சாமுவேல் (தேவனால் கேட்கப்பட்டவன்) | இவர் யார் ?

சாமுவேல் (தேவனால் கேட்கப்பட்டவன்)

கி.மு. 1171

இவர் எல்க்கானாவின் மகன். அன்னாள் அவன் தாய்.

இவர் பிறக்குமுன்னமே நசரேய பொருத்தனைக் குட்படுத்தப்பட்டவர். ஏறக்குறைய 12 வயதில், சீலோவி லிருந்த தேவாலய ஊழியத்துக்கு ஒப்புக்கொடுக்கப்பட் டான். அங்கே ஏலிக்குமுன், கர்த்தருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தார்.

அந்நாட்களில் தீர்க்கதரிசன ஊழியத்துக்கு அழைக்கப் பட்டார். 1சாமு. 3:1-18. ஆனாலும் 20 வருஷங்களுக்குப் பிற்பாடுதான், இவர் தன் ஊழியத்தைத் துவக்கி ஜனங்களின் விக்கிரக ஆராதனையைப்பற்றி கண்டித்து, கர்த்தரையே வணங்கும்படி போதித்தார்.

அந்நாட்களில், பெலிஸ்தர் ஜனங்களை நெருக்கினார்கள். இவர் கர்த்தரை வேண்டிக்கொண்டபோது, பெலிஸ்தர் தோற்கடிக்கப்பட்டார்கள். அதன்பின் இவர் ராமாவிலே தங்கியிருந்து மிஸ்பா, கில்கால், பெத்தேல் என்ற இடங்களுக்குப்போய், நியாய விசாரணை செய்தார்.

இவனுடைய வயோதிப நாட்களில் இவனுடைய இரு குமாரரும் இவனுக்கு உதவியாயிருந்தார்கள். ஆனால் ஜனங்கள் ஒரு ராஜா வேண்டுமென்று கேட்ட போது, தேவனுடைய கட்டளைப்படி, சவுலை ராஜாவாக அபிஷேகம் பண்ணினான். அதன் பின்பும், நியாயாதிபதி வேலையை உயிரோடிருக்கும் வரை செய்து வந்தான்.

பிற்பாடு தேவன் சவுலைத் தள்ளிவிட்டபோது, தாவீதை அபிஷேகம் பண்ணினான். தாவீதும் இவனைத் தன் ஆவிக்குரிய தகப்பனைப் போல் நடத்தி வந்தான். கடைசியில் சாமுவேல் மரித்தபோது, இஸ்ரவேல் எல்லாரும் கூடி, துக்கங்கொண்டாடி, அவனை அவனுடைய வளவிலே அடக்கம் பண்ணினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *