந்திய மொழிகளிலே, தமிழ் மொழி தான் பழங்கால இலக்கியங்களைத் தன்னிடத்தே கொண்ட தனிப்பெருமை வாய்ந்தது இந்தியாவின் இலக்கிய வரலாற்றில் தமிழ் மொழிக்கு இரண்டு தனிச்சிறப்பும், மேன்மையும் உண்டு, அதில்
1. இந்திய மொழிகளில் தமிழ்மொழியில்தான் முதன் முதலாக புத்தகம் எழுதப்பட்டது அந்த முதல் புத்தகம் தமிழ் வேதாகமம் தான்.
2. இந்திய வரலாறாறில் முதன்முதலில் அச்சிடப்பட்ட “புதிய ஏற்பாடு” புத்தகம் தமிழ் மொழியின் இரண்டாவது தனிச்சிறப்பு
இதுமட்டுமல்ல தமிழில் முதன்முதலில் சொல் – அகராதி உருவாக்கப்பட்டதும் வேதாகமம் மொழிபெயர்ப்பின் போது தான். அனேகர், நாம் பயன்படுத்தும் தமிழ் வேதாகமமே முதன்முதலில் தமிழ்ல் வந்த வேதாகமம் என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர் . ஆனால் இதற்க்கு முன்பே ஐந்திற்கும் மேற்பட்ட தமிழ் மொழிபெயர்ப்புகள் உருவாக்கப்பட்டது.