
இந்தியாவின் வடபாகத்தில் அமைந்திருக்கும் இன்னொரு நாடு நேபாளம். சாது சுந்தர் சிங் காலத்தில் இங்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படுவதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. சுந்தர் நேபாளத்திற்குச் சென்று அங்கு கிறிஸ்துவைப் பிரசங்கித்தார். இதனால் அவர் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். சிறைச்சாலையில் இருந்த மற்ற கைதிகளுக்கு அவர் கிறிஸ்துவைப் பற்றிக் கூறினார். கிறிஸ்துவைப் பற்றிக் கூறுவதிலேயே தம் நேரத்தைப் போக்கினார்.
எனவே அவரைத் தனியாக ஒரு சிறிய அறையில் அடைத்துவிட்டார்கள். அது ஒரு மாட்டுக் கொட்டையாக இருந்தது. அவரது ஆடைகளைக் கழற்றி, கைகளையும் கால்களையும் ஒரு கம்பத்தில் கட்டி அவர்மீது அட்டைகளை விடடுவிட்டார்கள். அவை அவருடைய இரத்தத்தை உறிஞ்சியது. பலம் குன்றிப்போனார். என்றாலும் அந்த அதிகமாக வேதனையிலும் கடவுளிடம் ஜெபிக்கவும் அவரை துதிக்கவும் ஆரம்பித்தார்.
இதைப் பார்த்த அதிகாரிகள் அவருக்குப் புத்தி சுயாதீனம் இல்லை என்று எண்ணி உடனடியாக விடுதலை செய்தார்கள். அட்டைகளினால் இரத்தம் உறிஞ்சப்பட்டுப் பலவீனமான நிலையில் இருந்தபோதிலும் மறுபடியுமாகப் பக்கத்திலிருந்த உருக்குச் சென்று தெருவில் நின்று நற்செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார். அவருக்கு நேரிட்ட எல்லா துன்பத்திலும் என்னுடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவுக்காக நான் பாடு அனுபவிப்பது ஒரு மாபெரும் மகிழ்சியின் இரகசியம் என்று சுந்தர் கூறுவார்.