சாது சுந்தர் சிங் (Sadhu Sundar Singh) – 6 (உலகத்திற்கு அவரது அறைகூவல்)

அவர் பட்ட பாடுகளும் அவரது ஒப்பற்ற அனுபவங்களும் விரைவில் வெளி உலகின் கவனத்திற்கு வந்தது. உலகின் பல பாகங்களிலும் உள்ள கிறிஸ்தவ மக்களின் சிந்தனை இந்த இந்திய அப்போஸ்தலர் மீது பதிய ஆரம்பித்தது. கிறிஸ்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பிரசங்கிக்கவேண்டும் என்ற அழைப்பு அவருக்கு இந்தியாவின் எல்லா பாகங்களிலுமிருந்து வந்தது. அவர் சென்ற இடங்களில் எல்லாம், தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை எடுத்துக்கொண்டு சிலுவை நாதரைப் பின்பற்றவேண்டும் என்பதையே அறைகூவலாகவும், மிசனறி அழைப்பாகவும் கூறினார். இவரது மிசனறி அறைகூவல்கள் அநேகரை ஜெபிப்பதற்கும், செயல்படுவதற்கும் தூண்டி விட்டது. சிலோன், பர்மா, மலேயா, சீனா, ஐப்பான் ஆகிய நாடகளுக்கச் சென்று பிரசங்கித்தார். மேலும் இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா இன்னும் ஒரு சில ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று நற்செய்தி வழக்கினார்.

பிரயாணத்தின் கடினத்தையும் அதிலே ஏற்படவிருக்கும் அபாயங்களையும் நான் முழுவதுமாக உணர்கிறபோதிலும், நான் இன்றைக்கு திபெத் நோக்கிப்பிரயாணம் செய்கிறேன். ஏனென்றால் நான் என்னுடைய கடமையை முழுமையாக நிறைவேற்றவேண்டும் என்று 1929ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ம் திகதி தன்னுடைய நண்பர்களுக்கு எழுதிய குறிப்பிலே எழுதியிருந்தார். திபெத் சென்று விட்டுத் திரும்பி வருவதற்கான சமயம் கடந்துவிட்டது. ஆனால் அவரோ வரவில்லை. எந்தவிதமான செய்தியும் அவரிடத்தில் இருந்து கிடைக்கவில்லை. ஒருவேளை அவர் பிரயாணத்தில் மலைச் சிகரங்களைக் கடந்து செல்லும்போது இறந்திருக்கலாம். அல்லது ஓர் ஆழமான கிணற்றிலே தூக்கிப் போடப்பட்டிருக்கலாம். அல்லது யாக் என்னும் எருமையின் நனைந்த தோலுக்குள்ளாக வைத்துக் கட்டப்பட்டு சுருட்டப்பட்டு அவருடைய எலும்புகள் முறிக்கப்பட்ட நிலையில் அவர் ஓர் இரத்த சாட்சியாக மரித்திருக்கலாம். அவரது முடிவு எப்படியாக இருந்தாலும் இந்தியாவின் அப்போஸ்தலராகிய சாது சுந்தர் சிங் தனது ஜீவகிரிடத்தைப் பெற்றுக்கொண்டார் என்பது மட்டும் உறுதியானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *