1. போர்ச்சுக்கீசியின் வருகை:
போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த வாஸ்கோடகாமா என்பவர் புகழ்பெற்ற மாலுமிகளில் ஒருவர் . இவர் அநேக நாடுகளுக்கு கடல் மார்க்கமாய் கடந்துவந்து கி . பி 1498ல் மே மாதம் கேரளாவிலுள்ள கள்ளிக்கோட்டைக்கு போர்ச்சுகீசிரை கொண்டுவந்து சேர்ந்தார்.
கி . பி . 1510ல் இவர்கள் கோவாவையும் , பிறகு சென்னைக்கு அருகில் உள்ள சாந்தோமையூம் , பல இடங்களைப் பிடித்து தங்கள் ஆதிக்கத்தை ஆரம்பித்தனர். பிறகு இலங்கையையும் கைப்பற்றினர். பிறகு தாங்கள் கைப்பற்றிய சில இடங்களி வியாபாரத்தோடு கிறிஸ்துவை குறித்து பிரசங்கித்து சலறை கிறிஸ்துவிற்குள் கொண்டுவந்தனர்.
இவர்களைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல வியாபாரக் கம்பெனிகள் இந்தியாவிற்கு வர ஆரம்பித்தன கி . பி . 1616ல் டென்மார்க் வியாபாரிகள் டென்மார்க்கிலும் , இந்தியாவிலும் “ கிழக்கிந்திய கம்பெனி ” என்ற பெயாரில் தொழில் தொடங்கினர்.
கி . பி . 1619ல் ஆங்கிலேயர் வந்து அவர்களும் வியாபாரம் தொடங்கினார்கள் . பின் பல இடங்களில் தொழிற்சாலைகலை தொடங்கினர் . இதன் விளைவாக ஏறக்குறைய 90 ஆண்டுகளாக டென்மார்க் , கிழக்கிந்திய கம்பெனியுடன் தரங்கம்பாடியில் வியாபாரத்தொடர்பு வைத்திருந்தது.
போர்த்துக்கீசியரைத் தவிர மற்ற ஐரோப்பிய நாட்டு வியாபாரிகள் யாரும் கிறிஸ்தவ மார்க்கத்தைப் பரப்ப வரவில்லை வியாபார நோக்கத்திலேயே வந்தனர் . அது மட்டுமல்ல கிறிஸ்தவம் பரவுவது தங்கள் வியாபாரத்திற்கு இடையூறு செய்யும் என்று என்னி மிஷனேரிகள் இந்தியாவிற்கு வருவதை விரும்பவில்லை . அதோடு எதிர்க்கவும் செய்தனர்.